Monday, December 31, 2012

பெண்களுக்குத் தலைமுடி உதிரக் காரணம் என்ன?


                          

பெண்களுக்குத் தலை முடி உதிர்வதற்கும், உடைவதற்கும் பல காரணங்கள் உள்ளன. இரும்புச்சத்துப் பற்றாக்குறை, தலையில் பொடுகு, குளிப்பதற்கு உப்புத் தண்ணீரை உபயோகித்தல், டி அன்ட் சி செய்தலலால் ஏற்படும் மன அழுத்தம், போன்றவற்றின் காரணமாக தலை முடியில் பிரச்சனை உண்டாகலாம். 

எனவே இரும்புச்சத்து மாத்திரைகளை தகுதிவாய்ந்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தொடர்ந்து உட்கொண்டு வர வேண்டும். வைட்டமின் பி-காம்ப்ளக்ஸ் மாத்திரைகளும் உட்கொள்ளலாம். மன அமைதிக்கு யோகாசனம், தியானம் போன்ற பயிற்சிகளை உட்கொண்டு வரலாம். 


 

                                    

தலையில் பொடுகு இருந்தால் கண்டிப்பாக அவற்றைக் களைய உடனடியாகத் தேவையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். பொடுகு நீங்குவதற்கென பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட ஷாம்புகளை உபயோகித்துக் குளித்து வரலாம். குளிக்க உப்புத் தண்ணீரை உபயோகித்து வந்தால் உடனடியாக நீரை மாற்றி நல்ல தண்ணீரில் குளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 

தலை சீவ மரத்திலான சீப்புகளையே பயன் படுத்துங்கள். அல்லது பெரிய பல் அமைப்புக் கொண்ட சீப்புகளையே பயன்படுத்துங்கள். மேற்கண்டவற்றிற்கும் சரியாக வில்லையெனில் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

---------------------------------------------------------------------------------
ஈகரை தமிழ் களஞ்சியம்

No comments:

Post a Comment