Friday, December 21, 2012

பயணம் செய்வதற்கு முன் சாப்பிடக் கூடாத 7 உணவுகள்!


       


        

இன்றைய காலத்தில் லீவு நேரத்தில் வெளியே பிக்னிக் போக நிறைய இடங்கள் உள்ளன. அதிலும் அந்த இடங்கள் அனைத்தும் சற்று தூரமாக இருக்கும். அப்போது நாம் அந்த இடத்திற்கு போக பல திட்டங்களை போடுவோம். அவ்வாறு போடும் போது, நாம் அந்த பிக்னிக் போகும் போது சந்தோஷமாக உடலில் எந்த ஒரு தொந்தரவுமின்றி, செல்வது மிகவும் கடினமானது.
ஏனெனில் பிக்னிக் போவதற்கு பயணம் மேற்கொள்வோம். இப்போது தான் பிரச்சினையே ஏற்படுகிறது. எப்படியெனில் இந்த நேரம் சந்தோஷத்தில் உணவுகளில் கவனமின்றி கண்டதை சாப்பிட்டுவிடுவோம். பின் அந்த உணவுகளால், வயிற்றில் பல பிரச்சினை ஏற்படும். எனவே அந்த மாதிரியான பிரச்சினை வயிற்றில் ஏற்படாமல் இருப்பதற்கு, பயணம் மேற்கொள்வதற்கு முன், எந்த மாதிரியான உணவுகளை தவிர்த்தால், நன்கு ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும், பயணத்தை மேற்கொள்ளலாம். இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!
சீஸ் உணவுகள்
சீஸ் வகையான உணவுகளை சாப்பிட்டால், மூளை மந்த நிலையில் இருக்கும். அதுமட்டுமின்றி, அவை செரிமானமடைவது என்பது கடினமான ஒன்று. இதனால் வாயுத் தொல்லை ஏற்பட்டு, வயிறு உப்புசத்துடன் இருக்கும். எனவே தான் சீஸ் உணவுகள் எதை உண்டாலும், எப்போதும் வயிறு நிறைந்தது போல் கும்மென்று இருக்கும்.
பர்க்கர் மற்றும் வறுத்த உணவுகள்
 
பெரும்பாலானவர்கள் பயணத்தின் போது சிப்ஸ், பர்க்கர் போன்ற உணவுகளை வாங்கிக் கொண்டு செல்வார்கள். ஆனால் அவற்றை உண்பதால், செரிமான மண்டலத்தின் இயக்கம் குறைவதோடு, வாயுத் தொல்லை அதிகரித்து, உடல் எடையும் அதிகரிக்கும்.
பானங்கள்
பயணத்தின் போது பலர் கார்போனேட்டட் பானங்களான கூல்ட்ரிங்ஸ், சோடா போன்றவற்றை வாங்கிக் கொண்டு செல்வோம். ஆனால் அத்தகைய உணவுப் பொருட்களை சாப்பிட்டால், வாயுத் தொல்லை ஏற்படுவதோடு, வாய் துர்நாற்றமும் ஏற்படும்.
செயற்கை இனிப்புகள்
சாக்லேட் மற்றும் சூயிங் கம் போன்ற செயற்கை இனிப்புகளால் செய்யப்படும் தின்பண்டங்களை சாப்பிட்டால், பற்கள் தான் பாதிப்படையும். மேலும் சூயிங் கம் சாப்பிடும் போது, வாயின் வழியே அதிகமான அளவில் காற்றானது உடலின் உள்ளே செல்கிறது. இதனால் வாயுத் தொந்தரவு ஏற்படும்.
கார உணவுகள்
சிலர் பயணம் செய்கிறோம் என்று சமைத்துக் கொண்டு செல்வார்கள். இல்லையெனில் வீட்டில் சமைத்து நன்கு சாப்பிட்டு விட்டு செல்வார்கள். ஆனால் அவ்வாறு சாப்பிட்டால், வயிறானது சற்று மந்த நிலையில் இருக்கும். ஆகவே சாதாரணமான அதிக காரமில்லாத உணவுகளை அளவாக சாப்பிட்டு செல்வது நல்லது.
நூடுல்ஸ்
பஸ் மற்றும் ரயிலுக்கு நேரமாகிவிட்டது என்று ஈஸியாக சமைத்து சாப்பிவதற்கு நூடுல்ஸ் மற்றும் பாஸ்தா போன்ற உணவுகளை சாப்பிட்டு செல்வோம். இதனால், செரிமானம் தடைபட்டு, வயிற்றில் வாயு மற்றும் மந்த நிலை ஏற்படும். எனவே இந்த மாதிரியான உணவுகளை தவிர்ப்பது நல்லது.
ஆல்கஹால்
கார்போனேட்டட் மதுபானங்களில் பீர், சோடா மற்றும் சாம்பைன் போன்றவை வயிற்றில் உப்புசத்தை ஏற்படுத்தக்கூடியவை. மேலும் இதை குடித்தால், எப்போதும் ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். ஆகவே இதனை குடித்து, சைடு டிஷ்ஷாக வறுத்த உணவுகளை சாப்பிட்டால், பின் வாந்தி எடுக்க வேண்டியது தான். அதுமட்டுமின்றி அவை பின்பு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.
நன்றி :வேம்படி இணையம் 

பிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு


பிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு

     

300px-Plastic_household_items
Household items made of various types of plastic
இப்புவியிலுள்ள அனைத்து ஜீவராசிகளையும் தன்மேல் தாங்கி நிற்கும் இந்த பூமித்தாய்க்கு ஒரு விசேட சக்தி உண்டு. அது என்னவென்றால் இயற்கையால் படைக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் தன்னுள் (பூமிக்குள்) ஏற்றுக்கொண்டு, அதனை மக்கி அழித்து மண்ணோடு மண்ணாக்கும் வல்லமை தான் அது.
அதேவேளையில் செயற்கையாக மனிதன் உருவாக்கும் பெரும்பாலான பொருட்களை இதைப்போல புவியினால் மக்கச்செய்து அழிக்க முடிவதில்லை. அப்படி மனிதனால் தயாரிக்கப்பட்டு புவியினால் எக்காலத்திலும் சிதைத்து அழிக்க முடியாத பொருட்களில் ஒன்று பிளாஸ்டிக் (Plastic).
மனிதன் பெரும்பாலான பொருட்களை உருவாக்கும் மூல சூத்திரத்தை இயற்கையிடம் இருந்துதான் கற்றுக்கொள்கிறான் என்றால் மிகையில்லை. அந்த வகையில் பறவையை கண்டு விமானத்தையும், எதிரொலி கேட்டு வானொலியையும் படைத்தான்.
அந்த வகையில் மனிதனுக்கு பிளாஸ்டிக்கை படைத்திடும் எண்ணம் தோன்றியதும் இயற்கையால் படைக்கப்பட்ட ‘இயற்கை பிளாஸ்டிக்கை’ கண்டுதான் என்றால் பொய்யில்லை. அட, அது என்ன ‘இயற்கை பிளாஸ்டிக்’ இதுவரை கேள்விப்பட்டதில்லையே என்கிறீர்களா? மாடுகள் (Cow) உள்ளிட்ட கால்நடைகளின் (Cattle) கொம்புகள் (Horns) தான் இயற்கையால் படைக்கப்பட்ட ‘இயற்கை பிளாஸ்டிக்’ ஆகும்.
பதினெட்டாம் நூற்றாண்டில் கால்நடைகளின் (குறிப்பாக மாடுகளின்) கொம்புகளை பற்றி துவங்கிய ஆய்வுகள்தான் பிற்காலத்தில் பிளாஸ்டிக் உருவாக மூலகாரணமாக அமைந்தது என்றால் மிகையில்லை.
                
பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவில் கால்நடைகளின் கொம்புகள், பால்புரதங்களால் (Casein) தான் உருவாக்கப்படுகிறது என்பதை பதினெட்டாம் நூற்றாண்டு வாக்கில் மனிதன் தெரிந்துகொண்டான். கால்நடைகளின் கொம்புகள் பிளாஸ்டிக்கின் தோற்றத்தை ஒத்துக் காணப்பட்டாலும் கூட அவற்றின் கொம்புகள் மக்கும் திறன் கொண்டவை …!
இதைத்தொடர்ந்து இயற்கையாக ரப்பர் மரங்களிலிருந்து கிடைக்கும் ரப்பர் பாலிருந்து பிளாஸ்டிக் தயாரிக்கும் முயற்ச்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வேதியல் வல்லுனர்கள் தீவிர முயற்ச்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் 1839-ஆம் ஆண்டு சார்லஸ் குட்இயர் (Charles Goodyear, 1800 – 1860 AD) என்ற அமெரிக்க கண்டுபிடிப்பாளர் (American Inventor) ரப்பர் மரங்களிலிருந்து கிடைக்கும் பாலுடன் (Rubber Milk) கந்தகம் (Sulfur) கலந்து சூடாக்கி வல்கனைசிங் ரப்பர் (Vulcanizing Rubber) என்ற ஒருவகை ரப்பரை தயாரிக்கும் முறையை கண்டறிந்தார். இந்த கண்டுபிடிப்புதான் செயற்கை பிளாஸ்டிக் உருவாக்கத்திற்க்கு ஒரு ஊன்றுகோலாக அமைந்தது என்று சொல்லலாம்.

                        
சார்லஸ் குட்இயரின் கண்டுபிடிப்பை முன்மாதிரியாகக்கொண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த அலெக்ஸ்சாண்டர் பார்க்ஸ் (Alexander Parkes, 1813 – 1890 AD) என்ற உலோகவியல் வல்லுனர் (Metallurgist Specialist) உலகமே வியக்கும் வண்ணம் பார்க்ஸின் (Parkesine) என்று அழைக்கப்பட்ட உலகின் முதல் செயற்கை பிளாஸ்டிக்கை 1856-ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்.

தாவரங்களிலிருந்து பெறப்பட்ட மரத்தாதுக்களுடன் (Cellulose) நைட்ரிக் அமிலத்தை சேர்த்து சூடாக்கி இதனை அவர் தயாரித்திருந்தார். இந்த பிளாஸ்டிக், வெப்பப்படுத்தும்போது இளகும் தன்மைகொண்டதாகவும் குளிர்விக்கும் போது இறுகி மீண்டும் தனது பழைய கடினதன்மையை எட்டும் தன்மைகொண்டதாகவும் இருந்தது, இதனால் பிளாஸ்டிக்கை வேண்டிய தோற்றத்தில் சுலபமாக வடிவமைத்துக்கொள்ள முடிந்தது.
இங்கிலாந்து நாட்டிலுள்ள லண்டன் மாநகரில் 1862-ஆம் ஆண்டு நடந்த உலக சர்வதேச கண்டுபிடிப்பு கண்காட்சியில் (Invention of World Great International Exhibition, London) தனது இந்த பிளாஸ்டிக் கண்டுபிடிப்பை பகிரங்கமாக வெளியுலகிற்கு செய்து காட்டினார்.

அவரது இந்த கண்டுபிடிப்பு அந்த ஆண்டு சிறந்த கண்டுபிடிப்புகளுக்கான வெண்கலப் பதக்கத்தை தட்டிச்சென்றது. தொடர்ந்து 1856 – ஆம் ஆண்டு ‘Parkesine Company’ என்ற பெயரில் உலகின் முதல் பிளாஸ்டிக் தயாரிக்கும் கம்பனியை துவக்கி பிளாஸ்டிக் தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்தார்.
இவரது செய்முறைப்படி பிளாஸ்டிக் தயாரிக்க அதிக அளவில் மரத்தாதுக்கள் (Cellulose) தேவைப்பட்டதால் இவரது நிறுவனம் மிகக்குறைந்த அளவே பிளாஸ்டிக் உற்பத்தி செய்ய முடிந்தது, இதன் காரணமாக வணிக ரீதியில் இவரது பார்க்ஸின் பிளாஸ்டிக் (Parkesine Plastic) வெற்றிபெற முடியாமல் போய்விட்டது.
பிளாஸ்டிக் தயாரித்தலின் அடுத்தகட்டம் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் எட்டப்பட்டது. தற்போது இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு எப்படி உட்சபச்ச ஜிரத்தில் இருக்கிறதோ அதுபோல பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்காவில் பில்லியர்ட்ஸ் விளையாட்டு உட்சபச்ச ஜிரத்தில் இருந்தது.

அப்போது பில்லியர்ட்ஸ் விளையாட தேவைப்பட்ட பந்துகள் யானையின் தந்தங்களிளிருந்து (Elephant Tusk) தான் தயாரிக்கப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் பில்லியர்ட்ஸ் பந்துகள் தயாரிப்பதற்க்காகவே படுகொலை செய்யப்பட்டது.
யானைகளின் நிலையை எண்ணி வருத்தப்பட்ட அமெரிக்க கண்டுபிடிப்பாளரான ஜான் வெஸ்லி ஹையாட் (John Wesley Hyatt, 1837 – 1920 AD) இதற்க்கு மாற்று வழி கண்டறிய தீவிரமாக முயற்சித்தார்.
தொடர்ந்து ஜான் வெஸ்லி, அலெக்ஸ்சாண்டர் பார்க்ஸின் கண்டுபிடிப்பை முன்மாதிரியாகக் கொண்டு 1868-ஆம் ஆண்டு பருத்தியிலிருந்து (Cotton) பிரித்தெடுக்கப்பட்ட செல்லுலோஸுடன் (Cellulose) நைட்ரிக் அமிலம் (Nitric Acid) மற்றும் கற்பூரம் (Camphor) ஆகியவற்றை சேர்த்து செல்லுலாய்ட் (Celluloid) என்ற புதியவகை பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்தார்.
இவரது இந்த கண்டுபிடிப்பை பற்றி கேள்விப்பட்ட அலெக்ஸ்சாண்டர் பார்க்ஸ் வெஸ்லியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு 1868-ஆம் ஆண்டு இறுதிவாக்கில் செல்லுலாய்ட் பிளாஸ்டிக்கில் பில்லியர்ட்ஸ் பந்துகள் தயாரித்து ‘Parkesine Company’ மூலமாக விற்பனை செய்ய ஆரம்பித்தனர்.
இன்றளவும் டேபிள் டென்னிஸ் பந்துகள் இவர்கள் தயாரித்த அதே தொழில்நுட்ப முறையை பயன்படுத்தித்தான் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து புகைப்படக்கருவி (Camera), பேனா (Pen), பொம்மைகள் (doll) உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் தயாரிப்பிலும் பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டது.
                       

மேலும் மோசன் பிக்சர்ஸ் (Motion Picture) மூலம் 1882 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட உலகின் முதல் திரைப்பட தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட புகைப்படச்சுருள் (Photo Reel) இவர்கள் தயாரித்த பிளாஸ்டிக்கை பயன்படுத்திதான் தயாரிக்கப்பட்டது.
இவரது கண்டுபிப்பின் மகத்துவத்தை சற்று தாமதமாக உணர்ந்துகொண்ட அமெரிக்க அரசாங்கம் 1914-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் வேதியல் கண்டுபிடிப்புகளுக்கு கொடுக்கப்படும் உயரிய விருதான ‘பெர்கின் மெடலை’ (Perkin Medal) வழங்கி கெளரவித்தது.
அலெக்ஸ்சாண்டர் பார்க்ஸ் மற்றும் ஜான் வெஸ்லி ஹையாட் ஆகியோரது கண்டுபிடிப்புகளை முன்மாதிரியாகக்கொண்டு இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சின்தடிக் பிளாஸ்டிக் (Synthetic Plastic) எனப்படும் 100% செயற்கை பிளாஸ்டிக்கை, பெல்ஜியத்தை சேர்ந்த வேதியல் வல்லுனரான ஹென்றிக் பேக்லேண்ட் (Hendrik Baekeland, 1863 – 1944 AD) என்பவர் 1907 ஆம் ஆண்டு கண்டறிந்தார்.
பேக்லைட் (Bakelite) என்று அழைக்கப்பட்ட இவரது பிளாஸ்டிக்கில் தாவரதாதுக்கள் (Cellulose), பெனோ-பார்மால்டிகைட் (Pheno-Formaldehyde), மற்றும் நைட்ரிக் அமிலம் ஆகிய மூலக்கூறுகள் அடங்கியிருந்தது. மிகச்சுலபமான தயாரிப்பு முறைகள் மற்றும் மிகக்குறைந்த விலை ஆகியவற்றின் காரணமாக ‘பேக்லைட்’’ வணிக ரீதியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
ரேடியோ தயாரிப்பு, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் இந்த வகை பிளாஸ்டிக் மூலம் தான் முதன் முதலில் தயாரிக்கப்பட்டது. இதன் 100% மின்கடத்தாத்திறன் பெரும்பாலான எலெக்ட்ரிகல் உபகரணங்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து 1926-ஆம் ஆண்டு பாலிவினைல் குளோரைடு (Polyvinyl Chloride, known as PVC Plastic (PVC Pipes)), வகை பிளாஸ்டிக் தயாரிக்கும் முறையை வால்ட்டர் செமொன் (Walter Semon) என்பவர் கண்டறிந்தார். இதன் பிறகுதான் குழாய்கள் (Pipe) தயாரிப்பிலும் பிளாஸ்டிக் பெருமளவில் பயன்படுத்தப்பட்டது.
                             
தொடர்ந்து 1937-ஆம் ஆண்டு பாலியூரித்தீன் (Polyurethane) வகை பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை ஓட்டோ பாயர் என்ற ஜெர்மனியை சேர்ந்த வேதியல் வல்லுனர் கண்டறிந்தார், இதன் பிறகு பாலிஸ்ட்ரீன் (Polystyrene) வகை பிளாஸ்டிக் புழக்கத்தில் வர ஆரம்பித்தது.
இன்று பெருமளவில் புழக்கத்தில் உள்ள பாலிஎத்திலின் டெரெப்தலைட் (Polyethylene Terephthalate, known as PET (Soft Drinks Water Bottle)) வகை பிளாஸ்டிக்கை இங்கிலாந்தை சேர்ந்த வேதியல் வல்லுனர்களான ஜான் ரெக்ஸ் வின்பில்டு (John Rex Whinfield) மற்றும் ஜேம்ஸ் டெனன்ட் டிக்சன் (James Tennant Dickson) ஆகிய இருவரும் இணைந்து 1941-ஆம் ஆண்டு தயாரித்தனர்.
அதுவரையில் மனித சமுதாயத்திற்கு எந்தவித தீங்கையும் ஏற்படுத்தாமல் சென்றுகொண்டிருந்த பிளாஸ்டிக்கின் பயணம் தடம் புரண்டு அழிவுப் பாதையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. உணவுப்பொருட்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது PET பிளாஸ்டிக் கண்டறிந்த பின்புதான்..!

பிளாஸ்டிக் என்ற சொல் கிரீஸ் நாட்டின் கிரேக்க மொழியில் இருந்து பிறந்து கொஞ்சம் கொஞ்சமாக உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. பிளாஸ்டிக் என்ற சொல்லுக்கு கிரேக்கத்தில் ‘எளிதில் வடிவமைத்துக்கொள்ள இயலும்’ என்று பொருளாம்.
இன்று உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் உள்பட நாம் அன்றாடம் பயன்படுத்தும் செருப்பு முதற்கொண்டு அனைத்தும் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டு உலக சந்தையில் விற்க்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
ஏனைய உலோகங்களை காட்டிலும் இதன் மலிவான விலை, எளிதில் கையாளும் திறன், நீடித்து உழைக்கும் தன்மை ஆகிய காரணங்களால் பிளாஸ்டிக் மிகக் குறுகிய காலத்திற்குள் இமாலைய வளர்ச்சியை எட்டிப்பிடித்தது. இன்று உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் பிளாஸ்டிக் பொருட்களை காணாமல் திரும்ப இயலாது.


நன்றி :வேம்படி இணையம் 

பச்சை பிசாசு (WATER HYANCITH)- அறிந்து கொள்ள சில சுவாரஸ்யமான தகவல்கள் ..!

133
நம்ம ஊர் குளங்களில், ஏரிகளில், ஆறுகளில் தண்ணீர் இருக்குதோ இல்லையோ பச்சை பசேலென்று இந்த ஆகாயத்தாமரை மட்டும் எங்கும் நிறைஞ்சிருக்கு! அதை அழிக்கவும் முடியாமல் கட்டுப்படுத்தவும் முடியாமல் நம் அரசு எந்திரங்கள் படும் பாடு சொல்லி மாளாது.
தென்னமெரிக்காவின் அமேசான் காடுகள்தான் இந்த வாட்டர் ஹ்யான்சித் (WATER HYANCITH) என்னும் ஆகாயத்தாமரையின் பூர்வீகம். எப்படியோ அது கண்டங்கள் கடந்து இன்று உலகெங்கும் பலருக்கும் தீராத்தலைவலியை உண்டாக்கும் அளவுக்கு பல்கி பெருகி காடாக வளர்ந்து கசகசவென நிற்கிறது.
இந்த ஆகாயத்தாமரை பார்க்க பச்சை பசேலென கண்ணுக்கு குளிர்ச்சியாக தெரிந்தாலும் அதனால் உண்டாகும் தீமைகள் அதிகம். ஆகாயத்தாமரையின் இலைகள் நல்ல தடிமனாக இருப்பதை பார்த்திருக்கலாம். அவை அதிக நீரை உறிஞ்சி வாழும் தன்மை கொண்டவை.
இந்த தடிமனான இலைகளின் ஊடாக நடக்கிற நீராவிப்போக்கு ஏரி குளங்களின் தண்ணீர் அளவை வெகுவிரைவில் மானாவாரியாக குறைத்துவிடுகின்றன. இதன் தண்டிலிருந்து புதிய கிளைகள் உருவாவதால் ஒரே வாரத்தில் இரட்டிப்பாகும் தன்மை கொண்டது. மிக வேகமாக வளரக்கூடியது.
இத்தாவரங்கள் இறந்து மடங்கிப்போவதால் நீர் அசுத்தமடைவதாக கூறப்படுகிறது. வெள்ளம் மாதிரியான நேரங்களில் நீரைத் தடுத்து ஊருக்குள் தண்ணீர் புகந்து நாசம் விளைவிக்கவும் வழியமைத்துக் கொடுக்கின்றன. ஆகாயத்தாமரை ஆக்கிரமித்த ஏரிகளில் மீன்பிடிக்கவோ படகுவிடவோ வாய்ப்பேயில்லை. இவை தவிர இன்னும் எத்தனையோ பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளன.
                                            
இவற்றை அடியோடு அழிக்க களைக்கொல்லிகளை பயன்படுத்த இயலும். ஆனால் நீர் உபயோகிக்க இயலாத விஷமாக மாறிவிடும் ஆபத்து உண்டு. பெரிய ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு மொத்தமாக வேரோடு பிடுங்கி அழித்தாலும் ஒரே மாதத்தில் தன் ஆக்கிரமிப்பு வேலையை மீண்டும் தொடங்கிவிடும் இந்த பச்சை பிசாசுகள்.
இதன் ஒற்றை விதை முப்பது ஆண்டுகள் சாகாவரம் பெற்றவை. ஒரு விதை போதும் பலநூறு ஏக்கர் நீர்நிலையை காலி பண்ண. சரி இந்த அழிக்கமுடியாத நரகாசுரனை என்னதான் செய்வதாம். ஆகாயத்தாமரையை சில நல்ல காரியங்களுக்கும் உபயோகிக்க முடியும் , அதன்மூலம் அதன் பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம். அவை விவசாயிகளுக்கு நன்மை செய்யக்கூடியவை.
‘’இந்த ஆகாயத்தாமரை நீரை அதிகமாக உறிஞ்சுவதாக சொல்லப்பட்டாலும் அவை நீரை மட்டுமே உறிஞ்சுவதில்லை அதோடு நீரில் கலந்திருக்கிற ஆர்சனிக் மாதிரியான நஞ்சுப்பொருட்களையும் ஈயம் மாதிரியான சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களையும் சேர்த்துதான் தன்னகத்தே எடுத்துக்கொள்கின்றன.

                                                  
இதன் காரணமாக யாருமே உபயோகிக்காத கால்வாய்களில் ஏரிகளில் இருக்கிற மிகமோசமாக தண்ணீர் மேலும் மாசடைவது தடுக்கப்படுகிறது. அதோடு வெயில்காலங்களில் குருவிகள்,கிளிகள்,கொக்குகள் முதலான பறவைகளுக்கு தண்ணீர் தரும் மிகமுக்கியமான வாட்டர் சோர்ஸாகவும் ஆகாயத்தாமரை இலைகள் திகழ்கின்றன.
குருவிகள் தன் அலகால் இந்த இலைகளை ஒரு குத்து குத்தினால் போதும் தண்ணீர்கொட்டும்! அதோடு ஆகாயத்தாமரைக்கு கீழே நல்ல வெதுவெதுப்பான சீதோஷ்ண நிலையிருப்பதால் மீன்கள் வளரவும் ஏற்றதாக இருக்கும்.
இந்த ஆகாயத்தாமரைகள் அசுத்தமான நீர் நிலைகளில்தான் அதிகம் வளர்கின்றன என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். சுத்தமான நீரில் இவை வளரவே வளராது. மக்கள் பயன்படுத்தும் ஏரிகளிலும் வளரும் ஆகாயத்தாமரைகளை கட்டாயம் அப்புறப்படுத்துவது அவசியம்.
ஆனால் யாருமே பயன்படுத்தாதா உதாரணத்துக்கு கூவம் மாதிரி இடங்களின் நீரை யாருமே பயன்படுத்தப்போவதில்லை அங்கே வளரும் ஆகாயத்தாமரைகளை அப்படியே விட்டுவிடலாம். சுற்றுசூழலுக்கும் பறவைகளுக்கும் நல்லதுதான். மழைக்காலங்களில் மட்டும் அவற்றை அகற்றிவிட்டால் வெள்ளம் உண்டாவதை தடுக்க இயலும்.
இந்த ஆகாயத்தாமரையை பயன்படுத்தி நம்மால் பயோ கேஸ் தயாரிக்க முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உரமாகவும் பயன்படுத்த முடியும். நாம் அதிகம் உபயோகிக்காத நீரில் இவை வளர்வதால் குறைந்தபட்சம் அந்த நீர் சுத்தமாகிறதே என நினைத்து மகிழ்ச்சியடையலாம்.
வெறும் பயோகேஸ் தயாரிப்போடு நின்றுவிடாமல் இந்த ஆகாயத்தாமரையை கொண்டு மண்புழு உரமும் தயார் செய்கின்றனர். நன்றாக அரைக்கப்பட்ட ஆகாயத்தாமரை செடிகளை சாணக்கரைசலோடு கலந்து தேங்காய்நாரின் மீது போட்டு வைத்து அதில் கொஞ்சம் மண்புழுக்களைவிட்டால் சில நாட்களில் மண்புழு உரம் தயார்.
உரம் மட்டுமல்ல இந்த ஆகாயத்தாமரையை காயவைத்து அதன் நாரிலிருந்து நல்ல கைவினை பொருட்களை உள்ளூர் பெண்களை கொண்டே செய்து விற்பனை செய்கின்றனர். இதன் மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்கிக் கொடுத்துள்ளனர்.
ஆகாயத்தாமரை இயற்கை உரம் அதிக அளவில் நுண்ணூட்ட சத்துகள் கொண்டுள்ளது. சேப்ரோபிக் பாக்டீரியா ஆகாயத்தாமரையை 60 நாட்களில் மக்கவைத்து சிறந்த இயற்கை உரமாக மாற்ற வல்லது. ஆகாயத் தாமரையை ஒரு களையாக, விவசாயத்திற்கு எதிராக கருதி வரும் நாம் அதன் நன்மைகளையும் புரிந்துகொள்ள வேண்டும்.


(நன்றி - புதிய தலைமுறை)

விமானம் எப்படி பறக்கிறது தெரியுமா?.....


படிப்போம் பகிர்வோம் ..


9-1847_1
இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான். பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும். சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது…
இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு:
 • A ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் – Lift
 • B முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust
 • C கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight
 • D பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag
ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமணாக இருக்க வேண்டும்.
 • Weight=Lift
 • Drag=Thrust
த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும். டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும். விமானத்தின் எடை ‘லிப்ட்’ விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும். விமானத்தின் ‘லிப்ட்’ விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும்.
சரி… பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்,
அதே போல விமானத்தில் ‘டிராக் விசையை கொடுப்பது’ காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.
(பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று.
இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது).
விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும். பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான். இது சற்று சுவாரஸ்யமானது.
ஹெலிகாப்டரின் மேலெழும்பு விசை அதன் மேலிகிருக்கும் விசிரியால் வருகிறது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும்.
உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சிந்தான் , சற்று மறைமுகமாக விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது
விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்). விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது, அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும்

                 
இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக?
இங்குதான் விஷயம் உள்ளது. காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்றுழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்)
விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொருத்தே அமையும். அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்லதாக இருக்கும்
இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது? சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா?
                                   

அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (எலிகாப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் எலிகாப்டருக்கு வராது).
இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது.
விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிகும்போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பரப்பதற்கான காரணம் இப்போது புரிகிறதா?
அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது
ஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை மேட்டர் எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது.நன்றி :வேம்படி இணையம் 

ப்ரூஸ்லியைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள்: (என்னைக் கவர்ந்தவர்கள்)-BRUCE LEE

                                     


ப்ரூஸ்லி 1940ம் ஆண்டில் சான் ஃப்ரான்சிஸ்கோவில் பிறந்தார். இருந்தும் அவரின் தந்தையார் சைனீஸ் ஒபேராவில் ஒரு பாடகராய் இருந்தார். அவர் அப்போது ஹாங்காங்கில் சுற்றுப் பயணம் கொண்டதால், அவருடைய வளர்ப்பு அங்கு தொடங்கியது. ப்ரூஸ்லீ ஐந்து வயதிலிருந்தே திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தன்னுடைய 13 வது வயதில் முறையாய் தற்காப்புக் கலைகளை கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். அவருடைய கோபமும், வேகமும் பல வித தெருச் சண்டைகளுக்கு காரணமாய் அமைந்தன. இதனால் பயந்த அவர் பெற்றோர் அவருடைய 18 வயதில் அமேரிக்காவில் வாழும் உறவினரின் உணவு விடுதியில் வேலைக்காக அவரை அனுப்பி வைத்தனர். ப்ரூஸ்லீ சியாடிலில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தத்துவம் படித்தார். அதே பல்கலைக்கழகத்தில் லின்டாவைச் சந்தித்து காதலித்து மணந்தார். அப்போதே அவர் தனியாய் ஒரு பள்ளி அமைத்து அங்கிருக்கும் மாணவர்களுக்கு தற்காப்புக் கலைகளின் ஒன்றான குங்ஃபு வை கற்றுத் தர ஆரம்பித்தார். சீனாவில் இவையெல்லாம் சீனாவைச் சேர்ந்தவனுக்குத் தான் கற்றுக் கொடுப்பார்கள். ஆனால் ப்ரூஸ்லீ எந்த வித பாரபட்சமும் இல்லாமல் எல்லோருக்கும் சொல்லித் தந்தார். இதனால் அமேரிக்காவில் இருக்கும் பிற தற்காப்புக் கலை நிபுணர்களிடம் ப்ரூஸ்லீ பிரபலமானார். தற்காப்புக் கலைகளுக்கான ஒரு விழாவில் ப்ரூஸ்லி சிறப்பு விருந்தினராய் கலந்து கொண்ட இடத்தில் ஹாலிவுட்டின் ஹேர்ஸ்டைலிஸ்ட் ஜேயின் தொடர்பு கிடைத்தது. அவர் ப்ரூஸ்லீயை ஒரு தொலைக்காட்சித் தொடருக்காக சிபாரிசு செய்தார். தி க்ரீன் கார்னெட் என்ற அந்த ஷோவில் ஸ்கிரீன் டெஸ்டில் ப்ரூஸ்லீ தேர்வாகி அந்தத் தொடரில் நடிக்க ஆரம்பித்தார்.

                                                 
சில பல காரணங்களால் அந்த நிகழ்ச்சி பாதியிலேயே நின்று விட்டது. இதனிடையில் ப்ரூஸ்லீ தன்னுடைய அனுபவத்தைக் கொண்டும், இடைவிடாத பயிற்ச்சியினாலும் பல வித உக்திகளை புகுத்தி ஜீட் குன் டோ என்ற ஒரு புது விதமான யுக்தியை உண்டாக்கினார். அவருக்கு ஹாலிவுட் படங்களில் அவ்வப்போது சிறு சிறு வேடங்களே கிடைத்தன.
அவருடயை நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி தன்னுடைய திறமையை நிரூபிக்கும் விதமாக ஒரு படத்தை எடுத்து வர அவர் ஹாங்காங் சென்றார். அங்கே ப்ரூஸ்லியின் திறமையை பார்த்து வியந்த தயாரிப்பாளர் ஒருவர், அவரை கதாநாயகனாக்கி "பிக் பாஸ்" படத்தை எடுத்தார். மிகச் சிறிய பொருட் செலவில் தாய்லாந்தில் ஒரு கிராமத்தில் அதன் படப்பிடிப்பு நடந்தது. அந்தப் படம் வெளி வந்து அது வரை ஓடிய அனைத்து சீன படங்களின் வசூலையும் முறியடித்தது. ஒரே நாளில் ப்ரூஸ்லீ நட்சத்திர அந்தஸ்தை எய்தினார். அதன் பிறகு வந்த ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி, ரிட்டர்ன் ஆஃப் தி ட்ராகன் ப்ரூஸ்லீயை வெற்றியை பறை சாற்றின. அதன் சத்தம் ஹாலிவுட்டின் காதிலும் லேசாய் விழுந்ததில், ப்ரூஸ்லீயை வைத்து என்டர் தி ட்ராகன் என்ற படத்தை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்தது. படம் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷனில் இரவு பகலாய் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது ப்ரூஸ்லீயின் உடல்நிலை மோசமானது. ஜூலை 20, 1973ம் நாள் தலை வலிக்காக ஒரு மாத்திரை போட்டுக் கொண்டு தூங்கச் சென்றவர், மாத்திரையினால் மூளையில் ஏற்பட்ட அலர்ஜியின் காரணமாக செரிப்ரல் எடீமா உண்டாகி இறந்து போனார். நேதாஜியின் இருப்பைப் பற்றியும், இறப்பைப் பற்றியும் இன்றும் உலவும் வதந்திகளைப் போல் இவருடைய மரணமும் பல விதமான வதந்தைகளைக் கொண்டது. ப்ரூஸ்லியின் மரணத்திற்குப் பிறகு வெளி வந்த என்டர் தி ட்ராகன் ஹாலிவுட்டிலும் பெரும் வெற்றி பெற்றது.

                                                  
ப்ரூஸ்லியைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள்:
ப்ரூஸ்லீயின் உயரம் 5.7, ஆனால் அவர் இறந்த போது அவரின் எடை 58 கிலோ தான்.
ஒரு பயிற்சியின் போது அவருடைய முதுகுத் தண்டில் பயங்கரமான அடி விழுந்தது. இனிமேல் அவர் எழுந்து நடக்க முடியாது என்றும் தற்காப்புக் கலைப் பயிற்சிகளை செய்ய முடியாது என்றும் டாக்டர்கள் சொல்லியும் அதை ஒரு துளி கூட நம்பாமல் தன் சுய முயற்சியாலும், பயிற்சியாலும் மீண்டு வந்து காட்டினார்.
ப்ரூஸ்லீயின் வீட்டில் இருந்த நூலகத்தில் அனைத்து வகையான தற்காப்புக் கலைகளைப் பற்றியும், தத்துவங்களைப் பற்றியும் கிட்டத்தட்ட 2,500 புத்தகங்களை வைத்திருந்தார்.
ப்ரூஸ்லீ ஒற்றைக் கையில் இரண்டே விரல்களை (கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் உபயோகித்து) வைத்து தண்டால் எடுப்பார்.
ப்ரூஸ்லீ அவரின் வேகத்தை மற்றவருக்கு செய்து காட்ட சில யுக்திகளை கையாண்டார். அவரால் எதிராளியின் கையில் இருந்த நாணயத்தை அவர் கையை மூடுவதற்குள் எடுத்து விட முடியும்.
ப்ரூஸ்லீ ஒரு இன்ச் தூரத்தில் இருந்து குத்தும் ஒரு குத்து கூட எதிராளியை நிலை குழையச் செய்யும். (படம் பார்க்க) இத்தனை குறைந்த தூரத்தில் அத்தனை வேகம் ஒரு துப்பாக்கியிலிருந்து புறப்படும் ஒரு குண்டுக்குத் தான் இருக்க முடியும்.ப்ரூஸ்லீயின் வேகத்தை காமெராவின் 24 ஃப்ரேம்களில் அடக்க முடியாமல் 32 ஃப்ரேம்களைக் கொண்டு படம் பிடித்தனர்.
ப்ரூஸ்லீயின் பிரபலமான தத்துவம்.
Be formless... shapeless, like water. If you put water into a cup, it becomes the cup. You put water into a bottle; it becomes the bottle. You put it into a teapot; it becomes the teapot. Water can flow, or it can crash. Be water, my friend...
நன்றி:         (பெய்யெனப் பெய்யும் மழை)   வலைப்பூ 

இது கல்யாண கதை..........
 • குளித்து முடித்து தலைவாரிக்கொண்டு இருந்தேன். நண்பன் மேசையில் தன் லேப்டாப்பில் எதையோ நீண்ட நேரமாக உற்று பார்த்துக்கொண்டிருந்தான். தலை வாரிவிட்டு நண்பன் அருகில் சென்றேன்.வழக்கம்போல ஒரு பெண்ணின் புகைப்படத்தை பார்த்து கொண்டிருந்தான்.மெயிலில் வந்திருக்கும் என நினைத்துக் கொண்டேன்.

  நண்பனை பற்றி சொல்லிவிடுகிறேன். நண்பனுக்கு சில வருடங்களாகவே வீட்டில் பெண் பார்க்கிறார்கள்.
  கல்லை கண்டால் நாயை காணும், நாயை கண்டால் கல்லை காணும் கதையாக நண்பனுக்கு பிடித்தால் பெண்ணுக்கு பிடிப்பதில்லை,பெண்ணுக்கு பிடித்தால் நண்பனுக்கு பிடிப்பதில்லை,இருவருக்கும் பிடித்தால் ஜாதகம் பொருந்துவதில்லை,சரி ஜாதகமும் பொருந்தினால் குடும்பம் சரியில்லை, பெண்னை இன்னும் படிக்க வைக்கப்போறோம் அப்டி இப்டின்னு எதாவது ஒரு தடங்கல் வந்து அலைக்கழித்துக்கொண்டிருந்தது.

  இந்தப்பெண்ணை நண்பனுக்கும் பிடித்து வீட்டில் உள்ளவர்களுக்கும் பிடித்துவிட்டது போல..அதான் நீண்ட நேரமாக வைத்த கண் மாறாமல் வெறிக்க பார்த்துக்கொண்டிருக்கிறான் :) நண்பன்.

  அருகில் சென்று உசாராக யார் இவங்க என்றேன். ”எனக்கு பார்த்து இருக்காங்க.ஃபிக்ஸ் ஆகிடும்னு நினைக்கிறேன்” மகிழ்வுடன் சொன்னான் நண்பன்.

  உடனே வாழ்த்துக்கள் டா , நல்லா இருக்காங்க,உனக்கு நல்ல மேட்சிங் என்றேன்.இரண்டு வருசமா பார்க்கிறாங்கல்ல இது நான்.

  இல்லடா மூணு வருசம் ஆச்சு. ஹ்ம் எல்லாம் அமையும்போதுதாண்டா அமையும் “கிடைக்கிறது கிடைக்காம இருக்காது,கிடைக்காம இருக்கிறது கிடைக்காது” தத்துவங்களை உதிர்த்து விட்டேன்.

  அதற்குள் நம்ம இன்னொரு நண்பன் திடுமுண்டு கோபாலு வேலை முடிந்து வேகமாக வந்தான்.குளியலறை நோக்கி சென்றான்.(திடுமுண்டு கோபாலு.... நண்பர்கள் சேர்ந்து வைத்த பெயர்)

  10 நிமிடங்கள் இருக்கும் குளித்துமுடித்து வெளியே வந்த திடுமுண்டு கோபாலு லேப்டாப்பில் நண்பன் பெண்ணை பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்து விட்டான்.

   எதையும் யோசிக்காமல் வழக்கம்போல யாருடா இது உங்க அக்காவா உன்ன மாதிரியே இருக்காங்க என்றான் பாருங்கள். அவ்வளவுதான்.கதை முடிந்தது. 

  நண்பன் போனை எடுத்தான்.. மறுமுனையில் அவர் வீட்டில் யாரோ எடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

  ம்.. நான் தான் பேசுறேன்.இந்த பொண்ணு வேண்டாம்.வேற பாருங்க...
  வீட்டில் உள்ளவர்கள் எதோ சொல்லியிருப்பார்கள்...
  பாருங்கன்னா பாருங்க என்று போனை வைத்து விட்டான்.

  நண்பன் அருகில் சென்று “கொஞ்சம் குண்டா இருக்கும் பெண்கள் ,கொஞ்சம் வயசு அதிகம் மாதிரி தெரிவாங்கடா..மத்தபடி அவஙக சின்ன வயசுதான் பார்த்தாலே தெரியுது..உனக்கும் அவங்களுக்கும் பொருத்தமா இருக்கும்டா..திடுமுண்டு கோபால பத்தி உனக்கு தெரியாதா? என்றேன்.”

  இவனே இப்டி சொல்றான் ..இன்னும் மத்தவங்க பார்த்தா என்னல்லாம் சொல்வாங்களோ? வேனாண்டா என்றான்.

  அத்தோடு அந்த கதை முடிவடைந்தது. இதைத்தான் இடம்,பொருள்,ஏவல்னு சொல்றாங்களோ???

  ஹ்ம் நண்பன் கல்யாண கதையெல்லாம் சொல்றேன்.என் கதை என்ன ஆகப்போகுதோ கடவுளே !!!


  http://www.mazhai.net
  பெண் பார்க்க வரும் மாப்பிள்ளைகளை பெரும்பாலான பெண்கள் பிடிக்கவில்லை என்று சொல்வதில்லை.ஆனால் மாப்பிள்ளைகள் இதை சுலபமாக சொல்லிவிடுகிறார்கள்.

  ஏனெனில் பெண்ணியவாதிகள் சொல்வதுபோல் நம் நாட்டில் பெண்கள் இன்னும் அழகுப்பொருட்கள்,காட்சி பொருட்கள்,அடிமை பொருட்கள்.

குழந்தைகளைப் பாதுகாப்போம் !
 ஒரு காலத்தில் ஒரு டஜன் பிள்ளைகளைப் பெற்று ஒரு கவலையும் இல்லாமல் நமது முன்னோர்கள் வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைக்கு ஒன்றோ இரண்டோ குழந்தைகளை வைத்துக் கொண்டு நமது பெற்றோர்கள் படும் பாடு சொல்லி மாளாது ! காரணம் சமூகத்தில் நிலவுகின்ற அச்சுறுத்தும் நிகழ்வுகள்.
“ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்” என்பதெல்லாம் பழைய மொழிகளாகிவிட்டன. இன்று பிள்ளைகளெல்லாம் கிரில் கேட்டுகளுக்கு உள்ளே கிரிமினல்களைப் போல அடைபட்டுக் கிடக்க வேண்டிய சூழல்.
குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக நிகழும் தொந்தரவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்தகைய அச்சுறுத்தல்களிடமிருந்து அவர்களைப் பாதுகாக்க பெற்றோர் அதிக விழிப்புடன் இருக்க வேண்டியிருக்கிறது ! குழந்தைகளின் உடல் நலம் குறித்த பாதுகாப்பு உணர்வுகள் இன்னொரு பக்கம் பெற்றோர் முன்னால் வந்து நிற்கின்றன.
வீட்டுக்கு உள்ளேயும், வீட்டுக்கு வெளியேயும் குழந்தைகளுக்கு ஆபத்துகள் காத்திருக்கின்றன. அது  மனிதர்கள், விலங்குகள், அஃறிணைகள் என எந்த வடிவத்திலும் வரலாம் ! குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி ? 

வீட்டுக்கு வெளியே

வெளியே போகும் முன்
குழந்தைகளுடன் வெளியே போகிறீர்களா ? ஒரு நிமிடம் நில்லுங்கள். அசம்பாவிதங்கள் நடக்கக் கூடாது என்பதே நமது விருப்பம். திருடர்களும், அசம்பாவிதங்களும் நம்மிடம் சொல்லிக் கொண்டு வருவதில்லை. எனவே வீட்டை விட்டுக் கிளம்பும் போதே உங்கள் குழந்தைகளிடம் அவர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதைச் சொல்லுங்கள்.
வீட்டை விட்டுக் கிளம்பும் போது, உங்கள் மொபைல் கேமராவை எடுத்து உங்கள் குழந்தைகளைப் போட்டோ எடுங்கள். ஒருவேளை உங்கள் குழந்தை எங்கேனும் தவறிப் போனால் கண்டுபிடிக்க பேருதவியாய் இருக்கும். “ஒரு மாதிரி பிங்க் கலந்த வயலெட் கலர்ல ஒரு பிராக் மாதிரி கவுன்.. “ என்றெல்லாம் பதட்டத்தில் உளறுவதை இந்த படம் தடுக்கும்.
படத்தைக் காமித்து “இதான் குழந்தை… “ என விசாரிக்க உதவியாய் இருக்கும். தொழில் நுட்பம் இன்றைக்கு வெகுவாக வளர்ச்சியடைந்திருக்கிறது. அவற்றை குழந்தைகள் பாதுகாப்புக்காய் பயன்படுத்துவதற்கு இது ஒரு சின்ன உதாரணம் !
அதே போல ஒரு வேளை தவறினால் எந்த இடத்தில் சந்தித்துக் கொள்வது ? என்பதைச் சொல்லிக் கொடுங்கள். குறிப்பாக பெரிய பார்க்கள், விழாக்கள், ஷாப்பிங் மால்களில் இது உதவும்.
ஒருவேளை தவறினால் உதவி கேட்பது யாரிடம் என்பதைக் குழந்தைக்குச் சொல்லிக் கொடுங்கள். உதாரணமாக காவலரிடம் உதவி கேட்கவேண்டுமெனில், உடையை மட்டும் சொல்லாமல் “பேட்ஜ்” அணிந்திருப்பார், இந்த “லோகோ” உடையில் இருக்கும் என்பன போன்ற விஷயங்களையும் சேர்த்தே சொல்லிக் கொடுங்கள் !
எங்கே இருக்காங்க குழந்தைகள் ?
உங்க குழந்தைங்க விளையாடப் போவதிலோ, நண்பர்களுடன் வெளியே போவதிலோ தவறில்லை. ஆனால் குழந்தைகள் எங்கே இருக்கிறார்கள் ? யாருடன் இருக்கிறார்கள் போன்ற விஷயங்களையெல்லாம் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்
உதாரணமாக, “படத்துக்கு போறேன்” என்று உங்கள் பையன் சொன்னால், யாருடன் செல்கிறான். எங்கே செல்கிறான். எப்போ காட்சி துவங்கும், எப்போ முடியும் என அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.
“வெளியே போறேன்னு சொன்னான், எங்கே போனான், யார் கூட போனான்னு தெரியலையே” என புலம்பும் நிலையை வைத்துக் கொள்ளாதீர்கள். பக்கத்து தெருவுக்குப் போனால் கூட சொல்லி விட்டுப் போகும் பழக்கத்தைக் குழந்தைகளுக்கு ஊட்டுங்கள்.
கொஞ்சம் பெரிய பிள்ளைகளெனில் அவர்களுடன் செல் போன் தொடர்பில் இருங்கள். அவர்கள் பாதுகாப்பற்ற இடத்தில் இருப்பதாய் தோன்றினால் கவனத்தை அதிகப்படுத்துங்கள்.

கடைவீதிகளில்..
கடைவீதிக்குப் போகும் போது குழந்தையைக் கூட்டிக் கொண்டு போனால் முதல் கவனம் குழந்தையின் மீது இருக்கட்டும். அழகான புடவையைப் பார்த்து குழந்தையை விட்டு விடாதீர்கள். பெற்றோரின் கவனம் சிதறும் நேரம் பார்த்து குழந்தையை யாரேனும் கடத்தில் செல்லும் வாய்ப்பு உண்டு.
யாரேனும் உங்கள் குழந்தையை உற்றுக் கவனிப்பதாய் தோன்றினால், அவர்களிடம் போய் சும்மா பேசுங்கள். முடிந்தால் உங்கள் செல்போன் கேமராவில் அவரை படம் எடுங்கள். நீங்கள் அவரைக் கவனித்தீர்கள், அவருடன் பேசினீர்கள் என்றாலே ‘அடையாளம் தெரிந்து விட்டது’ என அந்த நபர் விலகி விடுவார்.
“குழந்தை ரொம்ப கியூட் அதான் பாத்தேன்” என யாரேனும் சொன்னால், “நன்றி” என ஸ்நேகமாய் ஒரு புன்னகையைக் கொடுத்து விட்டு நடையைக் கட்டுங்கள். அவருடன் அமர்ந்து உங்கள் குழந்தையின் சாதனைகளையெல்லாம் பட்டியல் போடவேண்டாம் !
உங்கள் குழந்தையை யாராவது நெருங்குகிறார்கள், பேசுகிறார்களெனில் உடனே அந்த இடத்திற்குச் செல்லுங்கள். அந்த நபரைப் பற்றிய விவரங்களை கேளுங்கள்.

காரில் போகும்போது 
“காரில் ஏறினதும் நீ பண்ண வேண்டிய முதல் வேலை என்ன ?”
“சீட் பெல்ட் போடறது மம்மி…”
நாலு நாள் இந்த உரையாடல் நீங்கள் காரில் ஏறியதும் நடந்தால், ஐந்தாவது நாளில் இருந்து குழந்தை தானாகவே சீட் பெல்ட் போடப் பழகிவிடும். அப்புறம் ஒருவேளை நீங்கள் சீட் பெல்ட் போடாவிட்டால் உங்களிடம் அதே கேள்வியை குழந்தையே கேட்கும் !
சீட் பெல்ட் போடுவது கார் பயணத்துக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். அது பக்கத்தில் இருக்கும் கோயிலுக்குப் போனாலும் சரி, தூரத்தில் இருக்கும் சொந்த ஊருக்குப் போனாலும் சரி. அலட்சியம் வேண்டாம்.
என்னதான் காரில் ஏர்பேக் போன்ற வசதிகள் இருந்தாலும் சீட் பெல்ட் போடாமல் பயணித்தால் பாதிப்பு பயங்கரமாக இருக்கும் என்பது நினைவில் கொள்ள வேண்டிய விஷயம். குழந்தை மீது அக்கறை இருக்கிறதா, சீட் பெல்ட் போடப் பழக்குங்கள். 

குழந்தையோடு பேசுகிறீர்களா ?
உங்கள் குழந்தையின் பாதுகாப்புக்கு முதல் தேவை என்ன தெரியுமா ? உங்களிடம் உங்கள் குழந்தை பாதுகாப்பை உணர்வது தான். “என்ன பிரச்சினைன்னாலும் அம்மா பாத்துப்பாங்க, அப்பா பாத்துப்பாங்க” எனும் ஆழமான நம்பிக்கை குழந்தைகளுக்கு இருக்க வேண்டியது அவசியம்.
அதுக்கு முதல் தேவை குழந்தைங்க கூட போதுமான அளவு நேரம் செலவிடறது ! குழந்தைகளோட மனநிலை எப்படி இருக்கு ? அவர்களுடைய நாள் எப்படிப் போச்சு ? அவர்கள் என்ன பண்ணினாங்க ? போன்ற எல்லா விஷயங்களையும் அன்புடன் கேட்டறியுங்கள். அவர்களுக்கு ஒரு நல்ல ஆறுதல் தோளாக இருக்க வேண்டியது அவசியம்.
குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள், பதின் வயதுப் பிள்ளைகளிடமெல்லாம் அதிக நேரம் உரையாடலில் செலவிடுங்கள். அவர்களுடைய வழிகளைச் செம்மைப் படுத்தவும், அச்சுறுத்தல்கள் பற்றி அவர்கள் அறிந்து கொள்ளவும் உங்கள் உரையாடல் உதவ வேண்டும். அவர்களுடைய பயங்கள், கவலைகள் எல்லாம் உங்களுக்குத் தெளிவாகத் தெரிய வேண்டும்.
“ஐயோ இதெல்லாம் நான் எப்படி அம்மா கிட்டே சொல்வது” என குழந்தை நினைக்கக் கூடாது. “எதுவா இருந்தாலும் மம்மி கிட்டே சொல்வேன்” என குழந்தை நினைக்குமளவுக்கு இயல்பாகப் பழகுங்கள்.
பள்ளி செல்லும் போது !…
பள்ளிக்கூடத்திற்குக் குழந்தைகள் நடந்து போகிறதென வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளோடு சிறிது நாட்கள் நீங்களும் கூடவே நடந்து செல்லுங்கள். சாலையில் எப்படி நடப்பது, எங்கெங்கே கவனமாக இருப்பது போன்ற விஷயங்களைச் சொல்லிக் கொடுங்கள். எந்த இடம் பாதுகாப்பானது, யாரிடம் உதவி கேட்கலாம் போன்ற விஷயங்களையும் அவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.
ஒருவேளை பொது வாகனங்களில் பயணிக்கும் குழந்தையெனில் பஸ் ஸ்டான்ட் க்கு போய் குழந்தைக்கு எந்த பஸ், எங்கே ஏறுவது, எங்கே இறங்குவது, எப்படி ஏறி இறங்குவது போன்ற விஷயங்களை பழக்குங்கள். பஸ்பயணத்தில் அச்சுறுத்தலெனில் ஓட்டுநரை அணுக குழந்தைக்குச் சொல்லிக் கொடுங்கள்.
பயணத்தின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும், பாதுகாப்பு விஷயங்கள் என்னென்ன தெரிந்திருக்க வேண்டும் போன்றவையெல்லாம் குழந்தைகள் அறிந்து வைத்திருப்பது அவசியமானது !
தெரியாத நபர் “லிஃப்ட்” கொடுத்தால் மறுக்கப் பழக்குங்கள். ஒவ்வொரு முறையும் உங்களிடம் அனுமதி வாங்கச் சொல்லுங்கள் !
குழந்தைகள் பயணிக்கையில் எப்போதும் ஒன்றிரண்டு பேராய் நடப்பது, பஸ்ஸில் பயணிப்பது பாதுகாப்பானது. தனியே எங்கே செல்வதாக இருந்தாலும் உங்களுக்குத் தகவல் தெரிய வேண்டும் என்பது பால பாடம்.
வாகனங்கள் எச்சரிக்கை !
வாகனங்கள் குழந்தைகளின் மிகப்பெரிய எதிரிகள். அதுவும் சென்னை போன்ற நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் பத்து மடங்கு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இரண்டு விதமான ஆபத்துகள் வாகன விஷயத்தில் உண்டு.
ஒன்று விபத்து. நிறுத்தப் பட்டிருக்கும் வாகனங்களின் பின்னாலோ, பக்கவாட்டிலோ குழந்தைகள் போகாமல் இருக்க வேண்டும். குறிப்பாக வாகன டயரின் அருகே நின்று பேசுவது போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும். வாகனங்கள் வரும் சாலையில் குழந்தைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுங்கள்.
இரண்டாவது கடத்தல் ! குழந்தைகள் கடத்துபவர்கள் வாகனங்களையே பயன்படுத்துகிறார்கள். குழந்தைகளை வசீகரிக்கும் விதமாக சாக்லேட், பொம்மை போன்ற ஏதாவது பொருளைக் காட்டி அவர்கள் காரின் அருகே வந்ததும் சுருட்டிக் கொண்டு பறந்து விடுவது அவர்களுடைய பாப்புலர் திட்டம்.
தெரியாத நபர் இருக்கும் காரின் அருகே எக்காரணம் கொண்டும் போகவேண்டாம் என குழந்தைகளைப் பழக்குங்கள் !
போன் நம்பர் தெரியுமா ?
உங்க போன் நம்பர் உங்க குழந்தைக்குத் தெரியுமா ? தெரியாவிட்டால் முதலில் அதைச் சொல்லிக் கொடுங்கள். குட்டிப் பிள்ளைகள் கூட ஒரு போன் நம்பரை எளிதில் கற்றுக் கொள்வார்கள். பள்ளி செல்லத் துவங்கிவிட்டால், வீட்டு விலாசத்தையும் கூடவே சொல்லிக் கொடுங்கள்.
பலரும் செய்யும் தப்புகளில் ஒன்று தங்கள் முழுப் பெயரைக் குழந்தைக்குச் சொல்லிக் கொடுக்காதது தான். உன்னோட அப்பா பேரென்ன என கேட்டால் “ராஜூ” என்று குழந்தை சொல்வதை விட “சுப்ரமணிய ராஜூ” என சொல்வது அதிக பயன் தரும். அப்பா, அம்மாவின் முழுப் பெயரை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.
வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் சில முக்கிய அடையாளங்களையும் குழந்தைக்குச் சொல்லிக் கொடுங்கள். அவ்வப்போது வீட்டில் விளையாட்டாக குழந்தையிடம் திருடன் போலீஸ் விளையாட்டை விளையாடி போன் நம்பர், விலாசம் எல்லாம் கேட்டு பழக்கப்படுத்துங்கள்.
விளையாட்டாய் பழகும் விஷயங்கள் குழந்தையின் மனதில் எளிதில் பதியும் என்பது குழந்தை உளவியல் !
கையில் நம்பர்
குழந்தைகளின் கையில் போன் நம்பரை எளிதில் அழியாத பேனாவைக் கொண்டு எழுதி வைக்கலாம். வெளியிடங்களில் ஒருவேளை குழந்தை தவறிப் போனால் தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும் என்பது சிலருடைய கருத்து. குறிப்பாக பேசத் தெரியாத குழந்தைகள் விஷயத்தில் இது ரொம்ப பயன் தரும். ஒரு வேளை குழந்தை பதட்டத்தில் எண்ணை மறந்து விட்டால் கூட இது உதவும் !
வெளியூரில் போய் ஏதாவது ஹோட்டலில் தங்குகிறீர்களெனில் அந்த ஹோட்டலின் பிஸினஸ் கார்ட்/விசிடிங் கார்ட் நான்கைந்து எடுத்து குழந்தையின் பாக்கெட்களில் போட்டு வைப்பது நல்லது. தவறிப்போனால் ஹோட்டல் பெயரும், தொடர்பு எண்களும் அவர்களிடம் இருக்கும் !
கைகளில் அழகிய அகலமான ரப்பர் பேன்ட் ஒன்றைப் போட்டு அதில் பெயரும் தொலைபேசி எண்ணும் எழுதி வைப்பது கூட நல்ல யோசனையே.
ஷாப்பிங், தீம்பார்க் போன்ற இடங்களுக்குப் போனால், எக்காரணம் கொண்டும் அந்த இடங்களை விட்டு வெளியே வரவேண்டாம் என சொல்லுங்கள். வெளியே வந்தால் ஆபத்து அதிகமேயன்றி குறைவில்லை ! குழந்தை குட்டிகளுடன் நிற்கும் ஏதேனும் அம்மாக்களிடம் சென்று உதவி கேட்பது ரொம்ப நல்ல விஷயம் என்பதையும் சொல்லிக் கொடுங்கள் !
உடல் நலம் கவனம்
பொது இடங்களுக்குப் போகும் போது குழந்தைகளின் உடல் நலத்தையும் கவனத்தில் கொள்ளுங்கள். தண்ணீர் விளையாட்டெனில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா துணி மணிகள் கைவசம் இருக்கட்டும். வெயில் எனில் குடை தொப்பி போன்றவை நிச்சயம் தேவை.
தண்ணீர் எப்போதும் கையில் இருக்கட்டும். அடிக்கடி தண்ணீர் குடிப்பது சுற்றுலா, ஷாப்பிங், பார்க் போன்ற இடங்களில் ரொம்ப அவசியம். உடலில் தண்ணீர் பற்றாக்குறை  நிலை வந்தால் சோர்வும், நோய்களும் வந்து விடும்.
குழந்தைகள் பெரும்பாலும் “தண்ணீர் கொடுங்கள்” என்று கேட்பதில்லை. எனவே பெரியவர்கள் தான் அதைக் கவனித்து அடிக்கடி தண்ணீர் கொடுக்க வேண்டும்.
நல்ல வசதியான செருப்பை அணிவது அவசியம். சிம்பிளாக காலை உறுத்தாத செருப்புகள் சிறப்பானவை. அதே போல நல்ல வசதியான ஆடைகள் அணிவியுங்கள். ஸ்டைலாக இருப்பதை விட வசதியாக இருப்பதே அதிக மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் என்பது மனதில் இருக்கட்டும் !

 வீட்டுக்கு உள்ளே

குழந்தை தனியாய் இருக்கிறதா ?
வீட்டில் குழந்தையைத் தனியே விட்டுச் செல்ல வேண்டிய சூழ்நிலையெனில் பாதுகாப்பு விஷயங்களில் அதிக கவனம் எடுத்து சொல்லிக் கொடுங்கள்.
முக்கியமாக வீட்டுக் கதவுகளையெல்லாம் பத்திரமாகப் பூட்டி வைக்கச் சொல்லுங்கள். யாரேனும் வந்துக் கதவைத் தட்டினால் என்ன செய்ய வேண்டும் ? தெரியாத நபர் எனில் என்ன செய்ய வேண்டும் போன்றவற்றையெல்லா தெளிவாகச் சொல்லுங்கள்.
வீட்டில் போன் அடித்தால் என்ன செய்யவேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்க வேண்டியது முக்கியம். குறிப்பாக வீட்டில் குழந்தை தனியே இருப்பதைக் காட்டிக் கொள்ளாமல் இருப்பது நல்லது ! . “நீங்க யாரு, டாடி கிட்டே என்ன சொல்லணும்..” என கேட்க குழந்தைகளைப் பழக்குங்கள்.
வீட்டுக்குப் போன் செய்து அடிக்கடி விசாரித்துக் கொள்ள வேண்டியது அவசியம். இன்னொரு முக்கியமான விஷயம், வீட்டில் குழந்தைகள் தனியே இருந்தால் அவர்கள் தண்ணீர், மின்சாரம், நெருப்பு போன்ற ஆபத்துகள் கூட நேரலாம். எனவே அது குறித்த பாதுகாப்பு அம்சங்களையும் சொல்லிக் கொடுங்கள் !
பக்கத்து வீடுகள்
உங்கள் பக்கத்து வீட்டு நபர்களின் வீடுகளுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். எந்தெந்த வீடுகள் பாதுகாப்பானவை. எவையெல்லாம் உங்கள் குழந்தை நம்பிக்கையுடன் செல்லலாம் என்பதை குழந்தைகளுக்கு விளக்குங்கள்.
தெரியாத வீடுகளுக்கு குழந்தைகள் செல்ல அனுமதிக்க வேண்டாம். தெரிந்த நபர்களின் வீடுகளுக்குக் கூட நீங்கள் கூடவே சென்று பழக்கப் படுத்துவதே நல்லது. நபர்கள் தெரிந்தவர்களாய் இருக்கிறார்கள் என்பதற்காக வீடு பாதுகாப்பாய் இருக்க வேண்டுமென்பதில்லை. அங்கே கவனிக்கப் படாத கிணறு இருக்கலாம், ஆபத்தான மாடி இருக்கலாம், அல்லது வேறு ஏதேனும் ஆபத்து ஒளிந்திருக்கலாம். எனவே நீங்கள் அந்த வீடுகளைப் பார்த்திருப்பது நல்லது ! 
பக்கத்து வீடுகளுக்குச் சென்றால் கூட, குழந்தை அந்த வீட்டை அடைந்து விட்டதா என்பதை போனில் விசாரித்து அறியுங்கள். அந்த வீட்டை விட்டுக் கிளம்பும் போதும் உங்களுக்குத் தகவல் சொல்லச் சொல்லுங்கள்.
நெருப்போடு கவனம் தேவை
தீ தொடர்பான ஆபத்துகள் குழந்தைகளுக்கு வருவதை பத்திரிகைகள் அவ்வப்போது துயரத்துடன் பதிவு செய்கின்றன. குழந்தைகளுக்கு நெருப்பு குறித்த ஆபத்துகளும், எச்சரிக்கை உணர்வுகளும் தெரிந்திருக்க வேண்டியது ரொம்ப ரொம்ப முக்கியம்.
தீப்பெட்டி, லைட்டர் போன்ற சமாச்சாரங்களை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைத்திருக்க வேண்டியது அவசியம். ஒரு வேளை வீட்டில் தீ பிடித்தால் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என சொல்லிக் கொடுங்கள். குழந்தைகள் பெரும்பாலும் வீட்டில் எங்கேயாவது ஒளிந்து கொள்ளவே முயலும் என்பது உளவியல் பாடம் !
உடையில் தீ பிடித்தால் ஓடக்கூடாது ! தண்ணீர் ஊற்றவேண்டும், இல்லையேல் தரையில் புரளவேண்டும் ! எரிந்து கொண்டிருக்கும் வீட்டுக்குள் எக்காரணம் கொண்டும் நுழையக் கூடாது, அப்போது மின் உபகரணங்கள் எதையும் தொடக் கூடாது. இப்படிப்பட்ட அடிப்படை விஷயங்களைக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுன்கள்.
சுவாரஸ்யமாய் சீரியல் பார்த்துக் கொண்டே, “மூணு விசில் வந்துச்சுன்னு நெனைக்கிறேன். பாப்பா அந்த அடுப்பை அணைச்சு வை” என்றெல்லாம் சொல்லவே சொல்லாதீர்கள். சிரமம் பார்க்காமல் அத்தகைய வேலைகளை நீங்களே செய்யுங்கள். சமையலறை, கியாஸ் பக்கத்தில் குழந்தைகளை அனுமதிக்காமல் இருப்பது சாலச் சிறந்தது !
கொசு, பூச்சி மருந்துகள் !
வீட்டில் கொசு, பூச்சி, கரப்பான் போன்றவையெல்லாம் வராமல் இருப்பதற்காக நீங்கள் வாங்கி அடிப்பீர்களே ஹிட் போன்ற சமாச்சாரங்கள், அவை குழந்தைகளுக்கு ரொம்பவே டேஞ்சர் என்பது தெரியுமா ? பலருக்கும் தெரியாத விஷயங்களில் இதுவும் ஒன்று !
இத்தகைய ஸ்ப்ரேயை குழந்தைகள் தெரியாமல் முகத்தில் அடித்து உள்ளிழுத்தால் அவர்களுடைய மூளை நேரடியாகவே பாதிக்கப்படும். சுய நினைவு இல்லாமல் விழுந்து விடுவார்கள். எவ்வளவு சுவாசிக்கிறார்கள் என்பதற்கு ஏற்ப இந்த பாதிப்பு அதிகமாகும்.
எனவே ஹிட் போன்ற சமாச்சாரங்களை குழந்தைகளின் கண்களுக்கே எட்டாத இடத்தில் வைத்து விடுங்கள்.  அதே போல பாத்ரூம் கிளீனிங் பொருட்கள், பாத்திரம் கழுவும் பொருட்கள் போன்றவற்றையும் தூரமாகவே வையுங்கள்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் கெமிகல் பொருட்கள், நச்சுப் பொருட்கள் போன்ற சர்வ சங்கதிகளும் குழந்தைகளால் எடுக்க முடியாத இடத்தில் இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம் !
விளையாட்டுப் பொருட்களில் கவனம்
குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் விளையாட்டுப் பொருட்களிலும் கவனம் தேவை. ரொம்பச் சின்னக் குழந்தைகளுக்கு சின்னச் சின்ன பாகங்கள் உடைய விளையாட்டுப் பொருட்கள் வாங்கிக் கொடுக்கக் கூடாது. குழந்தைகள் அவற்றை வாயில் போட்டு ஆபத்தை விலைக்கு வாங்கி விடலாம். அந்தந்த வயதினருக்கு ஏற்ற விளையாட்டுப் பொருட்களையே வாங்குங்கள் !
அதே போல தரம் குறைந்த விஷத் தன்மையுடைய பெயிண்டிங், மாலை போன்றவற்றை குழந்தைகளுக்கு வாங்கித் தராதீர்கள். அது அவர்களுக்கு அலர்ஜி போன்ற நோய்களைத் தந்து விடும்.
விளையாட்டுப் பொருட்கள் உடைந்து சுக்கு நூறானபின்னும் அதை ஒரு கோணியில் கட்டி வீட்டிலேயே வைத்திருக்கும் தவறைச் செய்யாதீர்கள். உடைந்த பொம்மைகளையும், விளையாட்டுப் பொருட்களையும் தூரப் போடுங்கள்.
குழந்தைகள் விளையாடும் இடத்தில் கூட அவர்களுக்குக் காயம் தரக்கூடிய கூர்மையான பொருட்கள் இருந்தால் அவற்றை அகற்றிவிடுங்கள். குழந்தைகளுக்கு அருகில் இருக்கும் பொருட்கள் மீதான கவனத்தை விட, விளையாட்டே பிரதானமாய் தெரியும். எனவே அவை ஆபத்தில் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம்.
மின் உபகரணங்களில் கவனம்
குழந்தைகள் மின் உபகரணங்களைப் பயன்படுத்தும் போது ரொம்பவே கவனம் தேவை. என்னென்ன செய்யலாம்? என்னென்ன செய்யக் கூடாது ? என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடுங்கள். அடிக்கடி அவற்றை குழந்தைகளுக்கு நினைவூட்டிக் கொண்டே இருங்கள். குறிப்பாக பிளக் பாயின்ட் போன்றவற்றுக்கு ஒரு கவர் வாங்கி  மாட்டுங்கள் !
வாஷிங் மெஷின், மைக்ரோவேவ் அவன், ஃபிரிட்ஜ் போன்றவற்றையெல்லாம் குழந்தைகள் கையாள விடாதீர்கள். மின் பொருட்களில் எப்போதுமே ஆபத்து ஒளிந்திருக்கும். எனவே வெகு சில ஆபத்தற்ற மின் உபகரணங்களைத் தவிர வேறு எதையும் குழந்தைகள் தொட அனுமதிக்காதீர்கள்.
மின்சாரத்தில் இருக்கின்ற ஆபத்துகளைக் குழந்தைகளுக்கு சின்ன வயதிலேயே சொல்லிப் புரிய வைக்கலாம். லைட்டும், சுவிட்சும் விளையாட்டுப் பொருட்களல்ல என்பது அவர்களுக்கு மழலை வயதிலேயே புரிய வேண்டியது அவசியம்.

வீட்டுப் பொருட்களில் கவனம்
நமது வீடு குழந்தைக்குப் பாதுகாப்பாய் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டியது நமது கடமை. குறிப்பாக மாடிப் படிகள், பால்கனி, மொட்டை மாடி போன்ற இடங்கள் குழந்தைகளுக்குப் பாதுகாப்பாய் இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். பாதுகாப்பு இல்லை என தோன்றினால் கிரில், கதவு, வலை என தேவையானவற்றைப் போட்டு பாதுகாப்பாக்கிக் கொள்ள வேண்டும்.
ஷேவிங் செட் போன்றவற்றை பத்திரமாய் வைத்திருப்பது, அயர்ன் பாக்ஸ் போன்றவற்றை பாதுகாப்பாய் வைப்பது, குப்பைகளை உடனுக்குடன் சுத்தம் செய்வது என வீட்டுப் பொருட்களில் கவனம் செலுத்த வேண்டும்.
டிவி, கனமான பொருட்கள், மிக்ஸி, கிரைண்டர் போன்றவை குழந்தை இழுத்துத் தள்ளாத வகையில் இருக்க வேண்டும். ஒரு மேஜை விரிப்பின் முனை கூட கீழே தொங்காமல் இருப்பது நலம். அப்படி இல்லையேல் மேஜை விரிப்பே இல்லாமல் இருப்பது நல்லது !
கத்தி, பிளேடு, அரிவாள் போன்ற விஷயங்களெல்லாம் கண்ணுக்கெட்டாத தூரத்தில் ரொம்ப ரொம்ப பாதுகாப்பான இடத்தில் இருக்கட்டும். தவறி விழாத இடத்தில், குழந்தையால் எடுக்க முடியாத இடத்தில் அவற்றை வையுங்கள். மாத்திரைகள், மருந்துகள் போன்ற சமாச்சாரங்களும் டிராக்களில் பூட்டப்பட்டே இருக்கட்டும் !
சின்னச் சின்ன இத்தகைய விஷயங்களில் பெரிய பெரிய ஆபத்துகள் ஒளிந்திருக்கின்றன.

மருந்துகளில் கவனம்
குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் விஷயத்தில் பலரும் டாக்டர்களாகி விடுவார்கள்.  அப்படி ஆகாமல் இருப்பது குழந்தைக்கும், நமக்கும் ரொம்ப நல்லது. சரியான நேரத்தில் டாக்டரிடம் போக வேண்டியதும், அவருடைய அறிவுரைப்படி நடக்க வேண்டியதும் ரொம்ப அவசியம். 50% பெற்றோரும் டாக்டர் சொல்வது பாதி புரியாமல் தான் டாக்டரின் அறையை விட்டு வெளியே வருகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. டாக்டர் சொல்வதை முதலில் தெளிவாய் கேளுங்கள்.
“கடைசி நாள்” அதாவது எக்ஸ்பயரி டேட் என்ன என்பதை கவனமாய் பாருங்கள். கவரிலும், பாட்டிலிலும் ஒரே நாள் இருக்கிறதா என்றும் பாருங்கள். பழைய மருந்துகளை வாங்கவே வாங்காதீர்கள். அது பழையதாகி விட்டது என மருந்து கடைக் காரரிடமும் சொல்லி விடுங்கள். காலாவதியான மருந்துகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் !
மருந்தை எவ்வளவு தடவை கொடுக்க வேண்டும், எந்த அளவு கொடுக்க வேண்டும் என்பதையெல்லாம் மருத்துவர் அறிவுரைப்படியே கேளுங்கள். அதிக காய்ச்சலா இருக்கு என ரெண்டு மாத்திரை எக்ஸ்ட்ராவாய்க் கொடுக்காதீர்கள். அது ஆபத்தானது !.
“இந்த மருந்து இல்லை, இதே மாதிரி இன்னொரு மருந்து இருக்கு” என கண்ணி வலை விரிக்கும் மருந்து கடைக்காரர்களிடம் ஏமாற வேண்டாம். நிறைய லாபம் பார்க்க விரும்பும் பலரும் சொல்லும் டயலாக் இது ! எந்த மருந்தை டாக்டர் சொல்கிறாரோ அதையே வாங்குங்கள் !
பழைய மருந்துகளை கொடுப்பது, ஒரு குழந்தைக்கு வாங்கிய மருந்தை இன்னொரு குழந்தைக்கும் கொடுப்பது இப்படியெல்லாம் நீங்களே டாக்டராய் மாறி குழந்தையின் வாழ்வோடு விளையாடாதீங்க !

தண்ணீரில் பாதுகாப்பு
தண்ணீர் இன்னொரு டேஞ்சர் விஷயம். குறிப்பாக சின்னப் பிள்ளைகள் உள்ள இடங்களில் தண்ணீர் ரொம்ப ஆபத்து. குழந்தைகளைத் தனியே எக்காரணம் கொண்டும் நீச்சல் குளம், குளம், குட்டை, ஏரி, கடல் போன்ற எந்த இடத்திலும் விடாதீர்கள்.  உங்கள் நேரடிப் பாதுகாப்பு நிச்சயம் தேவை.
வீடுகளிலும் ரொம்ப சின்னப் பிள்ளைகள் இருந்தால் கவனம் இரண்டு மடங்கு வேண்டும். பெரிய பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்தால் குழந்தை அதைத் திறக்க முடியாதபடி வையுங்கள். அல்லது அந்த அறையைப் பூட்டியே வையுங்கள். முடிந்தவரை குடம் போன்ற வாய் குறுகலான பாத்திரங்களில் தண்ணீர் சேமித்து வையுங்கள்.
குழந்தைகள் தண்ணீரில் விளையாட அதிக ஆர்வம் காட்டும். ஆனால் தவழும் பிள்ளைகளுக்கு ஆபத்தை விளைவிக்க ஒரு பக்கெட் தண்ணீரே போதுமானது. எனவே கவனம் அவசியம்.
இணையத்தில் கவனம்
இப்போதெல்லாம் சின்ன வயதிலேயே சிறுவர் சிறுமியர் இன்டர்நெட் விஷயங்களைக் கற்றுத் தேர்ந்து விடுகிறார்கள். இணையம் அவர்களுக்கு நிறைய நல்ல விஷயங்களைச் சொல்லித் தரும். அதே நேரத்தில் தேவையற்ற பல விஷயங்களையும் அது கற்றுத் தரும். எனவே குழந்தைகளின் இணையப் பயன்பாட்டைக் கவனிப்பது, வரையறுப்பதும் பெற்றோரின் கடமையாகும்.
இணையத்தில் சொந்தப் புகைப்படமோ, குடும்பத்தினரின் புகைப்படமோ அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும். உண்மையான தகவல்களை இணையப் பக்கங்களில் போட்டு வைக்க வேண்டாம். எக்காரணம் கொண்டும் இணைய நண்பர்களை தனியே நேரில் சந்திக்க வேண்டாம் எனும் அடிப்படை விஷயங்களைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.
தவறான இணையப் பக்கங்கள், தேவையற்ற சேட் தளங்கள் போன்றவற்றை அனுமதிக்காமல் இருக்கலாம். குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் இணையத்துக்கு என ஒதுக்குங்கள். இரவு நேரத்தில் இணையத்தில் உலவுவதை தடை செய்யுங்கள். இப்போதெல்லாம் குழந்தையின் மனசையும், பாதுகாப்பையும் பலவீனப்படுத்துபவை இணையத்திலேயே உண்டு !

பாலியல் தொந்தரவுகளிலிருந்து பாதுகாக்க !

நல்ல தொடுதல் எது ?
சின்ன வயதுப் பெண்குழந்தைகளுக்கு ஏற்படும் மிகப்பெரிய சிக்கல்களில் ஒன்று பாலியல் ரீதியான தொந்தரவுகள். இதை “குட் டச், பேட் டச்” என்பார்கள். நல்ல தொடுதல் எது, மோசமான தொடுதல் எது என்று பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியது மிக மிக முக்கியம் !
குழந்தைகளைக் கொஞ்சுவது போல தொடுவது, விளையாட்டு எனும் போர்வையில் வக்கிரம் காட்டுவது இவையெல்லாம் எங்கும் நடக்கும் விஷயங்கள். 72.1 சதவீதம் குழந்தைகள் இதைப்பற்றி யாரிடமும் சொல்வதில்லை. காரணம் பல குழந்தைகளுக்கும் இது குறித்த விழிப்புணர்வு இல்லை. இரண்டாவது காரணம், இந்த தொல்லைகளையெல்லாம் தருவது 90% குழந்தைக்குத் தெரிந்த நபர்களே என்கின்றன புள்ளி விவரங்கள்.
வளரும்போ குழந்தைக்கு எல்லாம் புரியும் என்று விட்டு விடுவது ரொம்பவே ஆபத்தானது. ஒரு குழந்தை மூன்று வயதைத் தாண்டினாலே அதனிடம் மோசமான தொடுதல் பற்றிச் சொல்லிக் கொடுக்கலாம் ! மிக முக்கியமாக ஆண், பெண் என இரண்டு குழந்தைகளுக்குமே இதைச் சொல்லிக் கொடுங்கள் ! ஆபத்து இருவருக்குமே உண்டு !
நோ சொல்வது நல்லது !
யாராய் இருந்தாலும் சரி, புடிக்காத விஷயங்களுக்கு “நோ” சொல்லப் பழக்க வேண்டும். குழந்தைகள் நெருங்கிய சொந்தக்காரர்களிடம் “நோ” சொல்லத் தயங்கும். குறிப்பாக கொஞ்சம் வயதில் பெரியவர்களிடம் அவர்களுடைய தயக்கம் அதிகமாக இருக்கும். அதைப் போக்க வேண்டும். தப்பாக யாரேனும் தொட முயற்சி செய்தால் “தொடாதே..” என அழுத்தமாகவும், சத்தமாகவும் சொல்லப் பழக்க வேண்டும். குழந்தை சத்தமாகச் சொன்னால் அதன் பின்னர் அந்த நபரால் தொந்தரவு எற்படும் வாய்ப்பு ரொம்பக் கம்மி !
குழந்தைகளை நம்புங்க !
குழந்தைங்க சொல்வதை பெற்றோர் முழுமையாய் நம்ப வேண்டும். குழந்தைகள் பொய் சொல்ல மாட்டார்கள். அதுவும் பாலியல் விஷயங்களில் இட்டுக் கட்டி எதையும் சொல்லவே மாட்டார்கள். எனவே குழந்தைகள் சொல்வதைக் கவனமாய்க் கேளுங்கள். குழந்தை பேசி முடிக்கும் வரை இடை மறிக்காதீர்கள்.  
“சே..சே.. அந்தத் தாத்தா அப்படியெல்லாம் பண்ண மாட்டாரு… “, “அந்த மாமா ரொம்ப நல்லவரு, அவரைப் பற்றி தப்பா நினைக்காதே” என்றெல்லாம் சொல்லவே சொல்லாதீர்கள். குழந்தை அசௌகரியமாய் உணரும் நபர்களிடம் குழந்தையை தனியே இருக்க விடாதீர்கள். அது ரொம்ப முக்கியம்.

குழந்தைகளிடம் கேளுங்க !
குழந்தைகள் கிட்டே நடந்த விஷயங்களையெல்லாம் தினமும் கேக்க வேண்டியது பெற்றோரின் கடமை. பள்ளியில் நடந்த விஷயங்களானாலும் சரி. சொந்தக்காரங்க வீட்டில் நடந்த விஷயமானாலும் சரி, எல்லாவற்றையும் கேளுங்கள். உங்கள் கள்ளம் கபடமற்ற மழலைகள் உண்மையைச் சொல்வார்கள்.
ஒருவேளை விரும்பத் தகாத நிகழ்வு நடந்திருந்தால் கூட பதட்டத்தை வெளிக்காட்டாமல் பேசுங்கள். எந்தத் தவறுக்கும் உங்கள் குழந்தை காரணமல்ல என்பது நினைவில் இருக்கட்டும்.
நம்பிக்கையை வளருங்க
எதுன்னாலும் மம்மி கிட்டே தயங்காம சொல்லலாம் எனும் நம்பிக்கை குழந்தைகளுக்கு இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்கள் குழந்தையோடு இயல்பான அன்பை வைத்திருக்க வேண்டியது தான். எரிச்சல், கோபம் காட்டும் பெற்றோரிடம் குழந்தைகள் உண்மையை மறைக்கும்.
“மம்மி எனக்கு இந்த அங்கிளைப் புடிக்காது” என்று குழந்தை சொன்னால் அரவணைத்துக் கொள்ளுங்கள். எச்சரிக்கை உணர்வு கொள்ளுங்கள். ஏதேனும் சிக்கல் நடந்திருக்கலாம். எனவே குழந்தையின் விருப்பத்தை மதியுங்கள். அந்த நபரைக் கொஞ்சம் கவனியுங்கள் !
குழந்தையை மிரட்டினாங்களா ?
“மம்மி கிட்டே சொல்லாதே..” என்று யாராவது எதையாவது சொன்னார்களா என்பதை குழந்தைகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். பெரும்பாலும் தப்பான விஷயங்கள் தான் பெற்றோரின் காதுகளுக்குப் போகக் கூடாது என சில்மிஷவாதிகள் நினைப்பார்கள். அத்தகைய விஷயங்களை நீங்கள் நிச்சயம் அறிய வேண்டும். அது தான் உங்களை எச்சரிக்கையாய் வைத்திருக்க உதவும். உங்கள் குழந்தையைப் பாதுகாக்கவும் அது ரொம்ப அவசியம்.
“உன்னைப் பத்தி அம்மா கிட்டே சொல்லி அடி வாங்கி தருவேன்”  போன்ற மிரட்டல்களில் ரொம்ப கவனம் தேவை. தொடர்ச்சியான பாலியல் தொந்தரவுகளுக்கு இது காரணமாகிவிடக் கூடும் !
யாராகவும் இருக்கலாம் !
பாலியல் தொந்தரவுகளைத் தருபவர்கள் இளைஞர்களாய் இருப்பார்கள் என்பது ஒரு தப்பான அபிப்பிராயம். வயசு வித்தியாசம், சாதி, மத, பண வித்தியாசம் இல்லாமல் யாருக்குள்ளும் இந்த நரி ஒளிந்திருக்கலாம். எனவே ஆள் பார்த்து ஏமாந்து விடாதீர்கள்.
குழந்தைக்கு யாராவது கிஃப்ட் வாங்கி குடுத்தாங்களா ? சாக்லேட் வாங்கி குடுத்தாங்களா ? அல்லது ஏதேனும் வாங்கித் தரேன்னு ஆசை காட்டினாங்களா என அறிந்து கொள்ளுங்கள். இவையெல்லாம் சிக்கல்கலுக்கான முன்னுரையாகக் கூட இருக்கலாம்.
குழந்தையின் உடல் மொழி !
குழந்தைக்கு விரும்பத் தகாத சம்பவங்கள் ஏதும் நடந்திருந்தால் குழந்தையின் முகமே சட்டென காட்டிக் கொடுத்துவிடும். அதைக் கவனித்து விசாரிக்க வேண்டியது மட்டுமே பெற்றோர் செய்ய வேண்டிய விஷயம். குழந்தை சோகமாய் இருந்தாலோ, பேசாமல் இருந்தாலோ கவனியுங்க ! குழந்தையின் உடலில் காயம் இருந்தல் உடனே கவனியுங்கள்.
குழந்தைகளை எக்காரணம் கொண்டும் பயமுறுத்தியோ, அதட்டியோ விஷயத்தைக் கேட்காதீர்கள். ரொம்ப ரொம்பப் பொறுமையாய் கேளுங்கள் !
திடீர்ப் பாசம் வருதா ?
குழந்தையிடம் உறவினர்கள் யாராச்சும் திடீரென பாசம் காட்டுகிறார்களா என கவனியுங்கள். குழந்தையை அடிக்கடி கொஞ்சுவது, தனியே மாடிக்கோ, பால்கனிக்கோ, தனிமையான அறைகளுக்கோ கூட்டிப் போவது போன்ற விஷயங்களில் கவனமாய் இருங்கள். குழந்தையைக் கூட்டிக் கொன்டு சினிமா போகிறேன் என்றெல்லாம் சொன்னால் மறுத்து விடுங்கள். பிறர் குழந்தையோடு பழகுவதெல்லாம் உங்கள் பார்வையில் படும் படி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
நோ போட்டோ !
குழந்தையை யாராச்சும் புகைபடம் எடுக்க வந்தால் “வேண்டாம்” என சொல்லப் பழக்குங்கள். நீங்கள் இல்லாத நேரத்தில் குழந்தையைப் புகைப்படம் எடுக்க அனுமதிக்க வேண்டாம். குழந்தையை யாரேனும் ஆபாசமாய்ப் படம் எடுக்கவும் வாய்ப்பு உண்டு.
அதே போல குழந்தையிடம் ஆபாசப் படங்கள் அடங்கிய புத்தகங்கள் யாராச்சும் காட்டுகிறார்களா போன்றவையும் கவனிக்க வேண்டிய விஷயம். குழந்தைகளின் மனதைக் கறையாக்கி அதில் குளிர்காயும் குறை மனசுக்காரர்களும் உண்டு !
கிராமத்திலும் உண்டு !
இதெல்லாம் நகரத்துச் சமாச்சாரங்கள். கிராமத்துல எதுவுமே கிடையாது என தயவு செய்து நினைத்து விடாதீர்கள். கிராமங்களோ நகரமோ எல்லா இடங்களிலும் இந்த பிரச்சினை நிச்சயம் உண்டு.
அதே போல குழந்தை கிட்டே ஒரு தடவை எல்லா எச்சரிகை உணர்வையும் சொல்லியாச்சுன்னும் விட்டுடாதீங்க. அடிக்கடி சொல்லிட்டே இருங்க. குழந்தைகள் மெல்லிய மனசுக்காரர்கள் அவர்களுக்கு அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியது அவசியம்.

நன்றி : தேவதை, மாத இதழ்.