Friday, May 31, 2013

FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்கநமது கணிணியில் பல கோப்புகளை வைத்திருப்போம் அவற்றில் நமக்கு தேவையான அல்லது முக்கியமான பல கோப்புகள் இருக்கும்.நமக்கே தெரியாமல் சிலர் அழிக்கவோ அல்லது நமக்கு தெரியாமல் காப்பி செய்து கொள்ளவோ முடியும்.இதை தடுக்க Prevent என்ற இந்த மென்பொருள் பயன்படுகிறது.

இந்த மென்பொருளை நிறுவிய பின் இயக்கினால் கீழ்க்கண்ட Window தோன்றும்.
இதில் Define Hotkey என்பதில் உங்களுக்கு எளிதான அல்லது நினைவு கொள்ளகூடிய வகையில் எதாவது Key தேர்வு செய்து கொள்க. உதாரணமாக Ctrl + B அல்லது Ctrl + C என ஏதாவது தேர்வு செய்து கொள்க.

தேர்வு செய்த பின் Activate என்ற பட்டனை அழுத்துக.பின் கீழ்க்கண்ட Window தோன்றும்.இதில் OK கொடுத்த பின் நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட்,பேஸ்ட்,காப்பி மற்றும் அழிக்கவோ முடியாது.மேலும் கோப்பின் மேல் Right Click செய்து பார்த்தாலும் அனைத்து வசதிகளும் முடக்கப்பட்டிருக்கும்.கீழே உள்ள படத்தை பார்க்க.
உங்களுக்கு கோப்புகளை அழிக்க வேண்டுமானால் முன்பு தேர்வு செய்த key அழுத்தினால் போதும்.அதாவது முன்னர் Ctrl +B கொடுத்திருந்தால் அதை தற்போது அழுத்தினால் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடும்.தற்போது நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட்,பேஸ்ட்,காப்பி மற்றும் அழிக்க முடியும்.
இந்த மென்பொருளை தரவிறக்க இங்கே கிளிக் செய்க

*******************************

நன்றி: ரசூளிப்னுகோய ப்ளாக்ஸ்பாட்

Thursday, May 30, 2013

ஆண் பெண் இருபாலாருக்குமிடையில் குரல் எப்படி வித்தியாசப்படுகிறது..?

இயற்கையின் படைப்பில் ஒரு மனிதனின் குரல், இன்னொரு மனிதனின் குரலைப்போல இருப்பதில்லை என்பது ஒரு ஆச்சிரியமான விஷயம். உதாரணத்திற்கு நம்மை சுற்றியுள்ள மனிதர்களை எடுத்துக்கொள்வோம் யாருடைய குரலாவது இன்னொருவரின் குரலோடு 100% பொருந்துகிறதா என்று பார்த்தோமானால் நிச்சயமாக இல்லை என்று தான் கூற வேண்டும், இன்னும் சொல்லப்போனால் குரலின் வழியே குறிப்பிட்ட மனிதனை நம்மால் அடையாளம் காணமுடியும் என்பதுதான் உண்மை.
சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும் பொதுவாக ஒரு குரலை கேட்டவுடன் அந்த குரலுக்கு சொந்தக்காரர் ஆணாஅல்லது பெண்ணா என்று நம்மால் இலகுவாக கூறிவிட முடிகிறதுதானே, எப்படி நம்மால் கண்டறிந்துகொள்ள முடிகிறது என்றால், ஆண்களின் குரல் பெண்களின் குரலைக்காட்டிலும் சற்று தடிமனாகவும் கொஞ்சம் கரகரப்பாகவும் இருப்பதால் தான். அதேவேளையில் பெண்களின் குரலை எடுத்துக்கொண்டோமானால் அவர்களின் குரல் மென்மையாகவும் (Soft) இனிமையாகவும் இருக்கும் அந்த மென்மைதான் ஆண்களின் குரலிலிருந்து பெண்களின் குரலை முற்றிலும் வேறுபடுத்திக் காட்டுவதற்குறிய முக்கிய காரணி ஆகும்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் குழந்தைகள் வளர வளரத்தான் குரலில் ஆண் பெண் என்ற வித்தியாசம் தெரிய ஆரம்பிக்கும், பிறந்து மூன்று நான்கு வயதுவரையிலான குழந்தைகளிடம் இந்த குரல் வித்தியாசத்தை நம்மால் அதிகம் உணர்ந்து கொள்ள முடியாது. இதற்க்குறிய காரணத்தை பற்றிதெரிந்து கொள்வதற்கு முன்புமுதலில் நாம் எப்படி பேசுகிறோம் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள். நாம் எப்படி பேசுகிறோம் என்பது பற்றி விளக்கமாக கூறினால் இந்த பதிவு நாம் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற விலங்கியல் பாட பிரிவை நினைவு கூர்ந்துவிடும் அபாயம் இருப்பதால் என்னால் இயன்றவரை நாம் எப்படி பேசுகிறோம் என்பதை சுருக்கமாக இங்கே தருகிறேன்.

மனிதர்களின் தொண்டைப்பகுதியில் குறிப்பாக குரல்வளையில் கிடைமட்டமாக அமைந்து இருக்கும் ஒரு ஜோடி தசைமடிப்புகள் தான் மனிதன் பேசுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று சொன்னால் மிகையில்லை. குரல்நாண்கள் (Vocal Cords) என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த தசைமடிப்புகள் நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது தளர்ந்தநிலையிலும், நாம் பேச முயற்சிக்கும் போது வீணையில் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும் நரம்பைப் போல விறைப்பான (Temper) நிலையிலும் இருக்கும். நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது நுரையீரலை சென்றடையும் காற்று நாம் பேச முயற்சிக்கும் போது திரும்பி வந்து விறைப்பாக நிற்கும் குரல் நாண்களின் மீது குறிப்பிட்ட அழுத்தத்தில் மோதி குரல்நாண்களை அதிரச் செய்துசப்தத்தை உண்டாக்குகிறது.

வீணையில் இழுத்துக்கட்டப்பட்ட நரம்புகளை விரல்களால் மீட்டும் போது எப்படி சப்தம் உண்டாகிறதோ அதுபோலவேவிறைப்பாக நிற்கும் குரல் நாண்களின் மீது அழுத்தப்பட்ட காற்று வந்து மோதும்போதும் சப்தம் உண்டாகிறது. சாதாரணமாக குரல்நாண் வளர்ந்த ஆணில் 17.5mm முதல் 25mm வரையிலும், வளர்ந்த பெண்ணில் 12.5mm - 17.5mm வரை நீளமும் இருக்கும். இவை சப்தத்தை உண்டாக்க வளர்ந்த ஆண்களில் வினாடிக்கு 120 - 130 முறையும் வளர்ந்தபெண்ணில் 200 முதல் 220 முறையும் குழந்தைகளில் 300 முதல் 310 முறையும் அதிர்கிறது. நாம் ஒவ்வொருவரும் பிறக்கும் போது நம்முடைய குரல்நாண் மிகச்சிறியதாகவும் விறைப்பாகவும் இருக்கும். நாம் வளரவளர நம்முடைய குரல்நாணும் வளர்ச்சியடையும். மூன்று அல்லது நான்கு வயது வரை ஆண் பெண் ஆகிய இருபாலருக்கும் குரல்நாணின் வளர்ச்சி ஒரே அளவில் தான் இருக்கும் ஆகையால் நான்கு வயதுவரையுள்ள குழந்தைகளின் குரலில் ஆண் மற்றும் பெண் என்ற வித்தியாசத்தை காண முடியாது.

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஆண்களின் குரல்நாண்கள் பெண்களின் குரல் நாண்களை காட்டிலும் வேகமாக வளர ஆரம்பித்துவிடுகிறது. ஆண்களில் குரல்நாண் வளர வளரஅதன் விறைப்புத்தன்மை குறைந்து விடுகிறது இதனால் குரலில் மென்மை குறைந்து ஒருவித கரகரப்பு தொற்றிக் கொள்கிறது. ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களின் குரல் நாண்கள் அளவிலும் சரிவளர்ச்சியிலும் சரி குறைவாகஇருப்பதால் பெண்ணில் குரல்நாண்கள் விறைப்படைந்து குரலில் மென்மை கூடுகிறது. இதனால் தான் ஆண்களின் குரலிலிருந்து பெண்களின் குரல் முற்றிலும் வித்தியாசப்படுகிறது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி ஒருவர் பனிரெண்டு வயதை எட்டும் போது அவருடைய குரல்நாண் அதன் முழுவளர்ச்சியை எட்டிவிடும்.

இதன் காரணமாகத்தான் பனிரெண்டு வயதிற்குப்பிறகு ஆண், பெண் குரல்கள் முற்றிலும் வேறுபடத் துவங்குகிறது. பெண்களுக்கு மென்மையான குரல் அவர்களுடைய 50-வயதுவரை நீடிக்கும் அதன் பிறகு அவர்களுக்கும் குரல்நாண் நெகிழ்ச்சியடைய துவங்குவதால் ஐம்பது வயதிற்கு பிறகு பெண்களில் சிலருக்கு ஆண்களை போலவே குரல் தடிமனாக மாறிவிடுகிறது, அறுபதுவயதிற்கு பிறகு ஆண் பெண் இருபாலரின் குரல்நாண்களும் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொள்ள ஆரம்பித்துவிடுவதால் அவர்கள் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி குரலில் தளர்ச்சியும் நடுக்கமும் உண்டாகிறது. இதன் காரணமாகத்தான் அறுபது வயதிற்கு மேற்பட்ட சிலருக்கு வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க முடியாமல் போகிறது. நாம் நமது தொண்டையிலுள்ள குரல்நாண்களை தளர்வடையாமல் பார்த்துக்கொண்டோமானால் நம்முடைய குரல் எந்த வயதிலும் மாறாமல் இனிமையாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளலாம்.இதற்க்காகநாம் சிலவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக மது அருந்துதல் கூடாது, மது அருந்தும் போது தொண்டையிலுள்ள அனைத்து தசைகளும் பாதிப்படைவதால், மதுவை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. மேலும் புகை பிடித்தலையும் மாசு நிறைந்த காற்றுகளை சுவாசிப்பதையும் கூடுமானவரை தவிர்க்கவேண்டும், முக்கியமாக தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும் தொண்டையை வற்றச் செய்யாமல் எப்போதும் ஈரமாக வைத்திருந்தால் எந்த வயதிலும் நம்முடைய குரலில் இளமையை கட்டிவைத்திருக்க முடியும்.

குரல்நாண்கள் சப்தத்தை உண்டாக்குவதோடு மட்டுமல்லாமல் அவற்றை பண்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது, ஆகையால் தான் நம்மால் வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க முடிகிறது. மனிதனை தவிர ஏனையவிலங்குகளில் இந்த குரல்நாண்கள் (Vocal Cords) அமைப்பு இல்லாததால் மற்ற விலங்குகளால் ஒலியை உருவாக்க முடிந்தாலும் கூட அவற்றை பண்படுத்த முடியாமல்போவதால் அவற்றால் மனிதர்களைப் போல வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க இயலுவதில்லை.------------------------------------------நன்றி -அருவி-

Wednesday, May 22, 2013

யார் தலைவன்?ஒரு மிகப் பெரிய கம்பெனியின் நிர்வாகி ஓய்வு பெறும் ஆகும் காலம் வந்தது. அது அவரது சொந்தக் கம்பெனி. அடிமட்டத்தில் இருந்து வாழ்க்கையை ஆரம்பித்த அவர் சிறியதாக ஆரம்பித்த அந்தத் தொழிலை தன் கடுமையான உழைப்பாலும் புத்திசாலித்தனத்தாலும் மிக லாபகரமான கம்பெனியாக வளர்த்திருந்தார். தனக்குப் பின் அந்தக் கம்பெனியின் நிர்வகிக்க யாரை நியமிப்பது என்று நிறைய யோசித்தார். தன் பிள்ளைகளில் ஒருவரையோ, இருக்கும் டைரக்டர்களில் ஒருவரையோ தலைமை ஏற்கச் சொல்வதற்குப் பதிலாக, நன்றாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார்.
தன் கம்பெனியில் எல்லாத் துறைகளிலும் அதிகாரிகளாக இருக்கும் திறமையான இளைஞர்களையும் அழைத்து சொன்னார். “அடுத்த வருடம் நான் சேர்மன் பொறுப்பில் இருந்து விலக்ப் போகிறேன். உங்களில் தகுதி வாய்ந்த ஒருவரை அந்தப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுத்து என் கம்பெனியின் சேர்மனாக நியமித்து விட்டு ஓய்வு பெற நினைக்கிறேன்…”
அனைவருக்கும் ஒரே அதிர்ச்சி. அவர் தொடர்ந்தார்.
“உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு விதை தரப் போகிறேன். அது ஒரு தனித்தன்மை வாய்ந்த விதை. அதை நீங்கள் விதைத்து நீருற்றி ஒரு வருடம் வளர்க்க வேண்டும். சரியாக ஒரு வருடம் கழித்து, அடுத்த வருடம் இதே நாளில் ஒவ்வொருவரும் வளர்த்த செடியைக் கொண்டு வர வேண்டும். நீங்கள் கொண்டு வரும் செடிகளை வைத்து உங்களை எடை போட்டு அதில் சிறந்த ஒருவரை சேர்மனாகத் தேர்ந்தெடுப்பேன்”
சொல்லி விட்டு அவர் ஒவ்வொருவருக்கும் ஒரு விதை தந்தார்.  அந்த இளைஞர்களில் மிக நல்லவனும், நாணயமானவனுமான ஒரு இளைஞன் அதை மிகுந்த் ஆர்வத்துடன் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான். நல்ல பெரிய மண்சட்டியை வாங்கி அதில் நல்ல வளமான மண்ணைப் போட்டு அந்த விதையை விதைத்து நன்றாகத் தண்ணீர் ஊற்றி வந்தான்.
மூன்று வாரங்களான பின்னும் அந்த விதை முளைக்க ஆரம்பிக்கவில்லை. ஆனால் மற்றவர்களோ கம்பெனியில் தங்கள் விதைகள் துளிர்க்க ஆரம்பித்து விட்டது என்றெல்லாம் பேசிக் கொண்டார்கள். அவர்கள் பேச்சைக் கேட்ட போது அவனுக்கு கவலையாக இருந்தது. சேர்மன் ஒரு தனித்தன்மை வாய்ந்த விதை என்றாரே அதை சரியாகப் பராமரிக்காமல் விட்டு விட்டோமோ என்று அவனுக்கு சந்தேகம் வந்தது. நல்ல உரம் எல்லாம் வாங்கிப் போட்டான். ஆனால் காலம் போன பின்னும் எந்த மாற்றமும் அவன் விதையில் இல்லை.
கம்பெனியிலோ அவரவர்களின் விதைகளின் வளர்ச்சியைப் பற்றியதாகவே பேச்சு இருந்தது. அவன் மேலும் பல முயற்சிகள் எடுத்துப் பார்த்தான். ஆனாலும் பயனில்லை.
ஒரு வருடம் கழித்து அந்த முக்கிய நாளும் வந்தது. பலரும் நன்றாக செழிப்பாக வளர்ந்திருந்த செடிகளோடு வந்திருந்தார்கள். போட்டி கடுமையாக இருக்கும் போலத் தான் அவனுக்குத் தெரிந்தது. அவன் ஒருவன் தான் வெறும் சட்டியைக் கொண்டு வந்தவன். பலரும் அவனை இரக்கத்துடன் பார்த்தார்கள். அவனுக்கு அவமானமாக இருந்தது. எல்லோருக்கும் பின்னால் கடைசியாக நின்றான்.
சேர்மன் வந்தவர் ஒவ்வொரு செடியின் வளர்ச்சியையும் பார்த்து பாராட்டிக் கொண்டே வந்தார்.  வெறும் மண்சட்டியோடு நின்ற அவனைப் பார்த்தவுடன் அவர் கேட்டார். “என்ன ஆயிற்று?”
அவன் கூனிக் குறுகிப் போனாலும் நடந்ததைச் சொன்னான். தான் எடுத்துக் கொண்ட முயற்சிகளை எல்லாம் சொல்லி, அத்தனை செய்தும் பலனில்லாமல் போயிற்று என்று ஒத்துக் கொண்டான்.
சேர்மன் அவனையே அடுத்த சேர்மனாக அறிவித்தார். அவன் உட்பட அனைவரும் அதிர்ச்சியோடு அவரைப் பார்த்தார்கள். அவர் சொன்னார்.
“நான் உங்கள் அனைவருக்கும் தந்தது நன்றாக வேக வைத்துப் பின் உலர வைத்த விதைகள். அவைகள் கண்டிப்பாக செடிகளாக வளர வாய்ப்பே இல்லை. உங்கள் விதைகள் துளிர்க்காமல் போன போது அதற்கு பதிலாக வேறு புது விதைகள் போட்டு வளர்க்க ஆரம்பித்து விட்டீர்கள். இவர் ஒருவர் மட்டும் தான் அப்படி ஏமாற்றப் போகாமல் நேர்மையாக இருந்திருக்கிறார்.”
“நீங்கள் அனைவரும் திறமையானவர்களே. அதில் எனக்கு சந்தேகமில்லை. அந்தத் திறமை இல்லாதிருந்தால் உங்களுக்கு என் கம்பெனியில் வேலையே கிடைத்திருக்காது. ஆனால் தலைவனாக ஆவதற்குத் திறமையுடன் இன்னொரு தகுதி கண்டிப்பாக வேண்டும். அவன் எதற்குத் தலைவனாக இருக்கிறானோ, அதற்காவது உண்மையாக இருக்க வேண்டும். அப்படி இருப்பவன் தலைமையில் தான் ஒரு நிறுவனம் நல்ல வளர்ச்சி அடைய முடியும். அப்படிப்பட்ட ஒருவராவது என் கம்பெனியில் இருந்ததில் எனக்கு மகிழ்ச்சி. இவர் கையில் இந்தக் கம்பெனியை ஒப்படைத்தால் இந்தக் கம்பெனி கண்டிப்பாக நல்ல வளர்ச்சி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.”
அவனிடம் தலைமைப் பொறுப்பைத் தந்து விட்டு திருப்தியுடன் அவர் ஓய்வு பெற்றார்.
இது ஒரு நிறுவனத்திற்கு மட்டுமல்ல, கட்சி, அமைப்பு, கூட்டம், நாடு எல்லாவற்றிற்கும் பொருந்தும். அவன் அரிச்சந்திரனாக எல்லா விஷயங்களில் இருக்கிறானோ இல்லையோ, யாருக்குத் தலைவராக ஆகிறானோ அவர்களுக்காவது உண்மையாக இருக்க வேண்டியது அவசியம். அப்படி இருப்பவன் தான் அவர்களுக்கு நல்லது செய்ய முடியும். அவனே தலைவன், அப்படி இருக்க முடியாதவர்கள் ஏமாற்றுப் பேர்வழிகளே!
***************************
நன்றி: – என்.கணேசன்

ஆசிரியைத் தாய்..


இடம்: இராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரை அடுத்த அமர்கார் என்ற ஒரு சேரிப்பகுதியில் உள்ள சிறிய பள்ளி. ஒரு எழுபது வயது மூதாட்டியின் குரல் கணீரென்று இந்தியில் ஒலிக்கின்றது. “ஹவா சலீ, ஹவா சலீ, பீலே ரங் கா ஹவா சலீ” (காற்று வீசுகிறது, காற்று வீசுகிறது, மஞ்சள் நிறத்தில் காற்று வீசுகிறது).  பாட்டைக் கேட்டவுடன் குழந்தைகள் விளையாட்டு சாமான்களின் குவியலில் இருந்து மஞ்சள் நிற பொம்மைகளை எடுத்துக் காண்பிக்கின்றனர்.
குழந்தைகள் எல்லாம் மூன்று அல்லது நான்கு வயதிற்குட்பட்டவர்கள்.  குழந்தைகளுக்கு நிறங்களைக் கற்றுத் தரும் பணியில் ஈடுபட்டிருந்த அந்த மூதாட்டியின் பெயர் பாட்டூல் ஆபா (ஆபா என்பது கிட்டத்தட்ட உள்ளூர் மொழியில் ‘அத்தை’ என்பதற்கு சமமான சொல்). வயது எழுபதானாலும் பாட்டூல் ஆபாவின் உற்சாகமும் சுறுசுறுப்பும் இருபது வயதினரை பொறாமைப் படுத்தும் அளவில் உள்ளதைக் காண முடிந்தது. அந்த மழலைப் பள்ளியில் குழந்தைகள் ஆடியும் பாடியும் ஆனந்தமாகக் கல்வி கற்கிறார்கள்.  இந்த வித்தியாசமான சூழ்நிலையில் இருக்கும் கல்விமுறையின் பின்னணியைப் பார்ப்போம்.
கல்வித் துறையில் உலக அளவில் செய்யப்பட்ட பல ஆராய்ச்சிகள் குழந்தைகளின் ஆரம்ப காலக் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன.   மூன்று வயதாகும் போதே குழந்தைகளின்  மூளை 85% வளர்ச்சி அடைந்து விடுவதால் அப்போது அவர்களுக்குக் கிடைக்கும் கல்வியின் அணுகுமுறை மிக முக்கியத்துவம் வாய்ந்ததென அறிஞர்கள் கருதுகின்றனர். கல்வி கற்பிக்கப்படுவதும், கற்றுக் கொள்வதும் எந்திரத்தனமாகி விட்ட இன்றைய சூழ்நிலையில் அந்தக் குழந்தைகளுக்கு உயிரூட்டமுள்ள விதத்தில் கற்பிக்க முடிந்தால் அது அவர்களின் பிற்காலக் கல்விக்கு நல்ல அஸ்திவாரமாக இருக்கும் என்பது ஆராய்ந்த அறிஞர்களின் கருத்து. இதனை கருத்தில் கொண்டு ஆகாகான் அறக்கட்டளை (Aga Khan Foundation) என்கிற சமூக சேவை அமைப்பு சில மேலை நாட்டு அமைப்புகளின் உதவியுடன் ஏற்படுத்திய புதிய கல்விமுறைத் திட்டத்தின் ஒரு பகுதி தான் தாய்-ஆசிரியைத் திட்டம். அந்தத் திட்டத்தின் விளைவு தான் அமர்கார் சேரிப்பகுதியில் நாம் காண முடிந்த அந்த  வித்தியாசமான காட்சி.

அமர்கார் பகுதி மக்களில் பெரும்பாலானோர் முகமதியர்கள்.  கிட்டத்தட்ட எல்லா குடும்பங்களும் நகைகளுக்குப் பயன்படுத்தப்படும்  பலநிறக் கற்களுக்கு மெருகூட்டும் பணியில் ஈடுபட்டுள்ளன.  மிகவும் பின் தங்கிய அந்தப் பகுதியில் அந்தப் பள்ளி 1990ல் துவங்கப்பட்டது.  சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன் பாட்டூல் ஆபாவை முன்-பள்ளி (Pre-school) ஆசிரியையாக்க பள்ளியின் நிர்வாகக்குழு அழைத்த போது அவர் பெரிதும் தயங்கினார்.  “நானே பள்ளிக்குச் சென்றதில்லை.  எழுதப் படிக்கத் தெரியாது. நான் எப்படி ஆசிரியை ஆக முடியும்?” என்று கேட்டார். பள்ளி நிர்வாகக்குழுவோ அவர் அப்பகுதியைச் சேர்ந்தவர், அம்மக்களது மரபுவழிகளை நன்கு அறிந்தவர் என்பதால் சிறு பயிற்சிக்குப் பின் அக்குழந்தைகளுக்கு நெருக்கத்துடன் பாடம் கற்றுத் தரமுடியும் என்று கணக்கிட்டனர்.

அவர்கள் கணக்கு பொய்க்கவில்லை.  குறுகிய காலப் பயிற்சிக்குப் பின் பாட்டூலின் முதல் பணி அந்த சேரி மக்களுடன் நெருங்கிப் பழகி அவர்களுக்குக் குடும்ப நலத்திட்டம், சுகப்பிரசவ முறைகள், சுத்தம், சுகாதாரம், கல்வி ஆகியவற்றில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக இருந்தது. ஆரம்பத்தில் அவர் பணி சுலபமாக இருக்கவில்லை.  குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் பற்றியெல்லாம் அவர்கள் பேசக்கூட தயங்கினர்.  பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பவும் அவர்கள் பெரும் தயக்கம் காட்டினர்.  ஆனாலும் பாட்டூலின் நட்பான அணுகுமுறை அவர்களை நாளடைவில் மாற்றியது.
பாட்டூல் ஆபா போன்று அங்கு பணியாற்றும் மற்ற ஆசிரியைத் தாய்களும் ஆரம்பத்தில் கல்வி அறிவு இல்லாமல் வந்து பயிற்சி பெற்ற பின் குழந்தைகளோடு சேர்ந்து தாங்களும் கல்வி அறிவு பெற்றவர்களே.  இந்த வகையில் இத்திட்டம் இரு சாராருக்கும் பெரும்பலனைத் தருகின்றது.  குழந்தைகளும் வீட்டு, விளையாட்டு சூழ்நிலையில் கல்வி கற்கின்றனர். அதே போல் அந்த முதியோரும் கல்வியும் தன்னம்பிக்கையும் பெறுகின்றனர்.
குழந்தைகளை தவறாமல் தினமும் பள்ளிக்கு வரவழைப்பதே இவர்களுக்கு முதல் முக்கியப் பணி. பள்ளிக்கு வருகை தராதவர்களின் வீட்டுக்குச் சென்று காரணம் கண்டறியும் அளவு தீவிர ஈடுபாடு கொண்டுள்ளார்கள்.  பெரும்பாலும் வீட்டுப் பெரியவர்களின் சண்டை சச்சரவுகளே குழந்தைகள் பள்ளிக்கு வராமலிருக்க காரணமாக இருப்பதுண்டு.  அவர்களிடம் தனித்தனியாகவும், ஒன்று சேர்த்தும் பொறுமையுடன்  பேசி குழந்தைகளின் எதிர்காலத்திற்குக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி மீண்டும் குழந்தைகள் தவறாமல் பள்ளிக்கு வரும்படி இந்த ஆசிரியைத் தாய்கள் பார்த்துக் கொள்கின்றனர்.  குழந்தைகளுக்குக்  கல்வியின் அறிமுகத்தையே அளிப்பவர் இந்த ஆசிரியைத் தாய் என்பதால் இந்த ஆசிரியைத் தாயின் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.
இன்று கல்வி என்பது எத்தனையோ குழந்தைகளுக்கு இன்னும் கனவாகவோ, பயமுறுத்தலாகவோ தான் இருக்கின்றது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற பழமொழி போல ஆரம்பத்தில் அந்த பிஞ்சு உள்ளங்களுக்கு அன்பு சேர்த்து கல்வியை ஊட்டவில்லை என்றால் அதன் விளைவுகள் கடைசி வரை குறைபாடுள்ளதாகவே இருக்கும். எனவே இந்தப் புதிய அணுகுமுறை நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் முழுமையாகப் பரவினால் அது நல்ல பலனைக் கொடுக்கும்.
பாட்டூல் ஆபா போன்ற வயதான, அன்பானவர்களுக்கும் இத்திட்டம் வாழ்வில் ஒரு பொருளையும், பொருளாதார வசதியையும் கொடுக்கும் அதே நேரத்தில் கிராமப்புறங்களில் கல்வி உட்பட மேலே குறிப்பிட்ட பல சேவைகள் முழுமையாகப் போய் சேரவும் இது வாய்ப்பை ஏற்படுத்தும்.
அமர்கார் போன்ற பின்தங்கிய பகுதிகள் நம் நாட்டில் இன்னும் எத்தனையோ இருக்கின்றன.  அறியாமை இருட்டில் மூழ்கித் தவிக்கும் மக்கள் கூட்டங்களும் எத்தனையோ உள்ளன. மத்திய மாநில அரசுகளும் கூட இத்திட்டத்தை நல்ல முறையில் அமலாக்கினால் அந்தப் பின் தங்கிய பகுதி மக்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் சில நல்ல மாற்றங்கள் ஏற்படுத்த பேருதவியாய் இருக்கும்...
*******************************
நன்றி: -    என்.கணேசன்

குப்பை போடலாமா?


இறைவா!
உண்ணப் பழமும்; உரிக்கத் தோலும்;
garbage-can
தின்னவாயும்; விழுங்க நாவும்; வைத்தாய்!
ஆனால்!…. நாங்கள்….
தோலை உரித்து வீதியில் வீசி சுவைத்து உண்டோம்!
பழத்தை இங்கே!
நாவின் ருசியில் விரல்கள் மறந்தன!
அதனால்………….
சாலையில் நடந்த சடுகுடு கிழவர்
வைத்தார் காலை! நேரமும் காலை!
வாழையின் தோலோ கிழவரைக் கண்டதா?
வழுக்கல் குணத்தால் சாய்த்தது அவரை!
அவரோ!
தாளாக் கால்வலி தன்னை வாட்ட
வைத்தியர் வீட்டை நாடிச் செல்லுகையில்
பழத்தோல் பட்டுப் பட்டென வீழ்ந்தார்!
முன்னம் கால்வலி இன்னும் முற்றி
முட்டி பெயர்ந்து ஐயோ பாவி!
எவனோ! பொறுப்பற்ற மூடன்
போட்ட தோலால் கால்வலியோடு
கால்வலி சேர்ந்து அரைவலியாகி
அடடா! முழுவலி மூண்டது!

மாந்தர்க்கு அறிவை வைத்த இறைவா!
ஏன் தான் தூய்மையை இவனே மறந்தான்!
என்றே புலம்பி கண்ணீர் வடித்தார்!
வாயில் சுருட்டு நீ விட்ட புகையால் இருட்டு!
ஒருவன் புகையை ஊதிட ஆங்கே விதியா!
பிறரை வீழ்ததுதல் புகையால்!
அணைக்காமல் வீசி அங்கொரு சாலையில்
சுருட்டை வீச எத்தனைத் துன்பம்!
கையால் வீச காலைச் சுடாதா? பிறர்க்கு!
சாலை முழுவதும் குப்பை சேர்ர்ந்தால்
சடுதியில் அதனால் வந்திடும் நோய்கள்!
உடலைப் பேணுதல் உனக்கு முக்கியம்!
ஊரைப் பேணுதல் உயிரினும் மேன்மை!
நாளைய உலகம் நம்மைப் போற்ற
சாலையைக் காப்பாய்!

கடலைப் பார்! எத்தனை அழகு!
கரையைப் பார்! எத்தனை அழுக்கு!
உன்னால் தானே!
மண்ணில் குப்பை? ஒருமுறை சிந்தி!
மறுமுறை மாற்று!

வானம் தூய்மை! சூ ரியன் தூய்மை!
நிலவு தூய்மை! பறவை தூய்மை!
யாவும் தூய்மை!
நீயும் தூய்மையாய் நிலத்தைச் செய்க!
நோயும் போகும்! நுழையா வியாதி!
மேன்மை பெருகும்! மேலும் உயர்வாய்!

***********************
நன்றி – முனைவர். மா.  தியாகராஜன் – முத்துக்கமலம்.காம்

நூற்றுக்கு நூறு!


இன்றைய இளம் தலைமுறையினரிடம் பெற்றோர்களும் ஆசிரியர்களும் எதிர் பார்க்கும் ஒரே ஒரு விஷயம் நூற்றுக்கு நூறு. தேர்வுகளில் நூற்றுக்கு நூறு கொடுத்து பாராட்டி மகிழ்கிறது. குறைவாக மதிப்பெண் களைப் பெறும் மாணவர்களுக்கு எதிர்காலம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்று முத்திரையிட்டு அவர்களை மன உளைச் சலுக்கு ஆளாக்கிவிடுகிறது.
ஒரு மாணவன் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கி விட்டால் மட்டும் போதுமா? இந்த கேள்வியை நாம் அனைவரும் நமக்குள்ளே கேட்டுப் பார்த்து விடை தேட வேண்டிய அவசியம் வந்துவிட்டது. ஒரு நாட்டின் எதிர்காலம் அந்நாட்டின் மாணவர் களை நம்பித்தான் இருக்கிறது. நல்ல பண்புகளை இளம் வயதில் வளர்த்துக் கொண்டு வாழப் பழகும் மனிதனே பிற்காலத்தில் உலகம் போற்றும் உயர்ந்த நிலையை அடைகிறான். ஒரு மாணவன் தேர்வில் மட்டுமின்றி அனைவரையும் மதிக்கும் நல்ல குணத்திலும், பிறருக்கு உதவும் கருணை உள்ளத்திலும், எந்த சூழ்நிலையிலும் நேர்மையை கடைப்பிடித்து வாழ்வதிலும், உடல் நலத்தினை பேணிக்காப்பதிலும் நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும்.
வாழ்க்கையில் அறிவிற்கு முதலிடம் கொடுக்க வேண்டுமா? அல்லது அன்பிற்கு முதலிடம் கொடுக்க வேண்டுமா? வாழ்க்கையில் அன்பு நெறியை முதன்மையாகக் கடைப்பிடித்து வாழ்ந்த பலர் உலகம் போற்றும் உத்தமராக போற்றப்படுகின்றனர்.

எந்த ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் தன்னை முழுமையாக நூற்றுக்கு நூறு ஈடுபடுத்திக் கொள்ளும் மனப்பக்குவத்தை மாணவ மாணவியர் வளர்த்துக் கொள்ள வேண்டும். படிக்கும் போது நூறு சதவிகித கவனம் படிப்பில் மட்டுமே இருக்க வேண்டும். விளையாடும் போது நூறு சதவிகிதம் கவனம் விளையாட்டில் மட்டுமே இருக்க வேண்டும். சாப்பிடும் போது நம் கவனம் முழுக்க முழுக்க சாப்பாட்டிலேயே இருக்கும்படி பழகிக் கொள்ள வேண்டும். பல மாணவர்கள் விளையாடும் போது நாளை நடக்க இருக்கும் தேர்வுகளைப் பற்றி சிந்தித்தபடியே விளையாடிக் கொண்டிருப்பார்கள். படிக்கும் போது விளையாட்டைப் பற்றி யோசித்துக் கொண்டே படிப்பார்கள். இதில் ஒரு சதவீகிதமாவது நன்மை இருக்கிறதா என்று ஐந்து நிமிடங்கள் யோசித்துப் பாருங்கள். இது மாணவ மாணவியருக்கு மட்டுமின்றி அனைவருக்குமே பொருந்தும்.
முன்பெல்லாம் பள்ளிகளில் போதனை வகுப்பு என்றொரு வகுப்பு இருந்தது. அவ்வகுப்பில் ஆசிரியர்கள் மாணவர்களின் எதிர் காலத்தை செம்மையாக அமைத்துக் கொள்ள வழிவகை செய்யும் சிறந்த கதைகள், பெரியோர் களின் வாழ்வில் நடந்த தன்னம்பிக்கை யூட்டும் சம்பங்கள், நாட்டுப்பற்றைவளர்க்கும் வீரக்கதைகள் போன்றவற்றை எடுத்துச் சொல்லி பண்பையும் நாட்டுப்பற்றையும் மாணவர்களின் மனதில் பதிய வைப்பார்கள். இதன் காரண மாகவே அக்கால மாணவர்களின் மனதில் நாட்டுப்பற்றோடு கருணையும் நிரம்பி வழிந்தது. தாய் தந்தையரை தெய்வம் போல மதித்து பாதுகாத்தார்கள். தற்காலத்தில் ஒரு மாணவன் பெறும் அதிக மதிப்பெண்கள் மட்டுமே சிறப்பான வாழ்க்கையினை நிர்ணயிக்கும் என்று பெற்றோர்களும் கல்வி நிறுவனங்களும் இன்றைய இளம் சமுதாயத்தினருக்கு போதித்ததன் விளைவாக ஆடம்பர வாழ்க்கை ஏராளமான பணம் இவை மட்டுமே வாழ்வின் ஆதாரம் என்ற கருத்து அவர்களின் மனதில் பதியத் தொடங்கி விட்டது. இதன் விளைவாக புதிய புதிய வாழ்க்கைச் சிக்கல்களும் முதியோர் இல்லங்களும் பெருகத் தொடங்கிவிட்டன.
பெரிய படிப்பு, அதிக சம்பளம், ஆடம்பர மான வாழ்க்கை இதுவே அனைவரும் விரும்பும் மந்திரச் சொற்களாக அமைந்துவிட்டன. இன்றைய சூழலில் இது தவறில்லைதான். ஆனால் கூடவே அன்பு, கருணை, மகிழ்ச்சி இவற்றை நம் வாழ்க்கையின் முக்கியமான அங்கங்களாக ஏற்றுக்கொண்டு வாழப் பழகு வோம். எவனொருவன் இவை அனைத்தையும் ஒரு சேரப் பெற்று வாழ்கிறானோ அவனே வாழ்க்கையில் நூற்றுக்கு நூறு பெற்ற சிறந்த மனிதனாகப் போற்றி மதிக்கப்படுவான்.
***********************************
நன்றி: ஆர். வி. பதி – தன்னம்பிக்கை

பைபாஸ் அறுவை சிகிச்சை, ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை என்று ஏராளமான இருதய அறுவைச் சிகிச்சைக்கு வித்திட்டவர் டாக்டர் மைக்கேல் டிபேக்கி.,,,!Michael E. DeBakeyஒவ்வொரு மனிதரும் பிறக்கிறோம், 70, 80 ஆண்டுகள் வாழ்கிறோம். என்ன தொழில் வேண்டுமானாலும் செய்கிறோம். ஆனால் தான் சார்ந்த துறையில், சாதனை புரிந்து, இறந்தும் வாழ்பவர்கள் சிலரே.
அதுபோன்று சாதனை புரிந்து மறைந்த ஒருவரைத் தான் இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளோம்.
இதய அறுவை சிகிச்சை என்பது இன்றைய காலத்தில் வெகுசுலபமானதாகவும், சாதாரணமாக நிகழ்வாகவும் மாறிவிட்டது. ஆனால் அதன் பின்னணியில் பைபாஸ் அறுவை சிகிச்சை, ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை என்று ஏராளமான இருதய அறுவைச் சிகிச்சைக்கு வித்திட்டவர் டாக்டர் மைக்கேல் டிபேக்கி.
டாக்டர் மைக்கேல் டிபே‌‌க்கியின் திறமையால் ஈர்க்கப்பட்டு பலர் இதய அறுவைச் சிகிச்சை மருத்துவர்களாகி இருப்பதாக அமெரிக்காவின் மெத்தடிஸ்ட் மருத்துவமனையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதய அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தக்கூடிய எண்ணற்ற உபகரணங்களை கண்டுபிடித்தவர் டாக்டர் மைக்கேல் டிபேக்கி.
கடந்த img1080715040_2_21932ஆம் ஆண்டில் மருத்துவ பேராசிரியராக பணியாற்றிய மைக்கேல் ‘ரோலர் பம்ப்’ என்ற உபகரணத்தை கண்டுபிடித்தார்.
அறுவை சிகிச்சையின்போது இதயத்தையும், நுரையீரலையும் இயக்கக்கூடிய கருவியாக இந்த பம்ப் இப்போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்தக் கால கட்டத்தில் திறந்த இதய அறுவை சிகிச்சை (Open heart Surgery) அறிமுகப்படுத்தப்பட்ட சமயத்தில், இந்தக் கருவியே முன்னோடியாகத் திகழ்ந்தது.
தனது ஆயுட்காலத்தில் அவர் கண்டுபிடித்த ஏராளமான உபகரணங்களில் இந்த கண்டுபிடிப்பே முதல் துவக்கமானது. ஆனால், இன்று மருத்துவ உலகில் அதுவே சாதாரண நடைமுறையாக இருந்து வருகிறது.
இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நோயாளிகளுக்கான செயற்கை இதயமாக அது விளங்கியது எனலாம். இதனை முன்னோடியாக வைத்து சுமார் 70 அறுவை சிகிச்சை கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கடந்த 2006ஆம் ஆண்டு துவக்கத்தில் மைக்கேல் டிபேக்கியின் இதயக் குழாயில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு வயது 97.
அவர் கண்டுபிடித்த உபகரணங்களின் அடிப்படையிலேயே அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
அறுவை சிகிச்சைக்குப் பின் தான் உயிருடன் இருப்பது மிகப்பெரிய அதிசயம் என்று கூறினார்.
துவக்கத்தில் தனக்கு அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர்களிடம் மறுப்பு தெரிவித்த மைக்கேல், பின்னர் மகிழ்ச்சியை தெரிவித்தார்.
70 ஆண்டுகால டாக்டர் தொழிலில் மைக்கேல் டிபே‌க்கி, சுமார் 60 ஆயிரம் இருதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளார்.
அப்படிப்பட்ட டிபே‌க்கி தனது 99-ஆவது வயதில் சில தினங்களுக்கு முன் ஹூஸ்டன் நகரில் மரணம் அடைந்தார்.
இதய அறுவை சிகிச்சை நிபுணர் என்பதோடு நில்லாமல், பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி வரும் உபகரண கண்டுபிடிப்பாளர் என்பதால், இதய அறுவை சிகிச்சை உள்ளவரை டாக்டர் டிபேக்கியின் புகழும் நிலைத்து நிற்கும்.
******************************
நன்றி: வெப்துனியா

ஹிஜாப் அணிவதற்கான ஆறு வரைமுறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.


1) ஹிஜாப் அணிவதற்கான அளவுகோல்கள்: நீங்கள் அணியக் கூடிய ஆடை உடல் முழுவதையும் மறைக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதே இஸ்லாமிய ஆடை அணிவதற்கான முதல் அளவுகோல். இந்த அளவுகோல் ஆண்களுக்கும் – பெண்களுக்கும் வித்தியாசப்படும். ஆண்கள் தொப்புள் முதல் கரண்டைவரை மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். பெண்கள் சாதாரணமாக வெளியில் தெரியக்கூடிய பாகங்களான முகம் – கரண்டை வரை உள்ள கைகள் ஆகியவைத் தவிர தங்கள் உடல் முழுவதும் மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். அவர்கள் விரும்பினால் மேற்படி வெளியில் தெரியக் கூடிய இந்த பாகங்களையும் மறைத்துக் கொள்ளலாம்.

இஸ்லாமிய ஆடையில் எஞ்சிய ஐந்து அளவுகோல்களும் – ஆண்களுக்கும் – பெண்களுக்கும் சமமானவையே.2) அணியக் கூடிய ஆடை உடல் பரிணாமத்தை வெளிக்காட்டாத அளவுக்கு தொய்வாக இருக்க வேண்டும்.

3) அணியக் கூடிய ஆடை உற்றுப் பார்த்தால் உடல் பாகங்கள் அனைத்தும் தெரியும்படியான மெல்லிய ஆடையாக இல்லாது – உரத்த ஆடையாக இருக்க வேண்டும்

4) அணியக் கூடிய ஆடை (பெண்கள் ஆண்களை வசீகரிக்கக் கூடியவாறும் – ஆண்கள் – பெண்களை வசீகரிக்கக் கூடியவாரும்) எதிர்தரப்பாரை கவரக்கூடிய அளவுக்கு கவர்ச்சியாக இல்லாமல் இருக்க வேண்டும்.

5) ஆண்கள் பெண்களைப் போல் ஆடை அணிவதையும் – பெண்கள் ஆண்களைப் போல் ஆடை அணிவதையும் இஸ்லாம் தடை செய்துள்ளது.

6) அணியக் கூடிய ஆடை இறை நிராகரிப்பாளர்கள் அணியக் கூடிய ஆடையைப் போன்று இருக்கக் கூடாது. உதாரணத்திற்கு இறை நிராகரிப்பவர்கள் உடுத்துகின்ற காவி நிறம் – கருப்பு நிறம் – போன்ற ஆடைகள் அணிவதை இஸ்லாம் தடை செய்துள்ளது.

##########################
நன்றி: சத்யமார்க்கம்.காம்

இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா?Muslim-wearஉடலை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகளை விரும்பி அணியும் காலம் இது. இளம் பெண்கள் உடை அணிந்ததே தெரியாத அளவுக்கு, லெகின்ஸ், டைட்ஸ் என மாடர்ன் கலாசாரத்தில் சிட்டாகப் பறக்கின்றனர். ‘நடந்து செல்வதற்கும், வண்டி ஓட்டுவதற்கும், இறுக்கமான உடைதான் சௌகரியம்’ என்பது அவர்களின் கருத்து. ஆனால், உடலை ஒட்டிப்பிடிக்கும் உடைகள் உகந்தவைதானா? தோல் மருத்துவ நிபுணர் ரவிச்சந்திரனிடம் கேட்டோம்.
p23
காலச் சூழலுக்கு ஏற்ற உடைகளை அணிய வேண்டுமே தவிர, சதாசர்வ காலமும் இறுக்கமான உடைகள் அணிவது நல்லது அல்ல. பெண்கள் இறுக்கமான உடைகளை அணியும்போது, வியர்வை வெளியேற முடியாமல், அதாவது வெளியே வர வாய்ப்பு இல்லாமல் கிருமிகளின் வளர்ச்சி பன்மடங்கு உயர்ந்துவிடும். இதனால், வேர்க்குரு, உஷ்ணக் கட்டிகள் மற்றும் கோடைக் கால நோய்கள் சருமத்தைப் பாதிக்கும். மேலும் அணியும் உள்ளாடைகள், சாக்ஸ் உட்பட இறுக்கமாக இருந்தால், உடலில் துர்நாற்றம் வீசுவதோடு, படை, சொறி சிரங்கு, அரிப்பு போன்றவை வரும்.

உடலில் ரத்த ஓட்டம் குறைந்து, சுவாசத் திறன் பாதிக்கும். தோள் பட்டை, முதுகு வலி ஏற்படலாம்.
ஓரளவு தளர்வான பருத்தி ஆடைகளை அணிவதுதான் உடல் ஆரோக்கியத்திற்கும் கொளுத்தும் கோடைக்கும் ஏற்றது. காற்று உட்புகவும், அதிகப்படியான வியர்வை வெளியேறவும் வழிவகுக்கும். ஈரத்தை நன்கு உள்வாங்கும். உடலுக்கு நல்ல குளிர்ச்சியையும் தரக்கூடியது.” என்கிறார் விளக்கமாக.
இறுக்கமான ஆடைகளால் ஆண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, நரம்பியல் மருத்துவர் அருள் செல்வன் பேசுகையில்,
‘இறுக்கமான ஆடை அணிவது என்பது இரு பாலருக்குமே ஏற்றது அல்ல. ஆண்களைப் பொருத்தவரை, அவர்களுடைய பிறப்புறுப்பிற்குக் கொஞ்சம்கூடக் காற்று செல்ல வசதி இல்லாமல் போய்விடுகிறது.  இதனால், வியர்வை சுரந்து அதிகப்படியான துர்நாற்றத்தை ஏற்படுத்தும். அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு இயற்கையாகவே விதைகள் (testes) குளிர்ந்த சூழலைப் பெறுமாறு அமைந்துள்ளது. ஆனால், மிக இறுக்கமான உள்ளாடைகள் அணியும்போது, அவர்களுக்குச் சுரக்கக்கூடிய விந்துவின் திடத்தன்மை குறைவதுடன், அந்த இடத்தில் உருவாகும் அதிகப்படியான வெப்பத்தினால் விந்தணுக்களின் எண்ணிக்கையும் குறையக்கூடிய வாய்ப்புகள் கூடும். மேலும், இறுக்கமான ஆடை அணிவதையே வழக்கமாக வைத்திருப்பவர்களுக்கு ஆண்மைக் குறைவு மற்றும் சிறுநீரகம் சம்பந்தமான பிரச்னைகள் உண்டாகவும் வாய்ப்புகள் இருக்கின்றன.
தொடை, கால் மரத்துப்போய் வலி ஏற்பட்டு, நரம்புகளில் ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்தும்.
சட்டையில் இறுக்கமான காலர் பட்டனைப் போட்டுக்கொள்ளுதல், டை அணிதல் போன்றவற்றால் கண்ணும் மூளையும் பாதிக்கப்படுவதுடன், அடிக்கடி தலைவலியும் மயக்கமும் உண்டாகும். பெல்ட் அணிந்துகொண்டு அளவிற்கு அதிகமான உணவினை எடுத்துக்கொண்டால், வயிற்றுப் பகுதி இறுக்கப்பட்டு,  இரைப்பையின் செயல்திறனைப் பாதித்து, நெஞ்சு எரிச்சலையும் அசிடிட்டியையும் உண்டாக்கிச் செரிமானத்தைத் தடை செய்யும். அதோடு, இறுக்கமான சாக்ஸ் அணிவதால், நடப்பதற்கே சிரமப்பட வேண்டியிருக்கும்.  காலில் உள்ள ரத்தக் குழாய்களை அழுத்திக் கால் வீக்கத்தை உண்டுபண்ணும். அதிலும், குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்கள் எப்போதும், தளர்வான ஆடைகளையே  அணிய வேண்டும்” என்றார் அக்கறையுடன்.
பார்த்து டிரெஸ் பண்ணுங்க!
*********************
நன்றி: விகடன்.காம்

தீண்டத்தகாத உணவா சோறு


அவர் ஒரு நீரிழிவு நோயாளி. நீண்ட நாட்களாக மருந்து சாப்பிடுகிறார். ஆனால் இரத்தத்தில் சீனியின் அளவு கட்டுப்படுவதில்லை. முட்டாள்களின் கோபம் போல இவரது குருதிச் சீனியின் நிலை திடீர் திடீரென தாறுமாறாக ஏறி இறங்கிக் கொண்டே இருக்கும். “சாப்பாட்டில் அவதானம் எடுங்கள்” என்றேன். “அப்ப சோறை நிப்பாட்டட்டோ” என்றார். நான் மனத்திற்குள் சிரித்துக் கொண்டு “சோற்றை நிப்பாட்டிப் போட்டு வேறை என்ன சாப்பிடுவியள்” என அப்பாவியாகக் கேட்டேன். “வேறை என்ன? இடியப்பம், புட்டு, அப்பம், தோசை இதுகளைத்தான்” என்றாள்.
உரல் போல் தொடைகளும், ஊதிய பலூன் போல முகமும் கொண்ட குண்டு மனிதர் இன்னொருவர். அவருக்கும் எடையைக் குறைப்பதற்காக உணவைக் கட்டுப்படுத்தும்படி ஆலோசனை கூறியபோது முன்னவரோடு கதைத்து வைத்தவர் போல “சரி நான் சோத்தை கைவிடுகிறன்” என்றார். “சோறு சாப்பிட வேண்டாம் என நான் சொல்லவில்லையே!” என நான் ஆரம்பிக்கவும், என்ன இந்த டொக்டர் மடைத்தனமாகக் கதைக்கிறார் என மனத்திற்குள் எண்ணியவர் போல ஏளனமும் ஆச்சரியமும் கலந்த பார்வையை என்மீது வீசினார்.
காச்சல்கார பிள்ளையோடு வந்த அம்மா நான் உணவு பற்றி எதுவும் சொல்லாத போதும் தானாகவே “இவனுக்கு சோத்தை நிப்பாட்டிப் போட்டு பாண் வாட்டிக் கொடுக்கிறேன்” என்றாள்.
ஏன் இவர்களுக்கெல்லாம் சோறு தீண்டத்தகாத உணவாக இருக்கிறது? அப்படியும் சொல்ல முடியாது. இவர்கள் யாவரும் வழமையாக சோறுதான் உண்ணுகிறார்கள். ஆனால் நோயுற்ற நேரத்திற்கு மட்டும் சோறு ஏற்புடையதல்ல என எண்ணுகிறார்கள். இவை தவறான
கருத்துத்தான்.

ஆசிய நாட்டவர்கள் அனைவரினதும் பிரதான உணவான அரிசியில் மாப்பொருள் மாத்திரமின்றி புரதம், விற்றமின்கள், கனியங்கள், நார்ப்பொருள் யாவுமே உண்டு. அதிலும் முக்கியமாக தீட்டாத அரிசியிலும், புழுங்கல் (நாட்டு) அரிசியிலும் இவை அதிக செறிவில் உள்ளது. உண்மையில் தாவர உணவு மட்டும் உண்பவர்களின் தினசரி புரதத் தேவையின் பெரும் பகுதியை அரிசியே நிறைவு செய்கிறது என்பது பலரும் உணராத உண்மையாகும்.
இடியப்பம், புட்டு, அப்பம், தோசை போன்ற பலகாரங்கள் யாவற்றினதும் முக்கிய கூறாக அரிசிதான் இருக்கிறது. ஆனால் பருக்கைகளாக அல்லாது மாவாக இருக்கிறது. எனவே முதலாமவர் கூறியது போல சோற்றை முற்றாக நிறுத்தி இடியப்பம், புட்டு, அப்பம், தோசை போன்றவற்றைச் சாப்பிடுவதில் எந்தவித அர்த்தமும் கிடையாது. இரண்டிலும் உள்ளது மாப்பொருள்தான்(Starch). எனவே எதைச் சாப்பிடுகிறோம் என்பது முக்கியமல்ல.
இரண்டாமவர் கூறியதுபோல சோற்றை கைவிடுவதிலும் எந்தவிதத்திலும் விஞ்ஞான பூர்வமான காரணமும் கிடையாது. அவர் இவற்றில் எதைச் சாப்பிடுகிறார் என்பதை விட எவ்வளவு சாப்பிடுகிறார் என்பதே முக்கியமானது. மாப் பொருள் உணவுகளான சோறு, இடியப்பம், புட்டு, அப்பம் போன்றவற்றின் அளவைக் குறைத்து, குறைத்த உணவின் அளவுற்கு ஏற்ப நார்ப் பொருள் அதிகமுள்ள கீரை இலை வகைகள், மரக்கறி, பருப்பு, பயறு, சோயா, பழவகைகள் ஆகியவற்றை அதிகரித்துச் சாப்பிட வேண்டும். இதனால் உண்டவை மெதுவாக சமிபாடடையும், விரைவில் மீண்டும் பசிக்காது. எடையும் அதிகரிக்காது.

       
காய்ச்சலின் போது உடலிலிருந்து சக்தி சூடாக வெளியேறுகிறது. அதை ஈடுசெய்யப் போதியளவு போஷாக்குள்ள உணவு உட்கொள்வது அவசியமாகும். சோறு போஷாக்குள்ளது என்பதால் அதையே உட்கொள்ளலாம். விருப்பமில்லையேல் பாற் கஞ்சியாகக் குடிக்கலாம். அல்லது சக்திப் பெறுமானமுள்ள வேறு உணவுகளை உட்கொள்ள வேண்டும். பலரும் காய்ச்சல் என்றவுடன் சோடா வேண்டும் என்பார்கள். சோடா என்று நாம் வழமையாகக் கூறும் மென்பானங்களில் இனிப்புத் தவிர்ந்த போஷாக்கு எவையும் கிடையாது என்பதால் அவை விரும்பத்தக்கவை அல்ல.
எனவே நீங்கள் எந்நேரத்திலும், எந்த நோயின் போதும் சோறு சாப்பிடலாம். சோறு சாப்பிடுவதால் எந்த நோயும் அதிகரிக்கப் போவதில்லை. அது தீண்டத்தகாத உணவல்ல. ஆயினும் அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். சோறு ஆனாலும் அளவோடு உண்ணுங்கள்.
************************************
நன்றி: டாக்டர் எம்.கே. முருகானந்தன் - பதிவுகள்

அளவற்ற அருளாளன்….


அளவற்ற அருளாளன்…. நிகரற்ற அன்பாளன்..! “அல்லாஹ்வை அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் என்கிறோம், என்றாலும் மனித மனம் அந்த அளவு என்ன என்று அளந்து பார்க்க முயல்வது இயல்புதானே? அந்த வகையில் உங்கள் விளக்கம் என்ன?” என்று கேட்டார் ஒரு நண்பர். “எந்த அளவு கோலைக்கொண்டு அளந்து பார்க்க நினைக்கிறீர்கள்? மனிதன் படைத்த ஸ்கேல், தராசு இவற்றாலா, அல்லது பிற அளவு கருவிகளைக்கொண்டா?  அவரிடம் திருப்பிக்கேட்டேன். அவர் பதில் பேசாமல் புன்முறுவலோடு என்னைக் கூர்ந்து பார்த்தார்.
பதில் பெறத்துடிக்கும் மாணவனின் துடிப்பையும், கற்றுத்தர முனையும் ஆசிரியரின் உயிர்ப்பையும் ஒருசேர அவரது கண்கள் என்னுள் பாய்ச்சின. என் கிளினிக்கில் ஒரு வாரத்துக்கு முன்பு நிகழ்ந்த உரையாடல் உடனே என் நினைவுக்கு வந்தது.
வெளி நாட்டில் தொழில் புரியும் என் நண்பர் அவர். அவரது மனைவியின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து தாயகம் வந்திருந்தார். என் பரிந்துரையில் மதுரை, சென்னை நகரங்களுக்கு விரிவான மருத்துவ ஆய்வுகளுக்கும் சிகிச்சைக்கும் சென்றுவிட்டு இரண்டு மாதங்கள் கழித்து சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கொடுத்த இரண்டு பெரிய கோப்புகளைச் சுமந்து கொண்டு அவர் வந்திருந்தார். அவரது மனைவிக்கு சிறுநீரக கோளாறு.
இரத்தத்திலிருந்து உடலுக்குத் தேவையற்ற – அப்படித் தேங்கினால், தீமை விழைவிக்கும் நச்சுப்பொருட்களை அப்புறப்படுத்தும் தனது தலையாய பணியிலிருந்து இரண்டு சிறுநீரகங்களும் முற்றிலுமாகத் தவறிவிட்டன. நோயாளி உயிர்வாழ வேண்டுமானால், அந்த நச்சுப்பொருட்களை செயற்கையாக வெளியேற்றியாக வேண்டும்! வாரம் இரு முறை அல்லது மும்முறை!
“ஒரு முறை அப்படி வெளியேற்றும் சிகிச்சை பெறுவதற்கு கிராமத்திலிருந்து அருகிலுள்ள மதுரை நகருக்குச் சென்று வர எவ்வளவு செலவு பிடிக்கலாம்?” – நண்பர் கேட்டார். “டாக்ஸிக்கு , போக வர 1300 – 1500 ரூபாய் ஆகலாம்; சிகிச்சை மற்றும் மருந்துகளுக்கு சுமார் 5000 …. இதர செலவுகள் தேவைக் கேற்ப” – “ஆக, வாரத்துக்கு 10,000 வச்சிருக்கனும்னு சொல்லுங்க” என்றார் நண்பர்.

“ஆம்! கஷ்டம்தான்!…. உங்கள் துணைவியாரின் ஹார்ட் நல்லபடியாக இருக்கிறது. சர்க்கரை கூட கட்டுக்குள் இருக்கிறது. உங்கள் உறவு வட்டத்தில் யாராவது ஒருவர் கிட்னியை ‘தானமாகக் கொடுத்தால், சிறுநீரக மாற்று  அறுவை சிகிச்சை  செய்துவிடலாம்!…. கொஞ்சம் அதிகம் செலவாகும்…. ஆனால், இது ஒரே செலவு…. ஆயுள் முழுக்க செயற்கைச் சிறுநீரகத்தின் மூலம் அழுக்கை அகற்றும் செலவோடு கணக்கிட்டு ஒப்பிட்டால், இது குறைந்த செலவு…. அதே நேரத்தில் சிறப்பான சிகிசசை!… யோசியுங்கள்” என்றேன். அவர் பதில் சொல்லாமல், எதையோ வெறித்தார். மனப்போராட்டத்தை முகம் பிரதிபளித்தது.
இறுக்கமான- தர்ம சங்கடமான நொடிகள் நகர்ந்தன. எப்படி அவருக்கு ஆறுதல் சொல்வது? எங்கிருந்து அதைத் தொடங்குவது? என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது, “கொஞ்சம் தண்ணீர் குடித்துக் கொள்ளவா?” என்று கேட்டுக்கொண்டு, மேஜை மீது இருந்த தண்ணீரை எடுத்துக் குடிக்க ஆரம்பித்தார்.
அவர் தன் வாய்க்குள் ‘பிஸ்மி’ சொல்வதை நான் கவனித்துவிட்டேன். அவர் தண்ணீர் குடித்து முடிக்கும் வரை காத்திருந்து விட்டு,   “பாய்! என்ன சொல்லி தண்ணீர் குடித்தீர்கள்?” என்றேன். “பிஸ்மி சொல்லி” “அதன் பொருள்?” -  “அளவற்ற அருளாளனும்… நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லஹ்வின் திருப்பெயரால்..” என்றார். “ரொம்ப மகிழ்ச்சி!.. அதை சற்றே திரும்பத் திரும்ப மனதில் கொண்டு வந்து யோசியுங்கள்….. உங்ளுக்குத் தெளிவு கிடைக்கும்… குழப்பம் மறையும்” என்றேன். அவர் புருவத்தை உயர்த்திப் பார்த்தார்.
“பாய்! உங்கள் மனைவிக்கு அவரது கிட்னி பழுது படும் வரை 45 வருடங்களாக ஒழுங்காகவே அது பயன் பட்டிருக்கிறது. அப்பணிக்காக அது ஒரு பைசாக் கூட உங்களிடமிருந்து வசூல் செய்யவில்லை. இல்லையா? இந்தப் பின்னணியில் கொஞ்சம் சிந்தியுங்கள் பாய்!…. இறைவன் நமக்குத் தந்திருக்கிற ஒவ்வொரு உறுப்பின் அருமையும் பெருமையும் அவ்வுருப்பு தன் செயல்திறனை இழக்கும் போதுதான் நமக்குப் புரிகிறது, இல்லையா?” அவர் இமைக்காமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். ‘சும்மா’ ஒரு கணக்குப் போடுவோம்…. வாரம் 5000….. மாதம் 20,000…ஆண்டுக்கு சுமார் இரண்டரை லட்சம்… ஆக, 45 ஆண்டுகளுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புக்கு இந்த கிட்னி உழைத்து விட்டுத்தான் இப்போது ஓய்ந்திருக்கிறது – ஓய்வு பெற்றிருக்கிறது, இல்லையா? ‘
நண்பர் நிமிர்ந்து உட்கார்ந்தார். அந்த நேரத்தில் நான் அவரிடம் அவ்வளவு நீன்ட உரையாடலை வளர்ப்பதற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது. அவர் நல்லவர்; இனிய பண்பாளர்.. என்றாலும் வணக்க வழிபாடுகளில்.. … மார்க்க அனுஷ்டானங்களில் எல்லாம் அவ்வளவு செலுத்துபவர் அல்ல. நினைத்தால் தொழுவார். இஸ்லாத்தின் அனைத்து அடிப்படைக் கடமைகள் விஷயத்திலும் பொடுபோக்கானவர்தான். மனைவி, குழந்தைகளையும் கூட அவர் மாதிரியே தான் பழக்கியிருந்தார். நான் பேசப் பேச… நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை முற்றிலுமாக  உள்வாங்கிக்கொண்ட  உணர்வை அவரது கண்கள் எனக்கு உணர்த்தி, மேலும் விளக்கமளிக்கும் தேவையை நிறுத்தின.
அவர் ஒரு பெருமூச்சை உதிர்த்துவிட்டுப் பேசத் தொடங்கினார். “யெஸ், டாக்டர்!… யூ ஆர் ரைட்!… ரொம்பச் சரியா சரியான நேரத்துல எனக்குப் பல உண்மைகளை உணர்த்திட்டீங்க.. ” நோ.. நோ! அல்லாஹ் உணர்த்திட்டான் என்று சொல்லுங்க” நான் அவரை அவசரமாகத் திருத்தினேன். அவரே சொன்னார்.” என் மனைவியோட கிட்னி செத்துப் போச்சுங்கறது வாஸ்தவந்தான்…. ஆனா, அவங்களுக்கு சிகிச்சை அளிக்க எனக்குப் பொருளாதார வசதியை அல்லாஹ் கொடுத்திருக்கான்….. அவங்களது ஹார்ட் ஆரோக்கியமானதா இருக்கு… உறவினர்கள் யாரும் கிடைக்கவிட்டாலும்,, காசு கொடுத்து கிட்னி வாங்கி செயற்கையாப் பொருத்திக்க அவகாசத்தையும் அல்லாஹ் தந்திருக்கான்..” ‘ரொம்பச் சரியாச் சொன்னீங்க…..
இந்தப்பின்னது ரொம்ப முக்கியமான விசயம்! எனக்குத் தெரிய எத்தனையோ பேர் காசு வச்சிருந்தும் உடல் நிலை மோசமாய் இருந்ததுனால ஸர்ஜரி பண்ணிக்க முடியாமப் போகுது” ஆமா டாக்டர்.., அல்லாஹ் எங்க மேல தன்னோட அளவு கடந்த பாசத்தைக் காட்டியிருக்கான்…அன்பால போஷிச்சிருக்கான்!……அருள்மழையைப் பொழிங்சிருக்கான்னுதான் சொல்லனும்” அல்ஹம்துலில்லாஹ்! இனிமேல் அவருக்கு உணர்த்த வேன்டியது என்ன பாக்கி?
கேள்வி கேட்ட என் நண்பருக்கு அந்த உரையாடலை விளக்கினேன். அவர் இஸ்லாத்தை அறிய முற்படும் அன்பர். முஸ்லிம்களோடு ஓர் அணுக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர். அந்த என் பதிலில் அவர் எந்த அளவுக்கு திருப்தி கண்டார் என்பதை வெளிப்படையாகச் சொல்லவில்லைதான். என்றாலும், பான்டிச்சேரியிலிருந்து தஞ்சாவூர் வரைக்கும் அமைந்த எங்கள் உரையாடல் அவர் அந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டார் என்பதை எனக்கு உணர்த்தியது.
********************************
http://chittarkottai.com

Tuesday, May 21, 2013

எதிரிகளையும் துணையாக்கிக்கொள்ளுங்கள் !என்ன ஆச்சரியமாக உள்ளதா? எதிரி நமக்கு எப்படி உதவ முடியும்?  நமது குறிக்கோளுக்கும், நமது முன்னேற்றத்திற்கும், வெற்றிக்கும்  இடைஞ்சலே இந்த எதிரிதானே! அவரை எப்படி நான் துணையாக்கிக்கொள்வது? என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது..
முதலில் எதிரி என்றால் யார் என்று பார்ப்போமா!
நமது முகம் கண்ணாடி இல்லாமல் நமக்குத்தெரியாது . அதுபோலவே  நமது முதுகும் நமக்குத் தெரியாது.  ஆனால் நம் எதிரில் உள்ளவர்களுக்கு நம்முடைய முதுகும் முகமும் நன்கு தெரியும்(எதிரியாக இருந்தாலும் ) .
அவர்தான் நமது முகத்தில் “ஓ எண்ணை ஒட்டியுள்ளது! அதை துடையுங்களேன்” என்பார்.  “முதுகில் பூச்சி இருக்கிறது அதை தட்டி விடுங்களேன்” என்பார்.
எனவே, நமது ஒவ்வொருவருக்கும் நம்மைப் பற்றி முழுமையாக அறிய இன்னொருவர் உதவி தேவைப்படுகிறது.  நண்பனும் எதிரியும் ஒரேமாதிரிதான்.  இருவருமே நம்மைப் பற்றி நன்கு அறிந்தவர்களே..!!
இருவருக்கும் உள்ள வித்தியாசம் -  நண்பன் என்றால் நமது நல்ல குணங்களைப் பெரிதுப்படுத்தியும், தீய எண்ணங்களை குறைவுப்படுத்தியும், நம்முடன் உறவாடுவான்.
ஆனால் எதிரியோ, நமது நல்லகுணங்களை குறைவுபடுத்தி அல்லது ஒதுக்கி விட்டுவிட்டு, தீய குணங்களை மிகைப்படுத்தி, நம்மை வாழ்க்கைப் போராட்டத்திற்கு தூண்டுபவன்.
எதிரியை கண்ணாடியாக்க் கொண்டு, நமது குறைகளையும் பலவீனத்தையும் அறிந்துகொள்ளுங்கள்.
நமது உடம்புக்கு ஆரோக்யம் எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று நோயும் அவசியம்.  நோய் என்றால் என்ன? நமது உடம்பில் இந்த இடம், உறுபு பழுதடைந்துள்ளது.  அதை உடனே நிவர்த்தி செய்து கொள்க! என்று நமது உடல்  கஒடுக்கும் ஒரு SIGNAL தானே.
நோய் மட்டும் இல்லையென்றால் என்னவாகும்? உடலின் உறுப்புகள் (கண், கால், போன்றவை) தாமே தேய்ந்து, புதுப்பிக்க முடியாமல் காலப்போக்கில் அந்த உறுப்பிற்கே ஆபத்து வந்துவிடுமல்லவா
அதே போன்று நம்மை நன்றாக அறிந்தவன் நமது எதிரியே! நமது பலவீனங்களை, நம்மைவிட அறிந்தவன் அவனே!  எதிரி மூலம்தான், நமது பலவீனங்களை அறிந்துகொண்டு, மாற்று ஏற்பாடுகள் செய்து, நமது பலத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும்!
நம்மைத் துருப்பிடிக்காமல் வைக்காமல், தூண்டிவிடுபவன் நமது எதிரியே.. என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
எட்மண்ட் பர்க் என்னும் அறிஞர் கூறுவதைக் கேளுங்கள்..
“யார் நம்முடன் போராடுகிறானோ, அவனோ நம்முடைய நரம்புகளுக்கு முறுக்கேற்றுகிறான்.  நம்முடைய திறமையைக் கூர்மைப்படுத்துகிறான்.  ஆதலின் நமது எதிரியே நமக்கு மிகவும் உதவி செய்பவன். ” என்று ஆணித்தரமாக கூறுகிறார்.
எதிரி ஒவ்வொருமுறை நம்மைத் தாக்கும்போதும், நாம் நம்மை அவனை விட பலப்படுத்திக்கொண்டு திருப்பித் தாக்குவது அவசியமல்லவா! எனவே, நம்மை பலப்படுத்திக்கொள்கிறோம். ! எதிரி சாமான்யனாக இருந்தால், நாமும் அலட்சியமாக இருந்துவிடுகிறோம். ஆனால் அவன் பெரியவனாக இருக்கும்பட்சத்தில், அவனை விட நம்மை வளர்த்துக் கொண்டு, அவனை வென்றே தீரவேண்டிய அவசியம் நமக்கு ஏற்பட்டு விடுகிறது.
இதனையே ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்று கொச்சையாக சொல்வார்கள்.  பேராசையும், சுயநலமும், பொறாமையும் நிறைந்த இவ்வுலகத்தில், ஒன்று நாம் ஜெஎயிக்க வேண்டும் அல்லது ஜெயிக்கப்பட வேண்டும். எனவே உறுதியும், பலமும், நம்பிக்கையும் இல்லாத மனிதனுக்கு வெற்றி ஏது?

எங்கும் போட்டிகளே நிறைந்த இந்த உலகத்தில் உறுதியுடன், தயக்கமின்றி எதிரிகளை வெற்றிக் கொண்டு, செயலாற்றுபவனே முன்னுக்கு வர முடியும்.
நெப்போலியன் ஒரு மாவீரன்தான். அவனை வெல்ல வேண்டும் என்று வெல்லிங்க்டன்பிரபு தனது சிறு வயதிலேயே சபதம் ஏற்றுக்கொண்டார். நெப்போலியனின் ஒவ்வொரு அசைவையும், ஆற்றலையும் கண்டு வியந்தார்! இருப்பினும் தான் எடுத்துக்கொண்ட சபதத்திற்காக, நெப்போலியனைவிட அதிக போர்த்திறமைகளையும், யுக்திகளையும் பல வருஷங்களாக நமக்குள் வளர்த்துக் கொண்டார்.
தன்னுடைய காலம் வந்தபோது, நெப்போலியன் என்ற மாவீரனை வென்று உலகப்புகழ் பெற்றார்.
எதிரி பலமாக இருந்தால்தான், வெல்லிங்டன் பிரபு, உலகப்புகழ் பெற முடிந்தது! உலகத்தின் ஒரு சிறந்த தளபதியாக கருதப்படுகிறார்.
எனவே, எதிரிகளை வெறுக்காதீர்கள். அவர்கள் மீது ஆத்திரம் கொள்ளாதீர்கள்.  நமக்கு உண்மையில் நன்மை புரிபவர்கள் அவர்களே என்று உணர்ந்து அவர்களை மன்னித்துவிடுங்கள்.  இருப்பினும், அவரை வெல்வதற்கு நாம் தாயாரகவும் தகுந்த முன்னேற்பாட்டுடனுன் எப்போதும் விழிப்புடனே இருக்க வேண்டும்.
சில நாடுகளுக்கும், மக்களுக்கும் இயற்கையே எதிரியாக அமைந்துவிட்டது! ஜப்பான் நாட்டில் வருடத்தில் பல நாள்கள் பூகம்பம்தான்.  சரியான வீடு கூட கட்டமுடியாது.  நம்மைப் போன்று விவசாயமெல்லாம் அங்கு செய்ய முடியாது.  போதாததற்கு இரண்டாம் உலகப்போரில்,  அமெரிக்கா இரண்டு அணுகுண்டுகளை வீசி நாகசாகி, ஹிரோசிமா என்ற இரண்டு பெரிய நகரங்களையும் அழித்துவிட்டது.
“அய்யோ! ஜப்பானும், ஜப்பானியர்களும் இதோடு தொலைந்துவிட்டார்கள்!” என்றே உலகும், உலகநாடுகளும் நினைத்தன.  ஆனால் ஜப்பானிய நாடோ, ஜாப்பானிய மக்களோ வீழ்ந்துவிடவில்லை.
“இயற்கையை வெல்ல வேண்டும், அனைத்து நாடுகளையும்விட அறிவிலும் செல்வத்திலும் சிறந்து விளங்க வேண்டும்” என்று ஊப்பானிய மக்கள் வீர சபதம் எடுத்துக் கொண்டனர். கடுமையாக உழைத்தார்கள். உழைப்பிலேயே இன்பத்தையும், வெற்றியையும் கண்டார்கள்.
தொழில்நுட்பத்திலும், அறிவிலும், புதிய கண்டுபிடிப்புகளிலும் மகத்தான சாதனை கண்டனர்.  பணமும், புகழும் தேடி வந்தன.  இன்று உலகத்திலேயே ஜப்பானியர்கள்தான் எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர்.
அவர்களை அழித்த, அமெரிக்க நாட்டினை (எதிரி நாட்டினையும்) கூட உறவாக மாற்றிக் கொண்டு, இன்று அமெரிக்காவுடன் சம்மாக உலகச் சந்தையில் போட்டி போடுகின்றனர்.
அமெரிக்காவே இன்று ஜப்பானியரைப் பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு வளர்ந்து விட்டனர் என்றால் என்ன காரணம்?
ஜப்பானியர்கள், தங்களது எதிரிகளையும், துணையாகப் பயன்படுத்தி வெற்றி பெற்றுவிட்டனர்.  எனவே, முன்னேறத் துடிக்கும் நீங்களும், அவர்களைப் போன்று எதிரியைத் துணையாகக் கொண்டே வெற்றி பெறுங்கள்.. வெற்றிக்கான சூட்சும்மும் இதுதான் என்று நன்றாக அறிந்துகொள்ளுங்கள் நண்பர்களே..!!!
இனி எதிரியை கூட உங்களுடைய வெற்றிக்கு துணையாக்கிகொள்ளக்கூடிய மனநிலையை வளர்த்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.  சரியா? நான் நினைப்பது சரி என்றால் நிச்சயம் நீங்கள் வெற்றியை நோக்கி நடைபோட ஆரம்பித்துவிட்டீர்கள் என்று அர்த்தம்..
இந்த எண்ணம் உங்களிடம் மேலோங்கி இருக்குமானால் இந்த பதிவிற்கு நான் எடுத்துக்கொண்ட நேரமும், சிரத்தையும்  வீணாகவில்லை என்று பெருமிதம் கொள்வேன்.  என்ன நண்பர்களே நான் சொல்வது சரிதானே?!!
-----------------------------------------
http://chittarkottai.com

டீ காபிக்கு பேப்பர் கப்’களை பயன்படுத்துபவரா!?


plastic cupஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவர் தினமும் இரவில் வயிற்று வலியால் கஷ்டபட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம்.
அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர் “கப்’களில், டீ, காபி குடிப்பது வழக்கம்! அந்த, “கப்’கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் டாக்டர்.
அவர் மேலும், தற்காலத்தில் பெரும்பான்மையான அலுவலகக் கேன்டீன்களில், “பேப்பர் கப்’களை பயன்படுத்தி வருகின்றனர். மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும் “கப்’கள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில், மெழுகு பூசப்படுகிறது.
இப்படி மெழுகு பூசப்பட்ட “கப்’களில், மிக சூடான, டீயோ, காபியோ நிரப்பப்படும் போது, அந்த வெப்பம் காரணமாக, “கப்’பிலிருக்கும் மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது. அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது.
“டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடி அல்லது செராமிக் “கப்’களே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர் களையும் உபயோகிக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, “கப்’களை உபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்க வேண்டி வரும்…’ என்று கூறினார் டாக்டர்.
அவர் கூறிய இந்த அறிவுரைகள், விலை மதிப்பில்லாதது; அனைவரும் அதை பின்பற்ற வேண்டும்.
----------------------------------------
நன்றி: தினக்ஸ்
 http://chittarkottai.com

கண்களுக்கு ஆபத்து விளைவிக்கும் LED குமிழ்கள்.


கண்களுக்கு ஆபத்து விளைவிக்கும் LED குமிழ்கள்.

-----------------------------------------------------------------------------------


LED விளக்குகளால் மனிதர்களின் கண்பார்வைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விலை குறைவான குண்டு பல்புகளைத்தான் மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். ஆனால், இவை வெப்பத்தை அதிகளவில் உமிழ்வதாகவும், மின்சாரத்தை அதிகளவில் உறிஞ்சுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கு மாற்றாக எல்இடி எனப்படும், ‘லைட் எமிட்டிங் டையோடு’ (Light Emitting Diode) விளக்குகள் அறிமுகம் ஆனது.

இவை குண்டு பல்புகள் பயன்படுத்தும் மின்சாரத்தில் 5ல் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்துவதாகவும், சுற்றுச்சூழலுக்கு மிக சிறப்பானது என்றும் கூறப்பட்டது.
இதனால், ஐரோப்பிய யூனியனில் பல ஆண்டுகளுக்கு முன்பே குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது. இந்தியாவில் 2009ம் ஆண்டில் 100 வாட்ஸ் குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், செல்போன்கள், தொலைக்காட்சி என்று பல்வேறு மின்னணு சாதனங்களில் எல்இடி பயன்பாடு அதிகரித்துவிட்டது.

தற்போது மக்களிடம் எல்இடி பல்புகளை பற்றி மின்சாதன நிறுவனங்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன. சென்னையில் குடிசைகளுக்கு இந்த வகை பல்புகளை இலவசமாக வழங்குவது குறித்து மாநகராட்சியும் ஆலோசித்து வருகிறது.
ஆனால், எல்இடி பல்புகளால் மனிதர்களின் கண் பார்வைக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர் தற்போது பகீர் தகவல் வெளியிட்டுள்ளார்.

மேட்ரிட்டில் உள்ள கம்ப்லூடென்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டொக்டர் செலியா சான்செஜ் ரமோஸ் என்பவர் தலைமையில் ஒரு குழு, எல்இடி பல்புகள் குறித்து ஆராய்ச்சி நடத்தி முடிவை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து ரமோஸ் கூறுகையில், எல்இடி பல்புகள் சுற்றுச்சூழலுக்கு சிறப்பானது என்றாலும் அதில் இருந்து நீல மற்றும் செங்கரு நீல (வயலட்) கதிர்கள் வெளியாகின்றன.

இவை சிறிய அலைவீச்சை கொண்ட சக்திவாய் ந்த கதிர்கள். இவை அதிக சக்திவாய்ந்தவை என்றாலும், குளுமையாக இருப்பதால் சாதாரணமாக அதை பார்த்து கொண்டிருக்க முடியும். இதுபோன்று எல்இடி விளக்குகளின் வெளிச்சத்தை பார்க்கும்போது, அது கண்ணின் விழித்திரையை பாதிக்கும்.
கண்கள், வெளிச்சத்தின் துணையுடன் பார்க்கக்கூடிய தன்மை கொண்டது. மாறாக வெளிச்சத்தை மட்டும் பார்க்கக்கூடியது அல்ல என்றும் எல்இடி விளக்குகள் உமிழும் வெளிச்சம் குளுமையாக இருப்பது போல் தோன்றினாலும், அதனால் கண் பார்வைக்கு ஆபத்து அதிகம் எனவும் கூறியுள்ளார்.
----------------------------------------------------

Monday, May 20, 2013

சீனர்களின் நீண்ட ஆயுளின் இரகசியம்.


சீனர்களின் நீண்ட ஆயுளின் இரகசியம்

அறிகுறி தோன்ற முன்னரே நோயை இல்லாமல் செய்யுங்கள்!

சீனா என்றதும் நம் நினைவில்வருவது ‘சீனப் பெருஞ்சுவர்’ உலக அதிசயங்களில் மிகவும் உச்சமானது. அதனால்தான் உலகின் பழைமைத்துவமும், சுறுசுறுப்பும் மிக்கவர்கள் சீனர்களாவர்.
பட்டாடைக்கும், காகிதத் துறைக்கும், அருந்தும் தேயிலையின் அறிமுகத்திற்கும், இன்னும் பலவகையான ஆரம்பத்திற்கும் புகழ்பெற்ற நாடு சீனாவாகும். உலகின் மக்கள் தொகையின் உச்ச நிலைக்கும், பண்டைய பட்டுப் பாதைக்கும் புகழ்பெற்றது.
இவ்வாறு நீண்டகால வரலாற்றைக் கொண்ட இந்த நாட்டில் மக்கள் நீண்ட ஆயுளுடன் வாழுகின்ற நிலையும் காணப்படுகிறது.
இதற்கெல்லாம் என்னதான் காரணம் இவர்களது விடாமுயற்சியான ஆராய்வூக்கம், இயற்கை மருத்துவத் துறை என்பனவுமே காரணம் என்கின்றனர்.
சரி, விடயத்திற்கு வருவோம், உலகில் 2000 வருடங்களுக்கு முன்னரே மூலிகைகள் தொடர்பான விபரங்களை தொகுத்து இதனை ‘மஞ்சள் பேரரசுடைய பண்டைய மருத்துவம்’ என்கிற பெயரைக் கூறும் ‘ஹுவாங் டி நெய் ஷிங்கில்’ காணப்படுகிறது- அதாவது நோயின் அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்னரே நோயை இல்லாமல் செய்துவிடுங்கள் இந்த அடிப்படையில்தான் சீனர்கள் மருத்துவத் துறையை கண்டுபிடித்து உலகிற்கே இன்றுவரை பறைசாற்றி வருகின்றனர்.
இன்றைய ஆங்கில மருத்துவத் துறையில் காணப்படுவது போல், அனைத்து விதமான நோய்களுக்கும் நிவாரணங்களை சீனர்களின் ‘ஆயுள்வேத’ அதாவது ‘மூலிகைகளுடனான வைத்தியத்தின்’ மூலமாக சுகமாக்கி விடுகிற ஓர் நிலைமை அன்று முதல் இன்றுவரையும் காணப்படுகிறது.
ஹுவாங் டி நெய் வுங்கின் மொழிபெயர்ப்பாளரான ‘ஸ¤ மிங்¤ கூறும்போது ‘சீனாவின் திறந்த பொருளாதாரக் கொள்கை மிக விரைவாக விரிவடைந்ததன் காரணமாக மேற்கு மற்றும் கிழக்கு என்பவற்றுக்கிடையிலான கலாசார பரிமாற்றம் இடம்பெற்றது. இதனால் சீனர்களின் பாரம்பரிய மருத்துவமானது அதிகளவான கவனத்திற்கு உட்பட்டதன் விளைவு உயர்தர மேலைத்தேய மருத்துவங்கள் ஒருவகையான பசுமையான புரட்சியை எதிர்கொள்கின்றன.
இவர்களின் பிரதான நோக்கமாக கெடுதல் இல்லாத இயற்கையான மருந்துகள் மற்றும் மருத்துவ தொழில் நுட்பங்களை பயன்படுத்த முனைகின்றனர்.’ எனவேதான் மேலைத்தேய நாட்டு மருத்துவ அறிவுகளுடன் பாரம்பரிய கிழக்காசிய மருத்துவ விடயங்கள் சேருவதானது தவிர்க்க முடியாததாகி விடுகிறது-
சீனர்களின் ஊட்டம் மற்றும் மருத்துவம் இரண்டு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அமைகிறது.
முதலாவதாக : நமது உடம்பானது பல முறைமைகளை கொண்டதுடன் சிக்கலான தொடர்பையும் கொண்டது. இதனால் ஏதாவது ஒரு முறையில் சமநிலை குழம்புமாயின் அது மற்ற முறைமைகளையும் பாதிக்கும்.
இரண்டாவதாக: நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு பிரதான விடயமாக அமைவது அம்முறைமைகளின் சமநிலையாகும். எனவேதான் இதன் பிரதிபலனாக, பொதுவாகவே எமது உடம்பானது பெளதீக ரீதியாக சமநிலையற்றதனால் நமது உடம்பை மருத்துவர்கள் சோதிக்கின்ற போது கூட எங்களது பிரச்சினையின் அடிப்படையான மூலவேரையே அறிய முடியாமல் உள்ளது.
எமது உடலில் ‘திண்ம உறுப்புக்கள்  (Solid organs)  மற்றும் பள்ளமான உறுப்புக்கள் (Hollow organs)  ஆகிய இரண்டு முறைமையான சேர்க்கையினால் இயங்குகின்றன. ஈரல், இதயம், மண்ணீரல், நுரையீரல் மற்றும் சிறுநீரகங்கள் என்பன திண்ம உறுப்புக்களாக கொள்ளப்படுகின்றன.
பித்தப்பை, சிறுகுடல், வயிறு, பெருங்குடல், சமநிலை மற்றும் ஸன்ஜியோ (Sunjiao)  என்பன பள்ளமான உறுப்புக்களாக கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு உறுப்புகளும் சோடிகளாகவே செயற்படுகின்றன.
உடம்பின் இப்பிரதான உறுப்புக்களுடன் இரத்தம், உடம்பின் நீர் மற்றும் சத்துக்கள் என்பனவற்றின் சுழற்சியை உறுதிப்படுத்துவதன் அடிப்படையிலேயேதான் சீனர்களுடைய பாரம்பரிய மருத்துவத்துறை இன்றும் காணப்படுகிறது மேலே கூறப்பட்டவைகளில் ஏதாவது பாதிப்புக்கள் ஏற்பட்டால் இந்த மூலிகை மருத்துவத்தின் மூலமாக அவ்வடைப்புக்களை இல்லாமலாக்கி உடம்பின் முறைமைகளை சமநிலைப்படுத்துகின்றது.
வேகமாக சென்று கொண்டிருக்கும் இன்றைய நவீன வாழ்க்கையினால் உடல் மற்றும் உளம் என்பன பல வழிகளிலும் பாதிப்படைகின்றது. பல மனிதர்கள் அவர்களின் வேலையின்போது எதிர்கொள்ளும் அழுத்தம் மற்றும் அதனை எவ்வாறு எதிர்வுகொள்வது என்பதனையே அறியாதவர்களாகவே உள்ளனர்.
போதுமானளவு சத்துள்ள உணவு இன்மை, குறைவான உடற்பயிற்சிகள் என்பன நவீன மற்றும் வேகமான வாழ்க்கை முறையின் காரணமாக உயர்ந்த விகிதத்திலான மக்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர். இதன் பிரதிபலன் எங்களுடைய உடம்பு சமநிலையை இழந்து வைத்தியர்களால் பரிசோதிக்கப்படுகின்ற போது பிரச்சினையின் மூலவேரை கண்டறிய முடியாமல் திணறுகின்றனர். எனவேதான் இதற்கு வழிவகுக்கும் வகையில் அமைந்ததுதான் சீனர்களின் மூலிகை அடிப்படையில் அமைந்த மூலிகைச் சத்துக்கள் அடங்கியுள்ள பொருட்களாகும்.
ஆரோக்கியத்தில் சீனர்களினது அணுகுமுறை :-
கிழக்கில் சீனாவானது 5000 வருடங்களுக்கு மேலாக ‘ஹொலிஸ்டிக்’ அணுகுமுறையை (Holistic approach)  கடைப்பிடித்து வருகின்றது. மற்றவகையில் கூறினால் சீனர்களோ பிரச்சினையின் மூலவேரை கண்டறிந்து நோய் மற்றும் ஆரோக்கியம் குறைவான நிலைமைகள் ஏற்படாதவாறு ஒரு ஆரோக்கிய நிலைமையை உருவாக்க முயற்சி செய்கின்றனர்.
‘நோய் ஏற்படுவதற்கு முன் அதை தடுப்பது சிறந்தது’ என்கிற நன்நெறியை சீனர்கள் பின்பற்றுகின்றனர். ஆண்டாண்டு காலமாக சீனர்கள் ஆரோக்கியம், நீண்டநாள் ஆயுளுக்கான இரகசியத்தை நன்கு அறிந்து வைத்துள்ளனர்.
இதனை நான்கு படிமுறைகளில் பார்க்கலாம். உடம்பை தூய்மையாக்குதல், நிரப்புதல், பலப்படுத்தல், சமநிலைப்படுத்தல் என்பனவாகும்.
தற்போது இலங்கையிலும் சீனர்களின் மூலிகைகளுடனான, பக்கவிளைவுகள் அற்ற மாத்திரைகள் பல விற்பனைக்கு உள்ளன. இதில் குறிப்பாக Double – cellulose  மாத்திரைகளை பயன்படுத்துகிற போது எவ்வித பக்கவிளைவுகளையோ, தங்கியிருந்தலையோ ஏற்படுத்தாது? மனித உடம்பிற்குத் தேவையான புரதம், சர்க்கரை (காபோவைதரேற்று), கொழும்பு, விட்டமின், கனியுப்புக்கள் மற்றும் நீர் போன்றவற்றோடு ஏதாவது சக்தியையும் வழங்குகிறது.
இது உடலுக்கு தீமையைத் தருகின்ற பக்ரீரியா மற்றும் குடலில் உள்ள நச்சுத் தன்மைகளையும் சுத்தம் செய்து கொழும்பு, சர்க்கரை மற்றும் கொலஸ்ரோல் என்பன குடலினால் உறிஞ்சப்படுவது குறைப்படுவதோடு, மேலதிக வெப்பத்தை தடுத்து, கழிவுப் பொருட்களின் வெளியேற்றத்தினை அதிகரிக்கவும் செய்கின்றது.
மேலும் இதிலிருந்து நார் பொருட்களானது நீரை அதிகமாக உறிஞ்சும் தன்மையையும், விரைவாக இலகுபடுத்தும் தன்மையையும் கொண்டிருப்பதனால், இதன் மூலமாக மலச் சிக்கலானது தடுக்கப்படுவதோடு, கழிவுகள் அகற்றப்படுவது விரைவுபடுத்தப்படுகிறது. மேலும், குடலின் செயற்பாடுகளை அதிகரிக்கச் செய்வதுடன், நச்சுப் பொருட்கள் மற்றும் குடல் சுவர்களிடையேயான தொடர்பினையும் குறைக்கச் செய்கிறது. இதன் பயன்பாடுகளாக :-
1. கரைதலுக்கு உள்ளாகும் நார் பொருட்களான  yplymerizwd glucose)  குடலில் உள்ள நச்சு பக்டீரியாக்களை அழிக்கும்.
2. உணவில் உள்ள கொலஸ்ரோலை குடல் உறிஞ்சுவது தடுக்கப்படும். சுற்றோட்டத்தில் உள்ள தடைகளை நீக்கி இதய நோய்கள் ஏற்படுவதை தடைசெய்யும் மேலதிக வெப்பத்தை கட்டுப்படுத்துதல், மற்றும் உடல்நிறையினை நிலையான முறையில் பராமரிக்கும்.
3. நீரில் கரைதலுக்கு உள்ளாகாத நார் பொருட்களானது  (comfibers)  மலச்சிக்கலைத் தடுத்து கழிவுப் பொருட்களின் வெளியேற்றத்தை துரித்தப்படுத்தும்.
4. Hawthorn powder  இரத்த சுற்றோட்டத்தை ஒழுங்காக்கும், மண்டியினை (கடின பொருட்களை) கரைத்து, குடலிலுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி, கழிவு அகற்றலை இலகுபடுத்துகிறது.
5. இனிப்பான மூலகங்கள் : இவ்வுற்பத்திக்கு மிக சுவையாக இருக்கும்.
எனவே, இதனது உற்பத்தியின் பயனாக பின்வரும் பயன்பாடுகள் ஏற்படுகின்றன என்றும் கூறப்படுகிறது. அதாவது கழிவகற்றலை இலகுபடுத்தி, மலச்சிக்கலை தடுக்கிறது. கொலஸ்ரோலை குறைப்பதுடன் சுற்றோட்டத்தில் உள்ள தடைகளை நீக்கி இதய நோய்கள் ஏற்படுவதை தடைசெய்யும், உடம்பு நிறையினை பராமரித்து பருத்தலை தடைசெய்யும், பெருங்குடலில் ஏற்படுகின்ற புற்றுநோயினை தடுக்கவும், இன்சுலின் தேவையினை குறைத்து நீரிழிவு நோயாளர்களின் இரத்தத்தில் இருக்கும் சீனியின் அளவுமட்டத்தை பேணவும், உடம்பினால் உறிஞ்சும் செயற்பாடுகளை விருத்தி செய்கிறது இதன் மூலம் மனித உடம்பு தனக்கு தேவையான சத்துக்களை திறன்பட உறிஞ்சுக்கொள்கிறது.
எனவே இதுபோன்ற இன்னும் பலதரப்பட்ட மூலிகைகளிலிருந்து தயார் செய்யப்பட்ட வில்லைகள் பல்வேறு நோய்களுக்குரிய நிவாரணியாக உலாவருகின்றன. கடந்த பல வருடங்களில் பல்வேறு நாடுகளிலும் பரவலாக வெளிவந்து பலரின் வாழ்வில் சுகத்தை வழங்கியுள்ளது என்பதாகவும் கூறப்படுகிறது.
‘21ஆம் நூற்றாண்டின் மனித உடம்பிற்கான அனுகூலமான இயற்கை ஆரோக்கிய உணவு’ என பரிந்துரைக்கப்படுகின்ற ஸ்பிருலினா  (Spirulina)  எனும் உயிரினம் பூமியில் முதலில் தோன்றிய உயிரினமாகக் கொள்ளப்படுகிறது.
இவை உயிர் வாழ்வவதற்கான ஒட்சிசனை விருத்தி செய்யக்கூடியதாக இருப்பதுடன் உயிருள்ள பொருட்களை பன்முகப்படுத்தி விருத்தியுறச் செய்கிறது. இவை நீண்ட காலத்திற்கு முன்னரே ஆபிரிக்காவின் அபோஜின் இனத்தவர்கள் இதனது போசனையைக் கண்டறிந்து பிரதான உணவாகவும் உட்கொண்டனர்.
அது அவர்களின் உடலை பலப்படுத்தி சுறுசுறுப்பாக்கி, வெப்பமான சூழலில் இசைவாக்கம் பெறத்தக்கதான உடலமைப்பையும் பெற்றனர் எனவும் கூறப்படுகிறது. அமெரிக்கா, ஜப்பான், ஜேர்மன் ஆகியவற்றின் மருத்துவ நிறுவனங்கள் நீண்டகாலப் பரிசோதனையின் பின்னர் ஸ்பிருலினா பல்வேறு நோய்களை குணப்படுத்தும் நன்மையுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர். பக்கவிளைவுகள் அற்றது எனவும், போஷாக்கு மற்றும் மருந்து ஆகிய இரண்டையும் ஒன்றாக்கிய படியினால் இது சிறந்த இயற்கை ஆரோக்கிய உணவு எனவும் தெரிவிக்கப்பட்டது.
விண்வெளி வீரர்களுக்கு விண்வெளியில் நீண்ட காலம் தங்கி கடினமான உழைப்பில் ஈடுபடுவதால் அனைத்தும் அடங்கியுள்ள சர்வ சக்தியுள்ள உணவின் அவசியம் தேவைப்பட்டது. ஆதலால் இந்த ஸ்பிருலினா தீர்வாக முன்வைக்கப்பட்டது.
ஆதலால் தான் இதனை நாசாவின் தாயத்து என்பதாகவும் கூறுவர். இவ்வகையில் அமைந்ததுதான் ஸ்பிருலினா குளிசைகளாகும். இதன் உற்பத்தி திறனானது உடலை பலமாக்கவும், தொற்று நோய் ஏற்படாமல் தடுக்கக்கூடிய சக்தியை உடலில் விருத்தி செய்யும். தீங்கு விளைவிக்கக்கூடிய கதிர்களிலிருந்து தடுக்கக்கூடிய சக்தியை உடலில் விருத்தியம் செய்கிறது.
ஆதலால் நீரிழிவு நோயாளர்கள் உடலுக்குத் தேவையான அடிப்படை போஷாக்குக் குறைபாட்டினால் கஷ்டப்படுகின்ற போது இதனை பாவிப்பதன் மூலம் ‘இயற்கைப் பசுமை சுகாதார பராமரிப்பு உற்பத்தி’ என அழைக்கப்படுகின்ற விரிவானதும், சரியானதும் போஷாக்கினை வழங்குகிறது. அதுமட்டுமன்றி இருதய நோயாளர்களுக்கும் இதன் பாவனை மிகவும் பிரயோசனமாக காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறாக பல்வேறு மூலிகைகளைக் கொண்டு தயார்செய்யப்படுகின்ற மருத்துவப் பொருட்கள் அனைவருக்கும் உகந்த முறையிலும், பாரம்பரிய சீன மருத்துவத்தின் அடிப்படையில் உற்பத்தி செய்யப்பட்டு அனைத்து விதமான நோய்களுக்கும் நிவாரணியாக காணப்படுகிறது.
இதனைப் பாவித்து பயனடைந்தோர் பலர். ஆதலால்தான் கடந்த ஓரிரு ஆண்டுகளாக நமது நாட்டிலும் இப்பொருட்கள் அனைவரையும் ஆட்கொண்டு பட்டிதொட்டியெல்லாம் இதன் பெயர் வீசக் காரணமாக அமைந்துள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது.
.....................................................................................................................