Monday, June 17, 2013

இனிமேல் எனக்கு பரிசு தராதே ...........

                 


உனக்கென்று தனியாக தலையணை வைத்துக் கொள். என் தலையணையை எடுக்காதே! என்று நான் சொன்னதுதான் தாமதம்… உன் கண்ணில் நீர் முட்டிக் கொண்டுவிட்டது. ஏன் இப்படிப் பிரித்துப் பேசுகிறீர்கள்? என்றாய். பிரித்தெல்லாம் பேசவில்லை. உனக்கென்று நீ தனியாகத் தலையணை வைத்துக் கொண்டால், நீ ஊருக்குப் போயிருக்கும் நாட்களில், உன் தலையணையை நீ என்று நினைத்துக் கட்டிக்கொண்டு தூங்கலாம். அதற்குத்தான்! என்றேன். நீ தாவி வந்து என்னைக் கட்டிக்கொண்டு, ஒரு நிமிஷம்… நான் துடிதுடிச்சுப் போயிட்டேன், தெரியுமா!? என்றாய்.

காதல் அப்படித்தான்… துடித்துக்கொண்டிருக்கிற இதயத்தைத் துடிதுடிக்க வைத்துவிடும்!

நமக்குக் கல்யாணம் நடக்கிற நாளில், அம்மி மிதித்து அருந்ததி பார்க்கச் சொல்லும்போது, நான் உன்னைத்தான் பார்ப்பேன் என்றேன். ஏன்… என் முகத்திலா அருந்ததி இருக்கிறது? என்றாய். இல்லை… அருந்ததியே உன் முகமாக இருக்கிறது! என்றேன். நீ சிரித்துவிட்டு, அப்ப நான்

மட்டும் வானத்தைப் பார்க்கணுமா? என்றாய்.

வேண்டாம்… வேண்டாம். சீர் வரிசையில் கண்ணாடி இருக்கும் இல்லையா, அதை எடுத்துக் காட்டுகிறேன். அதில் உன் முகத்தையே நீயும் பார்த்துக்கொள் என்றேன்.

ம்ம்ம்… கூடியிருப்பவர்கள் சிரிக்க மாட்டார்களா? என்றாய். சிரிக்கட்டுமே… அதைவிடச் சிறந்த வாழ்த்தொலி எது! என்றேன். சடங்கில் இப்படியெல்லாமா விளையாடுவது? என்றாய்.

சடங்கே ஒரு விளையாட்டுத்தானே! என்றேன்.

என் பிறந்த நாளுக்காக நீ வாங்கித் தந்த பரிசுப் பொருளைப் பிரித்துப் பார்க்கக்கூட விருப்பமில்லை எனக்கு. அதை நீயே திரும்ப எடுத்துக்கொண்டு போய்விடு. இனிமேல் எப்போதும் எனக்கெந்த பரிசும் நீ தராதே! என்றேன்.

கலங்கிப் போனாய். எவ்ளோ ஆசையா வாங்கிட்டு வந்தேன் தெரியுமா? இதைப் போய் வேணாங்கறீங்களே… ஏன், என்னைப் பிடிக்கலியா? என்றாய் உடைந்த குரலில்.

உன்னைப் பிடித்திருப்பதுதான் பிரச்னையே! என் எல்லாப் பிரியத்தையும் நான் உன் மீதே வைத்திருப்பதால், நீ பரிசளித்தது என்பதற்காக எந்தப் பொருளின் மீதும் என்னால் பிரியம் வைக்க முடியாது.

உண்மையில், உன் மீது நான் வைத்திருக்கும் பிரியமே போதுமானதாக இல்லை எனக்கு. உன் மீது வைக்க இன்னும் கொஞ்சம் பிரியம் கிடைக்காதா என்று நான் ஏங்கிக்கொண்டிருக்கையில், நீ ஒரு பொருளை எனக்குப் பரிசளித்தால் அதை எப்படி வாங்கிக் கொள்ள முடியும், சொல்.

எனக்கு ஏதாவது பரிசு தந்தேயாகவேண்டும் என்று உனக்குத் தோன்றினால், ஒரு முத்தம் கொடு!? என்றேன்.

?அது மட்டும் என்ன அப்படி உசத்தி?? என்றாய்.

?ஆமாம், உசத்திதான்! முத்தத்தைவிடச் சிறந்த பரிசை காதல் இன்னும் கண்டுபிடிக்கவில்லை!?

உன் பிறந்த நாளையும்
பிறந்த நேரத்தையும்
காட்டுகிற ஒரு கடிகாரம்
என் அறையிலிருக்கிறது.

?கடிகாரம் ஓடலியா?? என
யாராவது கேட்டால்
சிரிப்புத்தான் வரும்

அது காலக் கடிகாரம் அல்ல
என் காதல் கடிகாரம்!


=====================

தபூசங்கர்-

கொடூர நோய்களை பரப்பும்( பி.டி)மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழம்..முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத் தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள். 

காரணம் தற்போது  பெரும்பாலோர் உட லில்-தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக் கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன், என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள். இவர்க ளை நோயாளிகளாக மாற்றியது இந்த மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழங்கள் தான்.

இயற்கையான வாழைப்பழம் பழுத்தால் இரண்டொரு நாளில் அழுகிவிடும். இயற்கையான மஞ்சள், பச்சை வாடன், ரஸ்தாளி, மலைபழம், தேன்கதளி, நாட்டுப் பழம், நாட்டுச்சக்கைப்பழம், கற்பூர வள்ளி, ஏலக்கி ஆகிய வாழைப் பழங்கள் மணமாகவும், நல்ல ருசி யாகவும் இருக்கும்.

இந்த பழங்கள் உடம்புக்கு சத்தாகவு ம், மற்ற உணவை செரிமானமாக்க வும் பயன்படும். மலச்சிக்கலால் பாதி க்கப்படுவோரும் தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடு வார்கள். 

பொதுவாக இயற்கையான வாழை ரகங்களில் நோய் தொற்று ஏற்படு ம். இவற்றை பூச்சுக் கொல்லிகளை பயன்படுத்தி நோயை கட்டுப்படுத்த வேண்டும். இந்த ரகங்களை பழுத்த உடன் நாம் சாப்பிடுவது வழக்கம். 
பூச்சிக்கொல்லிகளை அழிப்பதற்கு பதிலாக பூச்சிகளை கொல் லும் விஷச்சத்தை வாழைமரத்தின் மரபணுவில் செலுத்தி அமெ ரிக்க விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.இதைத் தான் நாம் பி. டி.வாழை என்று அழைக்கிறோம். கேவின் டிஷ் என்ற பெயருடன் இந்த மரபணு மாற்று வாழைப்பழம் நம்மூரில் கள்ளத்தனமாக விற்கப்படுகிறது. இப்பழங்களில் விஷத்தன்மை மிக அதிகமாக இருப்பதால் அமெரிக்காவில் இந்த வாழைப்பழம் பயிரிடவோ விற்கவோ அனுமதிக்கப்படவில்லை.

ஏழ்மையிலும் பசிபட்டினியிலும் வாடும் ஆப்பிரிக்க நாடு உகாண்டா. இங்குதான் முதன் முதலில் 2007 -ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உகாண்டா அதிபரை மிரட்டி அந்நாட்டின் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர செய்து பி.டி. வாழை எனப்படும் கேவின் டிஷ் வாழைப்பழத்தை முதன் முதலில் பயிரி ட செய்தார்.

நோய்களை பரப்பும்:

மாதக்கணக்கில் வைத்திருந்து விற்றாலும் கெட்டுபோகாது என் ற ஆசை வார்த்தை கூறி வியாபாரி கள் இந்த மரபணுமாற்று கேவின் டிஷ் வாழைப்பழத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். சூப்பர் மார்க்கெட் டுகளில் வாழைப்பழம் மட்டுமே விற்கும் நிலை உள்ளது.
இந்த பி.டி. மரபணு மாற்று வாழைப்பழம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இதற்குபோதிய வரவேற்பு இல்லை. இந்த மரபணு மாற்று வாழைப்பழம் இயற்கை வாழைப்பழம் போல் ருசியாக இருக்காது.

பி.டி. கத்தரிக்காய்க்கே இன்னும் இந்திய அரசு முழுமையான அனும தி வழங்கவில்லை. பி.டி.ரக மரப ணு காய்கறி, பழங்கள், உயிரை மெல்லமெல்ல கொல்லும் விஷமாகும். ஒருமுறை மட்டும் காய் த்து கனியாகும்.
செயற்கையாக மலட்டுத்தன்மை ஆக்கப்பட்ட மரபணு மாற்று காய் கறி பழங்களை தொடர்ந்து சாப்பிட் டால் மலட்டுத்தன்மை ஏற்படுவதோ டு, கேன்சர், செரிமான கோளாறு, தோல்நோய், சிறு நீரக நோய்கள், அலர்ஜி போன்றவை உண்டாகும்.


எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது?

மரபணு மாற்று பி.டி. ரக மஞ்சள் வாழைப்பழம் காட்டு கொட்டை வாழை யில், மீன் சோளம், காட்டுமொச்சை இவற்றின் மரபணுவை புகு த்தி கண்டு பிடிக்கப்பட்டதாகும்.

இயற்கையான வாழை ரகங்கள் வாழையடி வாழையாக வாழை மரத் தின் கிழங்கிலிருந்து செடி வளரும். அதனை பிரித்து நட்டா லே புதிய வாழையை பயிர் செய்ய முடியும். ஆனால் பி.டி. ரக கேவின்டிஷ் வாழை ஒரு முறை மட்டுமே காய்க்கும் வண் ணம் மரபணுவில் மாற்றம் செய்யப் பட்டு செயற்கையாக மலடாக்கப்பட்ட தாகும். எனவே விவசாயிகள் தாமாக வே மறுதடவை பயிர் செய்ய முடியாது.

திசுவளர்ப்பு முறையில் செடி வாழை சர்வதே ச கம்பெனிகளின் ஏஜெண்டுகளால் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு பயிரிட வழங் கப்படுகிறது. இவ்வகை பி.டி. ரக மரபணு மாற்று வாழையை தொடர்ந்து தோட்டத்தில் பயிர் செய்தால் அந்த நிலத்தில் உள்ள நன்மை செய்யும் புழு, பூச்சிகள், பாக்டீரியாக்கள் மொத் தமாக அழிக்கப்பட்டு அந்த நிலம் எந்த பயிரும் வைக்க முடியாத வண்ணம் பாலைவனமாக மாறிவிடும் .........


=================

நன்றி :ராஜு சரவணன் 

பயன்பாட்டில் இல்லாத தமிழ்ப் பெயர்கள் .

முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்!

சப்பாத்தி - கோந்தடை

புரோட்டா - புரியடை

நூடுல்ஸ் - குழைமா

கிச்சடி - காய்சோறு, காய்மா

கேக் - கட்டிகை, கடினி

சமோசா - கறிப்பொதி, முறுகி

பாயசம் - பாற்கன்னல்

சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு

பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி

பொறை - வறக்கை

கேசரி - செழும்பம், பழும்பம்

குருமா - கூட்டாளம்

ஐஸ்கிரீம் - பனிக்குழைவு

சோடா - காலகம்

ஜாங்கிரி - முறுக்கினி

ரோஸ்மில்க் - முளரிப்பால்

சட்னி - அரைப்பம், துவையல்

கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு

பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில்

போண்டா - உழுந்தை

ஸர்பத் - நறுமட்டு

சோமாஸ் - பிறைமடி

பப்ஸ் - புடைச்சி

பன் - மெதுவன்

ரோஸ்டு - முறுவல்

லட்டு - கோளினி

புரூட் சாலட் - பழக்கூட்டு


noodles - நூலடை

macaroni - மாச்சுருள்


lasagnia - மாவடை


spaghetti - நூலப்பம்


pasta - மாசேவை


pizza - வேகப்பம்


soup - சப்புநீர்

sauce - சுவைச்சாறு

ketchup - தக்காளிச் சுவைச்சாறு


corn flakes - சோளத்துருவல்


carrot - மஞ்சள்முள்ளங்கி


beetroot - செங்கிழங்கு


apple - குமளிப்பழம்


rubber - மீள்மம்


===================

நாய் நன்றி உடைய மிருகமா..?நன்றியுடையார் என்பது தனக்கும் .தன் இனத்துக்கும் பிறருக்கும் விசுவாசமாகவும் பணிவுடனும் வாழ்வதாகும் .ஆனால் நாயை பொருத்தமட்டில் தன் இனத்தை கண்டால் கோபப்படுகிறது ..தனக்கு உணவுதரும் எசமானுக்கு மட்டும் நன்றியுடையதாக வாழுகிறது .எனவே நாயும் சுயநலத்துடன் தான் 
நன்றி உடையதாக இருக்கிறது . 

மனிதனும் சுயநலத்துக்காகவே நாயை வளர்க்கிறான் .வீட்டு பாதுகாப்புக்காக தான் நாயை வளர்க்கிறான் ...மொத்தத்தில் நாய் சுயநலத்துடன் வளர்க்கப்படும் உயிர் .இந்த இருவரில் யார்? 
சுயநலவாதி? என்றால் மனிதன் தான் .காரணம் நாய் சொல்லவில்லை நான் நன்றி உடைய மிருகம் என்று .மனிதனே சொல்லிக்கொண்டு இருக்கிறான்.. 

ஆனால் நாய் என்றும் நன்றி உடையது 

நன்றி என்பது எப்பொழுதுமே கிடைத்த ஒன்றினால் நாம் பெற்ற, பெற்றுக்கொண்டிருக்கின்ற பயனுக்காக கொடுத்தவருக்கு நாம் செலுத்தும் அன்புக் காணிக்கை. அதாவது ஒன்றைப் பெறாமல் நாம் நன்றி செலுத்த முடியாது. கிடைத்த ஒன்றுக்காக செலுத்தப்படுவது.


 ஒரு பிடி சோற்றுக்காக தனது உயிர் உள்ளவரை கொடுத்தவருக்குத் தனது அன்பைக் காணிக்கையாகக் கொடுக்கிறது நாய். நன்றி உணர்வுக்கு நாய்க்கு இணையாக ஒரு உயிரினமும் இல்ல. அதற்கான காரணம் என்னவென்றால் மனிதன் அதனது காவல் தொழிலுக்கான கூலியாக உணவைக் கொடுக்கின்றான். ஆனால் நாயோ தான் கொடுப்பதாக எதையும் கருதாமல், அதனால் கிடைப்பதைக் கூலியாக எண்ணாமல் கொடையாக ஏற்றுக்கொள்கிறது. 

இதை நாயைவிட வேறு எந்த உயிரினத்தாலும் மேற்கொள்ள முடியாது.' உண்டி கொடுப்போர் உயிர் கொடுப்போர்' என்பது மனிதனுக்கு வார்த்தை. ஆனால் நாய்க்கு அது வாழ்க்கை.

===================

நன்றி :கவிஞர் கே இனியவன்