Sunday, January 20, 2013

உலகில் ஒவ்வொன்றும் அதிசயம்!

[parrot1.jpg][parrot3.jpg][parrot.jpg]


இந்த உலகில் ஒவ்வொன்றும் அதிசயம். அதிசயங்களுக்குப் பஞ்சமே வராது.

அது போன்ற அதிசயங்களில் ஒன்றுதான் பறக்கும் கிளி வடிவத்திலான அதிசயப் பூ.

இந்த பூ. வடிவத்தில் மட்டும் கிளிபோல் அல்லாமல் சிறகுஇ அலகு, உடல் என ஒவ்வொரு பாகமும் வெவ்வேறு வர்ணங்களில் இருப்பது பஞ்சவர்ணக் கிளியை நினைவுபடுத்துகிறது.

தாய்லாந்தில் காணப்படும் 'பேரட் பிளவர்’ என்னும் இந்த அதிசயப் பூச்செடி அழியும் நிலையில் பாதுகாக்கப்படும் ஒரு செடியாக இருந்து வருகிறது.  இந்தச் செடி பூத்துக் குலுங்கியது.

--------------------------------------------------
நீங்கள் கேட்ட ஒவ்வொன்றையும் அவன் உங்களுக்கு வழங்கினான். அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் எண்ணினால் அதை உங்களால் எண்ணி முடியாது. மனிதன் அநீதி இழைப்பவன்; நன்றி கெட்டவன். (அல்குர்ஆன் 14:34)
---------------------------------------------------------------
by சம்சுதீன் 

பெண்கள் பேண வேண்டிய நாணம்





மனித வாழ்வில் ஒழுக்கம் உயிரை விட உயர்வாக மதிக்கத் தக்கதாகும் ஒழுக்க நெறி இல்லையேல் மனிதனுக்கும் மிருகத்திற்குமிடையில் வேறுபாடு இல்லாமல் போய் விடும். மற்ற படைப்புகளிடமில்லாத சிறப்பம்சம் ஒன்று மனிதனிடம் உண்டென்றால் அது ஒழுக்க நெறியுடன் கூடிய வாழ்வேயாகும்.

இறைவனின் படைப்பான ஆண், பெண் இரு பாலரிடத்திலும் பல விதமான வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவற்றில் வெட்கத்தையும் நாணத்தையும் அல்லாஹ் பெண்களிடத்தில் அதிகம் வழங்கியுள்ளான். ஆனால் இன்று நாகரீகம் என்ற பெயரில் வெட்கம், நாணம் அனைத்தையும் மறந்து அநாகரீகமான செயல்களில் பெண்கள் ஈடுபடத் துவங்கி விட்டனர்.

மேலை நாடுகளில் விடை பெற்று விட்ட இந்த வெட்க உணர்வு தற்போது கீழை நாடுகளிலும் விடைபெறத் துவங்கி விட்டது. அதன் அதிவேக வளர்ச்சி இஸ்லாமியப் பெண்களையும் தொட்டுவிட்டது. அரைகுறை ஆடை அணிவது அந்நிய ஆண்களோடு ஊர் சுற்றுவது கவர்ச்சிகரமான அலங்காரங்களை செய்து கொண்டு வீதிகளில் உலா வருவது என்று பல அநாகரீகச் செயல்கள் இஸ்லாமிய பெண்களிடம் ஒட்டிக் கொண்டு விட்டது.

வெட்கம் ஈமானில் உள்ளதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஈமான் உள்ளவரிடம் வெட்கம் இருக்க வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

ஆனால் வெட்கம் கொஞ்சம் கூட இல்லாமல் வெட்கம் கெட்ட செயலில் மூழ்கியிருக்கிறார்கள் இன்றைய இஸ்லாமியப் பெண்களும். அரை குறை ஆடைகள் அணியும் பெண்களுக்கும் உள்ளாடைகளின் நிறம் தெரியுமளவிற்குச் சேலைகள் அணியும் பெண்களுக்கும் வெட்கம் என்பது இல்லையா? அல்லது ஈமானே உள்ளத்தை விட்டு வெளியேறி விட்டதா?

கணவனுக்கு மட்டும் காட்ட வேண்டிய அலங்காரத்தை உலகமறியக் காட்டுவது தான் நாகரீகமா? நங்கையர்களின் நாட்டம் தான் என்ன?

“கன்னிப் பெண்ணும் விதவைப் பெண்ணும் அனுமதி பெறப்படாமல் திருமணம் முடிக்கப்பட மாட்டாள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, “கன்னிப் பெண்ணின் அனுமதி எப்படி? (அவள் வெட்கப் படுவாளே)” என்று நபி (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவள் மவுனமாக இருப்பதே அனுமதி” என்று கூறினார்கள் அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 5136

அனுமதிக்கப்பட்ட ஒன்றிற்குக் கூட ஆம்’ என்று பதில் சொல்ல வெட்கப்பட்ட தீன்குலப் பெண்களின் நாணம் எங்கே? இந்தப் பெண்கள் எங்கே?

நல்ல ஆண்களைக் கூட கெடுக்கும் வண்ணம் அரைகுறை ஆடைகளை அணிந்து கொண்டும் நறுமணப் பொருட்களை பூசிக் கொண்டும் செல்வதால் கெட்டுப் போவது பெண் மட்டுமா? நல்ல ஆண்களும் கூடத் தானே? வெட்கமில்லாமல் அந்தரங்கப் பகுதிகளை வெளிப்படுத்தும் இப்பெண்கள் அண்ணலாரின் பொன் மொழிக்குச் செவி சாய்ப்பார்களா?
நறுமணம் பூசி, தன் கணவனை மயக்கச் செய்யவே ஒரு பெண்ணுக்கு அனுமதியுண்டு.

அதை விடுத்து தெருத் தெருவாக வீட்டில் உள்ளவர்களை வெளியில் வரவழைக்கும் வண்ணம் நறுமணம் பூசிச் செல்வது விபச்சாரியின் செயலுக்குச் சமமில்லையா? ஊரிலுள்ளவர்கள் எல்லாம் நம்மைப் பார்க்கின்றார்கள் என்ற வெட்க உணர்வும் இல்லையா?

“எப்பெண்மணி நறுமணத்தை பூசிக் கொள்கிறாளோ அப்பெண் நம்மோடு இஷா தொழுகையில் கலந்து கொள்ள வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 760

கடமையான தொழுகையில் கூட நறுமணம் பூசிக் கொண்டு பெண்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதற்குக் காரணம், அதனால் மற்ற ஆண்களின் பார்வை அங்கு செல்லும் என்பதை விட வேறு என்னவாக இருக்கும்? வயதுக் கோளாறின் காரணமாக சில ஆண்களின் கவர்ச்சிப் பேச்சிற்கு அடிமைப்பட்டு, தனிமையில் சந்திப்பது, பின்னர் அவனால் ஏமாற்றப்பட்டு தற்கொலை அல்லது தினமும் வேதனை என்ற நிலைக்குப் போகக் காரணம் என்ன? வெட்கமில்லாமல் அந்நியரோடு ஊர் சுற்றியது தானே!

“எந்தவொரு ஆணும் (அந்நியப்) பெண்ணோடு தனித்திருக்க வேண்டாம். ஏனெனில் மூன்றாவதாக ஷைத்தான் இருக்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அஹ்மத் 109)

“ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் ஓடுகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: ஸஃபிய்யா (ரலி), நூல்: புகாரி 3281

எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் ஆணும் பெண்ணும் தனித்திருந்தால் ஷைத்தான் தன் வேலையைக் காட்டுகிறான். இதை நிதர்சனமாக நாம் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.

(அல்குர்ஆன் 24:31)

நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.

உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப் படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான்.

உங்கள் வீடுகளில் கூறப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும், ஞானத்தையும் நினையுங்கள்! அல்லாஹ் நுணுக்கமானவனாகவும், நன்கறிந்தவனாகவும், இருக்கிறான்.

முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண் களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.

(அல்குர்ஆன் 33:32-35)

தீன்குலப் பெண்களாக நாம் வாழ வேண்டுமானால் நபி (ஸல்) அவர்களின் மனைவியரைப் போன்று கண்ணியம் மிக்க ஆடைகளை அணிந்த பெண்களாகவும் அவசியமில்லாமல் ஊர் சுற்றுவதைத் தவிர்த்து, தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடிப்பவர்களாகவும், ஜகாத் கொடுப்பவர்களாகவும் இருக்க வேண்டும். அல்லாஹ்வும் அவனது தூதரும் கட்டளையிட்டபடி நடக்க வேண்டும். “தீர்ப்பு நாளில் முஃமினின் தராசில் நன்னடத்தையை விடக் கனமானது எதுவும் இருக்காது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி) நூல்: அஹ்மத் (26245), அபூதாவூத் (4166)
நன்மையும் தீமையும் நிறுக்கப்படும் போது நன்மையின் தட்டைத் தாழ்த்தும் பணியில் ஒழுக்கவியலின் பங்கு ஒப்பிட முடியாதது என்பதை இந்நபிமொழி உணர்த்துகின்றது. “மனிதர்களை அதிகமாக சொர்க்கத்தில் நுழைவிக்கக் கூடியது எது? என நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது, “இறையச்சமும் நன்னடத்தையுமே” என பதிலளித்தார்கள். “நரகில் மனிதர்களை எது அதிகம் நுழைவிக்கும்?” என கேட்கப்பட்ட போது, “வாயும் பாலுறுப்பும்” என பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: அஹ்மத் (7566), திர்மிதீ (1927), இப்னு மாஜா (4236)

தொலைக்காட்சி குழந்தைகளுக்குப் பெரும் ஆபத்து





பெற்றோர்களே! உண்மையில் நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது அக்கறையுள்ளவர்களா? … படியுங்கள்.

குழந்தையிடம் தொலைக்காட்சியின் ஆதிக்கம் மற்றும் விபரீதம் பற்றிய ஒரு ஆய்வு புகழ்பெற்ற மிச்சிங்காம் பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்டது. மிகவும் அதிர்ச்சிகரமான தகவல்களை அது வெளியிட்டுள்ளது.



1. சாதாரணக் குழந்தை பள்ளியில் செலவழிக்கும் நேரத்தைக் காட்டிலும் தொலைக்காட்சியில் அதிக நேரம் செலவழிக்கிறது.

2. சராசரியாக ஒருவாரத்திற்கு 20 மணிநேரம் தொலைகாட்சியில் செலவழிக்கிறது. இது மற்ற எல்லா செயல்களைக் காட்டிலும் அதிகமாகும். (தூங்குவதைத்தவிர).

3. சராசரியாக 70 வயது நிரம்பிய மனிதன் 7 முதல் 10 ஆண்டுகள் வரை நேரத்தை தொலைக்காட்சியில் செலவு செய்கிறான்.

4. விளம்பரங்கள் குழந்தைகளை இலக்காக வைத்து தயாரிக்கப்படுகின்றன. மாதந்தோறும் ஆயிரக்கணக்கான வியாபார விளம்பரங்கள் தயார் செய்யப்படுகின்றன.

5. ஒருவருடத்திற்கு 1000 முதல் 2000 வரையிலான போதை சம்பந்தப்பட்ட விளம்பரங்களை குழந்தைகள் பார்க்கின்றன.





குழந்தைகளின் வாழ்வும் தொலைக்காட்சியும்:

1. தொலைக்காட்சி மூளை வளர்ச்சியை பாதிக்கிறது.

2. பெற்றோர் நினைப்பது போல் குழந்தை நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்கு பாடம் கற்பிப்பதில்லை. அவை விளம்பர நோக்கத்திற்காகத் தயார் செய்யப்படுகின்றன.

3. தொலைக்காட்சி பார்ப்பது குழந்தைகளின் மற்ற செயல்களை அதாவது விளையாடுவது, பழகுவது, வீட்டுப்; பாடம் படிப்பது, பெற்றோருடன் நேரத்தை செலவிடுவது, சுகாதாரமான காற்றோட்டத்தை சுவாசிப்பது போன்றவற்றை நிர்மூலமாக்குகிறது.4. குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதினால் பசியின்மை, தூக்கமின்மை, மந்தபுத்த, சகவாசமின்மை, முரட்டுத்தனம், பார்வைப் பாதிப்பு ஆகிய பின்விளைவுகளைப் பெறுகின்றன





வன்முறையும் தொலைக்காட்சியும்

1. குழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளில் ஐந்து முதல் ஆறு மடங்கு பெரியவர்களுக்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளைக் காட்டிலும் வன்முறை நிகழ்ச்சிகள் காண்பிக்கப்படுகின்றன.

2. சனி, ஞாயிறுகளில் 20 முதல் 25 வரை வன்முறைக்காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன.

3. 8000 கொலைகளை பள்ளிப்படிப்பை முடிக்குமுன் குழந்தைகள் பார்க்கின்றன.

4. 10,000 கற்பழிப்புகள், அடிதடிகள், கொலைகள் ஓவ்வொருவருடமும் பார்க்கின்றன.அவற்றைப் பார்த்தது போல் வன்முறையில் ஈடுபட முனைகின்றன.

5. பள்ளியில் சேருமுனனரே (Aduls) நிகழ்ச்சிகள் பார்க்கும் குழந்தைகளை மிகவும் பாதிக்கின்றன.

6. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மிகக் கெட்ட நடத்தைகளை வளர்க்கின்றன.

7. நினைப்பதை அடைய வன்முறை தான் தீர்வு என்று காண்பிக்கப்படுகின்றன.

8. நிறைய நிகழ்ச்சிகள் வன்முறை நிகழ்ச்சிகளுக்கு தண்டனையில்லாமல் காண்பிக்கப்படுகின்றன அவை கேலிக்குரியதாகவும் காண்பிக்கப்டுகின்றன.

9. நல்வர்கள் கெட்டவர்களை அடிப்பது நல்லது போலவும் அது சாதாரணமானது போலவும் சித்தரிக்கப்படுகிறது. விளையாட்டுகளில் இது போன்று நிரூபிக்க குழந்தைகள் முயலுகின்றன.10. தொலைக்காட்சியில் வரும் (Fast food )உணவு ,இனிப்பு பதார்த்தங்களில் மட்டுமே ஆரோக்யமும் சத்தும் இருப்பது போல் குழந்தைகள் நினைக்கின்றன. ஆனால், உண்மையில் அவ்வாறில்லை.

தொலைக்காட்சி பார்க்கும் நேரங்களை எப்படித் தீர்மானிப்பது ?:

1. எந்த நேரத்தில் தொலைக்காட்சி பார்க்க அனுமதிப்பது? எந்த நேரத்தில் அனுமதிக்க கூடாது என்று வரையரை செய்யுங்கள். அதாவது வீட்டுப் பாடம் படிக்கும் முன் , எழுதும் நேரத்திற்கு முன,. சாப்பிடும் நேரம், பெற்றோர் அருகாமையில் இல்லாத நேரம் ஆகியவற்றில் கண்டிப்பாய் அனுமதிக்கக்கூடாது.

2. ஒரு நாளைக்கு ஒன்று அல்லது அதிக பட்சம் இரண்டு மணி நேரத்திற்கு மேல் அனுமதிக்கக்கூடாது.

3. பள்ளி நாட்களில் இரவில் ஒரு மணிநேரமும், வார நாட்களில் 3 மணிநேரமும் அனுமதிக்கலாம்.

4. அறிவுப்பூர்வமான நிகழ்ச்சிகளை சில நேரங்கள் அதிகமாக அனுமதிக்கலாம்.

5. படிப்பில் குறைவாக உள்ள குழந்தைகளை ஒரு நாளைக்கு அரை மணிநேரம் மட்டுமே அனுமதிக்கவேண்டும் அல்லது முற்றிலும் தவிர்க்கலாம். வார நாட்களில் 2 மணிநேரம் அனுமதிக்கலாம்.

6. வீட்டுப் பாடம் (Home work) இருக்கும் போது கண்டிப்பாய் டிவி பார்க்க அனுமதிக்காதீர்கள். குழந்தையின் விரும்பிய நிகழ்ச்சியாயிருப்பின் பதிவு செய்து பிறகு காண்பிக்கலாம்.

7. வார நாட்களில் டிவியை உபயோகிக்காமல் இருப்பதும் வார இறுதி நாட்களில் குறிப்பிட்ட அளவு பார்ப்பதும் மிகவும் நன்று. இது வீட்டுப் பாடம் படிக்க வேகப்படுத்துவதை தடுக்கும். குடும்பத்திலுள்ளவர்களுடன் உறவாட உதவும். டிவிமுன் நிறுத்திவிட்டு சமையல் செய்வதைக்காட்டிலும் சமையலுக்கு உதவ குழந்தையைத் தூண்டவேண்டும்.


இந்தியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெண்களை கீழ்த்தரமாகவும், கொச்சைப் படுத்தியும் டிவி தொடர்கள் காண்பிக்கப்படுகின்றன என்று கூறுகிறது.
‘குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள் (குழந்தைகளின்) மழலைச் சொல் கேளாதார்’ என்கிறார் வள்ளுவர். வருடக்கணக்கில் டிவி தொடர்கள் பார்ப்பதை விடுத்து குழந்தையுடன் கொஞ்சி விளையாடுங்கள்
தொலைக்காட்சிகளில் பொழுதைக் கழித்து குழந்தைகளின் பாசத்தை இழந்து விடாதீர்கள்!

தொலைக்காட்சி குழந்தைகளுக்குப் பெரும் ஆபத்து

பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளை அழித்து விடாதீர்கள்! குழந்தைகளின் எதிர்காலம் மிகவும் முக்கியமானது.அதில் பெற்றோர்களின் பங்கும் கவனிப்பும் மிக மிகவும் முக்கியமானது. 
ஆபத்து! ஆபத்து!! மிகவும் ஆபத்து!!! உஷார்!

பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளை அழித்து விடாதீர்கள்!

இரண்டு மூன்று வயதுடைய குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பது மிகவும் ஆபத்தாகும். அந்த வயதில் தான் குழந்தைகளின் மூளை வளர்ச்சி அடைகிறது. அப்போது தொலைக் காட்சி பார்ப்பதால் மூளை வளர்ச்சி பாதிப்பு அடையும்.

நாலாபுறமும் பார்க்க வேண்டிய கண்கள் ஒரே இடத்தில் நிலை குத்தி நின்று விடுவதே இதற்குக் காரணம்.

மூளை வளர்ச்சி பாதிக்கப்படுவதால், பள்ளிக்குச் செல்லும் போது பாடத்தில் கவனம் இருப்பதில்லை. சிந்தனை ஆற்றல் குறைகிறது. செயலாற்றலும் பாதிக்கப்படுகிறது. சுறுசுறுப்பாக ஓடி ஆடி விளையாடவேண்டிய வயதில் வயோதிகர்களைப் போல் இயக்கமில்லாமல் இருப்பார்கள்.

ஓடியாடாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து தொலைக் காட்சி பார்ப்பதால் குழந்தைகளின் உடலில் கொழுப்புச் சத்து சேருகிறது. இது எதிர்காலத்தில் குழந்தையின் உடல் நலனைப் பாதிக்கும். அதோடு இக்குழந்தைகள் முரட்டுக் குழந்தையாகளாகவும் இருப்பார்கள்.

அமெரிக்காவில் நடந்த ஒரு ஆராய்ச்சியில் இத்தனையும் தெரிய வந்திருக்கிறது. (ரீடர்ஸ் டைஜஸ்ட்லிருந்து)

பெற்றோர்களே! உஷார்!!

பெற்றோர்களே! இன்று நமது பிள்ளைகளின் நிலையைப் பார்த்தீர்களா ?

சதாவும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் தான் உட்கார்ந் திருக்கிறார்கள். சன் டிவியின் ‘சுட்டி’ போன்ற சேனல்கள்; வந்த பிறகு பிள்ளைகள் எங்கும் செல்வதில்லை. விளையாடுவதற்குக் கூட வெளியே போவதில்லை. பக்கத்து வீடுகளுக்கோ, உறவினர் வீடுகளுக்கோ அழைத்தால் கூட போவதில்லை.ஏன் வீட்டைவிட்டே வெளியே வருவதில்லை.

சிலைகளாக


பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் உடையைக்கூட மாற்றாமல் அதன் முன் சிலைகளாக அமர்ந்துவிடுகிறார்கள். தேனீர், சாப்பாடு எல்லாம் அதன் முன்னால் தான்.உட்கார்ந்து உட்கார்ந்து அவர்கள் களைத்துப் போய் படுத்துக் கொண்டே தொலைக்காட்சியை இமை கொட்டாது பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

விளைவு? அவர்களின் உடல் ஆரோக்கியம் குன்றி வலுவிழந்து விடுகிறார்கள். கண்பார்வை போய் முதியவர்களை விட கனமான கண் கண்ணாடிகளை அணியவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டி ருக்கிறார்கள். நடக்கவும் ஓடவும் செய்யாமல் சற்று தூரத்திற்கு நடப்பதற்கே இயலாது கால் வலிக்கிறது என்று கூறுகிறார்கள். குழந்தைகளின் நிலைமை எங்கோ சென்று விட்டது பார்த்தீர்களா?
 

குழந்தைகளின் எதிர்காலம்?

இப்படிப் போனால் குழந்தைகளின் எதிர்காலம் என்னாவது? என்று சற்றேனும் சிந்தித்தீர்களா? அவர்களைப்பற்றி நீங்கள் கவலைப்படவில்லையா?

உடல் வலுவிழந்து,மூளைத்திறன் குன்றி,சிந்திக்கும் ஆற்றல் இன்றி, செயலாற்றும் அனைத்து அபார ஆற்றல்களையும் இழந்து பரிதவிக்கும் நிலைக்கு படுவேகமாக அதல பாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் இவர்களெல்லாம் பொறியியல், மருத்துவம், தொழில் நுட்பம், அறிவியல் போன்ற உயர்தரப் படிப்பிற்குரிய எவ்விதத் தகுதியையும் பெறாது போய் விடுவார்கள்.

அப்படிப்பட்ட நிலைக்கு ஆளாகிவிடாது இப்போதே குழந்தைகளைப் பேணி வளர்க்கவேண்டியதும், அதற்கான ஆவனைகள் செய்து அவர்களின் உடலும், உள்ளமும் வலுவும் ஆரோக்கியம் பெற்று கல்வியிலும் ஒழுக்கத்திலும் மேம்பட்டு உயாந்தோங்குவதற்கும் ஒவ்வொரு பெற்றோரும் விழிப்போடு செயல்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
 

அலட்சியம் காட்டாதீர்!

இதிலே அலட்சியம் காட்டும் பெற்றோர் எதிர்காலத்தில் ஒளிவீச வேண்டிய தமது ஆற்றல் மிக்க சந்ததிகளை இப்போதே கண்களைக் கட்டி இருட்டிலே விட்டு அவர்களின் வாழ்வைப் பாழாக்குகிறார்கள்; என்பது தான் பொருள்.

எனவே! பேற்றோர்களே!குழந்தைகளை கருத்தூன்றி கண்காணியுங்கள். தொலைக்காட்சிப் பெட்டிகளை சிறிதுமூடிவையுங்கள். அவர்களுக்குரிய பயனுள்ள நிகழ்ச்சிகளை குறித்த நேரங்களில் பார்ப்பதற்கு ஆவனை செய்யுங்கள். கண்ட நேரங்களிலெல்லாம் டி.வி நிகழ்ச்சிகளையும், தொடர்களையும்,சினிமா படங்களையும் நீங்களும் பார்க்காமல் அவர்களுக்காக தியாகம் செய்யுங்கள். அவர்களை தொலை நோக்காகக் கொண்டே உங்கள் எல்லாச் செயல்களும் அமையவேண்டும். இது தான் அறிவார்ந்த பெற்றோர்கள் செய்யவேண்டிய கடமை. இதுவே அவர்களுக்கு அழகு.

குழந்தைகளை தூங்கவைப்பதற்கும், உணவூட்டுவதற்கும்,நாம் ஓய்வெடுப்பதற்கும் அவர்களை தொலைக்காட்சி முன் உட்கார வைத்து தாலாட்டி விட்டு நீங்கள் ஒதுங்கி விடாதீர்கள். அது அவர்களை பாழாக்கும் செயல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இறைவன் நமது சமுதாயத்தை காத்தருள்வானாக!
-------------------------------------------------------------------