Tuesday, November 20, 2012

வியாழனைப் போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு: 13 மடங்கு பெரியது


  கனடாவின் டொரன்டோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானிகள் குழு ஆய்வு மேற்கொண்டது.அப்போது சூரிய குடும்பத்தில் மேலும் ஒரு புதிய கிரகம் இருப்பதை கண்டுபிடித்தனர். அது சூரியனை விட 2 1/2 மடங்கு பெரியதாக இருந்தது. அதே நேரத்தில் வியாழன் கிரகத்தை விட 13 மடங்கு பெரியதாக காணப்பட்டது. நெப்டியூனை விடவும் பெரியதாக உள்ளது. இதற்கு 'சூப்பர் ஜுபிடர் (வியாழன்)' என்று பெயரிட்டுள்ளனர்.

கடந்த 4 ஆண்டு ஆய்வுக்கு பிறகு இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கப்பா ஆண்ட்ரோ மேடு என்ற நட்சத்திரம் அருகே மங்கலாக தெளிவற்ற நிலையில் இது காணப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

             Kappa Andromedae b Artist's Rendering  
             False-Color Near-Infrared Image of Kappa Andromedae
              Kappa Andromedae Star Chart

              Super-Jupiter Kappa Andromedae


              Super Jupiter Alien Planet

               Kappa Andromedae System

READ MORE:::::www.space.com

சீனாவின் விஷ உற்பத்தி!உலகம் முழுவதும் உணவு பொருட்கள் விநியோகம் செய்வதில் சீனா முக்கிய பங்கு வகிக்கிறது. உலகம் முழுவதற்கும் பூண்டு மட்டும் சுமார் 80 சதவீதம் சீனாதான் விநியோகம் செய்கிறது; இதிலிருந்து சீனாவின் உற்பத்தி மற்றும் விநியோக அளவை கணக்கீட்டுக்கொள்ளலாம். 

உணவு  பொருட்கள் விற்பனை செய்யும் நெஸ்ட்லே(Nestle) மற்றும் யுனிலிவர்(Unilever) போன்ற பன்னாட்டு நிறுவனங்கள்கூட தங்கள் உற்பத்திக்குத் தேவையான வெங்காயம் மற்றும் காளான்களை சீனாவிடமிருந்து பெற்றுதான் உணவு பொருட்களை உற்பத்தி செய்து உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது. 

சீனா இவ்வாறு மலையளவு உற்பத்தி செய்து விநியோகம் செய்வதற்கு அங்கு அடிமாட்டு விலை ஊதியத்திற்குப் பணிபுரியும் ஏழை தொழிலாளர்கள்  ஒரு முக்கிய  காரணம். என்னதான் இயந்திரங்கள் வந்தாலும், செர்ரி, பூ போன்றவற்றைக் கழுவி, கத்தரித்து, பேக் செய்ய முடியாது. ஆகவே மிக குறைந்த ஊதியத்திற்கு ஆட்களைப் பணியமர்த்தி உற்பத்தி செய்து வருகின்றனர் சீன விவசாய முதலாளிகள். 

பொருட்களை சீனாவிடம் வாங்கி தங்கள் நாட்டில் தங்களது நிறுவன பெயர் இட்டு ஐந்து மடங்கு அதிக விலைக்கு விற்று கொழுத்து வந்தன ஐரோப்பா நாட்டு நிறுவனங்கள். ஆனால் இப்போழுது சீனா, தானே சொந்தமாக நிறுவனங்கள் தொடங்கி உலகம் முழுவதும் சில்லறை விற்பனை செய்ய தொடங்கிவிட்டது. உதாரணமாக உலக அளவில் அதிக தேன் உற்பத்தி செய்து வந்த சீனா, தற்போது உலகமயமாக்கலைச் சாதமாக்கிக்கொண்டு தாங்களே நேரடியாக உலகம் முழுவதும் பாட்டில்களில் தேன் விற்பனை செய்து வருகிறது. இதுபோல விறபனையால் தற்போது சீனாவில் பலமடங்கு உணவு தொழில் வளர்ச்சி அடைந்துள்ளது. 

உணவு உற்பத்தியைப் பெருக்கும் சீனா, அதே வேளையில் ஆபத்தையும் பெருக்கி வருகிறது. உற்பத்தியில் அதிக 
சூல் பெற அதிக விஷ தன்மை உள்ளடங்கிய பூச்சிகொல்லிகள் உபயோக்கினறனர். தாவரங்களுக்கு அதிக விஷ தன்மை உள்ளடங்கிய பூச்சிகொல்லிகள் என்றால் கோழி, பன்றி போன்ற விலங்குகளுக்கு அதிக வீரியம்  கொண்ட ஆண்டிபயோடிக் செலுத்துகிறார்கள். 2008ல் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான சீன குழந்தைகள் பால் பவுடர் மற்றும் குழந்தை உணவு பொருட்களில் கலந்திருந்த இரசாயன மெலமைன் உட்கொண்டதில் பாதிக்கப்பட்டனர். 

இராசாயன சாயம் பூசப்பட்ட பச்சை பட்டாணிகள், கார்சினோஜெனிக் ஃபார்மால்டிஹைடு (carcinogenic formaldehyde) கலந்த முட்டைகோசு, உணவு விடுதிகளில் சமையலுக்குப் பயன்படுத்திய சாப்பாட்டு எண்ணெயை மீண்டும் சுத்தம் செய்து பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்வது போன்ற தில்லுமுல்லுகளும் நாளுக்கு நாள் வளர்ந்த வண்ணம் உள்ளது. சீன அரசாங்க நாளிதழான சைனா டைய்லியே போலி முட்டைகள் பற்றிய செய்தி வெளியிடும் அளவிற்கு சீன பொருட்களில் கலப்படமும், போலிகளும் அதிகமாகி விட்டது. 

இதை விட ருசிகரமான தகவல் என்னவெனில், ஊ ஹெங் (Wu Heng) என்ற வழக்கறிஞர் ஒரு நாள் பன்றி இறைச்சியை இரசாயனம் கலந்து  மாட்டுகறி என்று கூறி விற்பனை செய்து வந்ததைக் கண்டுபிடித்து  சீனாவில் நடந்துவரும் உணவு சம்பந்தப்பட்ட குற்றங்களை வெளிப்படுத்துவதற்காகவே ஒரு வலைதளம் உருவாக்கினார்.  வலைதளத்தின் பெயர் Throw it Out the Window. முன்பு ஒரு முறை அமெரிக்காவின் ஜனாதிபதி Theodore Roosevelt, சிகாகோ பலிபீடங்கள் எவ்வாறு மிருகங்களைப் பலியிடுகிறது என்று தெரிந்து கொண்ட போது தனது காலை சிற்றுண்டியை வீசி எறிந்ததாக கூறினார். அதை கருத்தில் கொண்டே அதே பெயரில் வலைதளத்தை உருவாக்கியுள்ளார் ஊ ஹெங். 

சீனாவின் உற்பத்தி பொருட்களில், காய்கறிகளை விட இறைச்சி உணவுதான் அதிக கேள்விக்குரியதாக இருக்கிறது. முன்பு சீன பண்ணையாளர்கள் ஏற்றுமதிக்குத் தயாராகும் உணவையே தாங்களும்  உட்கொண்டு வந்துள்ளார்கள். ஆனால் தற்போது விழிப்புணர்ச்சி அடைந்தவர்கள், தங்களுக்குத் தனியாகவும், ஏற்றுமதிக்குத் தனியாகவும் உற்பத்தி செய்கிறார்கள். தங்களுக்கென உற்பத்தி செய்யும் காய்கறிகளுக்கு உரம், பூச்சிகொல்லி இல்லாமலும், இறைச்சிகளில் ஹார்மோன் மற்றும் ஆண்டிபயோடிக் மருந்துகள் செலுத்தாமலும் பண்டைய விவசாய முறைப்படி உற்பத்தி செய்கிறார்கள். பல செல்வந்தர்களும், மூத்த அரசியல் தலைவர்களும் தனியாக நிலங்களை வாங்கி விவசாயம் செய்து கொள்வது அங்கு சகஜமாகி வருவதாக அவர்களே ஒத்துக்கொள்கிறார்கள். இதை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடும் பீஜிங் ரெனிம் பல்கலைகழக பேராசியர் ஒருவர் ஜெர்மனிய பத்திரிக்கைக்கு இதை தெரிவித்துள்ளார். 

இது போன்ற நடவடிக்கைகளைத் தடுக்க சீன அரசே 2009 ல் உணவு பாதுக்காப்பு பற்றிய சட்டத்தையும், 2010 ல் இதற்கென தனி கமிஷனும் அமைத்தது. மேலும் இந்த நச்சு உணவுகளைத் தயாரிப்பவர்களைக் காட்டிகொடுத்தால் அவர்களுக்குச் சன்மானமும் வழங்குகிறது. இருந்தாலும் எண்ணற்ற சீன உணவு உற்பத்தி நிறுவனங்கள் அதிக இலாபத்திற்கு ஆசைப்பட்டு இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.

சீன உற்பத்தியில் ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளுக்குத் தான் அதிக உணவு பொருட்கள் ஏற்றுமதி ஆகின்றன. தற்போது நம் நாட்டிலும் சீன உணவு பொருட்களின் இறக்குமதி அதிகரித்து கொண்டுவருகிறது. மார்க்கெட்டில் விலை குறைவு என்ற காரணத்திற்காக சீன பூண்டையே நாம் வாங்கிறோம். மேலும் குழந்தைகள் சாப்பிடும் ஜெல்லி போன்ற சாக்லேட்களும், நூடுல்ஸ், எம்.எஸ்.ஜி (அஜினமோட்டோ) போன்ற சீன உணவு பொருட்களும் அதிகரித்து வருகின்றன.

இன்றைய நிலையில், நாம் சீன உணவு பொருட்களை நேரடியாக வாங்காவிட்டாலும், பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் உணவு பொருட்களுக்குத் தேவையான உற்பத்தி பொருட்களை சீனாவிடமிருந்து வாங்கி, அதில் தயாரித்த உணவு பொருட்களை நம்மிடம் விற்று வருகின்றன. உதாரணமாக, சமீபத்தில் வெளிவந்து ஓடி கொண்டுயிருக்கின்ற ஒரு தமிழ் திரைப்படத்தில் குழந்தைகள் வேகமாக வளர தயாரிக்கப்படும் ஊட்டச்சத்து பவுடரில் கலந்துள்ள விஷத்தன்மை, அந்த பவுடர் தயாரிக்க பயன்படும் மாட்டுப்பால் மூலம் கலக்கப்படும். முதலில் மாட்டு தீவனத்தில் அந்த விஷத்தன்மை கொண்ட பொருளைக் கலந்து மாடுகளுக்குக் கொடுத்து, பின்பு அந்த மாடு கறந்த பால் மூலம், குழந்தைகள் உயரமாக வளர பயன்படுத்தும் ஊட்டசத்து பானம் தயாரிக்க படுவதாக இயக்குனர் காட்டியிருப்பார. இதை வெறும் கற்பனையாக மட்டும் நாம் எடுத்து கொள்ள கூடாது. இது போல பல உணவு பொருட்களைத் தயார் செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள்,  தங்கள் உற்பத்திக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் மூலப்பொருட்களை சீனாவிடமிருந்து வாங்கி அதன் மூலம் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களையே நாம் வாங்குகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது கட்டாயம் ஆகிறது.

இதற்கு பதில் அளிக்கும் சீன உணவு உற்பத்தியாளர்கள், "நீங்கள் எதுபோல நாடுகிறீர்களோ அது போல உங்களுக்குக் கிடைக்கும், எந்தத் தரத்தில், எந்த விலையில் உங்களுக்குத் தேவையோ அதற்கேற்ப தயாரிக்கப்பட்ட பொருட்கள் உங்கள் தேவைக்கேற்ப கிடைக்கும்" என்கிறார்கள்.

சீனா உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் 35 விழுக்காடு உணவு பொருட்கள் தான் இருக்கிறது, அதில் 15  சதவீதம் இறைச்சி பொருட்களும், 20 சதவீதம் காய்கறி பொருட்களும் என்ற நிலையில் உள்ளது. இவற்றை இறக்குமதி செய்யும் நாடுகள் சரியான முறையில் சோதனை செய்து உள்ளே அனுமதிக்கின்றனவா என்பது சந்தேகம்தான். என்னதான் ஊழலற்ற அதிகாரிகள் இல்லாவிட்டாலும் மீன், கோழி, இறால் போன்றவை மிக குறுகிய காலத்திற்குள் சோதனை செய்து விற்பனைக்கு விநியோகம் செய்வது என்பது கடினமான காரியம்தான். கன்டைனர்களில் வரும் உணவு பொருட்கள் சரியான குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு இருக்கிறதா, அதற்கு தகுந்த தட்ப வெப்பநிலை அமைக்கப்பட்டு இருக்கிறதா என்பதும் முக்கியமாகிறது. அதைவிட முக்கியமாக உள்ளூர் கடைகளில் அந்தப் பொருட்கள் விற்கப்படும் போது அவர்கள் அதற்கான குளிர்யூட்டும் சாதனம் அமைத்துள்ளார்களா என்பதும் ஐயமே. மேலும் பல சூப்பர் மார்க்கெட்டுகளில் மின்சார செலவைச் சமாளிக்க இரவில் குளிர்சாதன பெட்டிகளின் இயக்கத்தை நிறுத்தி விடுகின்றனர். இதுவும் உணவு பாதுக்காப்பு சம்பந்தப்பட்ட விசயத்தில் முற்றிலும் தவறான செயல்பாடு ஆகும்.

மிகப்பெரும் பன்னாட்டு  நிறுவனங்களே சீனாவில் இருந்து வாங்கும் பொருட்கள் ஆபத்தானவை என்று நன்றாக புரிந்து வைத்துள்ளது. ஆனால் விநியோக தேவையை எவ்வாறு பூர்த்தி செய்வது?. குறைந்த விலையில் வாங்கி அதிக விலைக்கு விற்றால்தானே அதிக இலாபத்தைப் பெற முடியும். அதனால்தான், அவர்களின் பத்து ருபாய் குளிர்பான விளம்பரத்திற்கு வரும் நடிகர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் அவர்களால் கோடிகளை அள்ளித் தர முடிகிறது. 

இவர்கள் நம் வாய்களில் திணிக்கப்போவது வெளிதோற்றத்தில் கவர்ச்சியாக காட்சியளிக்கும்  சீன பொருட்களினால் உருவான நச்சு உணவுகள்தான் எனபதில் சந்தேகமில்லை. இவ்விசயத்தில் கவனமுடன் இருக்கவேண்டியது நுகர்வோர்களாகிய பொதுமக்கள்தான்!

இங்கிலாந்தில் விபத்தில் கால்களை இழந்த பெண்ணுக்கு ரூ.160 கோடி நஷ்டஈடு

                                      இங்கிலாந்தில் விபத்தில் கால்களை இழந்த பெண்ணுக்கு ரூ.160 கோடி நஷ்டஈடு


இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் ஆக்னஸ் சொலியா (17). இவர் தனது 13-வது வயதில் பள்ளியில் படித்து கொண்டிருந்தார். அப்போது தனது தாயார் கரென் ஹுட்டுடன் ஒரு ஆடம்பர காரில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது அவர் பயணம் செய்த கார் மீது ஒரு லாரி பயங்கரமாக மோதியது. அதில் அவரது தாயார் கரென் ஹுட் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். ஆக்னஸ் தனது 2 கால்களையும் இழந்தார். அவரது முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானார். பலத்த சிகிச்சைக்கு பின் குணம் அடைந்தார். தற்போது அவர் கல்லூரியில் படித்து வருகிறார். 

இந்த நிலையில் விபத்தில் தான் பாதிக்கப்பட்டது குறித்து லண்டன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு 2 கால்களையும் இழந்த ஆக்னசுக்கு ரூ.160 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது. 

விபத்து வழக்கில் இங்கிலாந்தில் வழங்கப்பட்ட அதிகபட்ச நஷ்டஈடு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்சமாக ரூ.85 கோடி நஷ்டஈடு வழங்கப்பட்டு இருந்தது.

 ::::::::::::::::::::::::::மாலைமலர்:::::::::::::::::::::::::::::::

பார்க்காமல் காதலித்த வாலிபரை கரம்பிடித்த இளம்பெண்: ஊனமுற்றவர் என்பது தெரிந்ததும் உடனே ஓட்டம்


              பார்க்காமல் காதலித்த வாலிபரை கரம்பிடித்த இளம்பெண்: ஊனமுற்றவர் என்பது தெரிந்ததும் உடனே ஓட்டம்
முன்பெல்லாம் 'கண்டதும் காதல்' என்பதுதான் பெரும்பாலான காதல்கள் உருவான கதையாக இருந்தது. ஆனால் இன்று பார்க்காமலே காதல் என்பது அதிகமாகிவிட்டது. செல்போன், இன்டர்நெட் உள்ளிட்டவையே இதற்கு காரணம்.
கண்டதும் காதல் உருவாகுவதைவிட பார்க்காமல் உருவாகும் காதலுக்கு சக்தி குறைவே என்றே கூறவேண்டும். ஏனென்றால் பார்க்காமல் காதலிக்கும் போது காதலிப்பவர்களின் தனிப்பட்ட குறைகள் தெரியவதில்லை. தேன்ஒழுக பேசுவதே அவர்களுக்கு இனிமையாக இருக்கும். எவ்வளவு நாள் பார்க்காமல் காதலித்தாலும் என்றாவது ஒருநாள் பார்த்துதானே ஆகவேண்டும்.
அப்படி பார்க்கும்போது, ஏதாவது குறைபாடு இருந்தால் பெரும்பாலானோரால் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இதனால் பார்க்காமல் காதலிக்கும் பலரது காதல் உடைந்துவிடுகிறது. பார்க்காமல் காதலித்த வாலிபரை வீட்டைவிட்டு ஓடி திருமணம் செய்தபிறகு, காதலன் ஊனமுற்றவர் என்பது தெரிந்ததும் காதலி தப்பியோடி தலைமறைவான சம்பவம் தமிழ்நாடு  நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் அரங்கேறி உள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
ஆலங்குளம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மகள் ராஜேஸ்வரி (வயது23). இவரது செல்போனுக்கு கடந்த 1 1/2 ஆண்டுக்கு முன்பு மிஸ்டுகால் ஒன்று வந்தது. அது யார்? என்பதை அறிவதற்காக அந்த எண்ணுக்கு போன்செய்தார். அப்போது எதிர்முனையில் வாலிபர் ஒருவர் பேசினார்.
அந்த வாலிபர் முக்கூடல் அருகே உள்ள ஓ.துலுக்கப்பட்டியை சேர்ந்த சக்திவேல் (27). இருவரும் ஒருவரையொருவர் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். அதில் இருவருக்கும் இடையே பிடித்துப்போகவே அடிக்கடி செல்போனில் பேசியபடி இருந்தனர். நாளடைவில் அவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. அதனை இருவரும் போனில் தெரிவித்துக் கொண்டனர். தினமும் மணிக்கணக்கில் செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்துவந்தனர்.
என்னதான் போனில் பேசிவந்தபோதிலும், கிராமத்தை சேர்ந்தவர்கள் மற்றும் கட்டுப்பாட்டான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரும் நேரில் சந்தித்து பேசாமலேயே இருந்துள்ளனர். இந்நிலையில் ராஜேஸ்வரிக்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி என்ன செய்வதென்று தவித்தார்.
தனது காதலை வீட்டில் கூற பயப்பட்டார். தனக்கு மாப்பிள்ளை பார்த்துவருவது பற்றி காதலனிடம் கூறினார். அதற்கு அவர், வீட்டைவிட்டு வந்துவிடு. துலுக்கப்பட்டியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஐடியா கூறினார். அதற்கு ராஜேஸ்வரி சம்மதம் தெரிவித்தார்.
காதலன் கூறியபடி கடந்த 3-ந்தேதி ராஜேஸ்வரி வீட்டிலிருந்து வெளியேறினார். காதலனை முதன்முதலில் பார்க்கப்போவது மற்றும் திருமணம் ஆகிய இரட்டிப்பு சந்தோஷத்தில் காதலன் வருமாறு கூறிய கோவிலுக்கு தனியாக வந்தார்.
அங்கு பட்டு வேட்டி- சட்டை உடுத்திக்கொண்டு மாப்பிள்ளை தோரணையில் சக்திவேல் இருந்தார். அவருடன் அவரது நண்பர்கள் சிலரும் இருந்தனர். சக்திவேலை முதன்முதலில் பார்த்த ராஜேஸ்வரி சந்தோஷத்தில் துள்ளி மகிழ்ந்திருக்கவேண்டும். ஆனால் அவர் அப்படி நடந்துகொள்ளவில்லை. காரணம் சக்திவேல் இரு கால்களும் ஊனமுற்ற வாலிபர். அவரால் சரியாக நடக்க முடியவில்லை. நண்பர்கள் உதவியுடனேயே நடந்தார்.
இதனைப்பார்த்த ராஜேஸ்வரி மிகவும் அதிர்ந்துபோனானர். அவரால் எதுவும் பேசமுடியவில்லை. செல்போனில் கேட்ட குரலை வைத்து காதலன் அழகாக இருப்பான் என்ற கற்பனையில் வந்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிச்சம். இருந்தபோதிலும் அதனை அவர் காட்டிக்கொள்ளவில்லை. காதலனுடன் மணமேடையில் அமர்ந்தார். சிறிதுநேரத்தில் ராஜேஸ்வரியின் கழுத்தில் சக்திவேல் தாலிகட்டினார்.
இருந்தபோதிலும் சக்திவேலுடன் குடும்பம் நடத்த ராஜேஸ்வரிக்கு விருப்பம் இல்லை. என்ன செய்வது என்று யோசித்தபடி இருந்தார். காதலனை கரம்பிடித்த சந்தோஷம் இல்லாமல் ராஜேஸ்வரி சோகமாக இருப்பதை சக்திவேல் கவனித்தார். அதுபற்றி அவரிடம் கேட்டார்.
அதற்கு ராஜேஸ்வரியோ, எனது பெற்றோர் இல்லாமல் திருமணம் செய்துகொண்டது கவலையாக இருக்கிறது. அவர்களின் ஆசீர்வாதம் எனக்கு வேண்டும் . ஆகவே எனது வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் ஆசீர்வாதம் வாங்க ஆசைப்படுவதாக கூறியிருக்கிறார். அதற்கு சம்மதம் தெரிவித்து சக்திவேல், காதலியை ஆலங்குளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச்சென்றார்.
அங்கு சென்றதும், நான் வீட்டினுள் சென்று பெற்றோரிடம் அனுமதி பெற்று வருகிறேன். அதுவரை வெளியே நில்லுங்கள் என்று கூறிவிட்டு ராஜேஸ்வரி மட்டும் வீட்டிற்குள்சென்றார். அவர் சென்று வெகுநேரமாகியும், திரும்பிவரவில்லை. இதனைத்தொடர்ந்து சக்திவேல் தனது ஊருக்கு திரும்பினார். ராஜேஸ்வரியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவரது போன் கிடைக்கவில்லை. ஆகவே தனது மனைவியை காணவில்லை என்று ஆலங்குளம் மகளிர் போலீஸ் நிலையத்தில் சக்திவேல் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் ராஜேஸ்வரியை தேடி அவரது வீட்டிற்கு சென்றனர். ஆனால் அங்கு ராஜேஸ்வரி இல்லை. அவரைப்பற்றி பெற்றோரிடம் விசாரித்தனர். திருமணம் பிடிக்காமல் ராஜேஸ்வரி எங்கோ சென்றுவிட்டார். ஆனால் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை எனக்கூறிவிட்டனர்.
இதனைத்தொடர்ந்து ராஜேஸ்வரியை போலீசார் தேடிவருகின்றனர். திருமணமான சில மணி நேரத்தில் காதல் மனைவி தன்னை பிரிந்து சென்றுவிட்ட அதிர்ச்சியில் இருந்து சக்திவேல் மீளாமல் உள்ளார்.

:::::::::::::::மாலைமலர்::::::::::::::

ஐ.நா. பொதுச்சபையில் மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம்: இந்தியா எதிர்த்து வாக்கு அளித்தது

                                

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் மரண தண்டனை அமலில் உள்ளது. இந்த நிலையில், மரண தண்டனையை ஒழிக்கக் கோரும் வரைவு தீர்மானம், ஐ.நா. பொதுச் சபையின் மூன்றாவது கமிட்டி கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த கமிட்டிதான், சமூக மற்றும் மனிதாபிமான விவகாரங்களை கவனித்து வருகிறது. அந்த தீர்மானத்தில், மரண தண்டனை இன்னும் நீடித்து வருவது ஆழ்ந்த கவலைக்குரியது.

எனவே, அனைத்து நாடுகளும் மரண தண்டனையை ஒழிக்கும் நோக்கத்தில், மரண தண்டனையை கைவிட வேண்டும். மரண தண்டனையை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும். 18 வயதுக்கு குறைவானவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது. மரண தண்டனை விதிப்பதற்கான குற்றங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

யாரையும் கட்டுப்படுத்தாத இந்த வரைவு தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடைபெற்றது.

அதில், தீர்மானத்தை எதிர்த்து இந்தியா ஓட்டு போட்டது. அதுகுறித்து இந்தியா விளக்கம் அளிக்கையில், ஒவ்வொரு நாட்டுக்கும் தங்கள் சட்ட நடைமுறையை தீர்மானிக்க இறையாண்மை உரிமை உள்ளது. இந்த தீர்மானம், மரண தண்டனையை கைவிட வற்புறுத்துகிறது. தீர்மானத்தை அதன் தற்போதைய வடிவத்தில் ஏற்க முடியாது என்று கூறியது. 

இருப்பினும், 110 நாடுகளின் ஆதரவுடன் இந்த வரைவு தீர்மானம் நிறைவேறியது. 36 நாடுகள், ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்தியா உள்பட 39 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து ஓட்டு போட்டன. அவற்றில், அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், வங்காள தேசம், ஈரான், ஈராக், குவைத், லிபியா, கொரியா ஆகிய நாடுகள் குறிப்பிடத்தக்கவை.

:::::::::::மாலைமலர்::::::::::::::::::::

டி.ஆர்.காங்கோ நாட்டிலுள்ள கோமா நகரை கைப்பற்றியது எம்-23 போராளிக்குழு                               M23 rebels celebrate on the back of a truck as they drive through the city of Goma in the east of the Democratic Republic of the Congo. The rebels walked through the town following heavy gunfights with government soldiers, and proceeded to parade through the city.

                                Refugees flee the fighting between the rebel M23 forces and forces loyal to the government near Goma


டி.ஆர்.காங்கோ நாட்டின் வளம் மிகுந்த பகுதியான கிழக்குப்பகுதியில் உள்ள கோமா நகரை எம்-23 போராளிக்குழுப் படையினார் கைப்பற்றியுள்ளனர். ராணுவம் மற்றும் ஐ.நா. அமைதிப்படையின் தடையையும் மீறி அந்த நகரை போராளிகள் கைப்பற்றியுள்ளனர். பழங்குடியின டுட்சிஸ் இனம் ஆளும் பக்கத்து நாடான ருவாண்டா நாட்டின் ஆதரவு இந்த எம்-23 போராளிகளுக்கு உள்ளது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் டி.ஆர்.காங்கோவின் தலைவர் ஜோசப் கபிலாவும் ருவாண்ட தலைவர் பால் ககேமும் பேச்சுவார்த்தை நடத்த உகாண்டா நாட்டிற்கு சென்று உள்ளனர். இங்கு நடந்துவரும் சண்டைக்கு பயந்து மக்கள் வீட்டை காலி செய்து அகதிகளாக வெளியேறி வருகின்றனர். அரசு பேச்சுவார்த்தை நடத்தவரவில்லையென்றால் அடுத்து புகாவு நகரை கைப்பற்றுவோம் என்று எம்-23 போராளிக்குழுவின் தலைவர் சூல்தானி மகெங்கா கூறியுள்ளார். போராளி குழுக்களை மக்கள் எதிர்க்க கபிலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐ.நா. அமைதிப்படை, போராளிக்குழுக்களை தடுத்து நிறுத்தவில்லை என்று பிரான்சு அரசு குறை கூறியுள்ளது.


::::::::::::::::::மாலைமலர்:::::::::::::::

அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டார்: புனே ஜெயிலில் தண்டனை நிறைவேற்றம்


                      Ajmal Kasab Hanged At Pune S Yerawada Jail This Morning
மும்பை தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். அவருடைய கருணை மனுவை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்ததை அடுத்து தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். மும்பை சிறையில் அடைக்கப்பட்ட கசாப்புக்கு தூக்குத்தண்டனை விதித்து, மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.
இந்தநிலையில், கசாப் தரப்பில் கடந்த செப்டம்பர் மாதம் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை மகாராஷ்டிர அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்தது. மேலும், கசாப்பின் கருணை மனுவை தள்ளுபடி செய்யும்படி, ஜனாதிபதிக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் கசாப்பின் கருணை மனுவை ஜனாதிபதி பிராணாப் முகர்ஜியும் நிராகரித்தார். இதனையடுத்து , புனேயில் உள்ள எரவாடா சிறையில் இன்று காலை 7.30 மணிக்கு கசாப்பிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த தகவலை மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பட்டீல் உறுதி படுத்தியுள்ளார்.


English summary
Ajmal Kasab, the only terrorist caught alive during the 26/11 attacks on Mumbai in 2008, was hanged at the Yerawada Jail in Pune at 7.30 am today. His mercy plea had been rejected by President Pranab Mukherjee on November 5.

thanks::::::::::::Greynium Information Technologies Pvt. Ltd.:::::::::::::::

பாரீஸில் பின்லேடன் பெயர் பதித்த டி சர்ட் வாங்கிய கால்பந்தாட்ட ரசிகர் திடீர் கைது.


Bin Laden shirt sends footballer to cour

ஒசாமா பின்லேடன் பெயர் பதித்த டி ஷர்ட் வாங்கிய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தீவிரவாத ஆதரவாளர் என்று அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் சாம்ஸ்எலிசீஸ் ஷாப்பிங் பகுதியில், சில நாட்களுக்கு முன் 21 வயது வாலிபர் சென்றார். இவர் கால்பந்தாட்ட ரசிகர். தனக்கு பிடித்த பாரிஸ் செயின்ட்ஜெர்மெய்ன் டி ஷர்ட்டை ஒரு கடையில் வாங்கினார். அந்த டி ஷர்ட்டின் பின்புறம் அல் கய்தா தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லேடன் பெயர் பதிக்கப்பட்டிருந்தது.

டி ஷர்ட் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார் வாலிபர். அதற்குள் போலீசுக்கு போன் செய்த கடை ஊழியர், ஒசாமாவின் நினைவாக டி ஷர்ட் வாங்குவதாக வாலிபர் கூறினார் என்று கூறினார். உஷாரான போலீசார் வழியில் வாலிபரை கைது செய்தனர். தீவிரவாத ஆதரவாளர் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நேற்று நடந்தது.

அப்போது வாலிபரை போலீசார் ஆஜர்படுத்தினர். ஒசாமாவுக்கு ஆதரவு எதுவும் நான் தெரிவிக்கவில்லை. ஜோக்குக்காக அவர் பெயர் போட்ட டி ஷர்ட் வாங்கினேன். இதைவிட மோசமான டி ஷர்ட்களை நான் பார்த்திருக்கிறேன். ஹிட்லர் படம் போட்ட டிஷர்ட்கள் ஏராளமாக வந்துள்ளன என்றார். இதுதொடர்பான வழக்கில் டிசம்பர் 21ம் தேதி தீர்ப்பு அளிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட வாலிபரின் பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை.


:::::::::::::::.thedipaar.com::::::::::::::

இந்த 'மாயா' உலகம் டிசம்பர் 21ல் அழியப் போகுதாம், தப்பிக்க பிரான்ஸ் கிராமத்துக்கு ஓடும் மக்கள்!மாயா நாகரீகம்...

சுமார் 4,600 ஆண்டு பழமை வாய்ந்ததாகக் கருதப்படுவது மாயா நாகரீகம் (Mayan civilization). பிரேசில், எல் சால்வடோர், கெளதமாலா பகுதிகளில் இந்த நாகரீகம் துவங்கி, தென் அமெரிக்கா முழுவதும் பரவி, வியாபித்து இருந்தது.
8ம் நூற்றாண்டில் இந்த நாகரீகம் அழியத் துவங்கி, 9ம் நூற்றாண்டில் காணாமலேயே போய்விட்டது. உலக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு சுமார் 200 ஆண்டுகாலம் நீடித்த வறட்சியால் இந்த நாகரீகமே அழிந்து போனதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்
முக்கா முக்கா 3 முறை தோற்ற கடவுள்...

இந்த நாகரீகத்தின் நம்பிக்கைகளும் கேலண்டரும் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த நாகரீகத்தின் புராண நம்பிக்கைகளின்படி, கடவுள் இதுவரை 4 முறை பூமியைப் படைத்துள்ளார். அதில் மூன்று முறையும் பூமியை முழுமையாக உருவாக்க முடியாமல் கடவுளே தோற்றுவிட்டார். 4வதாக அவர் உருவாக்கிய 'சக்சஸ்புல்' பூமி தான் இப்போது நாம் வாழும் இந்த உலகம். அதில் தான் மனிதர்களையும் அறிமுகப்படுத்தினார் கடவுள்.
மாயா கேலண்டர்....

ஆனால், மாயா மொழியில் 13 பக்டூன்கள் (தோராயமாக சொன்னால் 5,125 வருடங்கள்) தான் இந்த உலகத்துக்கு லைப் பீரியட். அதன் பின்னர் இந்த உலகம் செத்துவிடும் (apocalypse). மாயா கேலண்டரின்படி, இந்த பூமி வரும் டிசம்பர் 21ம் தேதியோடு தனது 13 பக்டூன்களைக் கடந்து, காணாமல் போகப் போகிறது. மாயா கேலண்டர்படி இந்தத் தேதி 13.0.0.0.0.
இந்த மலை தான் நம்மை காப்பாற்றும்...

இதை வைத்து ஜோதிடர்கள் இந்த உலகத்துக்கு மூடுவிழா ஆருடங்களை அள்ளிவிட ஆரம்பித்துள்ளனர். இந்த மாயா ஜோதிடத்துடன் தங்களது கற்பனைகளையும் சேர்த்து சில மாடர்ன் ஜோதிடர்கள் ஒரு புதிய கதையை விட்டுள்ளனர். இவர்களின் கூற்றுப்படி பிரான்ஸ் நாட்டின் தென் மேற்கே Bugarach என்ற சிறிய கிராமத்தில் உள்ள ஒரு மலை வரும் டிசம்பர் 21ம் தேதி அப்படியே பிளக்கும்.
Close Encounters of the Third Kind படம் பார்த்தீங்களா?...

அதிலிருந்து ஒரு வேற்று கிரக விண்கலம் வெளியே வரும். அந்த விண்கலத்தில் ஏறிக் கொள்கிறவர்கள் மட்டுமே தப்புவார்கள். மற்றவர்கள் எல்லோருமே இந்த பூமியோடு சேர்ந்து காலியாகப் போகிறார்கள். இது தான் இவர்கள் சொல்லும் ஜோசியம். மலை மீது வேற்று கிரக விண்கலம் வந்திறங்கி, வேற்றுகிரகவாசிகளும் வந்திறங்குவதை ''Close Encounters of the Third Kind'' படத்தில் நமக்குக் காட்டியிருந்தார் ஸ்டீவன் ஸ்பீல்பர்க். அதே போல 2012 படத்தில் உலக அழிவிலிருந்து மக்களைக் காக்க மாபெரும் நீர்மூழ்கிகள் ஒரு மலையைக் குடைந்து தான் கட்டப்படும். ஹாலிவுட்டுக்கு 'மாயா' ரொம்ப உதவியா இருக்கு போலிருக்கு
பாதுகாப்புப் படையினர் முற்றுகையில் கிராமம்...

இந்த ஜோதிடத்தையும் நம்பும் ஆட்களும் இருப்பதால், Bugarach பகுதிக்கு வரும் ஆட்களின் எண்ணிக்கை சமீபகாலத்தில் பல மடங்கு அதிகரித்துள்ளது. டிசம்பர் 21 நெருங்க நெருங்க இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து, பெரும் பிரச்சனையாகிவிடலாம் என்று பிரான்ஸ் உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து இப்போதே அங்கு பாதுகாப்புப் படையினரை பிரான்ஸ் குவிக்க ஆரம்பித்துள்ளது. மேலும் Bugarach பகுதிக்குள் வெளியாட்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
'மாயா கதைக்கு' மசாலா....

இது போதாது என்று டிசம்பர் 21ம் தேதி சூரியனிலிருந்து பெரும் கதிர்வீச்சு கிளம்பி பூமியை சுட்டுப் பொசுக்கும், பூமியின் காந்தப் புலமே (magnetic field) வடக்கு-தெற்கு என்பதற்குப் பதிலாக கிழக்கு-மேற்கு என்று மாறப் போகிறது என்றெல்லாம் கூட Conspiracy theorists-கள் இந்த 'மாயா கதைக்கு' மசாலா சேர்த்து வருகின்றனர்.
இது கெளதமாலா ஸ்டைல்!

மாயா நாகரீத்தின் வழித் தோன்றல்கள் மிக அதிகமாக வசிக்கும் கெளதமாலா நாட்டில் அந் நாட்டு அரசே உலகத்தின் முடிவை எதிர்நோக்கி நிகழ்ச்சிகளை நடத்தப் போகிறதாம். ரொம்ப நல்லா இருக்கு!!.
இந்தப் படத்தைப் பாருங்கள்..

இந்த மாயா நாகரீகத்தை பின்புலமாக வைத்து ஹாலிவுட் இயக்குனர் மெல் கிப்சன் 'Apocalypto' என்ற ஒரு படத்தை இயக்கியிருந்தார். 

::::::thanks::::Greynium Information Technologies Pvt. Ltd.::::::::::::::::

இஸ்ரேல் தாக்குதலுக்கு கண்டனம்: டெல்லியில் ஆர்ப்பாட்டம்


காஸா நகரம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே இன்று (20.11.2012) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். 'காஸா மீதான தாக்குதலை நிறுத்து' என்று அவர்கள் கோஷமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அகில இந்திய மாணவர் யூனியன் தலைவர் சந்தீப் சிங் கூறியதாவது:
பல தலைமுறைகளாக பாலஸ்தீன மண்ணை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது. அங்கு இன அழிப்பு வேலை நடந்து வருகிறது. தற்போது காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல், நடைபெற்ற அமெரிக்க தேர்தல் வெற்றியையும், நடக்க இருக்கும் இஸ்ரேல் தேர்தலையும் கருதியே நடத்தப்படுகின்றது.
இந்த தாக்குதல்களை நாங்கள் கண்டிக்கிறோம். அதற்காக தான் இங்கே கூடியுள்ளோம். இந்த விஷயத்தில் இந்தியா மவுனமாக இருப்பதையும் நாங்கள் கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். 
இதே போல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களை கண்டித்து காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரிலும், வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.


http://www.nakkheeran.in

கவிதை: இனிப்புத் தோப்பே...னவுகளின் தாயகமே...
கவிதைகளின் புன்னகையே
வைரத் தேரே!..
கண்வளரும் பேரழகே...
கால்முளைத்த சித்திரமே
இனிப்புத் தோப்பே...
நினைவுகளை அசைக்கின்றாய்...
நெஞ்சுக்குள் நடக்கின்றாய்...
தேவ தேவி...
நின்றாடும் பூச்செடியே...
உன்பார்வை போதுமடி
அருகே வாடி.

பார்வைகளால் தீவைத்தாய்;
பரவசத்தில் விழவைத்தாய்;
தவிக்க வைத்தாய்!
ஊர்வலமாய் என்னுள்ளே
கனவுகளைத் தருவித்தாய்
சிலிர்க்க வைத்தாய்.
நேர்வந்த தேவதையே
நிகரில்லா என்நிகரே
உயிர்க்க வைத்தாய்.

யார்செய்த சிற்பம்நீ?
எவர்தந்த திருநாள்நீ?
மலைக்க வைத்தாய்.
உன்பிறப்பை உணர்ந்ததனால்
நீ பிறக்கும் முன்பாக
நான் பிறந்தேன்;
என் நோக்கம் அறிந்ததனால்
எனக்குப்பின் நீ பிறந்தாய்
இயற்கை வாழ்க!ஒன்றுக்குள் ஒன்றாக
உயிர்கலந்து வாழத்தான்
வந்தோம் இங்கே;
இன்னுமேன் தயங்குகிறாய்
இருக்கின்ற வாழ்க்கையினை
 வாழலாம் வா!

-ஆரூர் தமிழ்நாடன்-

திரும்பி வருவார் என இறந்த கணவனை 3 வருடங்களாக பாதுகாத்து வந்த ரஷ்யப் பெண்

திரும்பி வருவார் என இறந்த கணவனை 3 வருடங்களாக பாதுகாத்து வந்த ரஷ்யப் பெண்

ரஷ்யாவின் யாரோஸ்லோவுல் பகுதியில் உள்ள செமிப்ராடோவோ கிராமத்தில் பெந்தகோஷ் சபையில் பணியாற்றி இறந்துபோன தனது கணவனின் உடலை கடந்த 3 வருடங்களாக ஒரு பெண் பாதுகாத்து வந்திருக்கிறாள். கைகள், தலையில்லாமல் இருந்த அந்த உடலை பிளாஸ்டிக் பையில் வைத்து பாதுகாத்து வந்த அந்த மம்மி உடலை காவலர்கள் மீட்டுள்ளனர்.

பின்னர் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு அவள் மீது விசாரணை நடத்தப்பட்டது. அப்போது 5 குழந்தைகளுடன் தனித்து வாழ்ந்து வந்த அவள் கடந்த 2009-ம் ஆண்டு இறந்த தனது கணவனின் உடலை மறைத்து வைத்து பாதுகாத்த உண்மை தெரியவந்துள்ளது. வெளியே சொல்லாதவாறு பாதுகாத்து வந்த அவள், இறந்த தனது கணவரை குழந்தைகளை தினந்தோறும் பிராத்தனை செய்தும், உணவுபடைத்தும் வணங்கி வரசெய்திருக்கிறாள்.

ஆனால் அவள் அந்த அறைக்குள் நுழைந்து நேரில் பார்த்து தனது கணவனிடம் ஒருபோதும் பேசியது கிடையாதாம். யாருடனும் பழகாத அவர்கள் இறந்த உடலின் துர்நாற்றத்தை மறைக்க வாசனைப்பொருட்களை பயன்படுத்தி காற்றை சுத்தப்படுத்தி வந்திருக்கிறார்கள்.

தனது கணவர் ஒருநாள் அதிசயமாக திரும்ப வருவார் என்ற நம்பிக்கையில் அதை வைத்திருந்ததாக அவள் கூறியிருக்கிறாள்.


:::::::::: மாலைமலர்::::::::::::::::::

கூடன்குளம் அணு உலையை நெருங்கும் ஆபத்துகள்! அறிவியல் ஆராய்ச்சியில் திடுக்கிடும் தகவல்!

_ மனோசௌந்தர்_

    சாலையில் நடந்து செல்லும்போதுகூட விபத்து ஏற்பட்டு சாவு வரலாம். எதில்தான் ஆபத்து இல்லை? அணு உலையும் அப்படித்தான். அதை எதிர்த்து ஏன் உதயக்குமார் உள்ளிட்டவர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்? என்பது பல்வேறு பட்ட மக்களின் கேள்வி. இந்த கேள்விக்கான பதிலை... தொடர்ந்து அணு உலைக்கெதிராக போராடிக்கொண்டிருக்கும் மக்கள் மருத்துவர் புகழேந்தியிடம் கேட்டோம். “அணு உலை பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பது யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. பாதுகாப்பாகத்தான் உள்ளது என்று மத்திய மாநில அரசுகள்...வல்லுநர் குழுக்கள்...அணுசக்தி நிர்வாகத்தினர்...எல்லோருமே சொல்லித்தான் கூடன்குளம் அணு உலையை திறந்திருக்கிறார்கள். ஆனால், அணு உலை பாதுகாப்பாக உள்ளதா? என்பதுதான் மிகப்பெரியக் கேள்விக்குறி! காரணம்...சர்வதேச அணுசக்தி கழகம், அமெரிக்க அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், இந்தியாவிலுள்ள அணுசக்தி ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை அணு உலை பாதுகாப்பாக இயங்க பரிந்துரைக்கும் விதிமுறைகளை கடைபிடித்து கூடன்குளம் அணு உலையை கட்டவில்லை என்பதுதான் திடுக்கிடும் உண்மை.

 
 ஆக, சர்வதேச தரத்திலும்...இந்தியத் தரத்திலும் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காமல் கட்டப்பட்ட அணு உலையில் ஆபத்துவராது என்று எப்படி சொல்கிறீர்கள்? என்று கேட்டால்... மன்மோகன் சிங்கின் மத்திய அரசும் ...மத்திய இணை அமைச்சர் நாராயணசாமியும்... தமிழக அரசின் ஜெயலலிதாவும்... மத்திய மாநில அரசு அமைத்த வல்லுநர் குழுக்களும்  அறிவியல் ரீதியான பதிலை சொல்லாமல்... “ஆபத்து வராதுன்னா வராது”என்று வடிவேலு ஸ்டைலில் ஒரே பதிலை ஜோசியக்காரர்களைப் போலவும் கடவுள்களை போலவும் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

  சர்வதேச அணுசக்தி கழகமும்.... அமெரிக்காவிலுள்ள அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையமும் பாதுகாப்பான அணு உலையை அமைக்க விதிமுறைகளை மட்டுமே வகுக்கமுடியும். இன்னொரு நாட்டில் அமைக்கப்படும் அணு உலை குறித்து கேள்வி கேட்கமுடியாது. ஆனால், இந்தியாவிலுள்ள அணுசக்தி ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு வாரியம் தன்னுடைய விதிமுறைகளை மீறி இந்தியாவில் ஒரு அணு உலை கட்டப்பட்டால் அதுகுறித்து கேள்வி எழுப்பி நடவடிக்கை எடுக்கமுடியும். ஆனால், இதுவரை...விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கூடன்குளம் அணுஉலை குறித்து எந்த கேள்வியும் கேட்காமல் மக்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்து குறித்து கவலைப்படாமல் அமைதி காக்கிறது.

  அதனால்தான், போராட்டக்குழு... மற்றும் பொதுமக்கள் சார்பில் பிரபல விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் உள்ளடக்கிய 28 பேர் கொண்ட வல்லுநர் குழு...கூடன்குளம் அணு உலையை சுற்றி அறிவியல் பூர்வமான ஆராய்ச்சியில் இறங்கியது. சுனாமி ஏற்படும் வாய்ப்புள்ள பகுதியில் அணு உலை அமைக்கக்கூடாது என்பது விதிமுறை. ஆனால், கூடன்குளம் அணு உலையை பொறுத்தவரை அருகிலிருந்து சுனாமி உருவாகும் வாய்ப்பு இல்லை. செர்னோபில் விபத்து... ஃபுக்குஷிமா விபத்து போன்று இங்கு விபத்து நடக்கும் என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று மத்திய வல்லுநர் குழு அறிக்கை வெளியிட்டது. போராட்டக்குழு மற்றும் பொதுமக்கள் சார்பாக அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவோ... “பிரபல விஞ்ஞானிகளான வில்லியம் வெஸ்டால் மற்றும் ஆலன் லௌரீ இருவரும்  1982 ல்  செய்த ஆய்வில் சரிந்துசாயும் வண்டல் குவியல்கள் கூடங்குளத்திலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவிலேயே இருப்பதை தெரிவித்திருக்கிறார்களே. அவர்களின் ஆய்வுப்படி பார்த்தால் கூடன்குளம் அணு உலையை சுற்றி  ஒரு மிகப்பெரிய சுனாமியே உருவாகும் வாய்ப்புள்ளதே இதுபற்றி உங்கள் முதல் கட்ட அறிக்கையில் குறிப்பிடக்கூட இல்லையே என்று நாங்கள் கேட்டோம். வேறு வழியில்லாமல் மத்திய வல்லுநர்க்குழு தாங்கள் சொன்னதை திருத்தி...(எழுதியவர்... மத்திய அரசின் வல்லுநர் குழுவில் உள்ளே ஒரே ஜியாலஜிஸ்ட் ஹர்ஷ்.கே.குப்தா) “சுனாமியை உருவாக்கக்கூடிய சரிந்துசாயும் வண்டல் குவியல்கள்  இருப்பது உண்மைதான். ஆனால், முப்பது டிகிரிவரை மட்டுமே சாயும்  என்றும்...ஐந்து மீட்டர்ருக்குமேல் மட்டுமே சாயாது  என்றும்  அதனால் சுனாமி ஏற்படும் என்பது உண்மைதான் ஆனால், அணு உலையை அந்த சுனாமி  பாதிக்காது என்று வல்லுநர்க்குழு இரண்டாவது அறிக்கையில் குறிப்பிட்டது.

   சரிந்துசாயும் வண்டல் குவியல்கள் இருந்தால் அங்கு கெமிக்கல் அனலைசஸ் செய்யவேண்டும். ஆனால், அதை நீங்கள் செய்யவில்லை. அதில், களிமண் அதிகமாக இருந்தால் சீக்கிரம் சரிந்து சுனாமியை உருவாக்கும். 1981 ல் இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயுகுழுமம் (Oil and Nechural Gas Commission) என்ற பொதுத்துறை நிறுவனத்தின் விஞ்ஞானி சாஸ்திரி  செய்த ஆய்வில் கூடன்குளம் பகுதியில் உள்ள சரிந்துசாயும் வண்டல் குவியலில் களிமண் இருப்பதை உறுதி செய்திருக்கிறாரே... அப்படியிருக்க சுனாமி வராது என்று நீங்கள் எந்த அறிவியல் ஆராய்ச்சியின் மூலம்  குறிப்பிடுகிறீர்கள்? என்று கேட்டால் மத்திய வல்லுநர்க்குழுவிடமிருந்து அறிவியல் பூர்வமான பதில் இல்லை.

   அடுத்து...அணு உலை துவங்கப்போகும் இடத்துக்கு அருகிலுள்ள நிலப்பிளவுகள் குறித்து ஆய்வு செய்யவேண்டும். மத்திய அரசின் ஜியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியாவின் ஆய்விலேயே இந்திராணி நிலப்பிளவு இருப்பதை கண்டறிந்துள்ளனர். இந்த நிலப்பிளவில் 100 ஆண்டுகாலத்திற்குள் எத்தனை தடவை நிலநடுக்கம் வந்துள்ளது என்பதையும்... இந்த நிலநடுக்கம் சரிந்து சாயும் வண்டல் மண்குவியல்களில் பாதிப்பை ஏற்படுத்தி சுனாமியை உண்டாக்கிவிடுமே? கடந்த 2011 நவம்பர் 19ந்தேதி 5.2 ரிக்டர் அளவுகோலில் இந்திராணி நிலப்பிளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை ஜி.எஸ்.ஐ. பதிவு செயிதிருக்கிறது. இதனால் ஏற்படக்கூடிய தாக்கத்தை  குறித்தும் ஆய்வு செய்யவில்லையே ஏன்? என்று கேட்டால் அதற்கும் பதில் இல்லை.


உண்ணாவிரத போராட்டத்தில் உதயகுமார்


  சரிந்து சாயும் வண்டல் குவியல்கள் அருகில் எரிமலை வாய்(முகடுகள்) இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்யவேண்டும். மத்திய வல்லுநர்குழு தனது 38 பக்க முதல் அறிக்கையில் இதுபற்றி எதையுமே எழுதவில்லை. கொச்சியில் இயங்கும் இந்திய கடற்படையின் இயற்பியல்  மற்றும் கடலியல் ஆய்வுச்சாலையை சேர்ந்த ஜி.ஆர்.கே. மூர்த்தி, ஒய்.சத்யநாராயணா மற்றும் டி.பிரதீப் குமார் ஆகியோரே செய்த ஆய்வில் மன்னார் வளைகுடாவில் இரண்டு இடங்களில் எரிமலைகளின் முகவாய்கள் இருப்பதாக  (1994 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்) பதிவு செய்திருக்கிறார்கள். அதேபோல்... இந்தப்பகுதியில் கடல் எரிமலைகள் உள்ளன என்று 1975 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தின் முன்னணி நிலவியலாளர் உடிண்ட் சேவ் என்பவரும் 1981 ல்  இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயுகுழுமத்தின் சாஸ்திரி ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளாரே? என்றெல்லாம் கேள்வி எழுப்பியபிறகு மத்திய வல்லுநர்க்குழு இரண்டாவது அறிக்கையில் எரிமலை இருப்பது உண்மைதான். ஆனால், வெடிக்காது என்று சொல்கிறார்கள்.

 தானே புயல்போன்று கூடன்குளம் அணு உலைக்கு அருகில் வந்தால் சரிந்துசாயும் வண்டல் குவியல்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வு செய்தீர்களா? என்று கேட்டாலும் பதில் இல்லை.

  அணு உலையை குளிர்விக்கவேண்டுமென்றால் கடல் நீரை எடுத்து உப்பு நீக்கி பயன்படுத்துவார்கள். கூடங்குளம் அணு உலையிலிருந்து 300 மீட்டர் தொலைவில் தண்ணீரை உறிஞ்சும் குழாய் இருக்கிறது. அந்த இடத்தில் திடீரென்று கடல் உள்வாங்கிக்கொண்டால் அணு உலையை குளிர்விக்க தண்ணீர் கிடைக்காமல் அணு உலையே வெடித்துவிடும் அபாயம் இருக்கிறதே. இப்பகுதியில்  வருடத்திற்கு மூன்று முறை அப்படி கடல் உள்வாங்கியிருக்கிறதே அதுகுறித்து ஆய்வு செய்தீர்களா? அணு உலையை தொடர்ந்து குளிர்விக்க 6 கோடி லிட்டர் தண்ணீர் சேமித்துவைத்திருக்கவேண்டும். ஆனால், 1.2 கோடி லிட்டர்தான் சேமிப்பில் வைத்திருக்கிறீர்கள் இதனால் ஏற்படப்போகும் ஆபத்துக்கு என்ன செய்வீர்கள்?

  கூடங்குளம் அணு உலையிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் மூன்று முறை கார்ஸ்ட் குழிவு எனப்படும் விபத்து ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட விபத்து திரும்பவந்தால் அணு உலை அப்படியே பூமிக்குள் அமிழ்ந்துவிடும் அபாயம் இருக்கிறதே என்று நாங்கள் சொன்னபிறகு  கார்ஸ்ட் பாதிப்பு இருக்கிறது உண்மைதான். ஆனால், அப்படிப்பட்ட ஆபத்துவராது என்கிறார்கள் மத்தியக்குழு வல்லுநர் குழுவினர்.

   கூடன்குளம் பகுதியில் கடந்த பதினைந்து வருடங்களாக குறைந்த அளவு எரிமலை வெடிப்புகள் நான்குமுறை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல பூமியின் உள்ளே எரிமலை குழம்பு வெடித்துப் பிதுங்கி மேல் எழுந்து வந்துள்ளது. இதற்கெல்லாம் காரணம்... அணு உலை அமைந்துள்ள பகுதியில் பூமி மேலோட்டின் தடிமன் 40,000 மீட்டர் இருக்கவேண்டும். ஆனால், கூடன்குளம் அமைந்துள்ள பகுதியின் பூமி மேலோடு...150 மீட்டர் தடிமன்தான் உள்ளது. இப்படிப்பட்ட பகுதிகளில் அணு உலை அமைத்தால் மிகப்பெரிய ஆபத்து. இதுறித்தும் ஆய்வு செய்யவில்லை.

   கூடன்குளம் அமைந்துள்ள பகுதி...கடினப்பாறை மட்டுமே உள்ளது என்று தவறான ஆய்வை மனதில் கொண்டு அணு உலையை கட்டிவிட்டார்கள். ஆனால், தோண்டிப்பார்த்தபோது நடுநடுவே லேசான பாறைகள் உள்ளதை கண்டறிந்த சென்னை ஐ.ஐ.டியின் விஞ்ஞானி பூமிநாதன் 2004 கரண்ட் சயின்ஸ் பத்திரிகையில் முதலிலேயே கண்டுபிடித்திருக்கவேண்டுமே இப்படியிருந்தால் அணு உலைக்கு ஆபத்தாயிற்றே என்று வெளிப்படையாகவே திட்டியிருக்கிறார். இதில் பிரச்சனை என்னெவெனில் மிருதுவான பாறைகள் கடினமான பாறைகளுக்குள் இருக்குமானால் நில அதிர்வின்போது பாதிப்பு அதிகமாக இருக்கும்.

   
முதலில் கூடங்குளம் அணு உலை 2006 வரையிலான திட்டத்தில் பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் எடுப்பதாகத்தான் திட்டமிட்டிருந்தார்கள். அப்போதுதான்... எங்கள் குழுவில் உள்ள டாக்டர் ரமேஷ் அங்கு சென்று ஆய்வு செய்தார். பேச்சிப்பாறையில் எவ்வளவு கொள்ள்ளவு தண்ணீர் உள்ளது? மணல் படிதலின் காரணமாக எவ்வளவு தண்ணீர் குறைந்துள்ளது? சராசரி மழை எவ்வளவு? என்றெல்லாம் கணக்கெடுத்துவிட்டு... “ஒரு அணு உலை 40 வருடங்கள் இயங்கும். அதனால், அதுவரை பேச்சுப்பாறை அணையின் தண்ணீர் அணு உலைக்கு பத்தாது” என்று ஆய்வறிக்கையில் சொன்னபிறகுதான்... பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் எடுக்கும் திட்டத்தை மாற்றி... கடல்நீரை உப்புநீக்கி குளிர்விக்கப் பயன்படுத்திக்கொள்ளும் திட்டத்துக்கு மாறினார்கள் அணு உலை நிரிவாகத்தினர். அதே டாக்டர் ரமேஷ் உள்ளடக்கிய வல்லுநர்க்குழுவினர்தான் மேற்கண்ட கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள். ஆனால், கஷ்டப்பட்டு ஆய்வு செய்து நாங்கள் சொன்னதும் வேறு வழியில்லாமம் ஒத்துக்கொள்ளும் மத்திய அரசின் வல்லுநர் குழு...ஆபத்து இருக்கு... ஆனா ஆபத்துவராது என்று ஜோசியர்களை போலவும் கடவுள்களைப்போலவும் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?  சர்வதேச அணுசக்தி கழகம்,  மத்திய அரசின் அணுசக்தி ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு வாரியம் (ஏ.இ.ஆர்.பி) சொன்ன வழிமுறைகளின் படி... அணு உலையை அமைத்திருக்கிறோம் என்று அறிவியல்பூர்வமாக நிரூபித்துவிட்டு அணு உலையை தாராளமாக திறந்துகொள்ளுங்கள். கூடங்குளம் அணுஉலையும் மத்திய வல்லுநர் குழுவின் அறிவியலற்ற அணுகுமுறையும் என்கிற புத்தகத்தில் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கான முழு ஆதாரங்கள் உள்ளன. இந்த வகையில் பார்க்கும்போது உதயக்குமார் தலைமையிலான போராட்டம் நியாய”மானதே” என்கிறார் போராட்டக்குழு நிர்ணயித்த வல்லுநர்க்குழுவில் ஒருவரான மக்கள் மருத்துவர் புகழேந்தி.


:::::thanks:::: Nakkheeran::::::::::::::::::::::::::::

கோழிக்கழிவுகளில் இருந்து எரிவாயு: தமிழ்நாடு திருப்பூர் மாணவர்கள் சாதனை


கோழிக்கழிவுகளில் இருந்து எரிவாயு: திருப்பூர் மாணவர்கள் சாதனை
தமிழ்நாடு திருப்பூர் பிரண்ட்லைன் பள்ளியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் புகழரசி, ஜெகதீஸ்வரி, பரத்குமார், சதீஷ், சந்துரு ஆகியோர் கோழிக்கழிவில் இருந்து எரிவாயு தயாரிக்கும் முறையை கண்டறிந்துள்ளனர். இவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்டவர் ஆசிரியை சுமதி செங்குட்டுவன். 

தங்கள் கண்டுபிடிப்பு குறித்து மாணவ-மாணவிகள் கூறியதாவது:- 

தமிழ்நாடு திருப்பூர் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதியில் சுமார் 5 ஆயிரம் கோழிப்பண்ணைகள் உள்ளன. திருப்பூரில் 300 கோழிக்கறிக்கடைகள் உள்ளன. இந்த கழிவுகளை எவ்வாறு அகற்றுகிறார்கள் என்று ஆய்வு செய்தோம். 

கழிவுகள் சரியாக அகற்றப்படாததால் மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் தீமைகளை அறிந்தோம். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றோம். அதற்கு ஏற்ற வகையில் கழிவுகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று 3 மாத காலம் ஆய்வு மேற்கொண்டோம். 

இதன் மூலம் எரிவாயு உற்பத்தி செய்ய முடியும் என்று அறிந்தோம். ஒரு கோழியில் இருந்து 400 கிராம் கழிவு வருகிறது. இதில் 300 கிராம் கால், தலை குடல் ஆகும். 100 கிராம் இதனுடைய இறக்கைகள். பண்ணைக்கழிவாக 20 கிராம் ஒரு கோழியிலிருந்து கிடைக்கிறது. பண்ணைக் கழிவுகளை நேரடியாக மண்ணில் உரமாக பயன்படுத்த முடியாது. ஏனென்றால் அதில் மீதேன் வாயு அதிகமாக உள்ளது. எனவே நாங்கள் தார்ப்பாய் பையை உபயோகித்து எரிவாயுவை உற்பத்தி செய்தோம். 

எங்கள் ஆய்விற்காக மாட்டுச்சாணம் (10 கிலோ), சர்க்கரை (1 கிலோ), கழிவுகள் (பண்ணைக் கழிவுகள், கோழிக்கழிவுகள் (40 கிலோ), தண்ணீர் 40 லிட்டர் ஆகியவற்றை எடுத்துக் கொண்டோம். முதலில் நாங்கள் 5-7 கிலோ சாணமும், அதனுடன் 5-7 லிட்டர் தண்ணீர் மற்றும் 1 கிலோ சர்க்கரையையும் சேர்த்து தார்ப்பாய் பையினுள் ஊற்றினோம். 

பிறகு அதனை வெயிலில் வைத்தோம். பின்னர் 2 மற்றும் 3-வது நாளில் கோழிக்கழிவுகளையும், பண்ணைக் கழிவுகளையும் ஊற்றினோம். 6-வது நாளில் அந்த பை பலூன் போன்று உப்பியிருந்தது. அதை வைத்து வாயு உற்பத்தியாகிவிட்டது என்பதை கண்டறிந்தோம். 

இந்த பையுடன் அடுப்பைப் பொருத்தி ஒரு சிறு எரியும் காகிதத்தை வைத்து எரியவைத்தோம். அது 20 முதல் 25 நிமிடம் வரை தண்ணீர் காய்ச்ச உதவியது. திருப்பூரில் நாள் ஒன்றிற்கு கோழிக்கழிவுகள் 6 ஆயிரம் கிலோ, பண்ணைக் கழிவுகள் 60 லட்சம் கிலோ கிடைக்கிறது. 

இதை பயன்படுத்தி 4 மணி நேரத்திற்கு 50 ஆயிரம் வீடுகளுக்கு எரிவாயு பயன்படுத்த முடியும் என்று கண்டுபிடித்துள்ளோம். திருப்பூரில் உள்ள மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் இதனை உபயோகிக்க முடியும்.

இந்த ஆய்வறிக்கையை நாங்கள் சென்னையிலுள்ள சைன்ஸ் சிட்டிக்கு சமர்ப்பிக்க போகிறோம். மேலும் ஐரோப்பாவில் நடைபெறும் இன்டர்நேஷனல் லெவலில் ஆய்வறிக்கை அறிவியல் போட்டியிலும் சமர்ப்பிக்கப் போகிறோம். 

அரசாங்கத்தினர் எங்கள் முயற்சியை மேற்கொண்டால் இப்போது இருக்கும் எரிவாயு பற்றாக்குறை பிரச்சினைக்கு ஒரு தீர்வாக அமையும்.

:::::::::::::::மாலைமலர்::::::::::::::

இங்கிலாந்து நாட்டின் வீரதீர விருது: மாணவி மலாலாவுக்கு வழங்கப்பட்டதுஇங்கிலாந்து நாட்டின் வீரதீர விருது: மாணவி மலாலாவுக்கு வழங்கப்பட்டது

பாகிஸ்தான் பெண்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டதை எதிர்த்து போராடிய மாணவி மலாலா தாலிபன்களால் சுடப்பட்டார். தலை மற்றும் முகத்தில் குண்டு பாய்ந்ததால் படுகாயமடைந்த 14 வயது மாணவியான மலாலா உயிருக்கு ஆபத்தான நிலையில் பாகிஸ்தான் ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

உடல் நிலை மோசமடைந்ததை அறிந்த இங்கிலாந்து அரசு, கடந்த மாதம் 15ம் தேதி அவரை லண்டனுக்கு கொண்டுவந்து, சிகிச்சை அளித்து வருகின்றது. தற்போது உடல்நிலை தேறிவரும் மலாலாவுக்கு இங்கிலாந்து அரசு வீரதீர செயலுக்கான உயர் விருதை வழங்கியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள உலக அமைதி மற்றும் அபிவிருத்தி அமைப்பு வழங்கிய இந்த விருது, பிரிட்டிஷ் பாராளுமன்ற பிரபுக்கள் சபை வளாகத்தில், நேற்றிரவு பாகிஸ்தான் துணை உயர் தூதரிடம் வழங்கப்பட்டது.

இந்த விருதைப் பெற்றுக் கொண்ட பாகிஸ்தான் துணை உயர் தூதர் சுல்பிகர் கர்தேதி கூறியதாவது:

'இந்த விருதை மலாலாவோ அல்லது அவரது குடும்பத்தினரோ பெற்றுக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் இங்கு வர முடியாததால் என்னிடம் வழங்கப்பட்டுள்ளது. இதை மலாலாவிடம் ஒப்படைப்பேன்' இவ்வாறு அவர் கூறினார்.

லண்டன் பிஷப் ரிச்சர் சார்ட்டர் இங்கிலாந்தின் புகழ்பெற்ற மனோதத்துவ நிபுணர் வாஜித் சம்சுல்ஹசன், துருக்கி கல்வியாளர் நெவ்சத் யால் கிண்டாஸ், ஐரோப்பிய செஸ் வீரரான 8 வயது சிறுவன் ஜோஸ் அலிட்மென் ஆகியோருக்கும் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்பட்டன.

::::::::::::::::::::::மாலைமலர்::::::::::::::::::::::::
.

தேர்தல் வெற்றிக்காக 'பாலஸ்தீனர்களை' வழக்கம்போல் பலியெடுக்கும் இஸ்ரேல்


 Strikes Signal Netanyahu Poll Ploy

 தேர்தல் வந்துவிட்டால் 'அதிகார' போதையை தக்க வைத்துக் கொள்ள அல்லது எட்டிப் பிடிக்க எந்த எல்லைக்கும் அரசியல்வாதிகள் செல்வார்கள் என்பதற்கு மிகச் சிறந்த 'உதாரண'மாக உருவெடுத்திருக்கிறது இஸ்ரேல்.. அந்த நாட்டில் தேர்தல் நடைபெறப் போகிறது என்றாலே பாலஸ்தீனர்களைப் பலியெடுத்து அந்த அப்பாவிகளின் ரத்தத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றுவது வழக்கமாகிவிட்டது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் இப்படி கொலைவெறியோடு தாக்குதல் நடத்தி வருவதற்கு சொல்லப்படுகிற காரணம் என்ன? "நவம்பர் 13-ந் தேதிக்கு முன்பு வரை சுமார் 850 ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் மற்றும் இதர இயக்கத்தினர் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 10 பேர் உயிரிழந்துவிட்டனர். இதனால் பதில் தாக்குதல் நடத்துகிறோம்" என்கிறது இஸ்ரேல்.
இஸ்ரேல்- பாலஸ்தீனம் பின்னணி (2008 தேர்தல் வரை)
இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டதே பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியை வெட்டித்தான்! அந்த நாடு உருவாக்கப்பட்ட நாள் முதலே இரு நாடுகளிடையேயான யுத்தம் அரை நூற்றாண்டுகளாக நீடித்தே வருகிறது. 1967-ல் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்தேவிட்டது. அப்போது எகிப்து, அரபுநாடுகள் ஆகியவை பாலஸ்தீனத்துடன் இணைந்து யுத்தத்தில் ஈடுபட்டன. அதன் பின்னர் காசா பகுதியிலிருந்து கடந்த 2005-ம் ஆண்டுதான் வெளியேறியது. அதன் பின்னர் 2007-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காசா பகுதியில் ஹமாஸ் இயக்கம் வெற்றி பெற விவகாரம் விஸ்வரூபமெடுத்தது. காசா எல்லைப் பகுதியை மூடியது இஸ்ரேல். உணவு, மருந்துகள் உள்ளிட்டவற்றை ஏற்றிச் செல்லக் கூடிய ஒரு சில வாகனங்களை மட்டுமே இஸ்ரேல் அனுமதித்தது.
இதனால் ஹமாஸ் இயக்கம் ஒரு யுக்தியை கடைபிடித்தது! காசாவிலிருந்து எகிப்து எல்லைக்கு 11 கிலோ மீட்டர் தொலைவுக்கு பல சுரங்கப்பாதைகளை அமைத்து அதன் வழியே அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தனர். அதாவது சுரங்கவழி போக்குவரத்தை முதன்மையாக நம்பியிருந்தது காசா பகுதி.
இஸ்ரேலின் நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை உள்ளிட்ட பலரும் வன்மையாக கண்டித்ததுடன் சர்வதேச விதிகளுக்கு எதிரானது என்றும் குற்றம்சாட்டினர். காசா பகுதியில் 34% பாலஸ்தீனர்கள் வேலைவாய்ப்பற்றவர்கள். 80% பேர் சர்வதேச உதவியினால் மட்டுமே வாழ்கின்றவர்கள். இப்படித்தான் காசாவின் நிலைமை இருந்து வருகிறது. இந்த நிலையில் 2009-ம் ஆண்டு தேர்தலை இஸ்ரேல் எதிர்நோக்குகிறது.
2009 தேர்தலும் தாக்குதலும்
2009-ம் ஆண்டு பிப்ரவரி 10-ந் தேத்தி அந்த நாடு தேர்தலை சந்திக்க வேண்டும். அதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பு காசா மீது மிகப் பெரும் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது. தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு வரை அதாவது 2009 ஜனவரி வரை இந்த யுத்தம் நீடித்தது.
இந்த தாக்குதலில் 345 குழந்தைகள், 764 பொதுமக்கள் உட்பட 1397 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 5 பேர் மட்டுமே உயிரிழந்திருக்கின்றனர். இக் கொடுந்தாக்குதலில் ஹமாஸ் இயக்கத்தின் காவல்துறை பொறுப்பாளர் கொல்லப்பட்டார்.
இந்த ரத்தம் தோய்ந்த கைகளுடன் தேர்தலை இஸ்ரேல் சந்தித்தது. அப்போது ஆளும் கட்சியாக இருந்த காதிமா, 22.47% வாக்குகளையும் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி 21.61% வாக்குகளையும் பெற்றது. ஒரு சீட் வித்தியாசத்தில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இருந்தது. இத்தேர்தலில் யூதப் பெருமிதம் பேசும் வலதுசாரி சிறு கட்சிகள் நிறையவே வெற்றி பெற்றிருந்தால் நெதன்யாகு தலைமையில் கூட்டரசு உருவானது. இஸ்ரேலைப் பொறுத்தவரையில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக யார் அதிகமான நடவடிக்கைகளை (தாக்குதல்கள் தொடுக்கிறார்களோ) எடுக்கிறார்களோ அவர்களுக்குத்தான் வாக்குகள் அதிகம் என்பதால் அத்தனை கட்சிகளுமே பாலஸ்தீனத்தை இல்லாதொழிப்போம் என்றே குரல் கொடுத்தன. இதனால்தான் பாலஸ்தீனத்தின் மீது கொடுந்தாக்குதல் நடத்திய பெருமிதத்தோடு இருந்த காதிமா கட்சியை வெற்றி பெற வைத்தனர்.
ஆனால் காதிமா கட்சியைவிட இன்னும் கொடுந்தாக்குதல் நடத்துவோம் என்று உறுதி கொடுத்து சிறு கட்சிகளுடன் இணைந்து கூட்டாட்சியை உருவாக்கினார் நெதன்யாகு. இப்பொழுது மீண்டும் தேர்தல் 2013-ஜனவரியில் வருகிறது. அப்புறம் என்ன?
2013 தேர்தலுக்காக கொலவெறி
2013 தேர்தலில் எப்படியும் மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்கிற வெறியோடு மிகச் சரியாக 2008-09ல் எப்படிப்பட்ட கொடுந்தாக்குதலை பாலஸ்தீனத்து மீது இஸ்ரேல்கட்டவிழ்த்துவிட்டதோ அதே பாணி இப்பொழுதும் களமிறக்கப்பட்டிருக்கிறது.
2008 தாக்குதலில் ஹமாஸ் இயக்க காவல்துறை பொறுப்பாளர் கொல்லப்பட்டார். இப்பொழுது ஹமாஸ் இயக்க முக்கிய தளபதி கொல்லப்பட்டார். 2008-09ல் காசா பகுதி எத்தகைய பேரவலத்தை எதிர்கொண்டதோ அதே பேரவலம் இப்பொழுதும் நிகழ்ந்ந்து கொண்டிருக்கிறது.
அனேகமாக நீடிக்கப் போகும் தற்போதைய தாக்குதலில் இப்பொழுதுதான் பலி எண்ணிக்கை 100ஐத் தாண்டியிருக்கிறது. இன்னும் ஆயிரமாயிரம் பாலஸ்தீனியர்களை கொன்றுவிட்டால் வரப் போகும் தேர்தலில் மீண்டும் தாமே அசைக்க முடியாத பிரதமர் என்பதுதான் நெதன்யாகுவின் 'நெஞ்சக' நினைப்பாக இருக்கலாம்! என்பதுதான் பொது கருத்தாக இருக்கிறது..
English summary
With over 100 people killed in Israeli air strikes on Gaza in six days of assault, and diplomats around the world scrambling to prevent a ground attack by Israelis, the question puzzling most people is - why this attack? And, why now? The reason given by the Israel is that there was an increase in rocket attacks from the Gaza strip into Israeli territory, creating terror and insecurity amongst civilians. Although the numbers are not independently verifiable, Israeli official sources put the number of rockets launched by Hamas or other fighters at over 850 before November 13. So, the Israelis argue, they had to defend themselves.


:::::thanks :::::Greynium Information Technologies Pvt. Ltd.:::::::::::::::::