Monday, May 20, 2013

சீனர்களின் நீண்ட ஆயுளின் இரகசியம்.


சீனர்களின் நீண்ட ஆயுளின் இரகசியம்

அறிகுறி தோன்ற முன்னரே நோயை இல்லாமல் செய்யுங்கள்!

சீனா என்றதும் நம் நினைவில்வருவது ‘சீனப் பெருஞ்சுவர்’ உலக அதிசயங்களில் மிகவும் உச்சமானது. அதனால்தான் உலகின் பழைமைத்துவமும், சுறுசுறுப்பும் மிக்கவர்கள் சீனர்களாவர்.
பட்டாடைக்கும், காகிதத் துறைக்கும், அருந்தும் தேயிலையின் அறிமுகத்திற்கும், இன்னும் பலவகையான ஆரம்பத்திற்கும் புகழ்பெற்ற நாடு சீனாவாகும். உலகின் மக்கள் தொகையின் உச்ச நிலைக்கும், பண்டைய பட்டுப் பாதைக்கும் புகழ்பெற்றது.
இவ்வாறு நீண்டகால வரலாற்றைக் கொண்ட இந்த நாட்டில் மக்கள் நீண்ட ஆயுளுடன் வாழுகின்ற நிலையும் காணப்படுகிறது.
இதற்கெல்லாம் என்னதான் காரணம் இவர்களது விடாமுயற்சியான ஆராய்வூக்கம், இயற்கை மருத்துவத் துறை என்பனவுமே காரணம் என்கின்றனர்.
சரி, விடயத்திற்கு வருவோம், உலகில் 2000 வருடங்களுக்கு முன்னரே மூலிகைகள் தொடர்பான விபரங்களை தொகுத்து இதனை ‘மஞ்சள் பேரரசுடைய பண்டைய மருத்துவம்’ என்கிற பெயரைக் கூறும் ‘ஹுவாங் டி நெய் ஷிங்கில்’ காணப்படுகிறது- அதாவது நோயின் அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்னரே நோயை இல்லாமல் செய்துவிடுங்கள் இந்த அடிப்படையில்தான் சீனர்கள் மருத்துவத் துறையை கண்டுபிடித்து உலகிற்கே இன்றுவரை பறைசாற்றி வருகின்றனர்.
இன்றைய ஆங்கில மருத்துவத் துறையில் காணப்படுவது போல், அனைத்து விதமான நோய்களுக்கும் நிவாரணங்களை சீனர்களின் ‘ஆயுள்வேத’ அதாவது ‘மூலிகைகளுடனான வைத்தியத்தின்’ மூலமாக சுகமாக்கி விடுகிற ஓர் நிலைமை அன்று முதல் இன்றுவரையும் காணப்படுகிறது.
ஹுவாங் டி நெய் வுங்கின் மொழிபெயர்ப்பாளரான ‘ஸ¤ மிங்¤ கூறும்போது ‘சீனாவின் திறந்த பொருளாதாரக் கொள்கை மிக விரைவாக விரிவடைந்ததன் காரணமாக மேற்கு மற்றும் கிழக்கு என்பவற்றுக்கிடையிலான கலாசார பரிமாற்றம் இடம்பெற்றது. இதனால் சீனர்களின் பாரம்பரிய மருத்துவமானது அதிகளவான கவனத்திற்கு உட்பட்டதன் விளைவு உயர்தர மேலைத்தேய மருத்துவங்கள் ஒருவகையான பசுமையான புரட்சியை எதிர்கொள்கின்றன.
இவர்களின் பிரதான நோக்கமாக கெடுதல் இல்லாத இயற்கையான மருந்துகள் மற்றும் மருத்துவ தொழில் நுட்பங்களை பயன்படுத்த முனைகின்றனர்.’ எனவேதான் மேலைத்தேய நாட்டு மருத்துவ அறிவுகளுடன் பாரம்பரிய கிழக்காசிய மருத்துவ விடயங்கள் சேருவதானது தவிர்க்க முடியாததாகி விடுகிறது-
சீனர்களின் ஊட்டம் மற்றும் மருத்துவம் இரண்டு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அமைகிறது.
முதலாவதாக : நமது உடம்பானது பல முறைமைகளை கொண்டதுடன் சிக்கலான தொடர்பையும் கொண்டது. இதனால் ஏதாவது ஒரு முறையில் சமநிலை குழம்புமாயின் அது மற்ற முறைமைகளையும் பாதிக்கும்.
இரண்டாவதாக: நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு பிரதான விடயமாக அமைவது அம்முறைமைகளின் சமநிலையாகும். எனவேதான் இதன் பிரதிபலனாக, பொதுவாகவே எமது உடம்பானது பெளதீக ரீதியாக சமநிலையற்றதனால் நமது உடம்பை மருத்துவர்கள் சோதிக்கின்ற போது கூட எங்களது பிரச்சினையின் அடிப்படையான மூலவேரையே அறிய முடியாமல் உள்ளது.
எமது உடலில் ‘திண்ம உறுப்புக்கள்  (Solid organs)  மற்றும் பள்ளமான உறுப்புக்கள் (Hollow organs)  ஆகிய இரண்டு முறைமையான சேர்க்கையினால் இயங்குகின்றன. ஈரல், இதயம், மண்ணீரல், நுரையீரல் மற்றும் சிறுநீரகங்கள் என்பன திண்ம உறுப்புக்களாக கொள்ளப்படுகின்றன.
பித்தப்பை, சிறுகுடல், வயிறு, பெருங்குடல், சமநிலை மற்றும் ஸன்ஜியோ (Sunjiao)  என்பன பள்ளமான உறுப்புக்களாக கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு உறுப்புகளும் சோடிகளாகவே செயற்படுகின்றன.
உடம்பின் இப்பிரதான உறுப்புக்களுடன் இரத்தம், உடம்பின் நீர் மற்றும் சத்துக்கள் என்பனவற்றின் சுழற்சியை உறுதிப்படுத்துவதன் அடிப்படையிலேயேதான் சீனர்களுடைய பாரம்பரிய மருத்துவத்துறை இன்றும் காணப்படுகிறது மேலே கூறப்பட்டவைகளில் ஏதாவது பாதிப்புக்கள் ஏற்பட்டால் இந்த மூலிகை மருத்துவத்தின் மூலமாக அவ்வடைப்புக்களை இல்லாமலாக்கி உடம்பின் முறைமைகளை சமநிலைப்படுத்துகின்றது.
வேகமாக சென்று கொண்டிருக்கும் இன்றைய நவீன வாழ்க்கையினால் உடல் மற்றும் உளம் என்பன பல வழிகளிலும் பாதிப்படைகின்றது. பல மனிதர்கள் அவர்களின் வேலையின்போது எதிர்கொள்ளும் அழுத்தம் மற்றும் அதனை எவ்வாறு எதிர்வுகொள்வது என்பதனையே அறியாதவர்களாகவே உள்ளனர்.
போதுமானளவு சத்துள்ள உணவு இன்மை, குறைவான உடற்பயிற்சிகள் என்பன நவீன மற்றும் வேகமான வாழ்க்கை முறையின் காரணமாக உயர்ந்த விகிதத்திலான மக்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர். இதன் பிரதிபலன் எங்களுடைய உடம்பு சமநிலையை இழந்து வைத்தியர்களால் பரிசோதிக்கப்படுகின்ற போது பிரச்சினையின் மூலவேரை கண்டறிய முடியாமல் திணறுகின்றனர். எனவேதான் இதற்கு வழிவகுக்கும் வகையில் அமைந்ததுதான் சீனர்களின் மூலிகை அடிப்படையில் அமைந்த மூலிகைச் சத்துக்கள் அடங்கியுள்ள பொருட்களாகும்.
ஆரோக்கியத்தில் சீனர்களினது அணுகுமுறை :-
கிழக்கில் சீனாவானது 5000 வருடங்களுக்கு மேலாக ‘ஹொலிஸ்டிக்’ அணுகுமுறையை (Holistic approach)  கடைப்பிடித்து வருகின்றது. மற்றவகையில் கூறினால் சீனர்களோ பிரச்சினையின் மூலவேரை கண்டறிந்து நோய் மற்றும் ஆரோக்கியம் குறைவான நிலைமைகள் ஏற்படாதவாறு ஒரு ஆரோக்கிய நிலைமையை உருவாக்க முயற்சி செய்கின்றனர்.
‘நோய் ஏற்படுவதற்கு முன் அதை தடுப்பது சிறந்தது’ என்கிற நன்நெறியை சீனர்கள் பின்பற்றுகின்றனர். ஆண்டாண்டு காலமாக சீனர்கள் ஆரோக்கியம், நீண்டநாள் ஆயுளுக்கான இரகசியத்தை நன்கு அறிந்து வைத்துள்ளனர்.
இதனை நான்கு படிமுறைகளில் பார்க்கலாம். உடம்பை தூய்மையாக்குதல், நிரப்புதல், பலப்படுத்தல், சமநிலைப்படுத்தல் என்பனவாகும்.
தற்போது இலங்கையிலும் சீனர்களின் மூலிகைகளுடனான, பக்கவிளைவுகள் அற்ற மாத்திரைகள் பல விற்பனைக்கு உள்ளன. இதில் குறிப்பாக Double – cellulose  மாத்திரைகளை பயன்படுத்துகிற போது எவ்வித பக்கவிளைவுகளையோ, தங்கியிருந்தலையோ ஏற்படுத்தாது? மனித உடம்பிற்குத் தேவையான புரதம், சர்க்கரை (காபோவைதரேற்று), கொழும்பு, விட்டமின், கனியுப்புக்கள் மற்றும் நீர் போன்றவற்றோடு ஏதாவது சக்தியையும் வழங்குகிறது.
இது உடலுக்கு தீமையைத் தருகின்ற பக்ரீரியா மற்றும் குடலில் உள்ள நச்சுத் தன்மைகளையும் சுத்தம் செய்து கொழும்பு, சர்க்கரை மற்றும் கொலஸ்ரோல் என்பன குடலினால் உறிஞ்சப்படுவது குறைப்படுவதோடு, மேலதிக வெப்பத்தை தடுத்து, கழிவுப் பொருட்களின் வெளியேற்றத்தினை அதிகரிக்கவும் செய்கின்றது.
மேலும் இதிலிருந்து நார் பொருட்களானது நீரை அதிகமாக உறிஞ்சும் தன்மையையும், விரைவாக இலகுபடுத்தும் தன்மையையும் கொண்டிருப்பதனால், இதன் மூலமாக மலச் சிக்கலானது தடுக்கப்படுவதோடு, கழிவுகள் அகற்றப்படுவது விரைவுபடுத்தப்படுகிறது. மேலும், குடலின் செயற்பாடுகளை அதிகரிக்கச் செய்வதுடன், நச்சுப் பொருட்கள் மற்றும் குடல் சுவர்களிடையேயான தொடர்பினையும் குறைக்கச் செய்கிறது. இதன் பயன்பாடுகளாக :-
1. கரைதலுக்கு உள்ளாகும் நார் பொருட்களான  yplymerizwd glucose)  குடலில் உள்ள நச்சு பக்டீரியாக்களை அழிக்கும்.
2. உணவில் உள்ள கொலஸ்ரோலை குடல் உறிஞ்சுவது தடுக்கப்படும். சுற்றோட்டத்தில் உள்ள தடைகளை நீக்கி இதய நோய்கள் ஏற்படுவதை தடைசெய்யும் மேலதிக வெப்பத்தை கட்டுப்படுத்துதல், மற்றும் உடல்நிறையினை நிலையான முறையில் பராமரிக்கும்.
3. நீரில் கரைதலுக்கு உள்ளாகாத நார் பொருட்களானது  (comfibers)  மலச்சிக்கலைத் தடுத்து கழிவுப் பொருட்களின் வெளியேற்றத்தை துரித்தப்படுத்தும்.
4. Hawthorn powder  இரத்த சுற்றோட்டத்தை ஒழுங்காக்கும், மண்டியினை (கடின பொருட்களை) கரைத்து, குடலிலுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி, கழிவு அகற்றலை இலகுபடுத்துகிறது.
5. இனிப்பான மூலகங்கள் : இவ்வுற்பத்திக்கு மிக சுவையாக இருக்கும்.
எனவே, இதனது உற்பத்தியின் பயனாக பின்வரும் பயன்பாடுகள் ஏற்படுகின்றன என்றும் கூறப்படுகிறது. அதாவது கழிவகற்றலை இலகுபடுத்தி, மலச்சிக்கலை தடுக்கிறது. கொலஸ்ரோலை குறைப்பதுடன் சுற்றோட்டத்தில் உள்ள தடைகளை நீக்கி இதய நோய்கள் ஏற்படுவதை தடைசெய்யும், உடம்பு நிறையினை பராமரித்து பருத்தலை தடைசெய்யும், பெருங்குடலில் ஏற்படுகின்ற புற்றுநோயினை தடுக்கவும், இன்சுலின் தேவையினை குறைத்து நீரிழிவு நோயாளர்களின் இரத்தத்தில் இருக்கும் சீனியின் அளவுமட்டத்தை பேணவும், உடம்பினால் உறிஞ்சும் செயற்பாடுகளை விருத்தி செய்கிறது இதன் மூலம் மனித உடம்பு தனக்கு தேவையான சத்துக்களை திறன்பட உறிஞ்சுக்கொள்கிறது.
எனவே இதுபோன்ற இன்னும் பலதரப்பட்ட மூலிகைகளிலிருந்து தயார் செய்யப்பட்ட வில்லைகள் பல்வேறு நோய்களுக்குரிய நிவாரணியாக உலாவருகின்றன. கடந்த பல வருடங்களில் பல்வேறு நாடுகளிலும் பரவலாக வெளிவந்து பலரின் வாழ்வில் சுகத்தை வழங்கியுள்ளது என்பதாகவும் கூறப்படுகிறது.
‘21ஆம் நூற்றாண்டின் மனித உடம்பிற்கான அனுகூலமான இயற்கை ஆரோக்கிய உணவு’ என பரிந்துரைக்கப்படுகின்ற ஸ்பிருலினா  (Spirulina)  எனும் உயிரினம் பூமியில் முதலில் தோன்றிய உயிரினமாகக் கொள்ளப்படுகிறது.
இவை உயிர் வாழ்வவதற்கான ஒட்சிசனை விருத்தி செய்யக்கூடியதாக இருப்பதுடன் உயிருள்ள பொருட்களை பன்முகப்படுத்தி விருத்தியுறச் செய்கிறது. இவை நீண்ட காலத்திற்கு முன்னரே ஆபிரிக்காவின் அபோஜின் இனத்தவர்கள் இதனது போசனையைக் கண்டறிந்து பிரதான உணவாகவும் உட்கொண்டனர்.
அது அவர்களின் உடலை பலப்படுத்தி சுறுசுறுப்பாக்கி, வெப்பமான சூழலில் இசைவாக்கம் பெறத்தக்கதான உடலமைப்பையும் பெற்றனர் எனவும் கூறப்படுகிறது. அமெரிக்கா, ஜப்பான், ஜேர்மன் ஆகியவற்றின் மருத்துவ நிறுவனங்கள் நீண்டகாலப் பரிசோதனையின் பின்னர் ஸ்பிருலினா பல்வேறு நோய்களை குணப்படுத்தும் நன்மையுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர். பக்கவிளைவுகள் அற்றது எனவும், போஷாக்கு மற்றும் மருந்து ஆகிய இரண்டையும் ஒன்றாக்கிய படியினால் இது சிறந்த இயற்கை ஆரோக்கிய உணவு எனவும் தெரிவிக்கப்பட்டது.
விண்வெளி வீரர்களுக்கு விண்வெளியில் நீண்ட காலம் தங்கி கடினமான உழைப்பில் ஈடுபடுவதால் அனைத்தும் அடங்கியுள்ள சர்வ சக்தியுள்ள உணவின் அவசியம் தேவைப்பட்டது. ஆதலால் இந்த ஸ்பிருலினா தீர்வாக முன்வைக்கப்பட்டது.
ஆதலால் தான் இதனை நாசாவின் தாயத்து என்பதாகவும் கூறுவர். இவ்வகையில் அமைந்ததுதான் ஸ்பிருலினா குளிசைகளாகும். இதன் உற்பத்தி திறனானது உடலை பலமாக்கவும், தொற்று நோய் ஏற்படாமல் தடுக்கக்கூடிய சக்தியை உடலில் விருத்தி செய்யும். தீங்கு விளைவிக்கக்கூடிய கதிர்களிலிருந்து தடுக்கக்கூடிய சக்தியை உடலில் விருத்தியம் செய்கிறது.
ஆதலால் நீரிழிவு நோயாளர்கள் உடலுக்குத் தேவையான அடிப்படை போஷாக்குக் குறைபாட்டினால் கஷ்டப்படுகின்ற போது இதனை பாவிப்பதன் மூலம் ‘இயற்கைப் பசுமை சுகாதார பராமரிப்பு உற்பத்தி’ என அழைக்கப்படுகின்ற விரிவானதும், சரியானதும் போஷாக்கினை வழங்குகிறது. அதுமட்டுமன்றி இருதய நோயாளர்களுக்கும் இதன் பாவனை மிகவும் பிரயோசனமாக காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறாக பல்வேறு மூலிகைகளைக் கொண்டு தயார்செய்யப்படுகின்ற மருத்துவப் பொருட்கள் அனைவருக்கும் உகந்த முறையிலும், பாரம்பரிய சீன மருத்துவத்தின் அடிப்படையில் உற்பத்தி செய்யப்பட்டு அனைத்து விதமான நோய்களுக்கும் நிவாரணியாக காணப்படுகிறது.
இதனைப் பாவித்து பயனடைந்தோர் பலர். ஆதலால்தான் கடந்த ஓரிரு ஆண்டுகளாக நமது நாட்டிலும் இப்பொருட்கள் அனைவரையும் ஆட்கொண்டு பட்டிதொட்டியெல்லாம் இதன் பெயர் வீசக் காரணமாக அமைந்துள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது.
.....................................................................................................................