Monday, December 5, 2016

இலங்கை பறக்கும் பாம்பு

Image result for Sri Lankan flying snake, Chrysopelea taprobanica

இலங்கை பறக்கும் பாம்பு (Sri Lankan flying snake, Chrysopelea taprobanica) ஒரு பறக்கும் தன்மைகொண்ட ஊர்வனவகையைச் சார்ந்த பாம்பு இனம் ஆகும். இதன் பூர்வீகம்இலங்கையாக இருந்தாலும், இந்தியா போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது. இது கிரிசொபியா (Chrysopelea) என்றகுடும்பத்தின் வழித்தோன்றல் ஆகும். இவை ஓரிடத்திலிருந்து வேறு இடத்திற்கு இடப்பெயர்ச்சி அடையும்போது தன் விலா எலும்பை தட்டையாக மாற்றி பறக்க ஆரம்பிக்கிறது.பாம்பு இனங்களில் ஒன்றான இது, விசத் தன்மை குறைந்து காணப்படுகிறது.உலகில் உள்ள பாம்பு இனங்களில் இது ஒரு அரிதானது ஆகும். இது வெப்பமண்டலப் பகுதியில் காணப்படுகிறது.தென்கிழக்காசியா பகுதியில் இலங்கை உட்பட வியட்நாம், கம்போடியா, போன்ற நாடுகளிலும், இந்தியாவில் அரிதாகவும் காணப்படுகிறது.உடல் வாக்கில் அனைத்துப் பாம்புகளைப்போல் தோன்றினாலும் இதன் உடலின் மேல் பகுதியில்கட்டுவிரியன் பாம்பைப்போல் கருப்பு கோடுகள் காணப்படுகின்றன. தலைப்பகுதியில் வலுவான கருப்பு நிறத்தில் நல்ல பாம்பைப் போல் படம் எடுப்பதுபோன்ற தோற்றம் கொண்ட கோடுகள் உள்ளன.
 


----விக்கிப்பீடியாவில் இருந்து.-----

இன்குலாப் (மக்கள் கவிஞர்)இன்குலாப் (Inkulab இறப்பு 1, திசம்பர் 2016) என்பவர் தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், பத்தி எழுத்தாளர், பொதுவுடைமைச்சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர் ஆவார். சமூகச் சிக்கல்கள், ஒடுக்குமுறைகள் போராட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே இவருடைய படைப்புகள் அமைந்திருந்தன. இன்குலாப் என்பதற்குப் புரட்சி என்று பொருள்படும்.
இன்குலாப்பின் இயற்பெயர் எஸ். கே. எஸ். சாகுல் அமீது. கீழக்கரை என்னும் ஊரில் பிறந்தார். இசுலாமியக் சமூகத்தில் மிகவும் ஏழ்மை குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை சித்த மருத்துவர். பள்ளிப் படிப்பைக் கீழக்கரையில் முடித்துவிட்டு சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரியில்புகுமுக வகுப்பில் சேர்ந்து படித்தார். அக்காலத்தில் மீரா என்னும் கவிஞர் அக்கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்தார். எனவே அவருடன் இன்குலாப்புக்கு நட்பு ஏற்பட்டது.
மதுரைத் தியாகராசர் கல்லூரியில் இளங்கலை(தமிழ்) வகுப்பில் சேர்ந்து பயின்றார். படிப்பை முடித்துசென்னையில் உள்ள புதுக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். ஈரோடு தமிழன்பன், நா.பாண்டுரங்கன் போன்றோருடன் இன்குலாப் புதுக்கல்லூரியில் பணி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1965 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழ் நாட்டில் வெடித்தது. அப்போது உடன் பயின்ற மாணவர்களான கவிஞர் நா. காமராசன் கா. காளிமுத்து பா. செயப்பிரகாசம் ஆகியோருடன் இன்குலாப் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முனைப்பாக இறங்கினார். காவல் துறையின் தடியடிகளுக்கும் ஆளானார். சிறைக்கும் சென்றார்.
தொடக்கக் காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளராக இருந்து, பிற்காலத்தில் மார்க்சியக்கொள்கையாளர் ஆனார். கீழவெண்மணியில் 1968 இல் நிகழ்ந்த 43 தலித் மக்கள் பொசுக்கப்பட்ட நிகழ்விற்குப் பிறகு இன்குலாப் மார்க்சியத்தை நாடினார். கம்யூனிச்டு இயக்கச் சார்பாளர் ஆனபிறகு மார்க்சிய லெனினிய புரட்சிகர இயக்கத்திலும் அதன் பின்னர் மா. லெ. அடிப்படையில் இயங்கிய தமிழ்த் தேசிய விடுதலையிலும் ஈடுபட்டு இயங்கினார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரனைச் சந்தித்தார். கல்லூரி ஆசிரியர் சங்கப் போராட்டங்களிலும் முன்னணியில் இருந்தார்.
இளவேனில் என்பவர் நடத்திய கார்க்கி இதழில் கவிஞர் இன்குலாப்பின் தொடக்கக் கால கவிதைகள் வெளிவந்தன. தராசு, நக்கீரன், இனி, நாற்காலி, உண்மை, உங்கள் விசிட்டர் எனப் பல இதழ்களில் ஏராளமான கட்டுரைகளையும் கவிதைகளையும் அவ்வப்போது எழுதினார். சூரியனைச் சுமப்பவர்கள் என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். 'மார்க்சு முதல் மாசேதுங் வரை' என்னும் மொழியாக்க நூலை எஸ். வி. ராஜதுரையும் இன்குலாப்பும் இணைந்து எழுதினார்கள். மனுசங்கடா, நாங்க மனுசங்கடா என்னும் இவர் எழுதிய பாட்டு எண்ணற்ற மேடைகளில் தலித்து மக்களால் பாடப் படுகிறது. கல்லூரிக் காலத்தில் குரல்கள், துடி, மீட்சி என் மூன்று நாடகங்கள் எழுதினார். பிற்காலத்தில் அவ்வை, மணிமேகலை ஆகியன நாடகங்கள் இவரால் எழுதப்பட்டன. 2007 ஆம் ஆண்டு வரை இன்குலாப் எழுதிய கவிதைகள் அனைத்தும் ஒவ்வொரு புல்லையும் என்னும் பெயரில் ஒரு பெரிய நூலாக வெளிவந்தது.
2006ஆம் ஆண்டு தனக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருதினை திருப்பி அளித்தார். ஈழத் தமிழர்களை காக்க அரசு தவறிவிட்டதாக இதற்கு காரணம் தெரிவித்தார்.
உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இன்குலாப் சிகிச்சை பலனின்றி திசம்பர் 1, 2016 அன்று உயிரிழந்தார்.[1] அவரது உடல் செங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொடையளிக்கப்பட்டது.....................................................
---------விக்கிப்பீடியாவில் இருந்து.-----------------