Monday, January 28, 2013

போன் ரீசாஜ் கார்ட்களை நகத்தால் சுரண்ட வேண்டாம் ஆபத்து.!


பெதுவாக நாம் போன் ரீசாஜ் கார்ட்களை வாங்கினதும் அவற்றின் இரகசிய இலக்கத்தை அறிய நகங்களால் சுரண்டுகின்றோம். இதனை கட்டாயம் தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இது தோல் புற்றுநோயை ஏற்ப்படுத்தும். ஐக்கிய அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சி நிலையம் வெள்ளி நைட்ரோ ஆக்சைடில் (silver nitro oxide) மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுத்தும் நோய் கிருமிகள் உள்ளதைக் கண்டறிந்துள்ளது.
எனவே சுரண்டும் (scratch) வடிவில் உள்ள ரீ சார்ஜ் கார்டையோ அல்லது வேறு எந்த ஒரு சுரண்டல் கார்டையோ சுரண்ட நகங்களை பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால் அது வெள்ளி நைட்ரோ ஆக்சைடு ( silver nitro oxide ) மூலம் முலாம் ( coating) செய்யப்படுகிறது. இது நமக்கு skin cancer ஏற்படுத்தும் தன்மை கொண்டது.

--------------------

நன்றி - புதிய உலகம்

பில் கேட்ஸ்க்கு ஒரு கடிதம்....
ஐயா,

சமீபத்தில் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் சாப்ட்வேரும் வாங்கினோம். அதில் சில பல பிழைகள் உள்ளதாக அறிகிறோம். அவற்றை உங்கள் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வருவதில் மிக்க பெருமிதமடைகிறோம்.

1. இண்டெர்நெட் கனெக்ட் செய்தபிறகு, ஹாட்மெயிலில் அக்கவுண்ட் உருவாக்க முயற்சி செய்தோம். ஃபார்மில் எல்லா விபரங்களையும் சரியாகக் கொடுத்துவிட்டோம். ஆனால் பாஸ்வேர்ட் கேட்குமிடத்தில் நாங்கள் என்ன டைப் செய்தாலும் ***** என்று மட்டுமே தெரிகிறது. நாங்கள் இங்கு லோக்கல் சர்வீஸ் எஞ்சினியரிடம் விசாரித்ததில், அவர் கீபோர்டைச் செக் பண்ணிவிட்டு கீபோர்டில் ப்ராப்ளம் இல்லை எனக்கூறிவிட்டார். எனவே இதை விரைந்து சரிசெய்யுங்கள்.

2. விண்டோஸில் "Start" என்னும் பட்டன் உள்ளது. ஆனால் "Stop" பட்டன் இல்லை. அதையும் சேர்த்துவிடுங்கள்.

3. "Run" மெனுவை எனது நண்பர் ஒருவர் தவறுதலாகக் கிளிக் செய்து விட்டதில் அவர் சண்டிகருக்கே ரன் ஆகிவிட்டார். எனவே, அதை "sit" என மாற்றிவிடுங்கள். அப்போதுதான் எங்களால் உட்கார்ந்து வேலை செய்யமுடியும்.

4. "Recycle Bin" என்பதை "Rescooter Bin" என மாற்றவேண்டும். ஏனென்றால் என்னிடம் சைக்கிள் இல்லை, ஸ்கூட்டர்தான் உள்ளது.

5. "Find" பட்டன் சரியாக வேலை செய்யவில்லை என நினைக்கிறேன்.எனது மனைவி அவளது கார் சாவியைத் தொலைத்துவிட்டதால் "Find"மெனுவிற்குச் சென்று தேடினோன். ஆனால் கண்டுபிடிக்கமுடியாது என்று கூறிவிட்டது. இது ஒரு எர்ரர் என நினைக்கிறேன். தயவு செய்து அதை சரிசெய்து எனது கீயைக் கண்டுபிடித்துத் தாருங்கள்.

6. தினமும் நான் தூங்கும் போது மவுஸை பூனைக்குப் பயந்து என்னுடன் வைத்துக்கொண்டு தூங்குகிறேன். எனவே Mouse தரும்போது கூடவே ஒரு Dog தரவும், பூனையை விரட்டுவதற்கு.

7. நான் தினமும் "Hearts" விளையாடி ஜெயித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு எப்போது நான் ஜெயித்த பணத்தைத் தருவீர்கள்? சில நேரங்களில் தோற்றிருக்கிறேன். உங்கள் பணத்தை எப்போது வந்து வாங்கிக்கொள்கிறீர்கள்?

8.என்னுடைய குழந்தை "Microsoft word" கற்று முடித்து விட்டான். நீங்கள் எப்போது "Microsoft sentence" ரிலீஸ் செய்யப்போகிறீர்கள்? என்னுடைய குழந்தை மிகவும் ஆவலாக உள்ளான்.

9. நான் கம்ப்யூட்டர், மானிட்டர், கீபோர்டு, மவுஸ் என அனைத்தையும் விலைகொடுத்து வாங்கியிருக்கிறேன்.. ஆனால் டெஸ்க்டாப்பில் "My Computer" ஐகான் மட்டும் உள்ளது. மிச்சத்தை எங்கே?

10. என்னுடைய கம்ப்யூட்டரில் "My pictures" என்று ஒரு ஃபோல்டர் உள்ளது. அதில் என்னுடைய போட்டோவைக் காணவில்லையே? எப்பொழுது அதைப் போடப்போகிறீர்கள்?

11. "Microsoft Office" இன்ஸ்டால் செய்துவிட்டேன். என்னுடைய மனைவி "Microsoft Home" கேட்கிறாள். நான் என்ன செய்யட்டும்?

----------------------------------
நன்றி 

தம்பி வெங்கி 

விலை உயர்ந்த பட்டை உற்பத்தி செய்யும் புழுக்கள்!

 
எங்கும், எப்போதும் பட்டாடைகளுக்கு தனி மதிப்பு உண்டு. பட்டுச் சேலை அணிந்த பெண்கள் தனி அழகாகவும், கம்பீரமாகவும் உணர்கிறார்கள்.

அணிபவருக்கு பெருமை தரும் பட்டாடைகளுக்கு ஆதாரமான பட்டு நூல்களை புழுக்கள்தான் உற்பத்தி செய்கின்றன.

ஒரு கூட்டுப்புழுவில் இருந்து ஆயிரத்து 600 மீட்டர் நீளமுள்ள பட்டு நூல் கிடைக்கிறது. பட்டு நூல், உருக்கு இழையை விட உறுதியானது என்பது சோதித்து அறியப்பட்ட உண்மையாகும். இது முக்கோணப் பட்டை அமைப்பைக் கொண்ட நீண்ட நூலாகும். பட்டுப் புழுக்கள், கம்பளிப் புழுப்பருவத்தில் மிகவும் வேகமாகவும், அதிகமாகவும் முசுக்கொட்டை இலைகளை உண்ணக்கூடியவை.


 
பட்டுப்புழுவின் (silk worm) விலங்கினப் பெயர் பாம்பிக்ஸ் மோரி (Bombyx mori) என்பதாகும். இது ஒவ்வொன்றும் 300 முதல் 500 முட்டைகளை இடக்கூடியது. இந்த முட்டைகளை மிகவும் சுகாதாரமான இடத்தில் வைத்து சரியான வெப்பநிலையில் பாதுகாத்தால், முட்டைகளில் இருந்து 20 நாட்களில் புழுக்கள் வெளிவரும்.

இந்தப் புழுக்கள் மிக மிக அதிகமாக உண்ணக்கூடியவை. இவை பட்டு நூல் சுரக்கிறபோது, மிக அதிக அளவு உண்ணுவதால், இவற்றின் எடை 25 முதல் 28 நாட்களில் 10 ஆயிரம் மடங்கு அதிகரிக்கும் என்ற உண்மை நமக்குப் பிரமிப்பை அளிக்கிறது.

இவ்வாறு நல்ல எடையுடன் வளர்ந்துள்ள இந்தப் புழு ஓரிடத்திலும் நிலைகொள்ளாது. மூங்கில் மரப்பொந்துக்குள் நுழைந்து 8 என்ற எண் வடிவத்தில் பட்டு நூல் இழை மூலம் கூடு கட்டுகிறது. புழுவின் கீழ்த்தாடைக்கு அருகில் உள்ள இரண்டு சுரப்பிகளில் இருந்து இரண்டு பட்டு நூல் வெளிவருகிறது. அது காற்றுப்படுகிறபோது இறுகிவிடுகிறது. இதை ரத்தம் உறைதலுடன் மேம்போக்காக ஒப்பிடலாம். உடலில் காயம் ஏற்படும்போது ரத்தம் வெளியே வருகிறது. அது காற்றுப்படுகிறபோது உறைந்து விடுகிறது.
 

அதேநேரத்தில் பட்டுப்புழு ஒருவித பசையையும் வெளியிடுகிறது. அந்தப் பசை, இரண்டு இழைகளையும் இணைத்து ஒரே இழையாக மாற்றுகிறது.

பட்டுப்புழுவை இப்படியே விட்டுவிட்டால் அது பியூப்பா பருவத்தை அடைந்து 3 வாரத்தில் பட்டுப்பூச்சியாக வெளியே வருகிறது. பட்டுப்பூச்சி வளர்ப்பவர்கள் குறைந்த அளவு எண்ணிக்கை உடைய பூச்சிகளைத்தான் இவ்வாறு வளர அனுமதிக்கின்றனர்.

மிகப் பெரும் பகுதியானவற்றை குக்கூன் பருவத்திலேயே சேகரித்து, கொதிக்கும் நீரில் போட்டுவிடுகிறார்கள். பின்பு அதில் இருந்து பட்டு நூல் எடுக்கிறார்கள். 110 குக்கூன்களில் இருந்து கிடைக்கும் பட்டு நூல் கொண்டு ஒரு ’டை’ அதாவது, கழுத்துப்பட்டை தயாரிக்க முடியும். ஒரு பட்டு ஜாக்கெட் தயாரிக்க 630 குக்கூன்கள் தேவைப்படுகின்றன. ஒரு பட்டுச் சேலை தயாரிக்க 6 ஆயிரம் குக்கூன்கள் வேண்டும்.


 

இன்று இந்தியாவில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பட்டு நூல் நெசவைத் தங்களது குடிசைத் தொழிலாகக் கொண்டுள்ளன. கைத்தறியைக் கொண்டு நெய்த சேலையில் தங்கள் கைத் திறமைகளைக் காட்டி மிகவும் சிறப்பாக கண்ணைக் கவரும் சேலைகளை நெய்கிறார்கள். இன்றைக்கு இயந்திரத் தறிகள் மூலமும் பட்டுச் சேலைகள் நெய்யப்படுகின்றன.

ஆயினும் கைத்தறிப் பட்டுகளை ஆதரிப்பதன் மூலம் நாம் எண்ணற்ற ஏழைகளுக்கு வாழ்வு அளிக்கிறோம்.


 
பனாரஸ், சூரத், மைசூர், குஜராத், ஒடிசா, காஷ்மீர் பல பகுதிகளும் பட்டுச் சேலைகளுக்குப் புகழ்பெற்று விளங்குகின்றன. ஆனால் எல்லாவற்றையும் தாண்டி நமது காஞ்சீபுரம் சேலைகள் பெருமை பெற்று விளங்குவது நமக்குத் தெரிந்ததுதானே!

--------------------------------------
தினத்தந்தி

சேமிப்பும் ஒரு கலையே

சேமிப்பு என்பது பாமர மக்களை வசீகரிக்கும் சொல். நோபல் பரிசு பெற்ற பொருளியல் அறிஞர் அமார்த்திய சென் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், "சேமிப்பு என்பது குடும்பத்தின் ஆணி வேர்'.
பஞ்சம், வெள்ளம், சுனாமி போன்ற இயற்கைச் சீற்றத்தை வீழ்த்தி மனிதனால் இத்தனை நூற்றாண்டுகள் வாழ முடிகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் சேமிப்புதான். இன்றும் பல குக்கிராமங்களில் தானியங்களை மண் பானைகளில் நிரப்பி அதை விட்டத்தில் வைப்பதைக் காணக்கூடும்.

மனித நாகரிகத்தின் முன்னோடிகள் என எகிப்தியர்களைக் குறிப்பிடுகிறோம். அவர்கள் மண்ணால் "சால்' செய்து, இறந்தவர்களின் உடலை அதில் வைத்து மண்ணில் புதைத்தார்கள். அதைத்தான் நாம் முதுமக்கள் "தாழி' எனக் குறிப்பிடுகிறோம். அவர்கள் காலத்தை ஒத்த நம் மூதாதையர்கள் அதே சாலில் தானியங்களை அல்லவா சேமித்தார்கள்?

உலோக நாணயங்கள் வருவதற்கு முன்பு வரை நம் முன்னோர்கள் சாலில் தானியங்களை மட்டுமே சேமித்து வந்தார்கள். ஆனால் நாணயங்கள் வந்ததன் பிறகு மண் சால்கள் உண்டியலாகக் குள்ள உருவமெடுத்தன. அந்த உண்டியலில் நாம் சில்லறைக் காசுகளை சேமிக்கப் பழகினோம்.

இன்றைய சேமிப்புகள் வங்கியில் பணம் போடுவதாகவும், பங்குச்சந்தை, தங்கம், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதாகவும் உள்ளது.


 

ஆரம்பத்தில் பணத்தைச் சேமிக்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காகவே வங்கியை நோக்கிப் படையெடுத்தோம். ஆனால் இன்று கடன் வாங்குவதற்காகவும், நகைகளை அடமானம் வைப்பதற்காகவும் அல்லவா படையெடுக்கிறோம்?

இன்றைய உலகில் சேமிப்பு என்பது மிகவும் அரிதான பழக்கமாகவே இருந்து வருகிறது. பெரும்பாலான இளைஞர்களிடம் அந்தப்பழக்கம் மருந்துக்கும் இல்லை.

செல்போனில் பேசும்பொழுது பைசா தீர்ந்துவிட்டால் அந்த கம்பெனியிடமே கடன் வாங்கிப் பேசிவிடுகிறார்கள்.

சேமிப்பு என்றால் பணம் சேமிப்பதே என பொருள் கொள்ளப்பட்டுவருகிறது. இன்று ஒருபுறம் மின்சாரப் பற்றாக்குறை தலை விரித்தாடுகிறது. இன்னொருபுறம் நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டு வருகிறது. மற்றொருபுறம் விவசாய நிலங்கள் மனையிடங்களாக மாறிக்கொண்டு வருகின்றன. இவையெல்லாம் நாம் அரிதான வளங்களைச் சேமிக்காமல் இழக்கிறோம் என்று எச்சரிக்கின்றன.

பள்ளிகளில் அஞ்சல்துறை மூலமாக ஆர்.டி. சேமிக்கும் பழக்கம் இருந்து வந்தது. அந்தப் பழக்கமும் இன்று காணாமல் போய்விட்டது.

ஒரு நிறுவனம், கல்லூரி மாணவர்களிடம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தும் பொருட்டு, "உங்களிடம் சேமிக்கும் பழக்கம் உண்டா?' என கேள்வி எழுப்பியது. தொண்ணூறு சதவீத மாணவர்கள் "ஆம்' என பதில் அளித்திருந்தார்கள். "எப்படி சேமிக்கிறீர்கள்?' என கேட்டதற்கு, ""கணினியில் கன்ட்ரோல் "எஸ்' மூலமாக சேமிக்கிறோம்'' என பதில் சொன்னார்களாம்!

உலக சேமிப்பு தினம் - அக்டோபர் 30.

---------------------------------------நன்றி-தினமணி