Tuesday, November 6, 2012

உடற்பயிற்சி செய்தால் விந்தணு அதிகரிக்கும்!


விந்தணு குறைபாடு என்பது இன்றைய இளைய தலைமுறையினரை பாதிக்கும் ஒன்றாக உள்ளது. உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஹார்மோன்களின் சுரப்பு தூண்டப்படுவதோடு விந்தணு உற்பத்தி அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
men who exercise produce healthier semen
மது குடிப்பதாலும், புகை, போதை போன்றவைகளை பயன்படுத்துவதாலும் விந்தணு உற்பத்தி குறைகிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மாறிவரும் உணவுப்பழக்கத்தினாலும் இன்றைய இளைஞர்களின் விந்தணு உற்பத்தி குறைந்து வருவதாக கொலரோடா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த குறைபாட்டை நீக்குவதற்கு செக்ஸ் ஹார்மோன்களை சரியாக சுரக்கச் செய்து மீண்டும் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கச் செய்யலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உடல்ரீதியான செயல்பாடுகள் மூலம் இந்த ஹார்மோன்களை சீராக சுரக்கச் செய்யலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
எப்.எஸ்.எச் எனப்படும் (follicle-stimulating hormone) எல்.ஹெச்(luteinising hormone) டெஸ்ட்டோடிரோன், கார்டிசால் போன்ற ஹார்மோன்களை சரியாக சுரக்கச் செய்கிறது. இதன் மூலம் உடலில் விந்தணுக்களின் உற்பத்தி அதிகரிக்கிறதாம்.
31 ஆண்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இது கண்டறியப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன்கள் சுரப்பதோடு எப்.எஸ்.எச், எல்.எச், டி ஹார்மோன் சரியான விகிதத்தில் சுரக்கிறது. இதன் காரணமாக விந்தணு உற்பத்தியும் அதிகரிக்கிறது.என்று ஆய்வாளர்கள் கூறினர். இந்த ஆய்வு முடிவு ஐரோப்பிய மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
In a new study, researchers have linked moderate physical activity in males with better hormone levels and sperm characteristics that favour reproduction as compared to sedentary men.

thanks:    Greynium Information Technologies Pvt. Ltd.


'ரத்தச் செங்கல்': லண்டன் கட்டிடக்கலை நிபுணரின் விபரீத ஆராய்ச்சி

 Uk Architect Bakes Blood Bricks  
களிமண் செங்கல், சிமெண்ட் செங்கல் கேள்விப்பட்டிருப்போம். அதை வைத்து வீடு கட்டியிருப்போம். ஆனால் திகிலூட்டும் வகையில் விலங்குகளின் ரத்தத்தை வைத்து புது மாதிரியான செங்கற்களை உற்பத்தி செய்துள்ளார் லண்டனைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர் ஒருவர். அவரின் இந்த விபரீத ஆராய்ச்சி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர் ஜேக் மன்றோ வித விதமான செங்கற்களைப் பயன்படுத்தி கட்டிடங்களை வடிவமைப்பதில் நிபுணர். கட்டுமானத்தில் அடிக்கடி புதுமையை புகுத்தி சாதனை படைத்துள்ளார். 26 வயதே ஆன இந்த கட்டிடக்கலை நிபுணர் தற்போது சர்ச்சைக்குரிய, ஒரு செங்கல்லை தயாரித்துள்ளார்.
விலங்குகளை வெட்டி இறைச்சி தயாரிக்கும் தொழிற்கூடங்களில் இருந்து ரத்தத்தை ஒட்டுமொத்தமாக வாங்கி அதனுடன் மணலை கலந்து செங்கல் போன்று தயாரித்து, அவற்றை மின்அடுப்பில் 70 டிகிரி வெப்பநிலையில் சுமார் ஒரு மணி நேரம் வேக வைத்து பதப்படுத்துகிறார் ஜேக் மன்றோ.
ஒவ்வொரு ரத்த செங்கல் தயாரிப்பதற்கும் 35 லிட்டர் ரத்தத்தை பயன்படுத்துவதாக கூறுகிறார் ஜேக். இந்த செங்கல் தண்ணீர் புக முடியாத அளவுக்கு மிகவும் கெட்டியாக உள்ளது. இரும்பு கம்பிக்குப் பதில் இதனை பயன்படுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலைத்துறைப் படித்த ஜேக் இப்போது வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்து வருகிறார். தனது கண்டுபிடிப்பான ரத்த செங்கற்களைக் கொண்டு கொண்டு எகிப்தில் முன்மாதிரியான ஒரு கட்டுமானத்தை நிர்மாணிக்க திட்டமிட்டிருக்கிறாராம் ஜேக்.
இந்த செங்கற்களைகொண்டு வீடு கட்டினால் அதில் மக்கள் வசிக்க விரும்புவார்களா? என்று சந்தேகம் கிளப்பும் ஜேக், வளர்ச்சியடையாத வளர்ச்சியடையாத நாடுகளில் மண் கற்களுக்குப் பதில் ரத்த செற்கற்களை பயன்படுத்துவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ரத்தத்தை சூடாக்கி உருவாக்கிய இந்த சிவப்பு செங்கற்கள் பற்றி நினைத்தாலே பலருக்கும் அருவெருப்பு ஏற்படுவதோடு நிச்சயம் அச்சத்தை ஏற்படுத்தும் என்பது மட்டும் உண்மை. ரத்தச் செங்கற்களைக் கொண்டு கட்டிய வீட்டில் இரவில் உறங்கும் போது கனவில் ரத்தம் ரத்தமாக வந்து அச்சுறுத்தினால் என்ன செய்வது?

thanks:    Greynium Information Technologies Pvt. Ltd.

ஆஸ்திரேலிய ஆர்டர் விருதைப் பெற்றார் சச்சின் .. 2வது இந்தியர், 3வது கிரிக்கெட் வீரர்!

டெல்லி: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிலார்ட் அறிவித்த அந்த நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய அமைச்சர் சிமோன் இந்த விருதினை சச்சினுக்கு வழங்கினார்.


விருதைக் கேட்டுக் கொதித்த மாத்யூ

ஆஸ்திரேலியாவின் ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா என்ற உயரிய விருது சச்சினுக்கு அறிவிக்கப்பட்டதும், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மாத்யூ ஹெய்டன் டென்ஷனாகி விட்டார். சச்சினுக்கு இந்த விருதைத் தருவது நியாயமற்றது என்று அவர் விமர்சித்திருந்தார்.

பரவாயில்லை தரலாம்.. துள்ளி வந்த கில்லி

இருப்பினும் இன்னொரு முன்னாள் வீரரான ஆடம் கில்கிறைஸ்ட் சச்சினுக்கு ஆதரவுக் குரல் கொடுத்தார். விருதுக்குத் தகுதியானவர் சச்சின் என்று தெரிவித்தார்.
இந்த விருதினைப் பெறும் 2வது இந்தியர் சச்சின். ஏற்கனவே முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சோரப்ஜி இந்த விருதினைப் பெற்றுள்ளார். 2006ம் ஆண்டு அவர் அந்த விருதைப் பெற்றார்.

3வது கிரிக்கெட் வீரர்

இந்த விருதினைப் பெறும் 3வது கிரிக்கெட் வீரர் சச்சின். இதற்கு முன்பு கிளைவ் லாயிட் 1985ம் ஆண்டும், மேற்கு இந்தியத் தீவுகளின் இன்னொரு ஜாம்பவானான பிரையன் லாரா 2009ம் ஆண்டிலும் இந்த விருதினைப் பெற்றுள்ளனர்.

ஆட்டம் இன்னும முடியலை

சச்சின் டெண்டுல்கர் 190டெஸ்ட் போட்டிகளில் ஆடி 15,533 ரன்களைக் குவித்துள்ளார். அதேபோல 463 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 18,426 ரன்களைக் குவித்துள்ளார். தொடர்ந்தும் ஆடி வருகிறார்....

யுஎஸ் தேர்தல்: எப்படி ஒட்டுப் போடுகிறார்கள்? அதிபரை தேர்வு செய்கிறார்கள்?

வாஷிங்டன்: கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக பரபரப்புகளை உருவாக்கி வந்த, உலகத்திலேயே காஸ்ட்லியான அமெரிக்கத் தேர்தல் இன்று முடிவுக்கு வருகிறது. பல மாநிலங்களில் ஏற்கனவே 'முன் வாக்குப் பதிவு' நிறைவு பெற்ற நிலையில், இன்று நாடெங்கிலும் முறைப்படி முழுமையான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி மாலை ஐந்தரை மணி அளவில் ஆரம்பமாகும்.

தேர்தல் முறை

அமெரிக்க அதிபர் பதவிக்கு நேரடியாக மக்கள் வாக்களித்து தேர்வு செய்கிறார்கள். ஆனாலும் நாடெங்கிலும் யாருக்கு அதிக வாக்குகள் கிடைத்தது என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.
இந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மத்திய அரசையும், பிரதமரையும் நிர்ணயிப்பது போல், அமெரிக்காவிலும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ‘அதிபர் தேர்தல் வாக்குகள்' (electoral votes) என்று இருக்கிறது.
மக்கள் ஆதரவு 50 சதவீத்ததிற்கு அதிகமாக இருந்தால் கூட ‘அதிபர் தேர்தல் வாக்குகளில்' தோல்வியுற்றவர்களும் உண்டு. மக்களின் பாப்புலர் வாக்குகள் கிடைக்காமல்' அதிபர் தேர்தல் வாக்குகளை பெற்று பதவியேற்றவர்களும் உண்டு. 2000ல் ஜார்ஜ் புஷ்க்கு மக்கள் ஆதரவு அல் கோர் ஐ விட குறைவாக இருந்தாலும், அதிபர் வாக்குகள் அதிகம் பெற்று வென்றார்.

அமெரிக்க பாராளுமன்றம்

அமெரிக்க பாராளுமன்றத்திலும் ‘செனட்' மற்றும்' மாநில உறுப்பினர்கள் (US Representatives) என இரு அவைகள் இருக்கின்றன. ஒரு மாநிலத்திற்கு இரு செனட்கள் என்று சரிசமமாக ஐம்பது மாநிலங்களுக்கும் சேர்த்து நூறு செனட் உறுப்பினர்கள். இந்தியாவில் மேலவை உறுப்பினர்களுக்கு சமம் என்று சொல்லலாம். ஆனால் 'செனட்' உறுப்பினர்கள் தேர்தலில் நேரடியாக மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர்.
'காங்கிரஸ்மேன்' என்று அழைக்கப்படும் மாநில உறுப்பினர்கள், ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் தொகை அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றனர்.

கலிபோர்னியா

உதாரணம்... கலிஃபோர்னியாவுக்கு மக்கள் தொகை அடிப்படையில் 53 காங்கிரஸ்மேன்களும், 2 செனட் உறுப்பினர்களும் உண்டு. இந்திய பாராளுமன்ற மேல்சபை உறுப்பினர்கள் போல், அமெரிக்காவின் இரண்டு சபை உறுப்பினர்களும் சுழற்சி முறையில் ஆனால் நேரடியாக வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.
அதிபர் தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. கூடவே காங்கிரஸ்மேன் மற்றும் செனட் உறுப்பினர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையினருக்கும் தேர்தல் நடைபெறும்.
அமெரிக்க மத்திய அரசைப் போலவே ஒவ்வொரு மாநிலத்திலும் ' மாநில செனட்', ‘ மாநில காங்கிரஸ்மேன்கள்' உண்டு. முதல்வருக்கு பதிலாக 'மாநில கவர்னர்' மாநிலத்தை நிர்வகிக்கிறார்.

அதிபர் தேர்தல் வாக்குகள்

காங்கிரஸ்மேன்கள் மற்றும் செனட் உறுப்பினர்களின் கூட்டுத்தொகை எண்ணிக்கை அந்தந்த மாநிலத்தின் 'அதிபர் தேர்தல் வாக்குகள்' என கணக்கிடப்படுகிறது.. ஆக, கலிஃபோர்னியாவுக்கு அதிபர் தேர்தலில் 55 வாக்குகள் உள்ளன. அமெரிக்க மா நிலங்களிலேயே அதிக அதிபர் வாக்குகள் கொண்ட மாநிலமும் கலிஃப்போர்னியா தான்.
பரப்பளவில் மிகப்பெரிய மாநிலமான அலாஸ்காவுக்கு 2 செனட்கள் 1 காங்கிரஸ்மேன் என்று மொத்தம் மூன்று வாக்குகள் தான். இப்படி ஐம்பது மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தம் 538 ‘அதிபர் தேர்தல் வாக்குகள்' கணக்கிடப்பட்டுள்ளன.

அமெரிக்க கட்சிகள்

ஒபாமா ஜனநாயகக் கட்சி, ராம்னி குடியரசுக் கட்சி என இரு பெரும் கட்சிகள் சார்பில் போட்டியிடுகின்றனர். இது தவிர லிபேர்டேரியன் பார்ட்டி, க்ரீன் பார்ட்டி என உதிரிக் கட்சிகளும் உண்டு. அவைகள் சார்பாகவும் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். நம்ம ஊர் 'தேர்தல் மன்னன்' மாதிரி தான் அவர்களின் போட்டி.
ஆனாலும் இந்த கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட 'ரல்ஃப் நடேர்' போன்றவர்கள், சில சமயங்களில் குறிப்பிட்ட மாநிலங்களின் முடிவை மாற்றியமைத்ததும் உண்டு.
ஒவ்வொரு கட்சிக்கும் மாநிலக் கிளைகள் உண்டு, கிட்டத்தட்ட இந்திய கட்சி அமைப்புகள் போலவே அவை செயல்படுகின்றன. ஆனால் ஒரு பதவிக்கு போட்டியிட வேண்டும் என்றால் முதலில் உள்கட்சி தேர்தலில் நின்று வெற்றி பெறவேண்டும். 'காக்கஸ்' என்றும் 'ப்ரைமரி' என்றும் அவை அழைக்கப்படுகின்றன.

வாக்காளர்கள் பதிவு

அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்கலாம். முன்னதாக வாக்குரிமை கேட்டு விண்ணப்பம் கொடுத்து பதிவு செய்ய வேண்டும். பெரும்பான்மையான மாநிலங்களில் விண்ணப்பத்தில் எந்த கட்சியை சார்ந்தவர் என்ற விவரத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.
அதாவது நான் ஜனநாயக்கட்சி வாக்காளார் அல்லது குடியரசுக் கட்சி வாக்காளர் என்று அடையாளத்துடன் வாக்காளர் விண்ணப்பம் செய்யலாம். யார் யார் வாக்களித்துள்ளார்கள் என்ற விவரத்திலிருந்தே எந்த கட்சிக்கு எத்தனை வாக்குகள் பதிவாகியுள்ளன என்று அறிந்து கொள்ளலாம். சில மாநிலங்களில் கட்சி சார்பு விண்ணப்பங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

வாக்குப் பதிவு

தேர்தல் நாளில், இந்தியா போல் விடுமுறை எல்லாம் கிடையாது. அலுவலகத்தில் சில மணி நேரத்திற்கு அனுமதி பெற்றுக்கொண்டு போய் ஓட்டு போட்டுக் கொள்ளலாம். அதனால் ‘ முன் வாக்குப் பதிவு' , ‘தபால் வாக்குகள்' என பிற வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன். மா நிலங்கள்தான் தேர்தலை நடத்தித் தரும். கவுண்டி (தாலுகா போல்) அலுவலகங்களில், மக்கள் தொகைக்கேற்ப வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.
சாதாரண வாக்குச்சீட்டு, வாக்கு எந்திரம் என அனைத்து வகை வாக்குச்சீட்டுகளும் அமலில் உள்ளன. அந்தந்த கவுண்டி நிர்வாகத்தைப் பொறுத்து இது அமையும். தேர்தல் முடிந்து வாக்குக்ளை எண்ணி முடிவு தெரிவிக்க வேண்டியது அந்த்ந்த கவுண்டி மற்றும் மாநிலங்களின் பொறுப்பு.


டாஸ்மாக் முதல் மாரிஜூனாவுக்கும் வாக்குச்சீட்டு

அதிபர் தேர்தல் 

டாஸ்மாக் முதல் மாரிஜூனாவுக்கும் வாக்குச்சீட்டு

அதிபர் தேர்தல் என்றதும் வாக்குச்சீட்டி ஒபாமா, ராம்னி பெயர் மட்டுமே இருக்கும், இரண்டில் ஒன்றை டிக் செய்யவேண்டும் என்று நினைத்தால் தவறு. அதிபர் தேர்வு தவிர, செனட், காங்கிரஸ்மேன் தேர்வுக்கும் வாக்குச்சீட்டில் இடம் உண்டு. அது மட்டுமல்ல உள்ளூர் பிரச்சனை முதல் மாநிலப் பிரச்சனை வரை மக்கள் தீர்ப்பு கேட்டு வாக்குச்சீட்டில் கேள்விகள் எழுப்பட்டிருக்கும்.
உங்கள் கவுண்டியில் ஒயின் ஷாப்கள் வேண்டுமா வேண்டாமா போன்ற கேள்விகள் முதல் ‘மாரிஜீனா போதைப்பொருளை சட்டபூர்வமாக அங்கீகரிக்கலாமா', 'ஒரே இனத்தவர் திருமணம் செய்ய தடை வேண்டுமா, வேண்டாமா' போன்ற விவகாரமான கேள்விகளும் இடம்பெறும்.
இந்த கேள்விகள் புதிதாக சட்டம் இயற்றுவதற்காகவும் இருக்கலாம் அல்லது ஏற்கனவே இயற்றப்பட்டுள்ள சட்டத்தை அங்கீகரிக்க அல்லது நிராகரிக்கவும் இருக்கலாம். மொத்தத்தில் ஆள்பவர்களை மட்டுமல்ல, தங்களுக்கு எது தேவை, தேவையில்லை என்பதையும் வாக்குச்சீட்டில் முடிவு செய்யும் உண்மையான ஜனநாயகம் எனலாம்.

அதிபர் வெற்றி எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?

அதிபர் தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை ஏற்ப, ஒவ்வொரு கட்சியும் தங்கள் பிரதிநிதிகளை அந்தந்த மாநிலத்தில் ‘அதிபர் தேர்தல் வாக்காளர்கள்' என நியமனம் செய்கிறார்கள். தேர்தல் ஏஜெண்ட் என்று கூட சொல்லலாம்.
ஒரு மாநிலத்தில் எந்த அதிபர் வேட்பாளர் அதிக வாக்குகள் பெறுகிறாரோ, அவர் அந்த மாநிலத்தின் அனைத்து ‘அதிபர் தேர்தல் வாக்குகளையும்' பெறுகிறார். கலிஃபோர்னியாவில் ஒபாமா அதிக வாக்குகள் பெறும் போது 55 வாக்குகள் அவருக்கு கிடைக்கிறது. அவர் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட ‘அதிபர் தேர்தல் வாக்காளார்கள்' அடுத்து நடைபெறும் 'நடைமுறை அதிபர் தேர்தலில்' முறைப்படி அதிபரை தேர்ந்தெடுப்பார்கள் (இந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை தேர்ந்தெடுக்கும் நடைமுறை போல்).

'டை' வந்தால்...

ஒரு வேளை இருவருக்கும் சரிசமமாக 269 வாக்குகள் கிடைத்தால்? 'டை' எனப்படும் சரிசமமான வாக்குகள் கிடைத்தால் எப்படி முடிவு செய்வார்கள்?
காங்கிரஸ்மேன் அதிபரையும், செனட் உறுப்பினர்கள் துணை அதிபரையும் தேர்ந்தெடுப்பார்கள். இந்த தேர்தலில் அப்ப்டி ஒரு 'டை' ஏற்படுவதற்கான நான்கு விதமான வாய்ப்புகள் இருப்பதாகவும் ஒரு சாரார் கருதுகின்றனர்.
ஒருவேளை அப்படி ஏற்பட்டால், குடியரசு கட்சியினர் பெரும்பான்மையினராக இருக்கும் காங்கிரஸ்மேன் ராம்னியை அதிபராகவும், ஜனநாயகக் கட்சி செனட் உறுப்பினர்கள், தற்போதைய துணை அதிபர் பைடன் மீண்டும் துணை அதிபராகவும் தேர்ந்தெடுப்பார்கள்.

வெற்றிக் கணக்கு எப்படி?

தற்போதைய கருத்துக் கணிப்புகளின் படி, கலிஃபோர்னியா (55 வாக்குகள்), நியூயார்க்(29), இலனாய்(20), மிஷிகன்(26) உள்ளிட்ட ஜனநாயகக் கட்சி ஆதரவு மாநிலங்களில் 237 வாக்குகள் ஒபாமாவுக்கு உறுதியாக இருக்கின்றன.
அதேபோல் ராம்னிக்கு டெக்ச்ஸ்(38), ஜார்ஜியா(16), அரிசோனா(11) இன்டியானா(11) உள்ளிட்ட குடியரசுக் கட்சி ஆதரவு மாநிலங்களில் 206 வாக்குகள் உள்ளன. கடந்த முறை ஒபாமா கைப்பற்றிய குடியரசுக் கட்சி மாநிலமான வட கரோலினாவை ராம்னி இப்போது மீட்டுவிட்டார் என்றே சொல்லலாம்.
வெற்றி இலக்கான 270 ஐ தொடுவதற்கு கூடுதலாக, ஒபாமாவுக்கு 33 வாக்குகளும், ராம்னிக்கு 64 வாக்குகளும் தேவை.

ஒபாமா , ராம்னி வெற்றி பெறும் மாநிலங்கள்

கடைசியாக வந்துள்ள கருத்துக் கணிப்புகள், கடும் போட்டி நிலவும் 8 மாநிலங்களில், ஐயோவா(6), விஸ்கான்ஸின்(10) மற்றும் ஒஹயோ(18) ஒபாமாவுக்கு மிகவும் சாதகமான நிலைக்கு திரும்பியுள்ளன என்று தெரிவிக்கின்றன. 4 வாக்குகள் கொண்ட நியூ ஹாம்ஸ்ஷயர் மாநிலமும் ஒபாமா பக்கம் திரும்பியுள்ளது.
இந்த நான்கு மாநிலங்களிலும் வெற்றி பெற்றுவிட்டால், ஒபாமாவே மீண்டும் அதிபர்!
-தமிழ்.ஒன்இந்தியா ஸ்பெஷல்