Friday, December 28, 2012

வெறும் கால் நடை பழக்கம் கால் வலி மற்றும் பிற வலிகள் நீங்க நமக்கு உதவுகிறது ..

வெறும் கால் நடை பழக்கம் கால் வலி மற்றும் பிற வலிகள் நீங்க எவ்வாறு நமக்கு உதவுகிறது என்று பார்ப்போம்.


                                

உங்கள் பாதத்தின் அடியில் உங்கள் உடல் உறுப்புக்களின் உணர்ச்சி நரம்புகள் முடிகின்றன. நீங்கள் இந்த புள்ளிகளை மசாஜ் செய்தால் வலி நிவாரணம் கிடைக்கும். உதாரணமாக இதயத்தில் வலி இருந்தால் இடது காலில் மசாஜ் செய்ய வேண்டும். பொதுவாக இந்த புள்ளிகள் மற்றும் அதை இணைக்கும் உறுப்புகள் நம் பாதத்தில் உள்ளது. இது பற்றிய விவரங்கள் அக்குபஞ்சர் பற்றிய ஆய்வுகள் அல்லது உரைநூல்களில் காணக் கிடைக்கின்றன.                                          

இறைவன் மிகவும் அற்புதமாக நம் உடலை வடிவமைத்துள்ளா
ன் . அவன் நாம் எப்போதும் இந்த புள்ளிகள் தரையில் படுமாறு நம்மை நடக்க செய்துள்ளான். இவ்வாறு நடக்கும் போது நம் உடல் உறுப்புகள் அனைத்தும் சுறுசுறுப்படைகின்றன.
அதிகாலையில் வெறும் காலில் நடப்பது நம் எலும்புகளுக்கும் உடம்பிற்கும் நல்லது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன, வெறும் காலில் நடக்கும் போது கால்தசைகள் இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
                                

வெயில் காலங்களில் அதிகாலையில் புல்வெளியில்அல்லது இலை தழைகளின் மேல் நடக்கும் போது உடல் குளிர்ச்சி அடைகிறது.
இயற்கை எழில் மிக்க பூங்காக்களில் நடக்கும் போது கால் வலி நீங்க துணைபுரிவதோடு மனமும் இலேசாகிறது.
எனவே தினமும் நடப்போம்!

--------------------------------------------------------------------------------------------------நன்றி:தமிழ்வளம்

ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!!

                       


ஈஸ்டர் தீவு, தென் அமெரிக்கா நாட்டிற்கு அருகே உள்ள குட்டி தீவு. 17ஆம் நாற்றாண்டில் இந்த தீவு ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இத்தீவு 37 அடி உயர மிகப் பிரம்மாண்டமான சிலைகளுக்கு பெயர் போனது. அத்தீவு ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. தற்பொழுது அத்தீவிலே ஒரு மரம் கூட கிடையாது, ஒரே வகையான புல் வகை மட்டுமே உள்ளது. மொத்தம் 60ற்கும்மேற்பட்ட 200 டன் எடை கொண்ட பிரம்மாண்ட சிலைகள் இருக்கின்றன.இத்தீவுக் கண்டுபிடிக்கப்பட்ட புதிதில், இந்த சிலைகள் எல்லாம் எவ்வாறு வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன என்பது புரியாத புதிராக இருந்ததது.
                         

இத்தீவில் கி.பி. 200 ஆண்டில் 2000 மக்கள் வசித்ததாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், இன்றோ வெறும் இரு நூறுக்கும் குறைவான மக்களே வசிக்கின்றனர். 2000 மக்கள் கி.பி. 200 ஆண்டிலே வசித்தால் இப்பொழுதுஅதற்கும் அதிகமாக மக்கள் வசிக்க வேண்டும் அல்லவா? மக்கள் தொகை குறைவதற்கான காரணம் என்ன? மற்றும் எவ்வாறு இந்த சிலைகளை தொழில்நுட்பமோ கொண்டு சென்றனர்? என்ற கேள்விகள் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தின.


                         

கேள்விக்கு பதில் தேடும் விதமாக, அத்தீவில் தொல்பொருள், தாவரவியல் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். நிறைய மரங்களும், உயிரினங்களும் அத்தீவில் இருந்தன என்பதைக் கண்டறிந்தனர். புவியைத் தோண்டி ஆராய்ந்தபோது, நிறைய விதைகள், பறவைகள் மற்றும் வேறு பல உயிரினங்களின் எச்சங்களும், தொன்மங்களும் கிடைத்தன.

இவையெல்லாவற்றையும் விட உருளை வடிவிலான மரம் ஒன்றின் விதையும் கிடைத்தது. இன்று அம்மரம் இவ்வுலகில் இல்லை. அவற்றின் வழி தோன்றலான, சில மரங்களும், அம்மரத்தின் குடும்ப மரங்களும் உள்ளன. எவ்வாறு உருளை மரம் காணாமல் போனது? பல வகை உயிரின்ஙகள் என்ன ஆயின என்பது விஞ்ஞானிகளுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்தது. பல்வேறு ஆய்வு முடிவுகளை மேற்கொண்ட பின், சில உண்மைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ஈஸ்டர் தீவு பழங்குடியினர் டால்பின் மீன்களை விரும்பி உண்டனர். கடலின் ஆழப் பகுதியில் தான் டால்பின்கள் கிடைக்கும். ஆழப்பகுதியில் மீன் பிடிப்பதற்காக உருளை மரங்களை வெட்டி, கட்டு மரம் செய்வதற்கு பயன்படுத்தினர்.டால்பின் கறி சுவை காரணமாக, நிறைய கட்டுமரங்கள் செய்தனர். அதிகமான கட்டுமரங்கள் தேவைப்பட்டதால், நிறைய மரங்களை வெட்டினர்.

                              

நாகரீகத்தின் உச்சமாக கலைகள் வளர ஆரம்பித்தன. ஈஸ்டர் தீவு மக்கள் சிற்பக் கலையில் கை தேர்ந்து விளங்கினர். அவர்கள் மிகவும் பிரம்மாண்டமான சிலைகளை செய்தனர்.அவர்கள் செய்த சிலைகளின் எடை 200 டன்னிற்கும் மேலாக இருந்தது. சிலைகளை தீவின் எல்லையோரங்களில் நிறுவினர். சிலைகளை நகர்த்தி செல்வதற்கு அவர்கள் உருளை மரங்களை வெட்ட ஆரம்பித்தனர். மனித பேராசை காரணமாக, அளவு தெரியாமல் உருளை மரங்களை வெட்டினர். உருளை மரங்கள் மீண்டும் இனப்பெருக்கம் செய்து பெருக முடியாத அளவிற்கு வெட்டிச் சாய்த்தனர்.அத்தீவில், ஒரு கால கட்டத்தில் உருளை மரங்களே இல்லாமல் போனது.

உருளை மரங்கள் அழிந்தபின், அத்தீவில் இருந்த ஆறு பறவை இனங்கள் அழிந்து போயின. அவை அழிந்த பின் தான் தெரிந்தது; அப்பறவை இனங்கள் அனைத்தும் உருளை மரங்களைச் சார்ந்து இருந்தன. பறவை இனங்கள் அழிந்தபின், தீவில் இருந்த தாவரங்கள் எல்லாம் அழிந்துவிட்டன. பறவைகள் உண்டு போட்ட பழத்தில் இருந்த விதைகளினால் தான், பெரும்பாலான செடி, கொடிகள் மற்றும் தாவரங்கள் வளர்ந்தன. தாவரங்கள் இனப் பெருக்கத்திற்கு காரணமான, பறவை இனங்கள் அழிந்ததால் அனைத்து தாவரங்களும் அழிய ஆரம்பித்தன. தாவர இனங்களை நம்பி வாழ்ந்த அனைத்து உயிரினங்களும் அழிய ஆரம்பித்தன.                               


உருளை மரங்கள் இல்லாததால், பழங்குடியின மக்களால் டால்பின்களை வேட்டையாட முடியவில்லை. தாவரங்களும் மற்ற அனைத்து பயிர் வகைகளும் அழிந்ததால், உணவு உற்பத்தியே இல்லாமல் போனது. உணவு தட்டுப்பாடு நிலவியது. இதையடுத்து ஏற்பட்ட பசி, பட்டினியாலும், உணவிற்கு ஏற்பட்ட சண்டையாலும் மக்கள் நிறைய பேர்கள் இறந்தனர்.

இங்கு ஒரு உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.உருளை மரங்களை பழங்குடியின மக்கள் உணவிற்காக பயன்படுத்தவில்லை. உணவிற்காக பயன்படாத ஒரு மரத்தை வெட்டியதாலே, ஒரு தீவில் மனித இனம் அழிந்தது. நாம் இன்று வாழும் வாழ்க்கையால், எவ்வளவு மரங்களை அழித்து கொண்டிருக்கின்றோம், அதன் மூலம் எவ்வளவு பிரச்சினைகள் வரும் என்பதை உணர்த்துவதற்காக, பகிர்ந்து கொள்ளப்பட்டது.

................................................................................................................................இன்று ஒரு தகவல்

உதட்டு சாயம் போட்டு சாவைத் தேடும் சகோதரிகளே??? எச்சரிக்கை!

                 

பெண்கள் விரும்பும்உடல் அலங்காரத்தில்முக்கிய பங்கு வகிப்பது, உதட்டுச்சாயம். அந்த உதட்டுச் சாயம் உயிரை காவு வாங்கும் என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.

"நாங்க ஒன்னும் முழுங்கிட மாட்டோம்...அதுனால எங்களுக்கு ஒன்னும்பிரச்சினை கிடையாது" என்று நினைக்கின்றீர்களா? இதை போட்டாலே உங்களுக்கு ஆபத்துதான் என்று சொல்கின்றது..அமெரிக்காவின் மருத்துவ ஆய்வு.
என்னாங்கடா இது வம்பா போச்சு? உதட்டுச் சாயத்தை கண்டுபிடிச்சதே அவனுங்கதான்...இப்போ அவனுங்களே இது ஆபத்து னு எப்படி சொல்றானுங்க? நியாயமான கேள்விதான்...

உதாரணமாக சொல்லப் போனால் அமெரிக்காவின் "ரெட் எர்த்" என்ற நிறுவனம் முன்னர் உதட்டுச் சாயத்தின் விலையை 67 டாலர் என்று அறிவித்தது. தற்போது வெறும் 10 டாலருக்கு அதிரடியாக குறைத்துள்ளது. 57 டாலரை குறைத்து அது எப்படி லாபம் சம்பாதிக்க முடியும்? அதில்தற்போது லீட் என்னும் வேதியியல் பொருளை அதிகம் கலப்பதால் விற்பனையில் அதிரடி தள்ளுபடி செய்திருக்கின்றது. லீட் புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டது.

உதட்டுச் சாயத்தை மிக அடர்த்தியாக பயன்படுத்துவோருக்கு மிக விரைவினில் மார்பக புற்று நோய் உருவாகின்றது என்றும் கண்டுபிடித்திருக்கின்றார்கள்.

                                          

CHRISTIAN DIOR
LANCME
CLINIQUE
Y.S.L
ESTEE LAUDER
SHISEIDO
RED EARTH (Lip Gloss)
CHANEL (Lip Conditioner)
MARKET AMERICA-MOTNES LIPSTICK.

இதை தமிழில் எழுத முடியாததற்கு மன்னிக்கவும்...மேற்கொண்ட ரகங்கள் அனைத்தும் லீட் என்னும் வேதியியல் பொருள் கலக்கப்படும் உதட்டுச் சாயங்களை கொண்டதாகும்.

நம்ம ஊருலதான் இந்த பேரே இருக்காதே..அப்போ யூஸ் பண்ணலாமா? அதுல லீட் கலந்திருக்குன்னு எப்படி கண்டுபிடிக்கிறது? அதுக்கு ஒரு வழி இருக்கு!
இப்படிப்பட்ட உதட்டுச் சாயத்தை கொஞ்சம் கையிலே தேய்ச்சிட்டு அதுல உங்க மோதிரத்தை வைச்சு தேய்ச்சீங்கன்னா அது கொஞ்ச நேரத்துல கருப்பு கலரா மாறிடுமாம். அப்படி மாறிடுச்சுனா அதுல லீட் என்னும் வேதியியல் பொருள் கலந்திருக்குன்னு அர்த்தம்.


அதுமட்டுமில்லாம இந்த லீட் கலந்த உதட்டுச் சாயம் அதிக நேரம் நீடிச்சு நிற்குமாம்."லீட்" ல டை ஆக்சின் கார்சினொஜென்ஸ் புற்றுநோயை உருவாக்குமாம்.
நீங்கதான் சாயம் போடாமலே ரொம்ப அழகா இருக்கீங்களே? அப்புறம் எதுக்கு அந்த சாயம்? இப்போ சொல்லுங்க...சாயத்தை போட்டு சாவை வரவழைக்கனுமா என்ன? 

மவுன்ட் சினாய் மருத்துவமனை, டொராண்டோ
இந்த தகவலை வழங்கியது மருத்துவர். நாஹித் நேஹ்மான்.
--------------------------------------------------------------------------------------------------------


some of the top brands namely, Mac, Dior, L’Oreal, NARS, Cover Girl, and Maybelline were also on the top list of lipsticks with the most number of parts per million (ppm). They have found 400 lipstick shades positive with lead, which is a harmful heavy metal and when ingested daily (even with small amounts), may affect the brain’s performance since it builds up over time and the lead content stays with you.

Here’s a link of the 400 lipsticks positive with lead:

http://www.fda.gov/Cosmetics/ProductandIngredientSafety/ProductInformation/ucm137224.htm#expanalysesநன்றி:மின்சாரம் வலைதளம்

பலாப்பழத்தில் உள்ள சுளைகள் எண்ணிக்கை அறிய!!!


                       

சங்க காலத்திலேயே எழுதப்பட்ட கணக்கதிகாரம் என்ற நூலில் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது.
"பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை."


- கணக்கதிகாரம்-


புதிய உலகம்

தாழ்வு மனப்பான்மை (inferiority complex)
                               

தாழ்வு மனப்பான்மை (inferiority complex) என்பது தன்னைத்தானே குறைத்து மதிப்பிடுகின்ற ஒரு தன்மை. திருப்தியின்மையானால் எழுகின்ற உணர்வு. பெரும்பாலும் தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் தம்மைப் பிறருடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் தாம் குறைவானவர்கள், கீழ்நிலையில் உள்ளவர்கள், எதற்கும் பிரயோசனம் இல்லாதவர்கள் என்றே தம்மைப் பற்றிக் கருதுவார்கள். பலர் மனஅழுத்தத்தில் உழல்வார்கள். தற்கொலை செய்து கொள்ளக் கூடிய அபாயம் இவர்களில் உண்டு.
(கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.)

உங்களிடம் தாழ்வு மனப்பான்மை இருந்தால் முதலில் அதை நீங்கள் ஒழிக்கவேண்டும். 
தாழ்வு மனப்பான்மைதான் உங்கள் முன்னேற்றத்திற்கான மிகப் பெரிய ததடைக் கல்லாகும்..தாழ்வு மனப்பான்மை ஒருவரது தன்னம்பிக்கையைத் தகர்த்து எறிந்து விடும். எதையும் தோல்விகரமான மனப்பான்மையிலேயே எண்ணத் தோன்றும்.சிலர் வறுமையான குடும்பத்தில் பிறந்து இருப்பார்கள். 

                           
                                             

பள்ளியில் படிக்கும்போதும் சரி கல்லூரியில் படிக்கும்போதும் சரி இவர்கள் வசதியான பிள்ளைகளுடன் சேர்ந்து படிக்க வேண்டிய சூழ்நிலை இருந்திருக்கும்.வசதியான பிள்ளைகள் அணிந்திருக்கும் உடைகள், செலவு செய்யும் மனப்பான்மை, உணவுப் பழக்க வழக்கங்கள் முதலியவை இவர்கள் மனதைப் பெரிதும் காயப்படுத்தி இவர்களுடைய தன்னம்பிக்கையை இழக்க வழி செய்கிறது. அதுவே அவர்களிடத்து தாழ்வு மனப்பான்மை உண்டாகக் காரணம் ஆகிறது. 

இந்தத் தாழ்வு மனப்பான்மை காலப்போக்கில் மற்றவர்கள் தங்களை மதிக்க வேண்டும் பாராட்ட வேண்டும் என்ற ஆசையினால் நியாயத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட ஆரம்பித்து விடுகிறார்கள். 
காலப்போக்கில் உண்மை தெரிந்த உடன் மிகவும் மனம் நொடிந்து போய் எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் அவ நம்பிக்கையுடன் ஈடு படுகின்றனர். 

தாழ்வு மனப்பான்மை உங்கள் தோற்றத்தையே மாற்றி மற்றவர்கள் உங்களை வெறுக்கும் அளவுக்கு செய்து விடும். 


                                                                


சிலருக்குப் படிக்கும் காலத்திலேயே தாழ்வு மனப்பான்மை உண்டாகிவிடும். அதன் விளைவாகச் சரியாகப் பாடங்களில் கவனம் செலுத்தமுடியாமல் போய் குறைவான மதிப்பெண் எடுப்பார்கள். மனம் நொந்து போய் இனி நம்மால் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியாது என்ற தவறான முடிவுக்கு வந்து விடுவார்கள். 
பள்ளியில் நன்றாகப் படிக்காத எத்தனையோ பேர் நாட்டில் முதல் மந்திரிகளாகவும் பிரதம மந்திரிகளாகவும் இருந்துள்ளார்கள். 
பள்ளிப் படிப்பு என்பது ஒருவருடைய வாழ்க்கையை ஓரளவு தான் நிர்ணயம் செய்யும். ஒருவருடைய வளமான வாழ்க்கையைத் தீர்மானம் செய்ய வாழ்க்கையில் எத்தனையோ வழிகள் உள்ளன.

உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பதெல்லாம் சுய நலம் உள்ள மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டவை. படைப்பில் எவரும் உயர்ந்தவர் அல்ல தாழ்ந்தவர் அல்ல. அனைவருமே சமம். 
இது போன்று தாழ்வு மனப்பான்மை உண்டாகப் பல காரணங்கள் கூறலாம். தாழ்வு மனப்பான்மையை உங்கள் மனதிலிருந்து விரட்ட வேண்டும் என்றால் முதலில் நம்பிக்கை எனும் விதையை உங்கள் மனதில் விதிக்க வேண்டும். 

நாம் எவருக்கும் தாழ்ந்தவர் அல்ல என்ற நம்பிக்கை விதையை மனதில் ஊட்டித் தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்து எறியுங்கள். 


eegarai

அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன ?

அடிசில், 

அமலை, 
அமிந்து,
அயினி, 

அவி, 
அமிங், 
அடுப்பு, 
உணா, 
உண், 
கூழ்,
சதி,
சாதம், 
சொண்றி,
சோ,
துப்பு,

தோரி, 
பருக்கை,
பாத்து, 
பிசி, 
புகர்வு,
புழுங்கல்,
புற்கை, 
பொருத,
பொம்மல்,

மடை,
மிதவை,
முரல்,
வல்சி 


போன்ற பெயர்கள் சங்க இலக்கியங்களில்
அரிசிக்கு உள்ளன.


நன்றி: முகனூல்

அன்பான மனைவியே...!..கொஞ்சம் கேள் ..!


                   

1. நீங்கள் தான் உங்கள் வீட்டின் வாசனை. உங்கள் கணவன் வீட்டினுள் நுழைந்தது முதல் அந்த வாசனையை உணரச் செய்யுங்கள்.


2. கணவன் ஓய்வெடுக்கக்கூடிய இடங்களை தயார் செய்து வையுங்கள். எப்போதும் அழகிய தோற்றத்தில் சுறுசுறுப்பானவராக செயற்படுங்கள்.


3. கணவனுடனான தொடர்ச்சியான உரையாடலை, கலந்துரையாடலை பேணிக் கொள்ளுங்கள். வாதாட்டம், தனது கருத்தில் பிடிவாதம் என்பவற்றிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.


4. உங்களுக்கு ஷரீஆ விதித்துள்ள பொறுப்புக்களை விளங்கிக் கொள்ளுங்கள். பெண்களுக்கு இயல்பாக இருக்க வேண்டிய விடயங்களை ஷரீஆ உங்களுக்கு வழங்கியுள்ளது.


5. உங்கள் சத்தத்தை உயர்த்தாதீர்கள். குறிப்பாக கணவன் இருக்கும் போது.


6. நீங்கள் இருவரும் கியாமுல் லைல் போன்ற தொழுகைகளை ஒன்றாக நிறைவேற்றுவதில் கவனமாக இருங்கள். ஏனெனில் அது உங்கள் இருவருக்கும் சந்தோஷத்தையும் அன்பையும் ஒளியையும் ஏற்படுத்துகின்றது.


7. கணவன் கோபத்திலிருக்கும் போது நீங்கள் அமைதியாக இருங்கள். கணவனின் திருப்தியின்றி இரவில் உறங்கச் செல்ல வேண்டாம். ஏனெனில் உங்கள் கணவன் தான் உங்களுக்கு சொர்க்கமும் நரகமும்.


8. கணவன் ஆடைகளை தெரிவு செய்வதில் உதவி செய்யுங்கள். அவருக்கு பொருத்தமான ஆடைகளை தெரிவு செய்து வழங்குங்கள்.


9. கணவனின் தேவைகளை விளங்கிக் கொள்வதற்கும் அவருடன் அழகிய முறையில் பழகுவதற்கும் நேரத்தை ஒதுக்குங்கள்.


10. உங்களுடைய தோற்றத்திலும் உடையிலும் கவனம் செலுத்துங்கள்.
                     

11. உங்களுடைய கணவன் தனது அன்பை, விருப்பத்தை வெளிப்படுத்தும் வரை காத்துக் கொண்டிருக்காதீர்கள்.


12. ஒவ்வொரு இரவிலும் கணவனுக்கு புதுமணப் பெண்ணைப் போல தயாராகி தோற்றமளியுங்கள். கணவனை முந்தி நீங்கள் உறங்கச் செல்ல வேண்டாம்.


13. கணவன் அழகிய முறையில் உங்களை எதிர் கொள்வார் என எதிர்பார்க்க வேண்டாம். ஏனெனில் அவர் பல வேலைப்பளுக்களில் ஈடுபட்டவராக இருப்பார்.


14. எப்போதும் புன்னகையுடனும் அன்பை வெளிப்படுத்தும் உணர்வுகளுடனும் கணவன் பயணத்திலிருந்து திரும்பும் போது வரவேற்பளியுங்கள்.


15. கணவனின் திருப்தி அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறுவதற்கு முக்கியமானது என்பதை எப்போதும் ஞாபகத்தில் கொள்ளுங்கள். எப்போதும் தோற்றத்திலும் வார்த்தையிலும் அவரை வரவேற்கும் போது புதிய விடயங்களை செய்யுங்கள்.


16. ஏதாவதொரு விடயத்தை கணவன் கேட்கும் போது மறுக்கவோ அல்லது தாமதிக்கவோ வேண்டாம். மாற்றமாக உற்சாகத்துடன் விரைவாக அதனை நிறைவேற்றுங்கள்.


17. வீட்டுத் தளபாடங்களை கணவன் பயணத்திலிருந்து திரும்பும் போது புதிய முறையில் ஒழுங்குபடுத்துங்கள். அதனை கணவனின் மகிழ்ச்சிக்காகவே செய்கின்றீர்கள் என்பதை உணர்த்துங்கள்.


18. வீட்டை அழகிய முறையில் நிருவகிப்பதற்கும் நேரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் முதன்மைப்படுத்த வேண்டிய விடயங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.


19. பெண்களுக்கு இயல்பாக இருக்க வேண்டிய திறமைகளை திறன்பட கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் அவை உங்களுடைய வீட்டிற்கும் உங்களது தஃவாவிற்கும் அவசியமானவையாகும்.


20. கணவன் வீட்டுக்கு கொண்டு வரும் எந்தவொரு பொருளாக இருந்தாலும் அவற்றை இன்முகத்தோடு பெற்றுக் கொள்ளுங்கள். அதற்காக நன்றி செலுத்துங்கள்.

         

21. வீட்டை சுத்தமாக வைப்பதிலும் ஒழுங்காக வைப்பதிலும் பேணுதலாக இருங்கள். சிலவேளை கணவன் அதனை உங்களிடம் எதிர்பார்க்காத போதும் கூட.


22. எப்போதும் திருப்திப்படுபவளாக இருங்கள். வீண் விரயங்களை விட்டும் தவிர்ந்திடுங்கள். மேலதிக செலவுகளை ஏற்படுத்தாதீர்கள்.


23. குடும்ப ஒன்று கூடல்களை பொருத்தமான நேரத்தில் ஏற்பாடு செய்யுங்கள்.


24. கணவன் நீண்டதொரு இடைவெளியின் பின்னர் வீட்டுக்கு வரும் போது அவரிடம் முறைப்பாடுகளை வேதனைகளை முன்வைக்காதீர்கள்.


25. குழந்தைகள் கணவனை வரவேற்கும் வகையில் தயார்படுத்தி வையுங்கள்.


26. குழந்தைகளைப் பற்றி கணவன் வீடு திரும்பியவுடன் அல்லது தூங்கியெழுந்தவுடன் அல்லது உணவு சாப்பிடும்போது முறையிடாதீர்கள்.


27. கணவன் குழந்தைகளுடன் உரையாடும் போது அல்லது ஏதாவதொரு விடயத்திற்காக அவர்களை தண்டிக்கும் போது நீங்கள் தலையிடவேண்டாம்.


28. குழந்தைகளுக்கும் தந்தைக்குமிடையில் சிறந்த தொடர்பை பேணிக் கொள்வதில் கவனம் செலுத்துங்கள்.


29. நீங்கள் எவ்வளவு தான் வேலைப்பளுவுடன் இருந்தாலும் குழந்தைகளை பராமரிப்பதில் பொடுபோக்காக இருப்பதில்லை என்பதை உணரச் செய்யுங்கள்.


30. குழந்தைகளுக்கு ஓய்வு கிடைக்கும் போது அவர்களது திறமைகளை வளர்ப்பதிலும் அவர்களுக்கு பிரயோசனமான விடயங்களை கற்றுக் கொடுப்பதிலும் கவனம் செலுத்துங்கள்.                  


31. உங்களுடைய பெண் குழந்தைகளுக்கு சிறந்த தோழிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவர்களது ஒவ்வொரு பருவத்திலும் ஏற்பட்டு வரும் மாற்றங்களை அவதானியுங்கள்.


32. சிறு குழந்தைகளின் ஆளுமை விருத்திக்கு தேவையான விடயங்களை செய்யுங்கள்.


33. குழந்தைகள் மீதும் கணவன் மீதும் உள்ள உங்கள் கடமைகளுக்கிடையில் நடுநிலைமையைப் பேணுங்கள்.


34. கணவனின் பெற்றோருக்கு கண்ணியம் செலுத்துங்கள். அவரையும் அவரது பெற்றோரையும் பிரிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடாதீர்கள். அவரது பெற்றோர்களுக்கு பெறுமதியான பரிசுகளை வழங்குங்கள்.


35. கணவனின் குடும்பத்தினரை அன்புடனும் கண்ணியத்துடனும் நடத்துங்கள். அவர்களுக்கு பொருத்தமான சந்தர்ப்பங்களில் பரிசுப் பொருட்களை வழங்குங்கள்.


36. கணவனின் விருந்தினர்களை கவனிப்பதில் அக்கறை செலுத்துங்கள். திடீரென்று அவர்கள் வந்தாலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்யுங்கள்.


37. கணவனின் உபகரணங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.


38. எப்போதும் எந்தவொரு விருந்தாளியையும் அழைத்து வரும் நிலையில் வீட்டை வைத்துக் கொள்ளுங்கள்.


39. கணவன் தாமதமாக வரும் போது அவரை கண்டித்துக் கொள்ளாதீர்கள். மாற்றமாக அவரை எதிர்பார்த்திருந்ததை உணரச் செய்யுங்கள்.


40. வீட்டு ரகசியங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். 


இவை ஒரு மனைவி கவனத்தில் கொள்ள வேண்டிய சில விடயங்கள் மட்டுமே. ஆனால் மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விடயம் இருக்கின்றது.

" எப்போதும் நாம் அல்லாஹ்வின் திருப்தியின் பால் தேவையுடையவர்களாக இருக்கின்றோம். அதனை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது".

அதிரை பாக்ட்

இனிப்பான' விபத்து!...........Saccharin

                         

 

எதிர்பாராத தவறுகள் எப்போதும் தீமையில் முடிவதில்லை, அறியாமல் செய்யும் சில விஷயங்களால் மிகப் பெரிய நன்மைகளும் ஏற்படும். இது யாருக்குப் பொருந்துமோ இல்லையோ, உலகே வியந்து பாராட்டும் விஞ்ஞானிகளுக்கு கண்டிப்பாக பொருந்தும். ஆராய்ச்சியில் ஈடுபடும்போது, எதிர்பாராத விதமாக அல்லது அலட்சியமாக செய்யும் சில காரியங்கள் மிகப் பெரிய கண்டுபிடிப்புகளுக்கு காரணமாக இருந்துள்ளன. எதிர்பாராமல் நிகழ்ந்த சம்பவங்களால் உருவான அறிவியல் கண்டுபிடிப்புகளைத் தான் காணப் போகிறோம். 

தவறுகள் செய்தபின் கசப்பான அனுபத்தைத் தான் பெற முடியும்..ஆனால் 'இனிப்பான' அனுபவத்தைப் பெற்றனர் இரண்டு விஞ்ஞானிகள். 1878ம் ஆண்டு அமெரிக்காவின் மேரிலாண்ட் பகுதியிலுள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தில், நிலக்கரி தார் குறித்த ஆராய்ச்சி நடந்துவந்தது. கான்ஸ்டன்டின் ஃபால்பர்க் மற்றும் இரா ரெம்சென் ஆகிய இரண்டு விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகித்தனர்.

ஒருநாள் ஆராய்ச்சி செய்யும்போது, குறிப்பிட்ட ஒரு ரசாயன திரவம் அவர்கள் கைகளில் கொட்டியது. அது ஆபத்தில்லாத ரசாயனம் என்பதால், இருவரும் கண்டுகொள்ளாமல் வேலையைத் தொடர்ந்தனர். உணவு இடைவேளையின் போது, இருவரும் பிரெட் சாண்ட்விச் உண்ணத் தொடங்கினர். அப்போது, ரெம்சென் தான் உண்ணும் பிரெட்டில் இனிப்பு அதிகம் 
இருப்பதாகக் கூறினார். ஃபால்பர்க்கின் பிரெட்டும் அதே போல் இனிப்பு சுவையை அதிகம் கொடுத்தது.
                   
சாதாரணமான ஆட்களாக இருந்தால், அப்படியே சாப்பிட்டு விட்டு வேறு வேலை பார்க்கக் கிளம்பி விடுவார்கள். ஆனால் இவர்கள் விஞ்ஞானிகளாயிற்றே... உடனே பிரெட்டில் இனிப்பு சுவை எப்படி அதிகமாகியது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். பலநாள் ஆராய்ச்சியின் முடிவில், தங்கள் கைகளில் கொட்டிய பென்சோய்க் சல்ஃபினைடு (Benzoic Sulfinide) என்ற ரசாயனம் தான் இனிப்பு சுவைக்கு காரணம் என்று கண்டுபிடித்தனர்.


அந்த ரசாயனத்திலிருந்து செயற்கை சர்க்கரை கண்டுபிடித்து, அதற்கு சாக்கரின் (Saccharin) என்று பெயரிட்டனர். கலோரிகள் இல்லாத இந்த செயற்கை இனிப்பூட்டி தான், சர்க்கரைக்கு மாற்றாக உலகெங்கிலும் பயன்படுத்தப்படுகிறது.

அன்று விஞ்ஞானிகள் தங்கள் கைகளை சுத்தமாக கழுவி விட்டு சாப்பிட்டிருந்தால்? சாக்கரின் கிடைத்திருக்காதல்லவா...!


நன்றி அம்புலி.. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

புளூட்டோ என்ற கோள் தகுதி இழக்க காரணம் என்ன ?...புளூட்டோ பற்றி இன்னும் பல தகவல்கள்.புளூட்டோ, 1930 ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி கண்டறியப்பட்டது. கிளைடு டொம்பா, 22 வயது நிரம்பிய ஓர்இளைஞர் புளூட்டோவை கண்டுபிடித்தார்

புளூட்டோ என்ற பெயரை முன்மொழிந்தவர் யாரென்றால், இங்கிலாந்து, ஆக்ஷ்போர்டை சேர்ந்த 11 வயது நிரம்பிய வேநிஷியா பர்னி என்ற பள்ளி மாணவிதான். முறையாக 1930 ஆம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி புளூட்டோ என்ற பெயரை அறிவித்தனர். அன்றில் இருந்து 2006 ஆம் ஆண்டு ஆகஸ்டு 24 ஆம் தேதி வரை சூரியக் குடும்பத்தில் கடைக்கோளாக இருந்து வந்தது.

1975 ஆம் ஆண்டிற்கு பிறகு ஆற்றல் வாயிந்த தொலைநோக்கி தொழில்நுட்பம் நிறைந்த தொலைநோக்கியைப் பயன்படுத்தி விண்வெளியை வானவியலார்கள் ஆய்வு செய்து வந்தனர். எர்னஷ்ட் w.பிரவுன் என்பவர் புளூட்டோவை விட அளவில் பெரிய கோளைக் கண்டறிந்து அதற்க்கு ஜீனே என்று பெயர். அதற்க்கு பத்தாவது கோள் என்று பெயரிட்டார். மேலும் பல கோள்கள் கண்டறியப்பட்டன. எனவே தரப் படுத்தவேண்டிய சூழல் உருவானது. அப்போது கோள்கள் பாரிய புதிய கொள்கைகள் உருவாக்கப்பட்டது. அதில் ஒரு கோளிற்கு அருகில் எந்தப் பொருளும் இருக்கக் கூடாது அனா வரையறுக்கப்பட்டது புளூட்டோ, கோளுக்கான தகுதி இழக்க முக்கிய காரணம் என்பர். ஏனெனில் புளூட்டோ கோளிலிருந்து மிக அருகில் சந்திரன் உள்ளது என்று தெளிவு படுத்தி புளூட்டோ குள்ளக்கோள் (Dwarf Planet ) என குறிப்பிட்டனர். நன்றி: துளிர்
இதோ புளூட்டோ பற்றி இன்னும் பல தகவல்கள் :

 பள்ளி மாணவர் களுக்கான அறிவியல் பாடப் புத்தகத்தைப் புரட்டினால் சூரிய மண்டலத்தில் மொத்தம் ஒன்பது கோள்கள் உள்ளன என்று காணப் படும். ஆனால் இந்த ஒன்பது கோள்களில் ஒன்றான புளூட்டோ என்ற கோளை அது கோளே அல்ல என்று கூறி வானவியல் விஞ்ஞானிகள் கடந்த 2006 ஆம் ஆண்டில் தூக்கி எறிந்து விட்டார்கள்.

ஆனால் அமெரிக்காவில் இல்லினாய் மாகாண அரசு புளூட்டோவை இன்னமும் ஒரு கோளாகக் கருதுகிறது. அந்த மாநிலம் ஆண்டுதோறும் மார்ச் 13 ஆம் தேதியை புளூட்டோ தினமாகக் கொண்டாடுகிறது. காரணம் புளூட்டோ கோளைக் கண்டுபிடித்த கிளைட் டாம்போ அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர். புளூட்டோ 1930 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதே போல நியூ மெக்சிகோ மாகாணமும் புளூட்டோ தொடர்ந்து ஒரு கோளாக இருந்து வருவதாகக் கருதுகிறது. ஏனெனில் புளூட்டோவைக் கண்டுபிடிப்பதற்கு டாம்போவுக்கு உதவிய வான் ஆராய்ச்சிக்கூடம் அந்த மாகாணத்தில் தான் உள்ளது. ஆகவே நியூ மெக்சிகோ மாகாண சட்டமன்றம் 2007 ஆம் ஆண்டில் புளூட்டோ ஒரு கோள் தான் என்று அறிவித்து சட்டம் நிறைவேற்றியது. இதெல்லாம் பழங்கதை.

இப்போது புளூட்டோ பற்றிய புதிய செய்தி உண்டு. புளூட்டோ கோளுக்கு அய்ந்தாவது சந்திரன் உள்ளதாகக் கண்டுபிடித்துள்ளனர். பூமிக்கே ஒரு சந்திரன் தான் உள்ளது. நமது சந்திரனை விடச் சிறியதான் புளூட்டோ அய்ந்து சந்திரன்களைப் பெற்றுள்ளது என்பது வியக்கத் தக்க ஒன்றாகும்.

புளூட்டோவின் அய்ந்து சந்திரன்களில் சாரோன்,1978 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. நிக்ஸ், ஹைட்ரா ஆகியவை 2005 ஆம் ஆண்டிலும் 4 எனப்படும் சந்திரன் 2011 ஆம் ஆண்டிலும் கண்டுபிடிக்கப்பட்டன. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சந்திரனின் பெயர் 5 ஆகும். சாரோன் தவிர, மற்ற நான்கும் வானில் பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கும் ஹப்புள் டெலஸ்கோப் மூலம் கண்டுபிடிக்கப்பட்டன. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சந்திரனின் குறுக்களவு சுமார் 24 கிலோ மீட்டராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.                

முதலில் புளூட்டோ எங்கே இருக்கிறது என்று பார்ப்போம். புளூட்டோவுக்கு அப்பால் ஒரு கோளும் கிடையாது என்று சொல்கின்ற அளவுக்கு அது சூரிய மண்டல எல்லையில் உள்ளது. பூமியிலிருந்து புளூட்டோ குறைந்தது 430 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. புளூட்டோ அவ்வளவு தொலைவில் உள்ளதால் அது சூரியனை ஒரு தடவை சுற்றி முடிக்க 248 ஆண்டுகள் ஆகின்றன. சூரிய மண்டலத்தில் புளூட்டோ நீங்கலாக எல்லா கோள்களுக்கும் ஆளில்லா விண்கலங்கள் அனுப்பப்பட்டு அவை விரிவாக ஆராயப்பட்டுள்ளன. ஆகவே தான் அமெரிக்க விண்வெளி அமைப்பான நாஸா புளூட்டோவை நெருங்கி ஆராய்ந்து படங்களைப் பிடிப்பதற்காக நியூ ஹொரைசன்ஸ் என்ற ஆளில்லா விண்கலத்தை 2006 ஜனவரில் செலுத்தியது.

                 

அமெரிக்க விண்வெளிக் கேந்திரத்திலிருந்து மணிக்கு 58 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செலுத்தப்பட்ட அந்த விண்கலம். இதுவரை பாதிக்கும் அதிகமான தூரத்தைத் கடந்துள்ளது.. நியூ ஹொரைசன்ஸ் 2015 ஆம் ஆண்டு ஜூலை வாக்கில் தான் புளூட்டோவை நெருங்கும். ஆனால் அது புளூட்டோவில் தரை இறங்காது. நியூஹொரைசன்ஸ் விண்கலம் புளூட்டோவை வேகமாகக் கடந்து செல்லும். அப்போது விண்கலத்தில் உள்ள நுட்பமான கருவிகள் புளூட்டோவை ஆராய்ந்து தகவல்களை பூமிக்கு அனுப்பும். விண்கலத்தில் உள்ள படப்பிடிப்புக் கருவிகள். துல்லியமான படங்களைப் பிடித்து அனுப்பும். இதன் மூலம் புளூட்டோ பற்றி விஞ்ஞானிகள் மேலும் பல தகவல்களை அறிய இயலும்.

புளூட்டோவின் அய்ந்தாவது சந்திரன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சந்திரன்களில் எந்த ஒன்றின் மீதும் நியூஹொரைசன்ஸ் மோதாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது.அந்த விண்கலம் புளூட்டோவை நெருங்கும் நேரத்தில் மணிக்கு 48 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்வதாக இருக்கும். பொதுவில் எந்த விண்கலத்தையும் பிரேக் போட்டு நிறுத்த முடியாது. திடீரென அதன் பாதையை மாற்ற இயலாது. வேகத்தையும் திடீரென குறைக்க இயலாது. அந்த அளவில் விஞ்ஞானிகள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள அய்ந்தாவது சந்திரனையும் கணக்கில் கொண்டு முன்கூட்டியே நியூஹொரைசன் விண்கலத்தின் பாதையைத் தகுந்தபடி நிர்ணயிக்க வேண்டியிருக்கும். ஏனெனில் நெல்லிக்காய் அளவு உள்ள சிறிய பொருள் மோதினாலும் போதும். விண்கலத்துக்குப் பெரும் சேதம் ஏற்பட்டு விடும்.

நியூஹொரைசன்ஸ் விண்கலம் புளூட்டோவை சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிலிருந்து ஆராய்வது என்று திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அய்ந்தாவது கிரகம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பாக மேலும் அதிக தொலைவிலிருந்து ஆராயும் வகையில் அதன் பாதை மாற்றப்படலாம். சரி, புளூட்டோ ஒரு கோளே அல்ல என்று சர்வதேச வானவியல் சங்கம் ஏன் தீர்ப்பளித்தது ஒரு கோள் என்றால் அது சில தகுதிகளைப் பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும் என்பது அச்சங்கத்தின் கருத்து. முதலாவதாக ஒரு கோள் என்றால் அது சூரியனைத் தனிப்பாதையில் சுற்றி வர வேண்டும். இரண்டாவதாக அது உருண்டையாக இருக்க வேண்டும். இந்த இரு தகுதிகளையும் புளூட்டோ பூர்த்தி செய்கிறது.

மூன்றாவது தகுதி ஒரு கோள் தனது வட்டாரத்தில், சுற்றுப்பாதையில் இருக்கக்கூடிய துண்டு துக்கடாக்களை தன் பால் ஈர்த்து அவற்றை கபளீகரம் செய்திருக்க வேண்டும். இந்த மூன்றாவது தகுதி புளூட்டோவுக்கு இல்லை என்பது சர்வதேச வானவியல் சங்கத்தின் கருத்து. நீண்டகாலம் மக்களால் கோள் என்று கருதப்பட்ட புளூட்டோவை இப்படி திடீரென தகுதி நீக்கம் செய்வது சரியல்ல என்பது பலரின் கருத்து. தவிர, சர்வதேச வானவியல் சங்க கூட்டத்தில் புளூட்டோ பற்றி முடிவு எடுக்கப்பட்ட போது மொத்த உறுப்பினர்களில் 40இல் ஒரு பங்கு உறுப்பினர்களே இருந்ததால் அது முறையாக எடுக்கப்பட்ட முடிவு ஆகாது என்றும் வாதாடப்படுகிறது. புளூட்டோ ஆதரவாளர்களின் இந்த வாதத்தில் நியாயம் இருப்பதாகத் தோன்றுகிறது.நன்றி: விடுதலை டாட் இன்

உலக அதிசயம் – மனித மூளை!

          

மூளையின் முன் வரிகளில் நம் மண்டைக்குள் என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்தபோது கார்ட்டெக்ஸ் என்னும் மேல்பட்டையிலேயே கால் இன்ச்சுக்கும் குறைவான ஆழத்தில் 800 கோடி நரம்புச் செல்களும், 16,000 கிலோ மீட்டர் நரம்பு நூல்களும் இருக்கின்றன.
[ஒரு கொரில்லாவைக் காட்டிலும் மனித மூளை மூன்று மடங்கு கனம். உடல் கனத்தில் அது நம்மைவிட மூன்று மடங்கு. குதிரை நம்மைவிடப் பத்து மடங்கு கனம். ஆனால், அதன் மூளை கனம் நம்மில் பாதி. யானையின் மூளை நிச்சயமாக நம் மூளையைவிட மூன்றரை மடங்கு அதிக கனம்தான். ஆனால், அதன் உடல் கனத்தோடு ஒப்பிட்டால் விகிதாச்சாரத்தில் நாம்தான் அதிகம் (மனிதன் 2.5 சதவிகிதம், யானை 0.2 சதவிகிதம்). 
அதனால்தான் நம்மைப் போன்ற அற்பர்கள் பேச்சைக் கேட்டு சர்க்கஸில் பயந்துகொண்டே ஃபுட்பால் ஆடுகிறது யானை.]

ஒரு விமர்சனம் – ஆச்சரியத்தை அறிந்துகொள்வதற்கு.
குழந்தைக்குத் தாய் முத்தம் தருவது,
நம் உடல் உஷ்ணம் 98 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அருகில் இருப்பது,
ஊசிக்காதில் நூலைச் செருகுவது,
கம்பிமேல் நம்மில் சிலர் நடப்பது,
உப்பு – புளிப்பு – தித்திப்பு எல்லாம் உணர்வது,
“தலைவர் அவர்களே! தாய்மார்களே!” என்று அரை மணி சொற்பொழிவது, நல்லது – கெட்டது – குற்றம் – பாவம் என்பதையெல்லாம் தீர்மானிப்பது,
“பத்துப் பேர் ஒரு வேலையை எட்டு நாட்களில் செய்தால் எட்டுப் பேர் இரண்டு வேலையைச் செய்ய எத்தனை நாள்?” போன்ற கணக்குகள் போடுவது, செக்ஸ் உணர்ச்சி – தியானம் இவை அனைத்துக்கும் காரணம் ஒரு இரண்டு எழுத்துச் சமாசாரம் – மூளை!


ஏன், இந்த பாராவை எழுதியதும் மூளைதான். அர்த்தம் பண்ணிக்கொண்டதும் மூளைதான்.
40,000 வருஷங்களாக நமக்கு இதே சைஸ் மூளை இருந்து வந்திருக்கிறது. இதைக் கொண்டுதான் விவசாயம் கண்டுபிடித்தோம். முதல் சக்கரங்கள் செய்தோம். மாட்டைப் பழக்கினோம். காட்டை வெட்டினோம். வியாதிகளை வென்றோம். சந்திரனுக்குச் சென்றோம்.உடைத்துப் பார்த்தால் ஒரு ஓவர்சைஸ் அக்ரூட் போலிருக்கும் இந்த ஈர, அழுக்கு கலர் கொசகொசப்புக்கு உள்ளேயா இத்தனை சாகஸம்?

ஆரம்பத்தில் மனிதன் நம்பவில்லை. அரிஸ்டாட்டில் “இதயத்தில்தான் இருக்கிறது சூட்சுமம்” என்றார். “மூளை - சும்மா ரத்தத்தைக் குளிர வைக்க மாடிமேல் ஏ.ஸி.” என்றார்.
இன்னும் மூளையைப் பற்றிய முழு ஞானமும் நமக்கில்லை. ஆனால், நவீன மருத்துவம், கம்ப்யூட்டர் கருவிகள் உதவியுடன் நிறையவே தெரிந்து கொண்டுவிட்டோம்.

அண்மையில் PET என்னும் பாஸிட்ரான் எமிஷன் டோமா கிராஃபி என்கிற கருவியைப் பயன்படுத்தி, நாம் பேசும்போது – பார்க்கும்போது – படிக்கும்போது -நினைக்கும்போது… மூளையில் எந்த எந்த இடங்களில் நடவடிக்கை ஜாஸ்தியாகிறது என்று கலர் கலராகக் காட்டியிருக்கிறார்கள்!
உலகிலேயே மிக மிக ஆச்சரியம் – மனித மூளை. அதனுள் பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள், செல்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லையும் ஒரு மண்துகள் அளவுக்குப் பெரிசு பண்ணினால் ஒரு லாரி நிரம்பும்! இந்த செல்களில் ஆயிரம் கோடி நியூரான்கள், நரம்புச் செல்கள் வேறு. இவற்றுக்கிடையே ஓய்வில்லாத மின் ரசாயன நடனம்தான் நம் சிந்தனை! மனிதன் உயிர் வாழும்வரை இந்தச் செல்களிடையே மின் துடிப்புகள் திரிகின்றன.


 
                                 
இன்றைய கணிப்பொறிகளோடு ஒப்பிட்டால் மூளை ரொம்ப ரொம்ப நிதானம். ஆனால், கணிப்பொறியால் நீச்சல் அடிக்க முடியாது. டை கட்ட முடியாது. ஓரமாக பேப்பரைக் கிழித்துச் சுருட்டிக் காதை கிளீன் பண்ணிக்கொண்டு பொண்டாட்டியோடு வாக்குவாதம் பண்ண முடியாது.

இந்த மூளை என்னும் ஆச்சரியத்தை அறிந்துகொள்வதற்கு முன் மூளையின் மேலமைப்பு, சைஸ் இவற்றைத் தெரிந்துகொள்வோம்.
சராசரி மூளை சுமார் ஒண்ணரை கிலோ கனம் இருக்கிறது (பிறந்த முழு குழந்தையின் பாதி கனம்) அளவு? அதுவும் சுமார் ஒண்ணரை லிட்டர் (1,400 மி.லி).

ஆனால், மூளை அளவு குழுவுக்குக் குழு வேறுபடுகிறது. ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறுபடுகிறது. பெண்களுக்கு மூளை கொஞ்சம் குறைவு (அளவில்தான். காரணம், பெண்களே கொஞ்சம் சைஸ் குறைவானவர்கள் – ஆண்களோடு ஒப்பிடும்போது).
ஆனால், சைசுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகச் சொல்ல முடியவில்லை. அப்படிப் பார்த்தால் எஸ்கிமோக்கள்தான் அதிபுத்திசாலிகளாக இருக்கவேண்டும். அவர்களுக்கு மூளை ரொம்பப் பெரிசு. அனடோல் ஃப்ரான்ஸ் என்னும் மிக புத்திசாலி எழுத்தாளருக்குச் சின்னதாக இருந்தது மூளை (ஒரு கிலோதான்!). இன்னொரு பக்கம் திரும்பினால்… உலகிலேயே மிகப் பெரிய மூளை அளவு – ஒரு முட்டாளுக்கு இருந்திருக்கிறது!

தனிப்பட்ட மூளை கனத்துக்கும், புத்திசாலித்தனத்துக்கும் உறவில்லை. ஆனால், மூளை சைசுக்கும் பாடி சைசுக்கும் உள்ள உறவு முக்கியம். உயரமான ஆசாமிகள் மூளை கனமாக இருக்கலாம். ஆனால், குள்ளமானவர்களின் மூளை எடை குறைவாக இருந்தாலும், உடல் எடையோடு ஒப்பிடும்போது அதே விகிதம் அல்லது அதிக விகிதம் இருப்பதால் குள்ளமானவர்கள் புத்திசாலிகளாகவும் இருக்கலாம்.
ஒரு கொரில்லாவைக் காட்டிலும் மனித மூளை மூன்று மடங்கு கனம்.

உடல் கனத்தில் அது நம்மைவிட மூன்று மடங்கு. குதிரை நம்மைவிடப் பத்து மடங்கு கனம். ஆனால், அதன் மூளை கனம் நம்மில் பாதி. யானையின் மூளை நிச்சயமாக நம் மூளையைவிட மூன்றரை மடங்கு அதிக கனம்தான். ஆனால், அதன் உடல் கனத்தோடு ஒப்பிட்டால் விகிதாச்சாரத்தில் நாம்தான் அதிகம் (மனிதன் 2.5 சதவிகிதம், யானை 0.2 சதவிகிதம்). அதனால்தான் நம்மைப் போன்ற அற்பர்கள் பேச்சைக் கேட்டு சர்க்கஸில் பயந்துகொண்டே ஃபுட்பால் ஆடுகிறது யானை.


+                    
மூளை / உடல் கன விகிதத்துடனும் தீர்மானமாகப் புத்திசாலித்தனத்தை இணைக்க முடியவில்லை. அப்படிப் பார்த்தால் வீட்டுச் சுண்டெலியும் முள்ளம்பன்றியும் ரொம்ப புத்திசாலிகளாக இருக்கவேண்டும். எலிப்பொறிக்குள் வடையைத் தின்றுவிட்டு ‘ஸாரி‘ என்று சுண்டெலி லெட்டர் எழுதி வைக்கவேண்டும்! அதுபோல் முள்ளம் பன்றி ‘நான் பன்றியும் அல்ல… என் முதுகில் இருப்பது முள்ளும் அல்ல!‘ 

என்று புதுக்கவிதை (ஒவ்வொரு வரியையும் இரண்டுமுறை) படிக்கவேண்டும்! ஏனெனில், இவை இரண்டும் மனிதனைவிட மூளை / உடல் கன விகிதாச்சாரத்தில் அதிகம்.
எனவே எடை, சைஸ், விகிதாச்சாரம் இவற்றைவிட உள்ளே, சமாசாரத்தில் எத்தனை அடர்த்தி, எத்தனை மடிப்பு என்று கவனித்தால் மனிதன்தான் முதல்! நம் மூளைக்கு உள்ளே இருக்கும் சிக்கலில்தான் இருக்கிறது சூட்சுமம்!
நம் மூளை கனம் எப்போதும் ஒரே எடை இருப்பதுமில்லை. பிறந்ததில் ஆரம்பித்து மூன்று மடங்கு அதிகமாகிறது இளமையில். அதன் பிறகு வருஷத்துக்கு ஒரு கிராம் தலை கனம் குறைகிறது!
கொஞ்சம் சுவாரஸ்யமான புள்ளி விவரங்களைப் பார்க்கலாம்…
மிக அதிக எடையுள்ள மனித மூளை & 2049 கிராம்.

ஜோனாதன் ஸ்விஃப்ட் (கலிவர்ஸ் யாத்திரை எழுதிய எழுத்தாளர்) 2000 கிராம்.
சராசரி மனிதன் 1349 கிராம்.
அனடோல் ஃப்ரான்ஸ் (பிரெஞ்சு எழுத்தாளர்) 1017 கிராம்.
மைக்ரோ ஸெஃபாலிக்ஸ் எல்லாம் பிறவியில் மாங்காய்த் தலையர்கள் 300 கிராம்.
பாணலி கட் மாதிரி சுற்றி நம் மண்டையோட்டை வெட்டி ‘டாப்‘ பைக் கழற்றிவிட்டுப் பார்த்தால் மூளை இப்படித்தான் இருக்கும் மடிப்பு மடிப்பாக, பாளம் பாளமாக, கசங்கி!

மூளை, ஸ்பைனல் கார்டு என்னும் முதுகுத்தண்டிலிருந்து முளைக்கிறது. ஒருவாறு முட்டைக்கோஸ் தண்டிலிருந்து மடிப்பு மடிப்பாக இலைகள் வளர்வதுபோல அல்லது வெங்காயம் போல… இதை மூன்று பாகங்களாக மேம்போக்காகப் பிரிக்கிறார்கள். முன் மூளை, நடுமூளை, பின் மூளை. முன் மூளை என்பது ஸெரிப்ரல் ஹெமிஸ்ஃபியர் என்று இரண்டு பாதிகளாக இருக்கிறது. நடு மூளை என்பது கீழே இருந்துவரும் தண்டின் மேல்பகுதி. பின் மூளை என்பது நடுமூளையின் கீழ் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் மிச்ச சொச்ச சமாசாரங்கள்.

முன்மூளையில் இரட்டை இரட்டையாக தலாமஸ், ஹைப்போதலாமஸ், பேஸல் காங்லியா, மூக்கு – கண் இவற்றின் முடிவுகள் போன்றவை உள்ளன.

பின் மூளையில் ஸெரிபெல்லம், மெடுலா, ஒப்ளாங்கட்டா… அட, உட்காருங்க சார்… இந்தப் பெயர்களைப் பார்த்துப் பயப்படாதீர்கள். ஒவ்வொன்றையும் தனிப்பட்டு விளக்கத்தான் போகிறோம்.
முதலில் ஸெரிப்ரம் என்பதை மட்டும் மேலாகச் சுரண்டிப் பார்க்கலாம். முன் மூளையில் மடிப்பு மடிப்பாக மூளையின் நரம்பு அமைப்பில் முக்கால் பாகம் ஆக்கிரமிக்கும் இந்தப் பகுதிதான் நம் புத்திசாலித்தனத்துக்கு எல்லாம் காரணம். இந்த மடிப்புகளில் ஏதாவது அர்த்தம், காரணம் அல்லது ஒழுங்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், இந்த மடிப்புகளால் உள்ளே அடைத்து வைக்கக்கூடிய பகுதியின் பரப்பு அதிகமாகிறது என்னவோ உண்மை.

                               


இந்த மடிப்புகளில் சில, நம் எல்லோருக்கும் இருக்கிறது. மூளை – ஆதி நாட்களிலிருந்து வளர்ந்த விதத்துக்குத் தகுந்தபடி இந்த மடிப்புகளின் வடிவம் இருக்கிறது. இந்த மடிப்புகளினால் இந்தப் பகுதியை இரண்டு பாதியாகவும், அவ்விரண்டு பாதிகளை நான்கு சுளைகளாகவும் பிரிக்க முடிகிறது. இந்த முயற்சியெல்லாம் நம் வசதிக்காக, மூளையின் எல்லா இடங்களுக்கும் பேர் கொடுத்து அவற்றை அடையாளம் கண்டுகொள்ளத்தான். ஆனால், இன்ன இடத்தில் இன்னது நடக்கிறது என்று திட்டவட்டமாக இன்னும் சொல்ல முடியவில்லை.

இந்த இரட்டைப் பகுதியைக் குறுக்கே வெட்டினால் ஒரு ஆச்சரியம் தெரிகிறது. மேலாக கார்ட்டெக்ஸ் என்று ஒரு சுமார் நாலரை மில்லி மீட்டர் போர்வை அல்லது மரத்துக்கு மேல்பட்டை போலிருக்கும் பகுதியில் கசகசவென்று எண்ணூறு கோடி நரம்புச் செல்கள் உள்ளன. அவற்றுக்கு இடையே உள்ள இணைப்பைப் பார்த்தால் பிரமிப்பு! ஒரு கன இன்ச்சுக்குள் சுமார் 16,000 கிலோ மீட்டர் நுட்பச் சரடுகள்!
சிந்தனை சம்பந்தப்பட்ட அத்தனை காரியங்களும் கார்ட்டெக்ஸ் பகுதியில் நிகழ்வதால் இத்தனை அடர்த்தி..!

முன் வரிகளில் நம் மண்டைக்குள் என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்தபோது கார்ட்டெக்ஸ் என்னும் மேல்பட்டையிலேயே கால் இன்ச்சுக்கும் குறைவான ஆழத்தில் 800 கோடி நரம்புச் செல்களும், 16,000 கிலோ மீட்டர் நரம்பு நூல்களும் இருப்பதை உணர்ந்து போட்டது போட்டபடி விலகிவிட்டோம்.
இன்னும் கொஞ்சம் வெட்டிப் பார்ப்போம். இத்தனை சிக்கல் இந்த மேற்பரப்பில் எதற்காக எனில், இங்கேதான் தலைமைச் செயலகம் இயங்குகிறது. இங்கேதான், கடைசி அலசல் மூலம் பார்க்கிறோம்… கேட்கிறோம்… சிந்திக்கிறோம்… சித்திரம் வரைகிறோம்… எழுதுகிறோம்… கவிதை பண்ணுகிறோம்… பாடுகிறோம்!

இந்த மெல்லிய மேல்பட்டையைக் குறுக்கே வெட்டினால் ஆறு வரிசை தெரிகிறது. இந்த கார்ட்டெக்ஸ் பகுதியைத்தான் பழுப்பு சமாசாரம் என்று சொல்கிறார்கள். இதற்குக் கீழே போனால் நிறைய வெள்ளைப் பகுதி தெரிகிறது. இங்கே கோடிக்கணக்கான நரம்பு நூல்கள் அதி சிக்கலாகத் தென்படுகின்றன. இதிலே மூன்று வகை கனெக்ஷன் சொல்ல முடிகிறது. கொஞ்சங் கொஞ்சம் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் போல லோக்கல் இணைப்பு. நடு மையத் தண்டுக்கு இணைப்பு, மூளையின் இடது, வலது பாதியை இணைக்கும் கார்ப்பஸ் கலாஸ்ஸம் என்னும் நரம்புக் கயிறு. நாலு இன்ச் நீளமிருக்கும் இந்தப் பாலம் விசித்திரமானது.


                         

தாமஸ் ஆல்வா எடிஸன், ”உங்கள் உடலின் முக்கியப் பணி உங்கள் மூளையைத் தாங்கிச் செல்வது” என்றார்.
எடிஸன் அவ்வாறு சொல்லக்கூடியவர்… மூளையை நன்றாக உபயோகித்தவர்.
நியோ கார்ட்டெக்ஸ் என்னும் இந்த மேல்பகுதியின் சுருக்கம் ஒருவேளை எடிஸனுக்கு அதிகம் இருந்திருக்கலாம். ஆறு வயசுக்குள் நம் மூளை முழு சைஸில் 90 சதவிகிதம் வளர்ந்துவிடுகிறது… அதற்குப் பின் வளர்ச்சி என்பதெல்லாம் நாம் மேற்சொன்ன நியூரான்களுக்கு இடையேயான இணைப்புக்களின் விருத்திதான். இடம் குறைச்சல். எனவே, உள்ளுக்குள்ளே மடிப்புக்கள் அதிகரிக்கின்றன.

குழந்தை பிறந்தவுடன் அதன் மூளையின் மொழி சம்பந்தப்பட்ட பகுதிகளின் நியூரான் இணைப்பு அதிகமாக அடர்த்தியில்லாமல் இருக்க… ஆறு வயசுக்குள் அடர்த்தி அதிகரித்துவிடும்.
புத்திசாலித்தனம், அறிவு என்பதெல்லாம் இந்த நியூரான் இணைப்புகளின் சிக்கலில் இருக்கலாமோ என்று கருதுகிறார்கள்.

வலது இடது பாதி மூளைகளுக்கு இடையேயுள்ள கார்ப்பஸ் கலாஸ்ஸம் இணைப்பை வெட்டிப் பார்த்தார்கள். ஒரு ஆசாமிக்கு கால் கை வலிப்பு அதிகமாகி, கட்டுப்பாட்டுக்கு அடங்காமல் போக, ஒரு கடைசி முயற்சியாக இதை வெட்டிவிட்டார்கள். அவனுக்குக் குணமாகியது. ஆனால், சுபாவத்தில் விநோதமான மாறுதல்கள் ஏற்பட்டன.

ரோஜர் ஸ்பெர்ரி, மைக்கல் கஸானிகா என்று இரண்டு ஆராய்ச்சியாளர்கள் 1967-ல் செய்த பரிசோதனைகள், நம் மூளையின் வலது பகுதியும் இடது பகுதியும் தனித்தனியான முறைகளில் வளர்கின்றன. இந்த ‘கார்ப்பஸ் கலாஸ்ஸிம்‘ இல்லையேல், ஒரு பக்கத்துக்கு, மற்ற பக்கத்தின் அறிவு விருத்தியைப் பற்றித் தெரியவே தெரியாது‘ என்று நிரூபித்தன..நன்றி:கனவே...