Wednesday, November 7, 2012

அலர்ஜியால் அவஸ்தையா?

நன்றி :::::::நக்கீரன்:::::::::

இன்டர்நெட் நட்பால் சீரழியும் மாணவிகள்:இன்டர்நெட்  மூலம் நட்பு வலைவிரித்து இளம் பெண்களை வீழ்த்தி பணம் பறிக்கும் இ-பயங்கர வாதம் அதிகரித்து விட்டது. உலகளாவிய தொடர்புகளால் குற்றவாளிகளை பிடிப்பது சைபர் கிரைம் போலீசாருக்கு சவாலாக உள்ளது.
 
எளிய நகரங்களில் மட்டும் அல்லாது, சிறிய ஊர்களில் கூட இன்று இன்டர்நெட் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தவிர, வசதி படைத்தவர்கள் வீடுகளிலேயே இன்டர்நெட் இணைப்பை வைத்துள்ளனர். இன்டர்நெட் கலாச்சாரம் பெருகி விட்டது. இன்டர்நெட் நல்ல விஷயங்களுக்கு பயன்பட்டது போக, இன்று பல்வேறு குற்றங்களுக்கு ஊற்றுக் கண்ணாக மாறிப் போய் விட்டது.
 
சமூக விரோதிகள் விரிக்கும் வலையில் சிக்கி இளம் பெண்களும், குடும்ப பெண்ணும் வெளியில் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவிக்கின்றனர்.   குடும்ப கவுரவம், சமூக அந்தஸ்து இவற்றை கருதி பிளாக் மெயில் பேர் வழிகள் கேட்கும் பணத்தை, பொருளை கொடுத்து, வெளியில் தெரியாமல் மறைத்து விடுகின்றனர். இதுவே பிளாக்மெயில் பேர் வழிகளுக்கு உரமிட்டது போல் ஆகி விடுகிறது. இப்படி பல விஷயங்ககள் அமுக்கப்படுவதால், இன்டர்நெட் குற்றவாளிகளை பிடிப்பது சைபர்கிரைம் போலீசாருக்கு சவாலாக உள்ளது.
 
சமீபத்தில் சென்னையை சேர்ந்த 10 வயது பள்ளிச்சிறுமி இன்டர்நெட் மூலம் கிடைத்த நட்பு வலையில் சிக்கி, பல்வேறு அவஸ்தைகளை அனுபவித்த சம்பவம் இப்போது வெளியாகி உள்ளது.   சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் மகள் அபி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 10 வயதான இவள் நகரில் உள்ள பிரபல பள்ளியில் 5-ஆம் வகுப்பு படிக்கிறாள். இந்த வயதிலேயே இன்டர் நெட்டில் இவள் புகுந்து விளையாடுவதை பார்த்து இவளது பெற்றோர் பூரித்துப் போனார்கள்.
 
இவளது இ.மெயில் முகவரிக்கு தினமும் நிறைய மெசேஜ்கள் வந்தன. அந்த முகவரிக்கு இவளும் பதில் அனுப்புவாள்.   கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இவளது இ-மெயிலுக்கு உனது நட்பு தேவை என்று மெசேஜ் வந்தது. அதனுடன் அதை அனுப்பி இருந்தவர், தானும் ஒரு பள்ளி மாணவி என்றும், ஒரு சமயத்தில் அபியுடன் பள்ளியில் ஒன்றாக படித்தவள் என்றும் கூறப்பட்டு இருந்தது.
 
இதையடுத்து, அந்த முகம் தெரியாத பெண்ணை அபி நண்பராக ஏற்றுக் கொண்டாள். இருவரும் அடிக்கடி ஆன்-லைனில் பேசிக் கொண்டனர். இப்படியே தொடர்ந்து பழக்கம் சில நாளில் திசை மாறியது. நைசாக பேசி அபியை சில நடவடிக்கைகளுக்கு அவர் உட்படுத்தினாள்.
 
வெப்-கேமரா முன்பு தனது அங்கங்களை காட்டினாள். இதை விளையாட்டாகவே அபி நினைத்தாள்.   ஆனால், இவளது செய்கைகள் அனைத்தும் வெப்- காமிராவில் படம் பிடிக்கப்பட்டு, எதிர் முனையில் பதிவு செய்யப்பட்டது. இந்த விஷயத்தை அபி தன் பெற்றோரிடம் சொல்லவும் இல்லை, மகளின் நடவடிக்கைகளை அவர்கள் கண்காணிக்கவும் கிடையாது. இப்படியே 3 மாதங்கள் கடந்த நிலையில், அபியின் தந்தைக்கு மிரட்டல் இ- மெயில் வந்தது. அதில் ரூ.50 லட்சம் தரவேண்டும். இல்லை எனில் அபியின் ஆபாச வீடியோவை யூடியூப்பில் போட்டு விடுவேன். போலீசுக்கு போனால் நிலைமை இன்னும் விபரீதம் ஆகும்.
 
மற்ற இணையத்தளங்களிலும் ஆபாச வீடியோவை வெளியிடுவேன் என்றும் மிரட்டப்பட்டார். இதனால் போலீசுக்கு செல்ல தயங்கினார். பணம் பறிக்கும் கும்பலிடம் இருந்து தொடர்ந்து மிரட்டல் இ-மெயில்கள் வந்த வண்ணம் இருந்தன. அபியின் பெற்றோர், தனியார் துப்பறியும் ஏஜென்சியை அணுகி விபரத்தை தெரிவித்தனர். அவர்கள் சைபர் குற்றங்களை கண்டு பிடிப்பதில் கைதேர்ந்தவர்கள். அவர்கள் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.
 
இது பற்றி, தனியார் துப்பறியும் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
 
இது போன்று நிறைய புகார்கள் எங்களிடம் வந்துள்ளன. பேஸ்புக்கில் முதியவர்கள் கூட இளையவர் போன்று தோற்றமளிக்கும் வகையில் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இளம் பெண்களை ஏமாற்றுகின்றனர். நட்பு விலையில் விழச்செய்து பெண்களை பிளாக் மெயில் செய்வது, பணம் பறிப்பது போன்ற செயல்களில் இ-பயங்கர வாதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
 
நெதர்லாந்து, ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் சைபர் குற்றங்களை நவீன தொழில் நுட்பம் மூலம் சுலபமாக கண்டுபிடித்து விடுகின்றனர்.   ஆனால், இந்தியாவில் போலீசாருக்கு போதிய பயிற்சியும், நுட்பமும் இல்லாததால், சைபர் குற்றங்களை கண்டு பிடித்து நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் உள்ளது.
 
இணைய தளத்தில் சாட்டிங்கில்  ஈடுபடுபவர்கள் குறிப்பாக பெண்கள் முன் ஜாக்கிரதையாக கையாண்டால், இது போன்ற சிக்கல்களை தவிர்க்க முடியும். வெளிநாடுகள் அல்லது தூரத்தில் இருக்கும் தெரிந்து நட்பு மற்றும் உறவு வட்டாரங்களில் மட்டுமே இ-மெயிலில் பேச வேண்டும். முகம் தெரியாதவர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்வது, பின்பு பல சிக்கல்களுக்கு வழி ஏற்படுத்தி விடும்.
 
முகம் தெரியாதவர்களின் முகவரிக்கு எந்த சூழ்நிலையிலும் போட்டோவை அனுப்ப கூடாது. போட்டோவை வைத்து கூட மார்பிங்” முறையில் ஆபாசமாக சித்தரிக்க முடியும் எச்சரிக்கை மிகவும் அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

:::::::::::::::நன்றி ::::::::மாலைமலர்:::::::::::::

700 வருடம் பழமையான குழந்தையின் பதப்படுத்தப்பட்ட உடலை (மம்மி) திரும்ப பெற்றது பெரு நாடு


700 வருடம் பழமையான குழந்தையின் பதப்படுத்தப்பட்ட உடலை (மம்மி) திரும்ப பெற்றது பெரு நாடு


சுமார் 700 வருடங்களுக்கு முன்பு தென் அமெரிக்காவில் 'இன்கா கலாச்சார மக்கள்' வாழ்ந்து இருக்கிறார்கள். அதற்கு முந்திய காலத்திய பெரு நாட்டுக்கு சொந்தமான ஒரு குழந்தை மம்மியை, புராதானப்பொருட்கள் கடத்தல் கும்பல் ஒன்று கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பொலிவியாவிலிருந்து பிரான்சுக்கு கடத்தப்பட இருந்தது. அதை பொலிவியா அரசு அப்போது கைப்பற்றியது.

பெரு நாட்டின் கலாச்சாரத்தை பறைசாற்றும் இந்த குழந்தை மம்மியை மீட்க்கும் முயற்சியை பெரு நாடு தொடர்ந்து மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து பொலிவியா நாட்டின் கலாச்சார மந்திரி, இந்த முதுகு சாய்ந்தாவாறு உட்கார்ந்த நிலையில் இருக்கும் குழந்தை மம்மியை பெரு நாட்டிடம் முறைப்படி ஒப்படைத்தார். வேறொரு குழந்தையின் ஒரு காலுடன் இருந்த இந்த மம்மி பாதுகாப்பாக இருக்க லாமா மற்றும் அல்பகாஸ் விலங்குகளின் முடிகளால் ஆனா கம்பளியால் மூடப்பட்டிருந்தது. 

2 வயதான இந்த குழந்தை மம்மி ஆணா அல்லது பெண்ணா என்று ஆராய்சியாளர்களால் அறிய முடியவில்லை. எங்கள் வம்சம் மற்றும் பரம்பரையின் பெருமையை உலகுக்கு காட்டும் ஒரு சிறிய மாதிரியே இந்த குழந்தை மம்மி என்று பெரு கலாச்சார மந்திரி கூறுகிறார்.

முந்தைய இன்கா கலாச்சாரத்தின் மையமாக விளங்கிய பெரு நாட்டின் செராமிக்ஸ், வெள்ளி, தங்கம் மற்றும் அரிய ஓவியங்கள் திருடப்பட்டுவிட்டதாகவும் பெரு நாடு கூறியுள்ளது
 

:::::::::::::::நன்றி ::::::::மாலைமலர்:::::::::::::


லேப்டாப் பயன்படுத்தினால் ஆண்கள் உயிரணுவை பாதிக்கும்: மருத்துவ ஆய்வில் தகவல்


லேப்டாப் பயன்படுத்தினால்
 ஆண்கள் உயிரணுவை பாதிக்கும்: மருத்துவ ஆய்வில் தகவல்


இங்கிலாந்தில் உள்ள ஷாம்ஷயரை சேர்ந்தவர் ஸ்காட்லீட் (வயது 30). இவரது மனைவி லாரா. இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. மேலும் ஒரு குழந்தை பெற்று கொள்ள விரும்பினார்கள். ஆனால் நீண்ட நாட்கள் கடந்த பிறகும் லாரா கர்ப்பம் தரிக்கவில்லை. எனவே இருவரும் மருத்துவ ஆய்வு மேற்கொண்டனர். அதில் லாராவுக்கு எந்த குறையும் இல்லை என்பது தெரிய வந்தது. 

ஸ்காட்லீட்டுக்கு தான் குறை இருந்தது. அவருடைய உயிரணுவின் வால் பகுதி தலை பகுதியை சுற்றியபடி இருந்தது. இதனால் அந்த உயிரணுவால் நீந்தி சென்று கருமுட்டைக்குள் செல்ல முடியவில்லை. இதனால் தான் கருத்தரிக்கவில்லை என்று தெரிய வந்தது. 

ஏன் இப்படி ஆனது? என்று டாக்டர்கள் ஆய்வு செய்தனர். அவருடைய அன்றாட பழக்க வழக்கங்களை கேட்டனர். அதில் அவர் தினமும் 2 மணி நேரம் லேப்டாப் கம்ப்யூட்டரை தன்மடியில் வைத்து பயன்படுத்துவது தெரிந்தது. அதனால் ஏற்பட்ட வெப்பத்தால் தான் உயிரணு பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. அதிக நேரம் அடுப்படியில் நின்று சமையல் செய்யும் ஆண்களுக்கும் இதே போன்ற பாதிப்பு ஏற்படும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.


:::::::

நன்றி:

:::::::::::::மாலைமலர்::::::

உலக போலீஸ்காரர் போல செயல்பட்டால் அமெரிக்காவை தரை மட்டம் ஆக்குவோம்: தலிபான் எச்சரிக்கைஅமெரிக்கா அதிபராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் ஒபாமாவுக்கு ஆப்கானிஸ்தானில் செயல்படும் தலிபான் தீவிரவாதிகள் இணையதளம் மூலம் எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
 தலிபான் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முஜாகித் மூலம் வெளியிடப்பட்டுள்ள அந்த செய்தியில்,

 
’’மீண்டும் அதிபாராகி இருக்கும் ஒபாமாவுக்கு ஒன்றை நாங்கள் தெரிவித்து கொள்கிறோம். ஆப்கானிஸ்தான் மண்ணில் உங்கள் படைகள் தோல்வி அடைந்து உள்ளன. அதை நீங்கள் ஓப்புக்கொள்ள வேண்டும். எனவே அமெரிக்க படைகளை உடனடியாக இங்கிருந்து வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில் அமெரிக்காவை நாங்கள் தரைமட்டம் ஆக்குவோம்.
 
ஆப்கானிஸ்தானில் என்ன நிலைமை நிலவுகிறது என்பதை ஒபாமா புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து பொய் சொல்லி ஏமாற்ற கூடாது. எங்கள் புனித பூமியில் இனிமேலும் நீங்கள் இருக்க கூடாது. இனியாவது உலக போலீஸ்காரர் போல அமெரிக்கா செயல்படுவதை நிறுத்த வேண்டும். உங்கள் மக்கள் பிரச்சினைகளை மட்டும் நீங்கள் தீர்க்க பாருங்கள். உலக மக்களின் வெறுப்பை சம்பாதிக்க முயற்சிக்காதீர்கள்’’ என்று கூறப்பட்டுள்ளது.


நன்றி :::::::நக்கீரன்:::::::::

அமெரிக்க தேர்தல் : விளம்பரச் செலவு 356 கோடி


                                            
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட பராக் ஒபாமாவும், மிட் ரோம்னியும் தேர்தல் பிரசாரச் செலவுகளாக சுமார் ரூ. 356 கோடி செலவு செய்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வேட்பாளர்களுக்கிடையே கடும் போட்டி நிலவியதால் இரு கட்சியினரும் வெற்றி பெற கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளனர்.அதிகபட்சமாக, ஓஹோயோ மாகாணத்தில் ஒளிபரப்பு முதலிய செலவுகளுக்கு ரூ. 73 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃப்ளோரிடாவில் சுமார் ரூ. 66.5 கோடியும், விர்ஜினியாவில் சுமார் ரூ. 55 கோடியும் செலவு செய்யப் பட்டுள்ளன.
பிரசாரத்தின் முடிவில் ஒபாமா சுமார் ரூ. 130 கோடியும், மிட் ரோம்னி ரூ. 90 கோடியும் செலவிட்டுள்ளனர்.
தங்களது ஆதரவாளர்கள் செலவிட்ட தொகையுடன் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஒபாமா சுமார் ரூ. 206 கோடியும், குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட மிட் ரோம்னி சுமார் ரூ. 150 கோடியும் செலவிட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


நன்றி :::::::நக்கீரன்:::::::::
The 2012 presidential race: Ads, money and travel

While the whole nation votes, the Obama and Romney campaigns are concentrating on specific states during the presidential race. The campaigns have mostly put up ads in battleground states (think Ohio or Florida). They also happen to be the places where the candidates travel the most. However, the campaigns are raising money elsewhere (think California or New York). Use the map below to explore the money game and the strategy behind this election.

The data includes: Money spent on TV ads by the two campaigns since April 10, 2012, including some joint advertising with the Democratic and Republican National Committees, on a state and market level; money raised on a state and county level; CNN Poll of Polls on the national horserace and in battleground states; and a CNN count of campaign events in various states and cities since April 10, 2012. The data does not include fundraising and ad spending by entities like super PACs and other groups or committees. Sources: Kantar Media/CMAG (Ad Spending); Center for Responsiveness in Politics (Fundraising); CNN.வாழ்க்கையில் 3 வருஷத்தை 'கிச்சனிலேயே' கழிக்கும் பெண்கள்!

 Mothers Spend An Average Three Years Of Their Lives

லண்டன்: பெண்களை சமையல்கட்டிலேயே போட்டு முடக்கி வைக்கும் கெட்ட பழக்கம் இந்த நாளிலும் கூட முழுமையாக போகவில்லை. பெண்கள் என்றாலே கிச்சன்தான் அவர்களது உலகம் என்று நினைக்கும் ஆண்கள் நிறையவே இருக்கத்தான் செய்கின்றனர். சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தங்களது வாழ்நாளில் சராசரியாக 3 ஆண்டுகளை பெண்கள் சமையல் அறையிலேயே கழிக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சராசரியாக ஒரு வருடத்தில் 18 நாட்களை ஒரு பெண் சமையல் அறையில் கழிக்கிறாராம். ஒட்டுமொத்த வாழ்க்கையில் சராசரியாக 1117 நாட்கள் அதாவது 3 ஆண்டுகளுக்கும் மேலாக சமையல் அறையில் அவர் இருக்கிறாராம்.
18 முதல் 24 வயதுக்குட்பட்ட பெண்களில் பத்தில் 6 பேர் ஆண்கள் சமையல் அறையை நன்றாக நிர்வகிக்கிறார்கள், ஸ்டைலாக சமைக்கிறார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளனராம்.
அடுப்பு, சமையல்கட்டு, சாப்பாடு என்ற அளவிலேயே பெண்களைப் பார்த்து விட்ட ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்களின் நிலை பெரிய அளவில் இன்னும் மாறவில்லை என்று இந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது. பெரும்பாலான பெண்கள் இன்னும் சமையல் கட்டிலேயே உழன்று கொண்டிருப்பதாகவும் இது கூறுகிறது.
காலையில் சமைப்பது, மதிய சாப்பாடு, இரவுச் சாப்பாடு என்று ஒரு வாரத்தில் சராசரியாக 8 மணி நேரம் பெண்கள் சமையல் கட்டிலேயே இருக்கிறார்களாம்.
மொத்தம் 1000 தாய்மார்களிடம் இதுதொடர்பாக கருத்துக் கேட்டனர். ஒரு பெண் 63 வயது வரை வாழ்வதாக இருந்தால் அவர் சராசரியாக 1117 நாட்களை சமையல் அறையிலேயே கழிக்கிறார் என்று இந்த ஆய்வு கூறுகிறது.
சமையல் செய்வதற்கு மட்டும்தான் பெண்கள் சமையல் அறையில் இருப்பதில்லையாம். மாறாக ஓய்வெடுக்க நினைக்கும்போது கூட சமையல் அறையில் உட்கார்ந்தபடியே பேப்பர் படிக்கிறார்களாம். சிலர் வானொலி கேட்கிறார்களாம். அதாவது அவர்களுக்கே கூட சமையல் அறையை விட்டுப் பிரிந்து வர மனமில்லை என்று இந்த ஆய்வில் கலந்து கொண்ட பல பெண்கள் கூறியுள்ளனராம்.
தனியாக 2000 ஆண்களிடமும் சமையல் அறை குறித்து கேட்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட 18 முதல் 34 வயது வரையிலான ஆண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சமையல் அறையில் செலவிட விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
சமையல் விஷயத்தில் பெண்களைப் போலவே ஆண்கள் பலருக்கும் கூட அதிக விருப்பம் இருப்பதும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்ததாம். அதிலும் பல ஆண்கள் பெண்களின் மனதைக் கவருவதற்காக சமைக்க விரும்புவதாக தெரிவித்தனராம்.

 thanks:::::;Greynium Information Technologies Pvt. Ltd.::::::::

அமெரிக்க அதிபர் தேர்தலில் விண்வெளியிலிருந்து வாக்களித்தார் சுனிதா வில்லியம்ஸ்..!

 Sunita Williams Votes Us Prez Election
ஹூஸ்டன்: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக இ-மெயில் மூலம் வாக்களித்தார் சுனிதா வில்லியம்ஸ்.
அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தற்போது சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்தில் தங்கி பணியாற்றி வருகிறார். தற்போது, அவர் சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்தின் பொறுப்பாளராகவும் இருக்கிறார். இந்த நிலையில் நேற்று அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்தது. அதில், விண்வெளியில் இருந்தபடியே சுனிதா வில்லியம்ஸ் ஓட்டு போட்டார்.
கடந்த 1997ம் ஆண்டு சட்ட திருத்தத்தின்படி டெக்கான் மாகாணத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் தாங்கள் இருக்கும் இடத்தின் இருந்தே மின்னஞ்சல் மூலம் ஹுஸ்டனில் உள்ள நாசா விண்வெளி மையத்துக்கு தங்களின் வாக்குகளை பதிவு செய்யமுடியும்.
அதன்படி, சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்தேபடியே மின்னஞ்சல் மூலம் வாக்களித்தார்.
கடந்த 2004ம் ஆண்டு அமெரிக்கா அதிபர் தேர்தலில் லிராய் சியா என்பவர்தான் முதன் முதலாக விண்வெளியில் இருந்தபடி வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த உணவில் லிமிட் வேணும் தெரியுமா?


இன்றைய அவசர காலத்தில் எந்த ஒரு ஆரோக்கியமான உணவையும் தேர்ந்தெடுத்து சாப்பிடும் பொறுமை யாருக்கும் இல்லை. அதனால் நிறைய மக்கள் இளம் வயதிலேயே பல நோய்களுக்கு ஆளாகின்றனர். அதிலும் அவ்வாறு ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகம் உணவில் சேர்ப்பதால், இதய நோய், இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனை போன்றவை ஏற்பட்டு, இதனால் உடல் நிலை மிகவும் மோசமாக இருக்கின்றன.
இவை அனைத்திற்கும் காரணம் நாம் உண்ணும் உணவில் சரியான கவனம் இல்லாததே ஆகும். மேலும் எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும் ஒரு சில உணவுகளை எந்த ஒரு கட்டுப்பாடுமின்றி வாங்கி சாப்பிட்டுவிடுகிறோம். அவ்வாறு கட்டுப்பாடு இல்லாததால், பலருக்கு திருமணத்திற்கு முன்னரே பல நோய்கள் வந்துவிடுகின்றன. அதனால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியாமல் மிகவும் அவஸ்தைப்படுகின்றனர்.
அதற்காக எந்த ஒரு உணவையும் சாப்பிடக் கூடாது என்று சொல்லவில்லை, உண்ணும் உணவில் கட்டுப்பாடு வேண்டும் என்று தான் சொல்றோம். அவ்வாறு கட்டுப்பாட்டுடன் இருந்தால், எந்த ஒரு நோயும் உடலை தாக்காது. அதிலும் நமது முன்னோர்கள் சொல்லும் ஒரு பழமொழியான "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான்" என்று சரியாகத் தான் சொல்லியிருக்கிறார்கள். ஆகவே அளவோடு சாப்பிட்டால், வளமோடு வாழலாம். இப்போது எந்த உணவுகளில் கட்டுப்பாடு வேண்டும் என்று பார்ப்போமா!!!

காப்ஃபைன்

நிறைய ஆய்வில் காப்ஃபைன் நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டால், உடலுக்கு கேடு விளையும் என்று சொல்கிறது. ஆனால் அந்த பொருட்களை குறைந்த அளவில் சாப்பிட்டால், எந்த ஒரு தீமையும் ஏற்படாது. அதுவே அதிகமானால், இரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு, தூக்கமின்மை ஏற்படும். அதிலும் இது ஒரு அடிமையாக்கும் பொருள் என்றும் சொல்லலாம்.

கோலா

கார்போனேட்டட் பானமான கோலாவில் எந்த ஒரு ஊட்டச்சத்துக்களும் இல்லை. மேலும்அவற்றில் சர்க்கரை மற்றும் அடிமையாக்கும் பொருள் அதிகம் உள்ளது. இவற்றால் வயிற்றில் எரிச்சல் ஏற்படுவதோடு, எலும்புகளுக்கும் பாதிப்பை உண்டாக்கும். ஆகவே இந்த வகையான கார்போனேடட் பானங்களை அளவாக பருகுவது நல்லது.

வெண்ணெய்

வெண்ணெயில் அதிக அளவு கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளது. ஆகவே இதனை ஒரு நாளைக்கு 1 டீஸ்பூன் மட்டும் உணவில் சேர்த்தால் போதுமானது.

பாஸ்ட் ஃபுட் பர்க்கர்

பாஸ்ட் ஃபுட் உணவுகளில் கலோரிகள், கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் அதிகமாகவும், நார்ச்சத்து குறைவாகவும் உள்ளது. ஆகவே இதனை பாஸ்ட் ஃபுட் கடைகளில் சுவைக்காக அதிக ஆரோக்கியமற்ற பொருட்களை சேர்த்து தயாரித்து விற்பதை வாங்கி சாப்பிடுவதை விட, வீட்டிலேயே காய்கறிகளை பயன்படுத்தி, செய்து சாப்பிடலாம்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

இந்த மாதிரியான இறைச்சியில் நைட்ரேட்ஸ் அதிகம் உள்ளது. இது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு பொருள். அதுமட்டுமல்லாமல் அதில் சாச்சுரேடட் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது. ஆகவே அத்தகைய இறைச்சியை அதிகம் வாங்கி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

சுத்திகரிக்கப்பட்ட உணவுகள்

சுத்திகரிக்கப்பட்ட உணவுகளான சர்க்கரை மற்றும் மாவுப் பொருட்களில் மிகவும் குறைவான அளவிலேயே ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆகவே அவற்றில் ஒன்றான சர்க்கரையை சாப்பிட்டால், உடல் எடை அதிகரிப்பதோடு, பற்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும். அதிலும் மாவில் எந்த ஒரு நார்ச்சத்தும். எனவே அதனை அதிக அளவில் சாப்பிடுவது நல்லது.

காய்கறி எண்ணெய்

சமையலில் பயன்படுத்தும் காய்கறி எண்ணெயில் கொழுப்புகள் அதிகம் நிறைந்துள்ளது. இதனால் உடலில் விரைவில் எடை அதிகரித்துவிடும். அதுமட்டுமல்லாமல், அவற்றை உணவில் சேர்த்தால், இதய நோய், புற்றுநோய் போன்றவை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதிலம் இந்த எண்ணெயை குழந்தைகளுக்கு உணவில் தினமும் 3-4 டீஸ்பூன் சேர்த்தால் போதுமானது.

வெள்ளை பிரட்

மைதாவால் ஆன வெள்ளை பிரட்டில் மிகவும் குறைந்த அளவிலேயே ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதிலும் இதில் வைட்டமின்கள் 70% மற்றும் நார்ச்சத்து 80% குறைவாகவும் உள்ளது. ஆகவே இத்தகைய உணவுப் பொருளை தினமும் மற்றும் அதிகம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

2013ல் விண்டோஸ் லைவ் மெசஞ்சருக்கு பதிலாக ஸ்கைப் மட்டும் இயங்கும்


Skype on TV
ஸ்கைப் மற்றும் விண்டோஸ் லைவ் மெசஞ்சர் ஆகிய இரண்டு நெட்வொர்க்குகளும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இரண்டு முக்கிய தயாரிப்புகளாகும். இந்த இரண்டு நொட்வொர்க்குகளிலும் ஏராளமான உறுப்பினர்கள் உள்ளனர்.
தற்போது லைவ் மெசஞ்சரை நீக்கிவிட்டு ஸ்கைப்பை மட்டும் முழுவீச்சில் களமிறக்க இருக்கிறது மைக்ரோசாப்ட். இந்த தகவை இன்று மைக்ரோசாப்ட் உறுதி செய்திருக்கிறது. அதன்படி வரும் 2013ல் விண்டோஸ் லைவ் மெசஞ்சர் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டு அதற்குப் பதிலாக ஸ்கைப் மட்டும் செயல்படும் என்று மைக்ரோசாப்ட் அறிவித்திருக்கிறது.
மேலும் 100 மில்லியன் லைவ் மெசஞ்சர் வாடிக்கையாளர்களை ஸ்கைப்பில் இணைக்க இருக்கிறது மைக்ரோசாப்ட். எனவே லைவ் மெசஞ்சர் சேவையை நிறுத்தினாலும் மைக்ரோசாப்ட்டுக்கு எந்த இழப்பும் இருக்காது என்று தெரிகிறது. மேலும் லைவ் மெசஞ்சரில் இருந்து ஸ்கைப்பிற்கு மாற இனி ஸ்கைப் உதவி செய்யும் வகையில் ஸ்கைப் சேவை இருக்கும் என்று தெரிகிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...