Wednesday, November 7, 2012

700 வருடம் பழமையான குழந்தையின் பதப்படுத்தப்பட்ட உடலை (மம்மி) திரும்ப பெற்றது பெரு நாடு


700 வருடம் பழமையான குழந்தையின் பதப்படுத்தப்பட்ட உடலை (மம்மி) திரும்ப பெற்றது பெரு நாடு


சுமார் 700 வருடங்களுக்கு முன்பு தென் அமெரிக்காவில் 'இன்கா கலாச்சார மக்கள்' வாழ்ந்து இருக்கிறார்கள். அதற்கு முந்திய காலத்திய பெரு நாட்டுக்கு சொந்தமான ஒரு குழந்தை மம்மியை, புராதானப்பொருட்கள் கடத்தல் கும்பல் ஒன்று கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பொலிவியாவிலிருந்து பிரான்சுக்கு கடத்தப்பட இருந்தது. அதை பொலிவியா அரசு அப்போது கைப்பற்றியது.

பெரு நாட்டின் கலாச்சாரத்தை பறைசாற்றும் இந்த குழந்தை மம்மியை மீட்க்கும் முயற்சியை பெரு நாடு தொடர்ந்து மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து பொலிவியா நாட்டின் கலாச்சார மந்திரி, இந்த முதுகு சாய்ந்தாவாறு உட்கார்ந்த நிலையில் இருக்கும் குழந்தை மம்மியை பெரு நாட்டிடம் முறைப்படி ஒப்படைத்தார். வேறொரு குழந்தையின் ஒரு காலுடன் இருந்த இந்த மம்மி பாதுகாப்பாக இருக்க லாமா மற்றும் அல்பகாஸ் விலங்குகளின் முடிகளால் ஆனா கம்பளியால் மூடப்பட்டிருந்தது. 

2 வயதான இந்த குழந்தை மம்மி ஆணா அல்லது பெண்ணா என்று ஆராய்சியாளர்களால் அறிய முடியவில்லை. எங்கள் வம்சம் மற்றும் பரம்பரையின் பெருமையை உலகுக்கு காட்டும் ஒரு சிறிய மாதிரியே இந்த குழந்தை மம்மி என்று பெரு கலாச்சார மந்திரி கூறுகிறார்.

முந்தைய இன்கா கலாச்சாரத்தின் மையமாக விளங்கிய பெரு நாட்டின் செராமிக்ஸ், வெள்ளி, தங்கம் மற்றும் அரிய ஓவியங்கள் திருடப்பட்டுவிட்டதாகவும் பெரு நாடு கூறியுள்ளது
 

:::::::::::::::நன்றி ::::::::மாலைமலர்:::::::::::::


No comments:

Post a Comment