Monday, November 2, 2015

இலங்கைச் சிறுத்தை (Sri Lankan Leopard, Panthera pardus kotiya)


இலங்கைச் சிறுத்தை
SriLankaLeopard-ZOO-Jihlava.jpg
மிருகக்காட்சிச்சாலையில் உள்ள ஓர் இலங்கைச் சிறுத்தை
காப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:விலங்கினம்
தொகுதி:முதுகுநாணிகள்
வகுப்பு:பாலூட்டிகள்
வரிசை:ஊனுண்ணி
குடும்பம்:பூனைப் பேரினம்
பேரினம்:பான்தெரா
இனம்:P. pardus
துனையினம்:P. p. kotiya
மூவுறுப்புப் பெயர்
Panthera pardus kotiya
தெரனியாகல, 1956
Srilankan leopard range.jpg
இலங்கைச் சிறுத்தைகளின் பரம்பல்
இலங்கைச் சிறுத்தை (Sri Lankan LeopardPanthera pardus kotiya) என்பது இலங்கையை தாயகமாகக் கொண்ட சிறுத்தைதுணையினமாகும். வனவிலங்கு வர்த்தகம், மனித-சிறுத்தை முரண்பாடு என்பவற்றால் இதன் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்இச்சிறுத்தை இனத்தை அருகிய இனம் என பட்டியலிட்டுள்ளது. 250 மேற்பட்ட எண்ணிக்கையில் இவை இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளன.
இலங்கைச் சிறுத்தை துணையினம் பற்றி முதன் முதலில் 1956 இல் இலங்கை விலங்கியலாளரான போலஸ் எட்வட் பீரிஸ் தெரனியாகலை என்பவரால் குறிப்பிடப்பட்டது.

பண்புகள்

இலங்கையில் காணப்படும் சிறுத்தைகள் ஏனைய நாடுகளில் காணப்படும் சிறுத்தைகளிலிருந்து பல விதங்களில் வேறுபடுகின்றன. இந்தியாச் சிறுத்தைகளிலிருந்து கடலினால் பிரிக்கப்பட்டிருப்பதனால் இலங்கைச் சிறுத்தைகள் வித்தியாசமான முறையில் கூர்ப்பு அடைந்திருப்பதாக விலங்கியலாளர்கள் கருதுகின்றனர். எனவே இவற்றை அவர்கள் உப இனமொன்றாகப் பாகுபடுத்தி உள்ளனர். இலங்கையில் மட்டுமே காணப்படும் உப இனமான இலங்கைச் சிறுத்தை பந்ரா பார்டஸ் கொட்டியா எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இலங்கைச் சிறுத்தைகள் பழுப்பு மஞ்சள் தோலில் கரும் புள்ளிகள், இந்தியாச் சிறுத்தையைவிட சிறிய, நெருக்கமாக ரோசா மலர்கள் போன்ற அமைப்பினைக் கொண்டு காணப்படும்.
இருபதாம் நூற்றாண்டில் ஏழு பெண் சிறுத்தைகளிடம் செய்யப்பட்ட ஆய்வின்படி, சராசரி எடை 64 lb (29 kg) ஆகவும், தலை முதல் உடல் வரையான சராசரி நீளம் 3 ft 5 in (1.04 m) ஆகவும், தலை முதல் வால் வரையான சராசரி நீளம் 2 ft 6.5 in (77.5 cm) ஆகவும் இருந்தது. 11 ஆண் சிறுத்தைகளிடம் செய்யப்பட்ட ஆய்வின்படி, சராசரி எடை 124 lb (56 kg) ஆகவும் இருந்தது.

சூழலியலும் நடத்தையும்


குன்றிலிருந்து கொட்டாவிவிடும் சிறுத்தை

இலங்கைச் சிறுத்தை
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     இலங்கைச் சிறுத்தைகள் வருடத்தின் எந்தகாலத்திலும்இனப்பெருக்கத்தில்ஈடுபடக்கூடும். யால தேசிய வனத்திலுள்ள சிறுத்தைகள் சூன் - ஆகத்து, திசம்பர் - சனவரி காலத்திலும் உச்சமாக இனப்பெருக்கத்தில் ஈடுபடுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இலங்கைச் சிறுத்தையில் கர்ப்பகாலம் 98 – 105 நாட்களாகும். பொதுவான இவை இரு குட்டிகளையே ஈனுகின்றன. ஒரே சூலில் ஒன்று முதல் நான்கு வரையான குட்டிகள் ஈனப்படலாம். குட்டிகள் முதிர்ச்சி நிலையை அடைய 18 மாதங்கள் பிடிக்கும். ஒரே சூலில் அதிக எண்ணிக்கையான குட்டிகள் பிறக்கும் சந்தர்ப்பத்தில் சில குட்டிகளே பிழைத்து வளர்கின்றன.
யால தேசிய வனத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு இலங்கைச் சிறுத்தை மற்றைய சிறுத்தை துணையினங்களைவிட கூடி வாழும் இயல்பு குறைந்தவை என்கின்றன. பெண்களையும் குட்டிகளையும் தவிர்த்து, அவை தனியே வேட்டையாடுகின்றன. இருபால் விலங்குகளும் தத்தமது ஆட்சிப் பிரதேசத்தில் வாழ்கின்றன. பெண் சிறுத்தைகளின் சிறு பிரதேசத்தையும் சில ஆண் சிறுத்தைகளின் பிரதேசத்தையும் தன் பிரதேசமாக்கிக் கொள்கின்றன. அவை இரவில் வேட்டையாடுவதனையே விரும்புகின்றன. ஆனாலும் அவை பகலிலும் இரவிலும் வேட்டையாடக் கூடியன. தாம் கொன்ற இரைகளைச் மரங்களுக்கு அவற்றால் இழுத்துச் செல்ல முடியும். ஆனாலும், தமக்கு போட்டி இல்லை என்பதால் போதியயளவு இரை கிடைக்கும் என்பதாலும் குறைவாகவே மரங்களுக்கு இரையைக் கொண்டு செல்கின்றன. சிறுத்தைகள் உயர் ஊனுண்ணி என்பதால் தங்கள் இரையைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை.
இலங்கைச் சிறுத்தை அந்நாட்டின் உயர் ஊனுண்ணியாகவுள்ளது. பல பூனைக் குடும்ப இனங்கள் போல் இதுவும் சிறிய பாலூட்டிகள்பறவைகள்ஊர்வன அத்துடன் பெரிய விலங்குகளையும் உணவாக் கொள்ளும். உலர் வலயத்தில் அதிகம் காணப்படும் இலங்கைப் புள்ளிமான் இதற்கு அதிகளவில் இரையாகின்றன. இது மரைகள், குரைக்கும் மான்கள், காட்டுப்பன்றிகள்குரங்குகள் என்பவற்றையும் உணவாகக் கொள்கின்றன.
மற்றைய சிறுத்தைகள் போன்றே இவையும் வேட்டையாடுகின்றன. ஒலி எழுப்பாமல், பதுங்கி இரைக்கு அருகில் சென்றதும் விரைவாக உச்ச வேகத்தில் தாக்குதல் நடத்துகின்றன. இரையின் தொண்டையில் கடிப்பதன் மூலம் அவற்றைக் கொல்கின்றன.

வாழிடம்


வில்பத்து தேசிய வனத்தில்இலங்கைச் சிறுத்தை
வரலாற்றளவில் இலங்கைத் தீவை தங்கள் வாழிடமாக இலங்கைச் சிறுத்தைகள் கொண்டுள்ளன. இவற்றின் வாழிட வகைகளை பின்வருவாறு 3 வகைகளாகப் பிரிக்கலாம்.
 • 1000 மிமி இற்கு குறைவான மழைவீழ்ச்சி கொண்ட வறள் வலயம்
 • 1000-2000 மிமி இற்கு இடைப்பட்ட மழைவீழ்ச்சி கொண்ட உலர் வலயம்
 • 2000 மிமி இற்கு அதிகமான மழைவீழ்ச்சி கொண்ட ஈர வலயம்
2001 முதல் 2002 வரையான ஆண்டுகளில், கடற்கரையை அண்டிய வறள் வலயத்தில் உள்ள யால தேசிய வனத்தில் "பகுதி I" இல் வளர்ந்த சிறுத்தை எண்ணிக்கை அடர்த்தி 100 km2 (39 sq mi) இற்கு 17.9 என கணக்கிடப்பட்டன. இவ் பகுதி I பெரிய கடற்கரை சமநிலத்தையும் மனிதனாலும் இயற்கையாகவும் உருவாக்கப்பட்ட நீர் கொள்ளும் இடங்களையும் ஊனுண்ணிகளுக்கான மிக அடர்த்தியான பகுதியாகவும் உள்ள இது 140 km2 (54 sq mi) ஆல் சுழப்பட்டது.

அச்சுறுத்தல்

சிங்கம், புலி போன்ற வலிமையில் கூடிய பெரிய ஊனுண்ணிகள் வாழும் நாடுகளில் சிறுத்தைகள் தம்உணவுக்காக அவற்றுடன் போட்டியிட வேண்டியுள்ளது. இப்போட்டி காரணமாக வலிமை கூடிய விலங்குகளால் சிறுத்தைகள் கொல்லப்படுவதும் உண்டு. இலங்கைக் காடுகளில் சிங்கம், புலி போன்றவை இல்லாமையினால் சிறுத்தைகளுக்கு அவ்வாறான போட்டி இல்லை. எனினும், மனிதன்சிறுத்தைகளின் பிரதான எதிரியாக மாறியுள்ளான். எனினும், இயற்கையான இரைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும்போது அவை மனிதக் குடியேற்றங்களை நாடிச் சென்று கால்நடைகளை கொன்று தின்கின்றன. இதனால் சிறுத்தைகளைக் கொல்வதற்கு மனிதன் நாடுகின்றான். மேலும், வனவிலங்கு வர்த்தகத்திற்காக சட்டவிரோத வேட்டையாடுவதால் (குறிப்பாக இந்தியாவிற்கு) இவை அச்சுறுத்தப்படுகின்றன.

பாதுகாப்பு


மிருகக்காட்சிசாலையில் ஓர் சிறுத்தை
சிறுத்தைத் தோலுக்கு கேள்வி இருப்பதனால் தோலைப்பெறுவதற்காகப் பெருந்தொகையான சிறுத்தைகள் கொல்லப்படுகின்றன. சேனைப் பயிர்ச்செய்கை, காடழித்தல்போன்றனவும் சிறுத்தைகளின் இயல்பான வாழ்க்கைக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால் இலங்கைச் சிறுத்தைகளைப் பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் (IUCN) இலங்கைச் சிறுத்தையை அருகிய இனமாகப் (அழிவுறும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள விலங்காகப்) பிரகடனம் செய்துள்ளது. "காட்டுயிர் பாதுகாப்பு நம்பிக்கை" (Wildlife Conservation Trust) இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமாக இலங்கைச் சிறுத்தை பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளது. இதற்காக இவ்வமைப்பு ஆய்வுகளைச் செய்துவருகிறது.[

கூண்டில் அடைப்பு

திசம்பர் 2011 இன்படி, உலகளாவிய மிருகக்காட்சிச்சாலையில் 75 இலங்கைச் சிறுத்தைகள் உள்ளன. ஐரோப்பிய அருகிய இனங்கள் நிகழ்ச்சித்திட்டம் 27 ஆண், 29 பெண், பால் தெரியாத 8 இலங்கைச் சிறுத்தைகளைக் கொண்டுள்ளது.

-கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.-

  வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம் சகாரா !


  சஹ்றா என்ற சொல்லுக்கு அரபு மொழியில் பாலைவனம் என்றே பெயர். அதனால்தான் இந்த பாலைவனத்துக்கும் சகாரா என்றே பெயர் வழங்கப்பட்டிருக்கக்கூடும். இதன் பரப்பளவு சுமார் மூன்றரை கோடி சதுர மைல்கள். இந்தப் பாலைவனம் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகி இருக்கக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதற்கும் முன்னர் ஏரிகளும், ஆறுகளும் இங்கே இருந்தனவாம்.

  அல்ஜீரியா, தசாது, எகிப்து, எரித்திரியா, லிபியா, மாலி, மௌரிடானியா, மொரோகோ, நைகர், சூடான், தூனிசியா, மேற்கு சகாரா ஆகிய 12 நாடுகளைத் தொட்டு சகாரா பாலைவனம் விரிந்து பரந்துள்ளது. நதிகள் ஓடியதற்கான சான்றுகளும், அந்த நீர்நிலைகளில் முதலை உட்பட பல வகை மீன்கள் வாழ்ந்ததற்கான படிமச் சான்றுகளும் கிடைத்துள்ளன. அதனால் மீண்டும் 15-ஆயிரம் ஆண்டுகள் கழித்து மாற்றங்கள் ஏற்பட்டு, இந்த இடம் மீண்டும் பசுமை அடையும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

  தற்போதும்கூடப் பல ஆறுகள் குறிப்பிட்ட காலத்தில் உற்பத்தி ஆகி ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இவை ஆண்டு முழுவதும் ஓடாமல் வற்றிவிடும் போக்கைக் கொண்டவை. இங்கு ஓடும் வற்றாத நதிகள் நைகர் மற்றும் நைல் நதிகள்.

  பொதுவாக சகாரா உயிர் வாழ்க்கைக்கு உரிய இடமல்ல என்றாலும், சில நீர்நிலைகளை ஒட்டி மனிதர்களும், விலங்குகளும் வாழ்ந்துதான் வருகின்றனர். அதிக அளவு ஒட்டகங்களும், ஆடுகளும் மட்டுமே இங்கு மனிதர்களால் பயன்படுத்தப்படுகின்றன.

  இங்கு வாழும் மஞ்சள் நிற தேள் மிகுந்த நச்சுத் தன்மை கொண்டது என்றாலும், இது கொட்டி மனிதர்கள் இறப்பதில்லை. நரிகள் உண்டு. நீரில்லாமலேயே நீண்ட நாட்கள் வாழக்கூடிய ரிக், தாமா என்ற சிறு மான் வகைகளும் இங்கு உண்டு. சகாரா சிறுத்தைகளும் உண்டு. ஊர்வனவான பல்லிகள் மற்றும் மணல் விரியன்கள் காணப்படும் இந்தப் பிரதேசத்தில் பறவை இனத்தைச் சேர்ந்த நெருப்புக் கோழிகளும் உண்டு. வெள்ளி எறும்புகள் என அபூர்வ பெயர் பெற்ற எறும்புகள் சூடு தாங்காமல் இறக்கும் உயிரினங்களை உணவாக உண்டு மணலுக்கு அடியில் வாழ்ந்து உயிர் பிழைக்கின்றன.

  ன்றி :  தி இந்து

  லட்சத் தீவு

  லட்சத் தீவு என்றால் லட்சக்கணக்கில் உள்ள தீவு என்று பொருள். ஆனால் இருப்பது 36-தான். அதிலும் மக்கள் வசிப்பது 10 தீவுகளில்தான். கடலுக்கடியில் நீளும் சாக்கோஸ்- லக்காதீவ் மலைத்தொடரின் வெளியில் தெரியும் மலையின் உச்சிப் பகுதிகளே இந்தத் தீவுகள். ஆதலால் இது கடலும் கடல் சார்ந்த நெய்தலும் மலையும் மலை சார்ந்த குறிஞ்சியும் கலந்த தேசம்.

  தீவின் கதை
  இந்தத் தீவில் பூர்வகுடிமக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை. அரபிக்கடலில் இப்படி ஒரு தீவு இருப்பது வெளியுலகுக்குத் தெரியவந்த கதை சுவாரஸ்யமானது. இஸ்லாம் மதம் மீது ஏற்பட்ட பற்று காரணமாக, சேர வம்சத்தின் கடைசி அரசர் சேரமான் பெருமாள் ரகசியமாக அரேபிய வர்த்தகர்களின் கப்பலில் ஏறி மெக்காவுக்குச் சென்றார்.
  இதை அறிந்து அவரைத் தேடிச் சென்ற குழுவினர், புயலில் சிக்கி நடுக்கடலில் தீவு ஒன்றில் (தற்போதைய பாங்காராம் தீவு) தஞ்சம் புகுந்தனர். புயல் ஓய்ந்ததும் மீண்டும் கண்ணனூர் கிளம்பினார்கள். வழியில் மேலும் சில தீவுகளைப் பார்த்தார்கள். நாடு திரும்பியதும் இதுகுறித்து அரசனிடம் தெரிவித்தார்கள். இதையடுத்து, அங்குக் குடியேறி விவசாயம் செய்யும் மக்களுக்கு அந்த நிலம் சொந்தம் என அரசன் அறிவித்தார். அதனால் அமினித் தீவில் முதல் குடியேற்றம் நிகழ்ந்தது என்கிறது உள்ளூர் கதை. ஆனால், எந்த ஆதாரமும் இல்லை.

  பரிசோதனைக் களம்
  இந்த தீவுகளை பல்லவ ராஜ்ஜியமும் சோழர்களும் அடுத்தடுத்த காலகட்டங்களில் ஆண்டுள்ளனர். போர்த்துகீசியர்கள், கொளத்துநாடு வம்சம், சிராக்கல் மற்றும் அராக்கல் மன்னர்கள் எனப் படிப்படியாகத் தீவுகள் கை மாறின. 1783-ல் மைசூர் அரசன் திப்பு சுல்தான் வசம் அமினி குழுமத்தீவுகள் சென்றன. 1799-ல் ரங்கப்பட்டினம் போரில் திப்புவை வீழ்த்திய ஆங்கிலேயர்கள் மைசூரையும் அமினி தீவுக்கூட்டங்களையும் கைப்பற்றினார்கள்.
  இந்த நிலையில் சிராக்கல் ராஜா நிர்வகித்து வந்த அன்டோர்ட் தீவு 1847-ல் வீசிய கடும் புயலால் பாதிக்கப்பட்டது. இதைச் சரிசெய்ய ஆங்கிலேய அதிகாரி வில்லியம் ராபினிடம் சிராக்கல் ராஜா வட்டிக்குக் கடன் பெற்றார். 4 ஆண்டுகளில் வட்டி பெருகிட, கடனுக்கு ஈடாக மீதமுள்ள தீவுகளும் ஆங்கிலேயருக்குத் தாரை வார்க்கப்பட்டன. அது முதல் தீவுக்கூட்டங்கள் அனைத்தும் ஆங்கிலேயர் வசமாகின.
  ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியை அமலாக்கி வெற்றி கண்ட பரிசோதனைக் களம்தான் லட்சத் தீவு. இதையே இந்தியாவிலும் அமலாக்கி வெற்றியும் கண்டார்கள்.

  மிகச் சிறிய யூனியன்
  இந்தியா விடுதலை ஆனபிறகு மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் 1956-ன்படி இது யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. 1973-ல்தான் இதற்கு லட்சத்தீவு எனப் பெயர் சூட்டப்பட்டது.
  இந்திய யூனியன் பிரதேசங்களில் இது மிகச் சிறியது. பவளப்பாறைகள் நிரம்பிய ஒரே தீவுக்கூட்டம். இதன் மொத்தப் பரப்பு 32 சதுர கி.மீதான். 12 பவளத் தீவுகள், 3 திட்டுகள் மற்றும் 5 நீரில் மூழ்கிய பகுதிகள் காணப்படுகின்றன. அகத்தி, அன்டோர்ட், பிட்ரா, செட்லட், காட்மாத், கல்பேனி, கவரத்தி மற்றும் கில்டன் ஆகிய தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கிறார்கள். பல தீவுகளில் மனித நடமாட்டமே இல்லை.
  மொத்த தீவுக்கூட்டமும் ஒரே மாவட்டமாகக் கருதப்படுகிறது. இதன் தலைநகரம் கவரத்தி. நிர்வாக அதிகாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.

  இஸ்லாம் பரவிய கதை
  எழுத்தறிவு 81.78 சதவீதம். மக்கள் தொகை 64,429 பேர். முதன்மை மதம் இஸ்லாம். அந்த மதத்தை 93 சதவீதம் பேர் பின்பற்றுகிறார்கள். இந்து மதத்தை 4 சதவீதம் பேரும் மற்ற மதங்களை 3 சதவீதம் பேரும் பின்பற்றுகிறார்கள் .
  கனவில் தோன்றி இறைவன் இட்ட கட்டளையை ஏற்று, 7-ம் நூற்றாண்டு வாக்கில் மெக்காவிலிருந்து புறப்பட்டவர் உபயதுல்லா என்பவர். கடலில் பயணமாகிப் புயலில் சிக்கி, அமினி தீவு வந்து சேர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. அங்கு இஸ்லாத்தை பரப்பியவருக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இளம் பெண் ஒருவர் உபயதுல்லா மீது காதல் வயப்பட்டுத் தனது பெயரை ஹமீதத் பீவி என்று மாற்றி அவரைத் திருமணம் செய்து கொண்டார்.
  இதில் கடும் கோபமுற்று மக்கள் அவரைக் கொல்ல முயன்றபோது அனைவரின் கண்களையும் மறைத்துத் தப்பினார். இடைவிடாத பிரச்சாரத்தால் அன்டோர்ட் தீவு மக்கள் இஸ்லாமுக்கு மாறினார்கள். படிப்படியாக அனைத்துத் தீவு மக்களும் மதம் மாறினார்கள். அன்டோர்ட்டில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. உபயதுல்லாவின் பெருமை இலங்கை, பர்மா, மலேசியா வரை பரவியிருக்கிறது. இந்தப் பாரம்பரியம்தான் இங்கு இஸ்லாம் மதம் கோலோச்சக் காரணமாக உள்ளது.

  மொழிகள்
  மினிகாய் தீவு மக்களைத் (மலாய் மொழி) தவிர மற்றவர்கள் பேசும் மொழி மலையாளம். மேலும் ஜெசேரி, அர்வி மொழிகள் போன்று தமிழ், மலையாளம் மற்றும் அரபி கலந்த பேச்சுவழக்கும் உண்டு. ஏறக்குறைய அனைவரும் பழங்குடியினராகவே வகைப்படுத்தப்பட்டுள்ளனர். தலித் மக்கள் இல்லை.

  தேங்காய் உற்பத்தி
  தாது வளம் நிரம்பிய கடற்கரைகளைக் கொண்ட பகுதி. சூறை மீன்கள் அதிகளவில் கிடைக்கின்றன. வேளாண்மையைப் பொறுத்தவரை தேங்காய் உற்பத்தியே பிரதானம். கிட்டத்தட்ட 7 லட்சம் தென்னை மரங்கள் இருக்கின்றன. மீன்பிடித்தல், தென்னை வளர்ப்பு, கயிறு திரித்தல் மற்றும் சுற்றுலா ஆகியவை முக்கியமான தொழில்.

  சமூக அமைப்பு
  பெண்களுக்குப் பொருளாதார ரீதியான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ‘மருமக்கா ஆதாயம்’ என்ற சொத்து உரிமை அளிக்கப்பட்டுள்ளது. மனைவியின் பராமரிப்புக்கென ஆண்டுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் பேரிலேயே திருமணம் நடக்கும். கட்டணம் செலுத்தத் தவறினால் விவகாரத்து செய்யவும் அதன்பிறகு வேறு ஒருவரை மணக்கவும் பெண்னுக்கு உரிமை உண்டு. விதவைகள் மறுமணம் செய்யவும் தடையில்லை.
  லாவா நடனம், கொல்காளி நடனம் மற்றும் பாரிச்சாக்கிளி நடனம் ஆகியவை நிகழ்த்து கலைகளாக உள்ளன.

  காவல்காரன்
  இந்தியாவின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்களில் லட்சத்தீவு முக்கியமானது. கடலின் அழகோடு இயற்கை கொஞ்சும் நிலப்பரப்பு, பவளத்தீவுகள் எனக் காண்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன. கவரத்தியில் உள்ள மீன் அருங்காட்சியகம் கவனத்தை ஈர்க்கிறது. கவரத்தியில் கடற்படைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
  மத்தியக் கிழக்குக் கடலில் இந்தியாவின் கடல் வழித்தடங்களைக் கண்காணிக்கவும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உகந்த இடமாக லட்சத்தீவுகள் உள்ளன. இந்தியத் தீபகற்பத்துக்கு வெளியே பரவி நிற்கிறது லட்சத்தீவு.

  ன்றி :  தி இந்து

  பட்டினித் தாய்!

  திர் காலம் குறித்த கேள்விகள், நிகழ்காலத் தேவைகள் குறித்த ஏக்கங்கள் என இரண்டையும் தனது கண்களில் ஏந்தி அமர்ந்திருக்கிறார் இந்தத் தாய். பசி மயக்கத்திலிருக்கும் தன் மூன்று குழந்தைகளையும் தோள்களிலும், மடியிலும் கிடத்தியிருக்கும் இவரின் பெயர் புளோரன்ஸ் ஓவன்ஸ் தாம்சன் (Florence Owens Thompson). ஒட்டு மொத்த உலகத்தின் காவல்காரனாக தன்னைக் காட்டிக் கொள்ளும் அமெரிக்காவில், 1929-ல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியையும், அதன் பாதிப்புகளையும் உலகத்தின் பார்வைக்கு கொண்டு சென்றது டோரோதியா லாங்கெவினால் (Dorothea Lange) எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம்.

  அமெரிக்காவில் 1929-ல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி 1939 வரை சுமார் பத்து வருடங்கள் நீடித்தது. தொழில் மயமாகப்பட்ட மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியாக இது கருதப்பட்டது. இந்த வீழ்ச்சியானது அமெரிக்கப் பங்குச் சந்தை மையமான வால் ஸ்ட்ரீட்டையே (Wall Street) அதிர வைத்து பீதியை உண்டாக்கியது. மேலும் பல ஆயிரக்கணக்கான பொருளாதார முதலீடுகளையும் நொடிப் பொழுதில் தரைமட்டமாக்கியது. இதனால் மக்களின் வாங்கும் திறனும், பொருளாதார முதலீடுகளும் வெகுவாகக் குறைந்தது. இதனடைப்படியில் தொழிற்சாலைகளின் உற்பத்தியும் அடியோடு குறைந்தது. தொழிற்சாலைகளில் ஆட்குறைப்புகள் அதிகளவில் அரங்கேறியதால் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடத் தொடங்கியது. இதில் அதிகமாக பாதிக்கப்பட்டது ஆப்ரிக்க அமெரிக்கர்கள்தான். காரணம் இவர்களின் வேலைகள் பறிக்கப்பட்டு, வெள்ளைக்கார அமெரிக்கர்களுக்கு வழங்கப்பட்டது. 1930-ம் ஆண்டு 50% சதவிதம் கருப்பின ஆப்ரிக்க, அமெரிக்க மக்களும், 1933-ம் ஆண்டு வாக்கில் சுமார் பதிணைந்து லட்சம் வெள்ளைக்கார அமெரிக்கர்களும் வேலைகளை இழந்துத் தவித்தனர். மேலும் அமெரிக்காவில் அப்போது இயங்கிக் கொண்டிருந்த வங்கிகளில் பாதிக்கும் மேற்பட்டவைகள் மூடப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த அமெரிக்காவும் சின்னாபின்னமாகியது.

  1920-ன் காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சியின் உச்சத்தைத் தொட்டிருந்தது அமெரிக்கா. இதன் காரணமாக மக்களின் வாழ்வாதாரமும் வாங்கும் திறனும் அப்போது அதிகரித்திருந்தது. இதன் மூலம் மது அருந்துவது, புகை பிடிப்பது, குட்டைப் பாவாடைகள் அணிந்து கொள்வது போன்ற கலாசாரங்கள் பெண்களிடையே அதிகமாகப் பரவத் தொடங்கியது. ஆண்கள் இவைகளோடு, பங்கு சந்தைகளில் முதலீடு செய்வது, கார்கள் வாங்குவது, வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஈடுபாடு காட்டினர். இதில் முக்கியமான விஷயம் இவை அனைத்தையுமே கடன் பத்திரங்கள் மூலமாகவே வாங்கினர். இதன்மூலம் அமெரிக்கப் பொருளாதாரமும் அசுர வளர்ச்சியடைந்தது. ஆனால் இந்த வளர்ச்சி 65% அளவிற்கு உயர்ந்த போதும் அடித்தட்டு தொழிலாளர்களின் சம்பளம் வெறும் 8% மட்டுமே உயர்ந்தது. இதனால் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள இடைவெளியின் நீளம் அதிகரித்தது. அமெரிக்க மக்கள் தொகையில் மொத்த பணக்காரர்கள் 0.1%. இவர்களின் வருமானம் ஒட்டுமொத்த அமெரிக்க மக்கள் தொகையின் 42% மக்களின் வருமானத்திற்கு நிகரானதாக அமைந்தது. இப்படியான காரணங்களினால்தான் 1929-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் நாள் அந்நாட்டின் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தது. அமெரிக்காவை  அதள பாதாளத்திற்குத் தள்ளிய இந்த நாள் தான் கருப்பு செவ்வாய் என்று வர்ணிக்கப்படுகிறது.

  அப்போது அமெரிக்காவின் அதிபராக இருந்த ஹெர்பட் ஹூவர் (Herbert Hoover) இந்தப் பிரச்னையை சரியாகப் புரிந்து கொள்ளாமலும், இந்த வீழ்ச்சியைக் குறைத்தும் மதிப்பிட்டு விட்டதோடு ''நமது தேசிய வாழ்வில் இது ஒரு கடந்த சம்பவம். வரும் காலங்களில் சரி செய்துவிடுவோம். இது ஒரு முக்கியமான பிரச்னை இல்லை'' என்று வார்த்தைகளை மட்டுமே உதிர்த்தார். இந்த வீழ்ச்சியால் உணவில்லாமல் தவித்த ஏழைகளை கண்டு கொள்ளாமல் விட்டார். அதோடு பணக்காரர்களுக்கும், தொழிற்சாலை அதிபர்களுக்கும் பயனளிக்கக் கூடியதாக மட்டுமே அவரது திட்டங்களும் அமைந்தது. இத்தகையத் தவறானப் பொருளாதாரக் கொள்கையால்தான் அங்கு பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைக் கண்டது. இந்த நிலையை மீட்டெடுப்பேம் என்ற உறுதிமொழியுடன்தான் 1932-ல் ரூஸ்வெல்ட் அமெரிக்காவின் அதிபரானார். பதவியில் அமர்ந்த நூறு நாட்களுக்குள்ளேயே புதிய பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்கினார். மேலும் வங்கிகள் செயல்பாட்டு முறைகள், அரசாங்க நிர்வாகங்களை மேம்படுத்தி வீழ்ந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினார்.

  1895 மே 26 அன்று அமெரிக்காவில் பிறந்தவர் போட்டோகிராபர் டோரோதியா லாங்கெ. போலியாவினால் பாதிக்கப்பட்டதால் இவரது வலது கால் பலம் இழந்து விட்டது. இதைபற்றி அவர், ''இது என் வாழ்வில் நடந்த முக்கியமான நிகழ்வு. இதுதான் என்னை உருவாக்கியது. இதுதான் எனக்கு அறிவுரைகளையும், அவமானங்களையும் தந்தது. இவைகள் அனைத்தும் சேர்ந்துதான் என்னை சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தது'' என்றிருக்கிறார். இவரது பெற்றோர்கள் பிரிந்து விட்டதாலும், படிப்பில் நாட்டமில்லாததாலும் போட்டோகிராஃபியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் இவர்.

  1918-ம் ஆண்டு தன் கனவரோடு சேர்ந்து சான் ஃபிரான்சிஸ்கோவில் போட்டோ ஸ்டுடியோ ஒன்றைத் தொடங்க அது மிகவும் பிரபலமானது. இந்நிலையில்தான் 1929-ல் கருப்பு செவ்வாய் உருவானது. அப்போது அமெரிக்கப் பண்ணைப் பாதுகாப்பு நிர்வாகம் (US Farm Security Administration) (FSA) என்ற அமைப்புக்காக, வேலையில்லாத ஆண்களையும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் புகைப்படம் எடுக்க சென்றார். அப்போது நிப்பொமா மேசா (Nipomo Mesa) என்ற இடத்தில்தான் புகைப்படத்தில் இருக்கும் அந்தத் தாயைக் காண்கிறார். அந்த சம்பவத்தை ஒரு பேட்டியில் இவ்வாறு பதிவு செய்திருக்கிறார், ‘’நான் நடந்து சென்று கொண்டிருக்கும்போது பசியுடன் துடிக்கும் அந்தத் தாயைப் பார்த்தேன். அந்தக் காட்சி என்னை காந்தம் இழுப்பது போல, அவரை நோக்கி என்னை இழுத்துச் சென்றது. என்னிடம் இருந்த கேமராவினால் புகைப்படம் எடுத்துக் கொண்டே அவரிடம் சென்றேன். அவர்களிடம் என்ன பேசினேன் என்று எனக்கு எதுவும் சரியாக ஞாபகம் இல்லை. அந்தக் காட்சி மட்டுமே என் மனதில் பதிந்திருக்கிறது. அவர்கள் பக்கத்து நிலத்தில் உடைந்து கிடக்கும் காய்கறிகளும், அவரது பிள்ளைகள் அடித்து எடுத்துவரும் பறவைகள் மட்டுமே அவர்களது உணவாக இருந்தது. பின்னர் அவரிடம் பேசியதில் அவர் வயது 32 என்றும், கையில் பணம் இல்லாததால் காரின் டயரை விற்றுத்தான் சாப்பாடு வாங்கினேன் என்றும் அவர் சொன்னார். அவரின் நிலையைக் கண்டு உண்மையில் நான் உடைந்துவிட்டேன்’’.

  இவர் எடுத்த இந்தப் புகைப்படம் மார்ச் 1936-ல் சான் பிரான்சிஸ்கோ நியூஸ் (San Francisco News) என்ற பத்திரிகையில் வெளியானது. படம் வெளியான இரண்டே மாதத்தில் அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையை எடுத்தது அரசு. அமெரிக்காவின் பெரும் வீழ்ச்சியின் அடையாளமாக டோரோதியா லாங்கெவின் புகைப்படம் மாறிவிட்டது.

  ன்றி : விகடன்
  (உலகை உலுக்கிய புகைப்படங்கள் - 13)