Monday, December 10, 2012

ஆன்ட்ராய்டு பற்றி தெரிந்ததும் தெரியாததும்


android
ஐஓஎஸ்-க்கு போட்டியாக மொபைல் போன்களுக்காக பிரத்தியோகமாக 2003ல் உருவாக்கப்பட்டதே ஆன்ட்ராய்டு இயங்குதளம். முதன்முதலில் Android, Inc என்ற நிறுவனத்தால் தொடங்கப்பட்டு, பின்னர் கூகுள் நிறுவனத்தால் 2005ல் விலைக்கு வாங்கப்பட்டது. பின்னர் ஒஹெச்எ (OHA – Open Handset Alliance) என்ற நிறுவனத்தில் பதிவு செயததன் மூலம் ஓபன்சோர்ஸ் அந்தஸ்து பெற்றது.
ஆன்ட்ராய்டு இயங்குதளம் முழுவதும் சி, சி++ மற்றும் ஜாவா கோடிங்களைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது.
ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள் சான்ட்பாக்ஸ் எனும் தொழில்நுட்பத்தில் செயல்படுவதால் மிகவும் பாதுகாப்பானது. மற்றும் இந்த வகை அப்ளிகேசன்களில் ப்ரைவசியும் அதிகம்.
கூகுள் தயாரிப்புகளை எளிதில் பயன்படுத்தும் வகையில் உள்ளதால் ஆன்ட்ராய்டு பயன்படுத்தும் மொபைல் போன்கள் ஐபோன்களுக்கு மாற்றாக பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு மிகவும் பிரபலமடைந்துள்ளது.
முதலில் ஆன்ட்ராய்டு இயங்குதளமானது ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டது. ஆனால் அண்மைக் காலங்களில் இது, லேப்டாப்கள், நெட்புக்கள் (Netbooks), ஸ்மார்ட்புக்ஸ் (Smartbooks) மற்றும் ஸ்மார்ட் டிவிகளுக்கும் பயன்படுத்தும் வகையில் உள்ளது.

ஆன்ட்ராய்டு இயங்குதளத்தின் வெர்சன்கள்:

  • முதலில் ஆன்ட்ராய்டு இயங்குதளம் செப்டம்பர் 2008ல் வெளியிடப்பட்டது.
  •  கப்கேக் (v1.5),
  • டூனுட் (v1.6),
  • எக்லைர் (v2.0) 2009ல் வெளியிடப்பட்டது.
  • ப்ரோயோ (v.2.3),
  • ஜிங்கர்பிரட் (v2.4) 2010ல் வெளிவந்தது.
  • ஹனிகாம்ப் (v3.0) 2011 மே மாதத்தில் வெளியிடப்பட்டது.
  • ஐஸ்கிரீம் சாண்ட்விட்ச் – ஆனது அக்டோபர் 2011ல் வெளிவந்தது.
  • ஜெல்லிபீன் (V4.1.x) ஜூலை 9, 2012லும்,
  • ஜெல்லிபீன் (V4.2) நவம்பர் 13, 2012லும் வெளியிடப்பட்டது.
என்னதான் ஆன்ட்ராய்டு இயங்குதளம் உலகப்புகழ் பெற்றதாக இருந்தாலும், அப்ளிகேசன் டெவலாபின்பொழுது டிவைஸ் பிராக்மென்டேசன்(Device Fragmentation) என்ற எரர் பிரச்சனை இருப்பதை யாராலும் மறுக்கமுடியாது.செல்போனில் பெண்களை துரத்தும் தொல்லைகள்


             செல்போனில் பெண்களை துரத்தும் தொல்லைகள் தப்பிப்பது எப்படி?

'மச்சி சாப்பிட்டாயா?’ என்று கேட்பதில் தொடங்கி, 'குட் நைட் டியர்' என்று வழிவது வரை, செல்போன் வழியே குறுஞ்செய்திகளை (எஸ்.எம்.எஸ்) அனுப்புகிறார்கள். இதுபோலவே படங்கள், வீடி யோக்கள், ரெக்கார்டிங் தகவல்களை எம். எம்.எஸ். என்ற முறையில் அனுப்புகிறார்கள். அறிவியல் நவீன தொழில்நுட்பமான எம்.எம்.எஸ்., தகவல் தொடர்புக்கு அவசியமான அற்புத தொழில்நுட்பம் என்றால் அதில் மிகையில்லை.
                       
 
ஆனால் அவற்றால் எல்லையற்ற பிரச்சினைகள் முளைத்திருப்பதால் குற்றம் சொல்லாமலும் இருக்க முடிவதில்லை. படம்பிடிக்கவும், பிறகு பயமுறுத்தவும் பயன்படும் ‘எம்.எம்.எஸ்’கள் பல பெண்களின் வாழ்க்கையை பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது.
 
இன்னொருபுறத்தில் எம்.எம்.எஸ். ஆபாசக் காட்சிகள் இளைஞர்களை செக்ஸ் போதை அடிமைகளாக மாற்றிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் பாதிப்பு என்னவோ பெண்களுக்குத்தான் அதிகம். அதனால் பெண்கள் இதில் மிகுந்த விழிப்புணர்வு பெறவேண்டும். பெண்கள் இந்த தொந்தரவில் இருந்து தப்பிக்க இதோ சில ஆலோசனைகள்:
 
* பெண்கள் ரகசிய செய்கைகளில் ஈடுபடுவது தங்கள் சுயகவுரவத்திற்கு ஏற்படுத்தும் ஆபத்து என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதன் மூலம் அவர்களது குடும்ப கவுரவத்திற்கும் இழுக்கு ஏற்படக்கூடும். சமூக நெருக்கடிகளையும் அது உருவாக்கும். ஆகவே இத்தகைய இழப்புகளை எல்லாம் நினைவில்கொண்டு, வெளிவட்டார தொடர்புகளை பெண்கள் எல்லைக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.
 
* பெற்றோரின் கண்காணிப்பைத்தாண்டி, நகரங்களில் தங்கி படிக்கும்- வேலைபார்க்கும் பெண்கள்தான் அதிகமாக ‘எம்.எம்.எஸ்’ வலையில் விழுகிறார்கள். கட்டுப்பாடற்ற சுதந்திரம் அவர்களை கட்டவிழ்த்து விடுகிறது. தனிமையும், நகரச்சூழலும் யாருடனாவது நட்பு கொள்ளத் தூண்டுகிறது.
 
* பெண்களின் பலவீனத்தை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் இளைஞர்கள் தங்கள் வலையில் அவர்களை எளிதில் வீழ்த்திவிடுகிறார்கள். கண்டகண்ட புகைப்படங்கள், இரட்டை அர்த்த எஸ்.எம்.எஸ்.களை அனுப்பி வைப்பார்கள். ‘இதிலெல்லாம் தவறு இல்லை, இதெல்லாம் சாதாரண விஷயம்’ என்று மூளைச்சலவை செய்வார்கள்.
 
அவர்களை நம்பியோ அல்லது பதிலுக்குப் பதிலாகவோ பெண்களும் அதே பாணியில் ஏதாவது எஸ்.எம்.எஸ். செய்துவிட்டால் போதும். அந்த சிறு துரும்பை வைத்துக் கொண்டு 'பிளாக்மெயில்' செய்தே தங்கள் காரியத்தை சாதித்து விடுவார்கள்.
 
* பணம் தேவைப்பட்டால் பணம் பறிப்பார்கள். ஊர் சுற்ற, உல்லாசம் அனுபவிக்க என்று தாங்கள் இழுத்த இழுப்பிற்கு எல்லாம் அந்த பெண்களை வளைத்து பயன்படுத்திக் கொள்வார்கள்.
 
* இந்த சிக்கலில் மாட்டிக்கொள்ளும் பெண்கள் அவமானத்திற்குப் பயந்து மீள முடியாமல் தவிப்பார்கள். தவறான முடிவுகளும் எடுத்துவிடுவார்கள்.
 
* பெண்கள் ஒருபோதும் வலைவீசும் எஸ்.எம்.எஸ்.களுக்கு பதிலளிக்கக் கூடாது. செல்போனிலும் தேவையின்றி பேசக்கூடாது. பெண்களின் ஆபாசம் கலந்த பேச்சு பெரும்பாலும் ஆண்களால் பதிவு செய்யப்படுகிறது. எனவே இத்தகைய பேச்சுக்களை பெண்கள் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் பாதிப்பு ஆண்களுக்கு இல்லை பெண்களுக்கு தான். கவனமாக இருங்கள்.


நன்றி :  மாலைமலர்


பெண் குழந்தைககள் சமூகத்தில் பாதுகாப்பாக வலம் வர தாயின் அறிவுரை


நம்ம வீட்டு பொண்ணுங்க நல்லா படிக்கணும், நல்லா டிரஸ் பண்ணிக்கணும், நல்ல வேலைக்கு போகணும் அப்படின்னு பல விஷயங்களப் பத்தி யோசிக்கிறோம்; அட்வைஸ் பண்றோம். ஆனா, எப்படி நடந்துக்கிட்டா இந்த சமூகத்தில அவங்க பாதுகாப்பா வலம் வர முடியும் அப்படிங்கறத பத்தி அவர்களிடம் மனம் திறந்து பேசுவதில்லை.
 
அதனாலதான் பல பொண்ணுங்க தங்களோட வாழ்க்கையை தொலைச்சிட்டு நிக்கறாங்க. இதுலயும் கொஞ்சம் கவனம் செலுத்தினா நிச்சயமா அவங்க எல்லாத்துலயும் வெற்றி பெறுவாங்க. முன்பெல்லாம் பெற்றோருக்குத் தெரியாமல் ஒரு பெண் அவ்வளவு சுலபத்தில் யாருடனும் பேசிவிட முடியாது. ஆனா, இது செல்போன் காலம்.
        
 
அதனால தெரிஞ்சவங்க தெரியாதவங்க அப்படின்னு யாருடனும், எப்போது வேண்டுமானாலம் ஈசியா பேச முடியுது. செல்போன் மூலமா, முகம் தெரியாத நபர் கூட உங்க வீட்டுக்குள்ள நுழைய முடியுது. அதனால, முன்பின் தெரியாத நபர்கள் லைனில் வந்தால், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்துங்கள்.
 
அடுத்து, செல்போனை காண்பித்து சில்மிஷத்தில் ஈடுபடுவது; ஆபாசப் படங்களைக் காட்டி பிஞ்சு மனதில் நஞ்சை விதைப்பது என பல வகைகளில் பெண்கள் இன்று சீரழிக்கப்படுகின்றனர். எனவே, இவற்றைப் பற்றியெல்லாம் நீங்கள் கண்டிப்பாக உங்கள் குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும்.
 
சின்ன பெண் தானே அவளுக்கு என்ன தெரியும் என்றோ, இப்ப எதுக்காக இதப்பத்தியெல்லாம் சொல்லித் தரவேண்டும் என்றோ நினைக்காதீர்கள். “டிவி’, சினிமா என உங்கள் பெண் அரைகுறையாக பல விஷயங்களைத் தெரிந்திருக்கிறாள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். சக நண்பர்களுடன் பழகவிடுங்கள். குறுகிய வட்டத்தை வரைந்து அதற்குள் தான் உங்கள் குழந்தை சுற்றிவர வேண்டும் என்று எண்ணாதீர்கள்.
 
எல்லையே இல்லாமல் இஷ்டத்துக்கு பிள்ளைகளை விடுவது எத்தனை தவறோ அதே போல தான் குறுகிய வட்டத்தை வரைந்து அதற்குள் உங்கள் குழந்தையை வலம்வரச் சொல்வதும். அதனால,மற்றவர்களிடம் உரையாடும் போது, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து எடுத்துக் கூறுங்கள்.
 
உதாரணமாக, அடுத்திருப்பவர்களிடம் பேசும் போது அவர்களின் கண்களைப் பார்த்து, நேராக நின்று பேசச் சொல்லுங்கள். குறிப்பாக, ஆண்களிடம். அப்படி இல்லாமல், வெட்கப்பட்டு பேசும்போதோ அல்லது நாணிக் கோணி பேசும் போது, ஏதோ ஒரு விதத்தில் எதிர் இருப்பவர் மனதில் பலவீனமாக புரிந்து கொள்ளப்படுவார்கள் என்று கூறுங்கள்.
 
தற்போதைய சூழ்நிலையில், கல்வி சம்மந்தமான புத்தகங்களை மட்டும் படிச்சா பத்தாது; நாட்டு நடப்புகளையும் தெரிஞ்சுக்கணும். அப்பதான் அதற்கேற்றவாறு இந்த சமூகத்தில் உலா வர முடியும். அதனால, செய்தித்தாள் வாங்கிக் கொடுத்து படிக்கச் சொல்லுங்கள். அதோடு, நாட்டு நடப்புகளை அவர்களுடன் விவாதியுங்கள்;
 
அவர்கள் எப்படி இருந்தால் இந்த சமூகத்தில் பாதுகாப்பாக வலம் வரமுடியும் என்பதை விளக்குங்கள். வழிக்காட்டுங்கள். இதுபோன்ற விஷயத்துலயும் நீங்கள் கவனம் செலுத்தினால் உங்கள் வீட்டுப் பெண்கள், நிச்சயமாக வாழ்க்கை என்னும் பாதையில் கவனமாக இருப்பார்கள்; வெற்றி பெறுவார்கள்.

நன்றி ::::::::மாலைமலர்::::::

கவனமா பார்த்துக்கங்க டீன் ஏஜ் பெண்களை!

                          

டீன்-ஏஜ் பருவம் என்பது மிகவும் வாழ்வில் முக்கியமான காலகட்டம். பொதுவாக 13-19 வயது வரையிலான பருவத்தை டீன்-ஏஜ் என்கிறோம்.
 
இந்த காலகட்டத்தில், பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு மாறுதல்களை சந்திக்கின்றனர். அவர்களுக்கு பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் அவசியம்.  
 
வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்களின் டீன்-ஏஜ் பெண்களுடன் தினமும் சிறிது நேரமாவது கட்டாயமாக செலவழிக்க வேண்டும். அவர்களது உடல்நலம், சந்தேகங்கள், படிப்பு பற்றி பேச வேண்டும் மனம் விட்டு பேச வேண்டும். இது அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன் தாயுடனான நெருக்கத்தையும், பாசத்தையும் மேம்படுத்தும்.
 
ஏனெனில் அந்த வயதில் தான் அரவணைப்பும், பாதுகாப்பும் தேவைப்படும். இந்த சமயங்களில் தான் பெண்கள் உணர்ச்சி வசப்பட்டு தவறான முடிவுகளை எடுப்பார்கள். அப்போது அவர்களிடம் எது நல்லது, கெட்டது என்பதை எடுத்து கூற தோழியாக தாய் இருக்க வேண்டும்.
 
உங்கள் மகள் எந்த பிரச்சனையை கொண்டு வந்தாலும் அதை அன்புடனும், அரவணைப்புடனும் அந்த பிரச்சனையை தீர்க்க பாருங்கள். அதற்கு மாறாக அவர்களை திட்டினாலோ, தண்டிக்க நினைத்தாலோ அவர்கள் தவறாக முடிவுகளை எடுக்க தூண்டிவிடும். எனவே உங்கள் பெண்களில் டீன் - ஏஜ் வயதில் நீங்கள் பொறுமையும் கவனமாக இருக்க வேண்டும். 

பேரிச்சம் பழத்தின் 6 நன்மைகள்!!!


நிறைய பேர் டயட்டில் இருக்கும் போது பேரிச்சம் பழத்தையும் சேர்த்துக் கொள்வார்கள். ஏன் என்று தெரியுமா? ஏனெனில் அதில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் மருத்துவர்களே தினமும் பேரிச்சம் பழத்தையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள். அதிலும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் கூட தினமும் 1-2 பேரிச்சம் பழம் சாப்பிட்டால், நம்பமாட்டீர்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இருக்கும்.
                        

அத்தகைய பேரிச்சம் பழத்தில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. சொல்லப்போனால் 1 பேரிச்சம் பழத்தில் 23 கலோரிகள் இருப்பதோடு, கொலஸ்ட்ரால் இல்லாமல் இருக்கிறது. அதிலும் இந்த பழத்தை உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட, இந்த இனிப்பான பழத்தை சாப்பிடலாம். இதனால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும்.

மலச்சிக்கல்

மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள், இரவில் படுக்கும் போது பேரிச்சம் பழத்தை நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்து அதனை சாப்பிட்டால், இந்த பிரச்சனையை தவிர்க்கலாம். ஏனெனில் இந்த பழத்தில் புரோட்டீன் மற்றும் இதர சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், சரிசெய்துவிடும்.


பார்வை கோளாறு

பேரிச்சம் பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன. ஆகவே கண் பார்வைக்கு தேவையான வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால், மாலைக்கண் நோய் ஏற்படாமல் தடுக்கும்.

கர்ப்பம்

கர்ப்பிணிகளின் உடலில் இரத்தம் குறைவாக இருந்தால், பேரிச்சம் பழத்தை அதிகம் சாப்பிடுமாறு மருத்துவர்கள் சொல்வார்கள். இந்த பழத்தில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் செலினீயம் போன்றவை அதிகமாக உள்ளன. இவை அனைத்து கருவின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள். மேலும் இதில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது. ஆகவே கர்ப்பமாக இருக்கும் போது, இதனை அதிகம் சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவானது குறையாமல் பாதுகாத்து கொள்ளும்.

மூட்டு வலி

இன்றைய காலத்தில் மக்கள் மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணம் கால்சியம் குறைபாடேயாகும். ஆகவே தினமும் சிறிது பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால், ஒரு நாளைக்கு தேவையான கால்சியம் சத்தை பெறுவதோடு, மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றை சரிசெய்யலாம்.

குடல் கோளாறு

பேரிச்சம் பழத்தில் கால்சியம், வைட்டமின் பி5, நார்ச்சத்து, வைட்டமின் பி3, பாஸ்பரஸ், கொழுப்பு, பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆகவே அத்தகைய பேரிச்சம் பழத்தை, தினமும் சாப்பிட்டு வந்தால், குடலில் ஏதேனும் கோளாறுகள் இருந்தாலும் சரியாகிவிடும்.


பற் சொத்தை

நிறைய பேர் பல் சொத்தையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த பேரிச்சம் பழத்தை சாப்பிட்டால், பற்களில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் தடுக்கலாம். ஏனெனில் இதில் ஃப்ளோரின் என்னும் சத்து அதிகம் உள்ளது. எனவே பற்களில் ஆரோக்கியத்திற்கு இந்த சத்து மிகவும் இன்றியமையாதது.


English summary
Have you ever thought why many people prefer to break their fast by eating dates? It is because dates are an ideal fruit that has many health benefits. Owing to great health benefits of dates, many doctors recommend to have a little amount of dates daily.
நன்றி : போல்ட் ஸ்கே தமிழ்