Thursday, March 7, 2013

அங்காடித் தெரு கடையின் பெண்களின் தின வாழ்க்கை..


சில நாட்களுக்கு முன்பு சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்தேன். இரவு 9 மணி.அதிகக் கூட்டம் இல்லை. நாள்முழுக்க உழைத்த களைப்புடன், வலுக்கட்டாயமாக ஒட்ட வைத்தசிறு புன்னகையுடன் துணிகளைஎடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார் அந்தப் பெண். மெலிந்த தேகம். மிஞ்சிப் போனால் 25 வயது இருக்கலாம்.
-
‘‘எந்த ஊர் நீங்க?’’
‘‘திருவண்ணாமலை பக்கம்..’’
‘‘திருநெல்வேலிக ாரங்கதான் நிறைய இருப்பாங்கல்ல.. ’’
‘‘இப்போ அப்படி இல்ல... அவங்கல்லாம் வேற கடைக்குப்போயிட்டாங்க.. நாங்க திருவண்ணாமலை பிள்ளைங்க நிறைய பேரு இருக்கோம். 150 பேராச்சும் இருப்போம்..’’
-
‘‘தினமும் எத்தனை மணிக்கு வேலைக்கு வரணும்?’’
‘‘காலையில 9 மணிக்கு வரணும்.நைட் 11 மணிக்கு முடியும்.’’
‘‘அப்படின்னா 14 மணி நேரம் வருதேங்க.. கிட்டத்தட்ட 2 ஷிப்ட். இங்கே ஷிப்ட் கணக்கு எல்லாம் உண்டா?’’
‘‘ஷிப்டா... அதெல்லாம் தெரியாதுண்ணேன். காலையில வரணும். நைட் போகனும். அவ்வளவுதான்..’’-
‘‘சாப்பாடு?’’
‘‘கேண்டீன் இருக்கு. கொஞ்ச, கொஞ்ச பேரா போய் சாப்பிட்டு வருவோம்.’’
‘‘எத்தனை மணிக்கு தினமும் தூங்குவீங்க?’’
‘‘12 மணி, 1 மணி ஆகும். காலையில எழுந்ததும் வந்திருவோம்’’
‘‘தங்குற இடம், சாப்பாடு எல்லாம் நல்லா இருக்குமா?’’
‘‘அது பரவாயில்லண்ணேன் . நாள் முழுக்க நின்னுகிட்டேஇருக்குறோமா... அதுதான் உடம்பு எல்லாம் வலிக்கும்.’’
‘‘உட்காரவே கூடாதா?’’
‘‘ம்ஹூம்.. உட்காரக் கூடாது. வேலையில சேர்க்கும்போதே அதை எல்லாம் சொல்லித்தான் சேர்ப்பாங்க. மீறி உட்கார்ந்தா கேமராவுல பார்த்துட்டு சூப்பரவைசர் வந்திடுவார்’’
-
- யாரோ ஒரு வாடிக்கையாளருடன ் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பதையு ம் சூப்ரவைஸர் கேமராவில் பார்க்கக்கூடும் . அதனால் அந்தப் பெண் இங்கும் அங்குமாக துணிகளை எடுத்து வைத்தபடியேப் பேசுகிறார்.
‘‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?’’
‘‘5,500 ரூபாய்.’’
‘‘வெறும் 5500 ரூபாய்தானா? வேற ஏதாவது முன்பணம், கல்யாணம் ஆகும்போது பணம் தர்றது... அதெல்லாம் உண்டா?’’
‘‘இல்லண்ணே... அது எதுவும் கிடையாது. இதான் மொத்த சம்பளம்.’’
‘‘இதை வெச்சு என்ன பண்ணுவீங்க?’’
‘‘தங்குறது, சாப்பாடு ஃப்ரீ.எனக்கு ஒண்ணும் செலவு இல்லை. சம்பளத்தை வீட்டுக்கு கொஞ்சம் அனுப்புவேன். மீதி பேங்க் அக்கவுண்டுல போட்டுருவேன்’’
‘‘எத்தனை வருஷமா இங்கே வேலைப் பார்க்குறீங்க?’ ’
-
‘‘அஞ்சு வருஷம் முடியப் போகுது. அப்பவுலேர்ந்து இதே சம்பளம்தான். இன்னும் ஏத்தலை..’’
‘‘வேலைக்கு சேர்ந்த முதல் மாசத்துலேர்ந்து மாசம் 5500 ரூபாய்தான் சம்பளமா?’’
‘‘ஆமாம்.’’
‘‘யாராச்சும் 10 ஆயிரம் சம்பளம் வாங்குறாங்களா?’ ’
‘‘சூப்ரவைசருங்க வாங்குவாங்க. அதுவும் பத்து வருஷம் வேலை பார்த்திருந்தாத ான். இல்லேன்னா ஏழாயிரம், எட்டாயிரம்தான். ’’-
‘‘லீவு எல்லாம் உண்டா?’’
‘‘மாசம் ரெண்டு நாள் லீவு உண்டு. அதுக்கு ஒரு நாளைக்கு 200 ரூபாய் சம்பளத்துலப் பிடிச்சுக்குவாங ்க.’’
‘‘பிடிச்சுக்குவ ாங்களா? அப்படின்னா லீவே கிடையாதா?’’
‘‘அதான் சொல்றனேண்ணே... லீவு உண்டு. ஆனால் சம்பளம் பிடிச்சுக்குவாங ்க. அதனால நாங்க பெரும்பாலும் லீவு போட மாட்டோம்’’
‘‘அப்போ ஊருக்குப் போறது எல்லாம்?’’
‘‘ஆறு மாசத்துக்கு ஒரு தடவைஒரு வாரம் ஊருக்குப் போயிட்டு வருவேன். அதுக்கு லீவு கொடுப்பாங்க. ஆனால் அந்த லீவுக்கும் சம்பளம் கிடையாது’’
-
‘‘ஊருக்குப் போகும்போது இங்கேருந்து துணி எடுத்துட்டுப் போவீங்களா?’’
‘‘இங்கே விற்குற விலைக்கு வாங்க முடியுமா? வெளியில பாண்டி பஜார்ல எடுத்துட்டுப் போவோம். இங்கே எடுத்தாலும் சில சுடிதார் மெட்டீரியல் கம்மியா இருந்தா எடுப்போம்’’
‘‘உங்களுக்கு விலை குறைச்சுதரமாட்டாங்களா?’ ’
‘‘ம்ஹூம்... அதெல்லாம் தரமாட்டாங்க. உங்களுக்கு என்ன விலையோ, அதான் எங்களுக்கும்’’
‘‘உங்களுக்கு எப்போ கல்யாணம்?’’
‘‘தெரியலை..’’
‘‘ஊர்ல என்ன பண்றாங்க..’’
‘‘நெல் விவசாயம்..’’
‘‘எவ்வளவு நிலம் இருக்கு?’’
‘‘தெரியலை.. ஆனால் கம்மியாதான் இருக்கு’’
‘‘இங்கே இப்படி கஷ்டப்பட்டுவேலைப் பார்க்குறதுக்கு ப் பதிலா ‘சரவணா ஸ்டோர்ஸ்ல வேலைப் பார்த்தேன்’னு சொல்லி திருவண்ணாமலையில ேயே ஒரு துணிக்கடையில வேலை வாங்க முடியாதா?’’
‘‘வாங்கலாம். ஆனா இதைவிட கம்மியா சம்பளம் கொடுப்பாங்க. இங்கன்னா வேலை கஷ்டமா இருந்தாலும் சாப்பாடும், தங்குறதும் ஃப்ரீ. சம்பளக் காசு மிச்சம். அங்கே அப்படி இல்லையே..’’
‘‘இங்கே எவ்வளவு பேரு வேலைப் பார்ப்பீங்க?’’
-
‘‘இந்த ஒரு கடையில மட்டும் பொம்பளைப் பிள்ளைங்க மட்டும் 800 பேர் இருக்கோம்.’’
‘‘மெட்ராஸ்ல எங்கேயாச்சும் சுத்திப் பார்த்திருக்கீங ்களா?’’
‘‘ஆவடில எங்க அக்கா வீடு இருக்கு. எப்பவாச்சும் ஒரு நாள் லீவு போட்டுட்டுப் போயிட்டு வருவேன்.’’
- கனத்த மனதுடன் அந்தப் பெண்ணிடம் விடைபெற்று நகர்ந்தோம். அந்த தளம் முழுக்கவும், அடுத்தடுத்த தளங்களிலும் இதேபோன்ற உழைத்துக் களைத்த பெண்கள். அவர்களின் உழைப்பை உறிஞ்சிஎழுந்து நிற்கும் சரவணா ஸ்டோர்ஸ் என்ற அந்த பிரமாண்ட கட்டடம் ஓர் ஆறடுக்கு சவக்கிடங்கு போலதே தோன்றியது.

-----------------------------------------------------
ரிலாக்ஸ் ப்ளீஸ்

பெண்மை எப்படி மலர்கிறது?
சிறுமிகள் பொதுவாக 11 முதல் 13 வயதுக்குள் பூப்படைந்துவிடுவார்கள்.
சிலர் இந்த வயதைக் கடந்தும் பருவம் எய்துவதுண்டு. பெண் பருவம் அடைவது என்பது ஒரு சில நாட்களில் ஏற்படும் நிகழ்வு அல்ல.
பல ஆண்டுகளாக உடலில் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்களால் படிப் படியாய் பெண்களின் உடல் இந்த வளர்ச்சி நிலையை எட்டுகிறது.
ஒரு சிறுமியை குமரியாக்கும் அத்தனை அம்சங்களும் அவள் இனப்பெருக்க உறுப்புகளில்தான் இருக்கின்றன.
அதிசயமும், ஆச்சரியமும் நிறைந்த இந்த இனப்பெருக்க உறுப்புகளில் உள் உறுப்புகளாக அமைந்திருக்கும் கருப்பை, கருக்குழாய், சினைப்பை, சினைமுட்டை போன்றவை குறிப்பிடத்தக்கவை.
கருப்பை என்பது தசையால் அமைந்த உறுப்பு.
இதன் மொத்த நீளம் 7.8 செ.மீ! பருமன் 3.4 செ.மீ! இதன் மேல் பக்கம் அகலமாக இருக்கும்.


கருப்பை கழுத்து எனப்படும் கீழ்ப் பகுதி குறுகியிருக்கும். நடுப்பகுதி மையோமெட்ரியம் எனப்படும்.
கருப்பையில் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு மேல் பகுதி திறப்புகள் கருப்பை குழாய்களோடு இணைந்திருக்கின்றன.
கீழ்ப்பகுதித் திறப்பு கருப்பைக் கழுத்துடன் இணைந்திருக்கிறது.
கருப்பையின் இரண்டு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக சுமார் பத்து செ. மீ. நீளத்தில் இரண்டு கருக் குழாய்கள் உள்ளன.
குழாயின் கடைசிப் பகுதி சினைப் பையை நோக்கி வாய் போலத் திறந்து வளைந்திருக்கும்.
இந்த வழியாகத்தான் சினை முட்டை கருப்பையை நோக்கி நகரும்.
கருப்பையின் பின்னால், கருக்குழாயின் வெளிநுனிப் பகுதியில் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு சினைப்பைகள் உள்ளன.
இவை தலா சுமார் 6கிராம் எடைகொண்டவை .


சிறுமியாக இருக்கும்போது வழவழப்பாகத் தோன்றும் சினைப்பைகள், அவள் பருவத்தை அடையும் போது மேடு, பள்ளம் கொண்டதாக மாறுகிறது.
இந்த பைகளில் பல லட்சம் சினை முட்டைகள் இருக்கும்.
ஆனால் அதில் ஒரு பெண் அதிகபட்சமாக தன் வாழ்நாள் முழுவதும் 500 சினை முட்டைகளைதான் வெளியேற்றுவார்.
பெண்ணின் இனப்பெருக்க உறுப்பில் ஏற்படும் வளர்ச்சி மற்றும் மாற்றங்கள், இயக்கங்கள், தூண்டுதல்கள் அனைத்திற்கும் ஹார்மோன்களே மூல காரணங்களாக இருக்கின்றன.
ஹார்மோன்களுக்கே தலைபோல் விளங்குவது, பிட்யூட்டரி என்ற சுரப்பி.
இதை மூளையில் உள்ள தலாமஸ் என்ற பகுதி கட்டுப்படுத் துகிறது.
இது நேரடியாகவும், மற்ற சுரப்பிகளை ஊக்குவித்தும் உடலை இயங்கச்செய்கிறது.
பெண் பூப்படையும் காலத்தில் ஹார்மோன்கள் துரிதமாக செயல்பட ஆரம் பிக்கும்.


மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி ஹார்மோனை சுரக்கச்செய்து சினைப்பைகளுக்கு அனுப்பும்.
சினைமுட்டைகளைத் தூண்டி முதிர் வடையச்செய்யும். இன்னொரு ஹார்மோன் முதிர்ந்த முட்டையை வெளியிடச்செய்யும்.
பூப்படையும் பருவத்தில் பெண்ணுக்கு ஈஸ்ட் ரோஜென் ஹார்மோன் சுரக்கிறது.
இதனால்தான் மார்பகங்கள் வளர்ந்து, பெரிதாகிறது.
இடுப்பிலும், பின்பகுதியிலும் பல்வேறு வளர்ச்சி மாற்றங்களையும் இந்த ஹார்மோன் உருவாக்குகிறது.
ஒரு பெண் 16 வயது வரை பூப் பெய்தவில்லை என்றால் அதற்கு ஹார்மோன்களின் செயல்பாட்டுக் குறைவு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.


கருப்பை, அண்ணீ கச்சுரப்பி, சினைப்பை, பிறப்பு உறுப்பு பாதை போன்றவைகளில் ஏற்படும் நோய்களாலும் பூப்படைவது தாமதமாகலாம்.
கருப்பை, சினைப்பை போன்றவை பிறவியிலே இல்லாத பெண்கள் பூப்படைய மாட்டார்கள்.
சில பெண்களுக்கு உடலுக்குள் பூப்படைந்ததற்கான அறிகுறிகள் இருக்கும்.
ஆனால் மாதவிலக்கு உதிரம் வெளி யேற முடியாத நிலை ஏற்படும். இதை கண்டுபிடித்து சிகிச்சை கொடுத்து சரி செய்திடலாம்.
16 வயதுக்குப் பிறகும் பூப்ப டையாத பெண்கள், மகப்பேறு மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறவேண்டும்.
அவர்களுக்கு அதிகமாக கால்களில் வியர்த்தல், தலை மற்றும் மார்பகத்தில் திசு தளர்ச்சி, நுரையீரல் தொடர்புடைய நோய்கள், உடல் குண்டாக இருத்தல் போன்ற பாதிப்புகள் இருக்கலாம்.
மேலும் வயிற்றில் அதிக அமிலச்சுரப்பு, இதயத்தில் எப்போதும் படபடப்பு, அதிகமாக மூச்சு வாங்குதல் போன்ற குறைபாடுகளும் இருக்கலாம்.
உடல் பலகீனம், ரத்த சோகை, காலையில் பாதம் வீங்குதல்- மாலையில் கணுக்காலில் வீங்குதல் போன்ற கோளாறு கொண்ட பெண்களும் பூப்படைவது தாமதமாகும்.


காரணம் கண்டுபிடிக்கப்ப ட்டு, சரியான சிகிச்சை பெறுவதன்மூலம் பூப்படைதல் சாத்தியமாகும்.

 
- மருத்துவர் கே.எஸ்.ஜெயராணி. மாலைமலர்

இப்படியும் சில உள்ளங்கள்!!!
நண்பர் ஒருவரின் அனுபவத்தை உங்கள் பார்வைக்காக பதிவிடுகிறேன்,..
நேற்று முன்தினம் மாலையில் வழக்கம் போல் என் வீட்டிற்கு அருகில் உள்ள பூங்காவை சுற்றி நடை பயிற்சி மேற்கொண்டு இருந்தேன் .திடிரென பெரிய மழை ...பூங்கா உள்ளே ஒரு சிறிய ரூம் இருக்கிறது ...ஆனால் அது மூடி இருக்கும் .அதன் வாசலில் ஒதுங்கலாம் என்று உள்ளே சென்றேன் ...அதன் வாசலில் இரண்டு பெரியவர்கள் ,இரண்டு சிறுவர்கள் நின்று கொண்டு இருந்தனர் ...பக்கத்தில் இருந்த மரத்தடியில் ஒதுங்கினேன் .சிறுவன் யாருக்கோ போன் செய்தான் ...சற்று நேரத்தில் அவனது தாயார் குடையுடன் வந்தார் .அவனும். அவன் நண்பனும் அந்த அம்மாவுடன் புறப்பட்டனர் ..

...போகும்போது அந்த பையன் .அந்த பெரியவர்களையும், என்னையும் பார்த்துகொண்டே போனான் .சிறிது நேரம் கழித்து அந்த சிறுவன் மேலும் இரண்டு குடையுடன் வந்தான் ...அந்த பெரியவர்களிடம் கொடுத்து "இதை வச்சுகங்க தாத்தா ...நாளைக்கு வரும்போது திருப்பி கொடுங்க" என்றான் .அந்த பெரிவர்களோ "இல்ல தம்பி நாங்க மயிலாப்பூர்...எப்போவாவதுதான் இங்க அசோக் நகர் வருவோம் " என்றனர்.இந்த பையனும் "பரவாயில்லை நீங்க வரும் போது கொடுங்க நான் இங்க தான் விளையாடிகிட்டு இருப்பேன்" என்று சொல்லி கொடையை கொடுத்தான் .என்னிடம் வந்து " uncle...இந்தாங்க குடை ...இதை வச்சுக்குங்க ...நாளைக்கு
walking வரும்போது கொடுங்க ...இல்லனா கூட உங்க வீடு எனக்கு தெரியும் நானே வந்து வாங்கிக்கிறேன் ." என்று கையில் குடையை கொடுத்துவிட்டு வேகமாக போய்விட்டான் . நான் குடையை விரிக்கவில்லை .அந்த பையனின் பெருந்தன்மை விரிந்தது .நானாவது அதே தெருவில் வசிப்பவன் ...ஆனால் அந்தப் பெரியவர்கள் யார் என்றே அவனுக்கு தெரியாது ...ஆனாலும் ரொம்ப நேரம் மழையில் நனைகிறார்களே...இவர்கள் எப்படி வீட்டுக்கு போவார்கள் என்று நினைத்து அவர்களுக்கு குடையை கொடுத்தானே அதை நினைத்து பார்த்தேன் .அவனை பாராட்டுவதா ...? இல்லை அவனை பெற்றவர்களை பாராட்டுவதா ...? என்று தெரியவில்லை ...


மழை நின்று இரண்டு நாட்கள் ஆகிவிட்டது ...ஆனால் அந்த சிறுவனின் அன்பு மழை மட்டும் இன்னமும் அடைமழையாய் நெஞ்சில்.....


செந்தில்குமார்