Thursday, March 7, 2013

இப்படியும் சில உள்ளங்கள்!!!




நண்பர் ஒருவரின் அனுபவத்தை உங்கள் பார்வைக்காக பதிவிடுகிறேன்,..
நேற்று முன்தினம் மாலையில் வழக்கம் போல் என் வீட்டிற்கு அருகில் உள்ள பூங்காவை சுற்றி நடை பயிற்சி மேற்கொண்டு இருந்தேன் .திடிரென பெரிய மழை ...பூங்கா உள்ளே ஒரு சிறிய ரூம் இருக்கிறது ...ஆனால் அது மூடி இருக்கும் .அதன் வாசலில் ஒதுங்கலாம் என்று உள்ளே சென்றேன் ...அதன் வாசலில் இரண்டு பெரியவர்கள் ,இரண்டு சிறுவர்கள் நின்று கொண்டு இருந்தனர் ...பக்கத்தில் இருந்த மரத்தடியில் ஒதுங்கினேன் .சிறுவன் யாருக்கோ போன் செய்தான் ...சற்று நேரத்தில் அவனது தாயார் குடையுடன் வந்தார் .அவனும். அவன் நண்பனும் அந்த அம்மாவுடன் புறப்பட்டனர் ..

...போகும்போது அந்த பையன் .அந்த பெரியவர்களையும், என்னையும் பார்த்துகொண்டே போனான் .சிறிது நேரம் கழித்து அந்த சிறுவன் மேலும் இரண்டு குடையுடன் வந்தான் ...அந்த பெரியவர்களிடம் கொடுத்து "இதை வச்சுகங்க தாத்தா ...நாளைக்கு வரும்போது திருப்பி கொடுங்க" என்றான் .அந்த பெரிவர்களோ "இல்ல தம்பி நாங்க மயிலாப்பூர்...எப்போவாவதுதான் இங்க அசோக் நகர் வருவோம் " என்றனர்.இந்த பையனும் "பரவாயில்லை நீங்க வரும் போது கொடுங்க நான் இங்க தான் விளையாடிகிட்டு இருப்பேன்" என்று சொல்லி கொடையை கொடுத்தான் .என்னிடம் வந்து " uncle...இந்தாங்க குடை ...இதை வச்சுக்குங்க ...நாளைக்கு
walking வரும்போது கொடுங்க ...இல்லனா கூட உங்க வீடு எனக்கு தெரியும் நானே வந்து வாங்கிக்கிறேன் ." என்று கையில் குடையை கொடுத்துவிட்டு வேகமாக போய்விட்டான் . நான் குடையை விரிக்கவில்லை .அந்த பையனின் பெருந்தன்மை விரிந்தது .நானாவது அதே தெருவில் வசிப்பவன் ...ஆனால் அந்தப் பெரியவர்கள் யார் என்றே அவனுக்கு தெரியாது ...ஆனாலும் ரொம்ப நேரம் மழையில் நனைகிறார்களே...இவர்கள் எப்படி வீட்டுக்கு போவார்கள் என்று நினைத்து அவர்களுக்கு குடையை கொடுத்தானே அதை நினைத்து பார்த்தேன் .அவனை பாராட்டுவதா ...? இல்லை அவனை பெற்றவர்களை பாராட்டுவதா ...? என்று தெரியவில்லை ...


மழை நின்று இரண்டு நாட்கள் ஆகிவிட்டது ...ஆனால் அந்த சிறுவனின் அன்பு மழை மட்டும் இன்னமும் அடைமழையாய் நெஞ்சில்.....


செந்தில்குமார்

No comments:

Post a Comment