Saturday, November 3, 2012

வெந்தயத்தின் மருத்துவக்குணம் - Health Tips

வெந்தயத்தை வறுத்து பொடி செய்து 1 டம்ளர் நீரில் ஊற வைத்து உட்கொள்ள வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், சுரம், உட்சூடு, வெள்ளை, சீதக்கழிச்சல் முதலியவைகள் போகும்.

வெந்தயம் 17 கி எடுத்து 340 கி பச்சரிசியுடன் சேர்த்து சமைத்து உப்பிட்டுச் சாப்பிட குருதி பெருகும். a

கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.

வெந்தயத்தை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊற வைத்து தலை முழுகிவர முடி வளரும். அது முடி உதிர்ந்து போவதைத் தடுக்கும்.

வெந்தயத்தை உலர்த்தி பொடி செய்து மாவாக்கிக் களி கிண்டிக் கட்ட புண், பூச்சி நோய்களைப் போக்கும்.

வெந்தயத்தை வறுத்து இத்துடன் வறுத்த கோதுமையைச் சேர்த்து காப்பிக்குப் பதிலாக வழங்கலாம் இதனால் உடல் வெப்பம் நீங்கும்.

வெந்தய லேகியம்: வெந்தயம், மிளகு, திப்பிலி, பெருங்காயம் இவற்றை சமஅளவு எடுத்து உலர்த்தி நன்றாக வறுத்துப் பொடி செய்து சர்க்கரைப் பாகில் போட்டு இலேகியமாகச் செய்து சாப்பிட சீதக்கழிச்சல், வெள்ளை, மேல் எரிச்சல், குருதியழல், தலைகனம், எலும்பைப் பற்றிய சுரம் தீரும்.

நீர் வேட்கை இளைப்பு நோய், கொடிய இருமல் இவைகளை விலக்கும். ஆண்மை தரும்.

வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிமஞ்சள் இவைகளை சமபாகம் எடுத்து நெய் விட்டு வறுத்து பொடி செய்து சோற்றுடன் கலந்துண்ண வயிற்றுவலி, பொருமல், வலப்பாடு இடப்பாட்டீரல் வீக்கங்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வரும்.

மிளகாய், கடுகு, வெந்தயம், துவரம்பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை இவைகளைத் தக்க அளவு எடுத்து நெய்விட்டு வறுத்து புளிக்குழம்பை இதில் கொட்டி உப்பு சேர்த்து சட்டியிலிட்டு அரைப்பாகம் சுண்டிய பின் இறக்கி சூட்டுடன் சாப்பிட வெப்பத்தால் நேரிடும் சிற்சிலப் பிணிகள் தணியும்.

இத்துடன் வாதுமை பருப்பு, கசகசா, கோதுமை நெய், பால், சர்க்கரை சேர்த்து கிண்டி உட்கொள்ள உடல் வலுக்கும். வன்மையுண்டாகும். இடுப்பு வலி தீரும்.

வெந்தயத்தை, சீமை அத்திப்பழம் சேர்த்தரைத்து கட்டிகளின் மீது பற்றுப்போட அவைகள் உடையும். படைகள் மீது பூச அவைகள் மாறும்.

வெந்தயத்தை, சீமைப்புளி, அத்திப்பழம், திராட்சை ஒரே எடையாகச் சேர்த்து குடிநீரிட்டு தேன் சிறிது கலந்து சாப்பிட இதயவலி, மூச்சடைப்பு இவை போகும்.

வெந்தயத்தை வேக வைத்து தேன் விட்டுக்கடைந்து உட்கொள்ள மலத்தை வெளியேற்றும். இது மார்புவலி, இருமல், மூலம், உட்புண் இவைகளைப் போக்கும்.


நன்றி: குமுதம்

இந்தியா



Map of India 
·         இந்தியாவின் தலை நகரம்: புது தில்லி

·         இந்தியாவில் உள்ள மாநிலங்கள்:

மொத்தம் 28
1.   ஆந்திர பிரதேசம்
தலை நகரம்:
ஹைதெராபாத்
2.   அருணாச்சல பிரதேசம்தலை நகரம்:இட்டாநகர்
3.   அஸ்ஸாம்
தலை நகரம்: திஸ்பூர்
4.   பீகார்
தலை நகரம்: 
பாட்னா
5.       சட்டீஸ்கர்தலை நகரம்: ராய்பூர்
6.       கோவாதலை நகரம்: பனாஜி
7.       குஜராத்தலை நகரம்: காந்திநகர்
8.       ஹரியானாதலை நகரம்: சண்டிகர்
9.       ஹிமாச்சல பிரதேசம்தலை நகரம்: சிம்லா
10.   ஜம்மு மற்றும் காஷ்மீர்தலை நகரம்: ஸ்ரீநகர்
11.   ஜார்கண்ட்தலை நகரம்: ராஞ்சி
12.   கர்நாடகாதலை நகரம்:பெங்களூரு
13.   கேரளாதலை நகரம்:திருவனந்தபுரம்
14.   மத்திய பிரதேசம்தலை நகரம்: போபால்
15.   மகாராஷ்டிராதலை நகரம்: மும்பை
16.   மணிப்பூர்தலை நகரம்: இம்பால்
17.   மேகாலயாதலை நகரம்: ஷில்லாங்
18.   மிசோரம்தலை நகரம்:அயிஸ்வால்
19.   நாகாலாந்துதலை நகரம்: கோஹிமா
20.   ஒரிசாதலை நகரம்:புவனேஸ்வர்
21.   பஞ்சாப்தலை நகரம்: சண்டிகர்
22.   ராஜஸ்தான்தலை நகரம்: ஜெய்ப்பூர்
23.   சிக்கிம்தலை நகரம்: காங்டாக்
24.   தமிழ்நாடுதலை நகரம்:சென்னை
25.   திரிபுராதலை நகரம்: அகர்தலா
26.   உத்தர பிரதேசம்தலை நகரம்:டேராடூன்
27.   உத்தரகண்ட்தலை நகரம்:டெஹ்ராடூன்
28.   மேற்கு வங்காளம்தலை நகரம்:கொல்கத்தா
குறிப்புசண்டிகர் ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் தலைநகராக உள்ளதை கவனிக்கவும்.

·         யூனியன் பிரதேசங்கள்:

மொத்தம் 7.
1.       அந்தமான் மற்றும்நிக்கோபார் தீவுகள்தலை நகரம்: போர்ட்பிளேயர்
2.       சண்டிகர்தலை நகரம்: சண்டிகர்
3.       தாத்ரா மற்றும் நகர்ஹவேலிதலை நகரம்: சில்வாசா
4.       டாமன் மற்றும் டையூதலை நகரம்: டாமன்
5.       லட்சத்தீவுகள்தலை நகரம்: கவரட்டி
6.       தில்லிதலை நகரம்: தில்லி
7.       பாண்டிச்சேரிதலை நகரம்:பாண்டிச்சேரி
    
சண்டிகர் யூனியன் பிரதேசமாகவும் மற்றும் இரு மாநிலங்களுக்குத் தலை நகராகவும் உள்ளதை கவனிக்கவும்.
தில்லி நாட்டின் தலை நகராகவும் யூனியன் பிரதேசமாகவும் உள்ளதை கவனிக்கவும்.

·         தேசிய கீதம்: ஜன கண மன
எழுதியது: ரபீந்திரநாத் தாகூர்.
எழுதிய மொழி: வங்காளம்
·         தேசிய பறவை: மயில்
·         தேசிய விலங்கு: புலி
·         தேசிய மலர்: தாமரை
·         தேசிய விளையாட்டு: ஹாக்கி
·         தேசிய கனி: மாம்பழம்
·         தேசிய மரம்: ஆலமரம்
·         தேசிய நதி: கங்கை
·         தேசிய பாடல்: வந்தே மாதரம்
எழுதியவர்: பக்கிம் சந்திர சட்டர்ஜி
·         தேசிய சின்னம்: அசோகச் சக்கரம்

·         தேசிய கொடி பற்றி:

இந்திய தேசிய கொடி 

உயர நீள பாகுபாடு: 2:3
மேல் நிறம்: காவி
நடு நிறம்: வெள்ளை
கீழ் நிறம்: பச்சை
அசோக சக்கரத்தின் நிறம்: கடற்படை நீலம்

·         இந்திய நாணய குறியீடு: இந்திய நாணய குறியீடு

உதாரணத்திற்கு ரூபாய் 50 என்பதை image 50 என்று குறிப்பிட வேண்டும்.
·         இந்தியா ஒரு தீபகற்ப நாடு. தீபகற்பம் என்பது மூன்று பக்கம் கடலாலும் ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்ட நாடு. இந்தியாவின் மேற்க்கே அரபிக் கடலும், கிழக்கே வங்காள விரிகுடாவும் தெற்கே இந்தியப் பெருங்கடலும் சூழ்ந்துள்ளன.
·         முதல் குடியரசுத் தலைவர்: முனைவர். ராஜேந்திர பிரசாத்
·         முதல் பெண் குடியரசுத் தலைவர்: பிரதிபா தேவிசிங்க் பாட்டீல்
·         முதல் பிரதமர்: ஜவஹர்லால் நேரு
·         முதல் பெண் பிரதமர்: இந்திரா காந்தி
·         இந்தியா பரப்பளவில் ஏழாவது மிகப்பெரிய நாடு.

·         ரூபாய் நோட்டில் உள்ள மொழிகள்:

1அஸ்ஸாமி
2பெங்காலி
3குஜராத்தி
4கன்னடம்
5காஷ்மீரி
6கொங்கனி
7மலையாளம்
8மராத்தி
9நேபாளி
10.ஒரியா
11.பஞ்சாபி
12.சமஸ்கிருதம்
13.தமிழ்
14.தெலுங்கு
15.உருது
·         இந்தியா உலகில் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகை1,241,491,960 .

·         சிறிய மாநிலம்: கோவா
·         பெரிய மாநிலம்: ராஜஸ்தான்
·         இந்தியா கேட் மும்பையில் உள்ளது.
·         சதுரங்க விளையாட்டைக் கண்டுபிடித்தது இந்தியா.
·         சுழியம் (0) கண்டுபிடித்தவர்கள் இந்தியர்கள்.
·         இந்தியா ஒரு துணை கண்டம்.

·         இந்தியாவை சுற்றியுள்ள நாடுகள்:

மேற்கே பாக்கிஸ்தான், வட கிழக்கே பூடான், சீனா மற்றும் நேபாளம் மற்றும் கிழக்கே பர்மா மற்றும் பங்களாதேஷ் உள்ளன. இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் எல்லைக்கு அருகில் இலங்கை மற்றும் மாலத்தீவுகள் உள்ளன. மேலும் அந்தமான்மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் தாய்லாந்து மற்றும்இந்தோனேஷியா உள்ளன.
·         இந்தியா சுதந்திரம் அடைந்தது ஆகஸ்டு 15 1947
·         இந்தியா குடியரசு நாடானது ஜனவரி 26 1950. மேலும் அரசியலமைப்பு சட்டம் அன்றுதான் நடைமுறைக்கு வந்தது.
·         உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் ஆக்ராவில் உள்ளது

thanks: tamil crazy

முதல் முதலில், you tubeஇல் ஒரு வீடியோ பைலைப் பதிந்தவர்...!



இன்று வீடியோக்களுக்கென தனித் தளமாய் அனைவரின் விருப்ப தளமாக இயங்குவது யு–ட்யூப். இதில் யார் வேண்டுமானாலும் உறுப்பினராகப் பதிவு செய்து, தங்களின் வீடியோ காட்சியைப் பதிவு செய்து, உலகம் அறியத்தரலாம்; அல்லது தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் பார்க்கத் தரலாம்.

முதல் முதலில், இதில் ஒரு வீடியோ பைலைப் பதிந்தவர் யு–ட்யூப் தளத்தை நிறுவியவர்களில் ஒருவரான ஜாவர் கரிம் என்பவர். ‘Me at the Zoo’ என்ற 19 விநாடிகள் ஓடும் வீடியோ பைல் ஒன்றை இந்த தளத்தில் 2005 ஏப்ரல் 23 அன்று பதிந்தார். தான் சாண்டியாகோ விலங்கியல் பூங்கா சென்று வந்த நிகழ்வினைப் படமாக எடுத்து இத்தளத்தில் பதிந்து, இத்தளத்தின் முதல் பயனாளராகவும் மாறினார். இதன் பின் பல லட்சக்கணக்கான வீடியோ பைல்கள் இதில் பதியப்பட்டு, இன்று பல லட்சம் பேரால் பார்க்கப்படுகிறது யு–ட்யூப் தளம்.


எழுதியவர் : KARTHIK KARTHI 

கூகிள் (Google) உருவான சுவாரஸ்யமான கதை




கூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது.அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு." நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க" என்று சொல்லிட்டு சென்னை 28 என்ற மிகப்பெரும் ஹிட் படம் ஒன்றை எடுத்திருந்தார் வெங்கட்பிரபு. அதுமாதிரிதான் "நாங்க ஜாலியா கம்பனி ஆரம்ம்பிக்கிறோம் " என்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய கம்பனிதான் இந்த கூகிள்.அந்த கம்பனிதான் இணைய உலகில் ஒரு விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.

நீங்க நம்ப மாட்டிங்கன்னு தெரிஞ்சுதான் கூகிள் நிறுவனத்தோட உள்ளக படங்களையெல்லாம் இணைத்திருக்கிறேன். இது எவ்வளவு ஜாலியான கம்பனின்னு படங்களை பார்த்தாலே தெரியும்.

ஷெல் என்பவர் முப்பத்தேழு வயதுப் பெண்மணி. ஒரு பெரியJustify Fullஅமெரிக்கக் கம்பெனியில் பொறுப்பான பதவியில் இருக்கிறார். ஒரு நாள் அலுவலகத்தில் ஒரு பெரிய தப்பு செய்துவிட்டார். அவசரமாக முடிவு எடுத்து, ஆலோசிக்காமல் செயல்பட்டு, அகலக் கால் வைத்துவிட்டார். அவரால் கம்பெனிக்கு பல லட்சம் டாலர் நஷ்டம். தன் மடத்தனம் புரிந்தவுடன் தயங்கிக்கொண்டே முதலாளியிடம் போய் விஷயத்தைத் தெவித்தார்.

இந்த நிலையில் பாஸ் என்ன செய்வார்?

வேறொரு கம்பெனியாக இருந்திருந்தால் உடனே ஷெலுக்கு சீட்டுக் கிழிவதுடன், அவருடைய சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசர் வரை அத்தனை பேருக்கும் அண்டர்வேருடன் நிறுத்தி வைத்து பரேடு நடந்திருக்கும். ஆனால் ஷெலின் பாஸ் புன்னகையுடன், ""அப்படியா, தாங்க்ஸ்!'' என்றார்.

""தயங்கித் தயங்கி, ஒரு முடிவும்எடுக்காமல் களிமண் மாதிரி உட்கார்ந்திருப்பவர்கள்தான் தப்பே செய்ய மாட்டார்கள். அடிக்கடி தடுக்கி விழுபவர்கள்தான் நம் கம்பெனிக்குத் தேவை. அவர்கள்தான் நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்!''

இந்த வித்தியாசமான கம்பெனிதான் கூகிள். அதன் வினோதமான முதலாளிதான் லாரி பேஜ். தன் கல்லூரித் தோழர் செர்ஜி ப்ன்னுடன் சேர்ந்து காலேஜ் படிக்கும்போதே கம்பெனி ஆரம்பித்தவர். (படிப்புதான் குட்டிச் சுவராகிவிட்டது!) உலகத்தின் நம்பர் ஒன் இன்டர்நெட் கம்பெனியாக வளர்ந்து போட்டியே இல்லாமல் இணைய மலையின் உச்சியில் போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறது கூகிள்.

லாரியும், செர்ஜியும் பிட்ஸா சப்ளை செய்து சம்பாதித்த காசில் மிச்சம் பிடித்து கம்ப்யூட்டர் வாங்கித் தங்கள் ஹாஸ்டல் அறையில் கம்பெனியை ஆரம்பித்தார்கள். பிறகு ஒரு வீட்டு கராஜை வாடகைக்கு எடுத்து ஆறு ஊழியர்களுடன் கம்பெனி நடத்தினார்கள். இன்றையத் தேதிக்கு கூகிளின் மதிப்பு பன்னிரெண்டாயிரம் கோடி டாலருக்கு மேல்.

கணிதத்தில் கூகால் (googol) என்ற ஒரு பெரிய நம்பர். ஒன்று போட்டு நூறு சைபர். எத்தனை கோடி வலைப் பக்கங்கள் இருந்தாலும் தேடித் தந்துவிடுவோம் என்ற அர்த்தத்தில் இந்தப் பெயரை வைத்தார்கள். ஆனால் நம் கதாநாயகர்களுக்கு ஸ்பெல்லிங் கொஞ்சம் தகராறு. (கூகால்) என்பதற்குப் பதிலாக (கூகிள்) என்று தப்பாக எழுதிவிட்டார்கள். யாரும் கவனிக்காததால் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.

இதை உருவாக்கி முடித்ததும் இந்த தேடல் நுட்பத்தை Yahoo போன்ற பெரும் தலைகள் யாருக்காவது விற்கலாம் என முடிவெடுத்தனர்.வாங்க யாரும் இல்லாததால் 1998-ல் Google என்ற கம்பெனி உருவானது.1998 நவம்பரில்
தான் கூகிள் இணையதளம் முதலாக தலைக்காட்ட தொடங்கி யிருந்தது.ஆரம்பத்தில் பணம் ஒன்றும் அவ்வளவாய் சம்பாதிக்க இயலவில்லை.Sun-னும் IBM-மும் சில Sun Ultra II,F50 IBM RS/6000
செர்வர்களை தானமாக வழங்கியிருந்தனர்.2001-ல் யாகூ கூகிளை வாங்க விலைப்பேசி கொண்டிருந்ததாம்.தேடல் இயந்திரத்தின் வலிமை அறியா யாகூ ஒரு தேடல் இயந்திரத்துக்கு இத்தனை விலையா ($5 Billion) என ஒதுங்கி விட்டது.(அன்று யாகுவிடம் விலைபோயிருந்தால் கூகிள் என்னவாயிருக்கும்?...யூகிக்க கூட இயலவில்லை.)

நிறுவனத்தில் எட்டாயிரம் பேர் வேலை செய்கிறார்கள். எல்லாம் பொறுக்கி எடுத்த மணி மணியான என்ஜினீயர்கள். அவர்களுடைய கலிபோர்னியா ஆபீசில் போய்ப் பார்த்தால் ஏதோ பல்கலைக்கழகக் கட்டடத்துக்குள் நுழைந்துவிட்ட மாதிதான் இருக்கிறது. இளைஞர் பட்டாளம் ஏக இரைச்சலாகச் சிரித்துக் கொண்டு அடித்துக் கொண்டு கானா பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறது. வராந்தாவில் ஊழியர்கள் வளர்க்கும் செல்ல நாய்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் டேபிள் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். மடியில் குழந்தையை வைத்துக் கொண்டே வேலை செய்யும் தாய்மார்கள், மூடு வருவதற்காகப் பாட்டுக் கேட்கும், பியானோ வாசிக்கும் இளைஞர்கள்... ஆபீஸ் மாதிரியாகவா தெரிகிறது?

கூகிள் ஊழியர்களுக்கு கம்பெனி செலவில் சாப்பாடு, காப்பி இலவசம். கூகிள் கான்டீன் என்பது நம் மியூசிக் அகாதெமி கான்டீன் போல பிரபலமானது. அதைத் தவிர அலமாரி அலமாரியாக நொறுக்குத் தீனிகள், பழங்கள், பானங்கள். கொடுத்து வைத்தவர்கள், பிரித்து மேய்கிறார்கள்!

கூகிள் பிறந்த புதிதில் சர்ச் எஞ்சின் எனப்படும் வலைத் தேடல் இயந்திரமாக மட்டும்தான் இருந்தது. மசால் தோசை என்று தேடினால் இன்டர்நெட்டில் இருக்கும் கோடியோ கோடிக்கணக்கான தகவல் பக்கங்களில் புகுந்து புறப்பட்டுத் தேடி வினாடி நேரத்தில் விடை கொண்டு வந்துவிடும். இந்த மின்னல் வேகத் தேடல் டெக்னாலஜியைக் கண்டுபிடித்தவர்கள் பேஜும் பின்னும்தான். இதைச் செய்ய அவர்கள் பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்கள் எதையும் உபயோகிக்கவில்லை; சாதாரணமாகக் கடையில் கிடைக்கும் எட்டணா கம்ப்யூட்டர்களை ஏராளமான எண்ணிக்கையில் வாங்கிப் போட்டு அவற்றை ஒத்துழைக்க வைத்த சாப்ட்வேர் சாணக்கியத்தனம்தான் அவர்கள் செய்தது.














கூகிளில் வேலை செய்பவர்கள் எல்லோருக்கும் வாரம் நாலு நாள் ஆபீஸ் வேலை, ஒரு நாள் சொந்த வேலை. அதாவது, உங்களுக்கு ஏதாவது புது ஐடியா தோன்றினால் அதை முயற்சித்துப் பார்க்க கம்பெனி காசில் வசதி செய்து தருகிறார்கள். கூகிள் அறிமுகப்படுத்தியுள்ள பல புதுமையான சேவைகள் இப்படி ஆளாளுக்கு குருட்டாம்போக்கில் யோசித்து ஆரம்பித்து வைத்ததுதான். ""ஒவ்வோர் ஐடியாவும் ஒரு வைரம்; "தினப்படி வேலையில் பிசியாக இருக்கிறேன், யோசிக்க நேரமில்லை' என்பதனால் எந்த நல்ல ஐடியாவும் வீணாகிவிடக் கூடாது'' என்பது கூகிள் கொள்கை.

கூகிள் ஊழியர்கள் எல்லாரும் கிட்டத்தட்ட சுதந்திரமாக, தமக்குத் தாமே வேலை செய்துகொள்கிறார்கள். பின்கை கட்டிக் கொண்டு பின்பக்கம் உலாத்திக் கண்காணித்துக் கொண்டே இருக்கும் சூப்பர்வைசர்கள் கிடையாது. ""எவ்வளவுக்கு எவ்வளவு மானேஜ்மென்ட் இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் குறைந்துடும். ஃப்ரீயாக விட்டால்தான் எல்லாரும் பொறுப்பாக வேலை செய்வார்கள்'' என்கிறார்கள். (கார்ப்பரேட் சர்வாதிகாரிகளே! கவனித்தீர்களா?)

கூகிள் வருவதற்கு முன்னும் பற்பல தேடல் இயந்திரங்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் எல்லாம் ஒரே குறைபாடு, குப்பைத் தொட்டியிலிருந்து அள்ளி வந்த மாதிரி சம்பந்தா சம்பந்தமில்லாத வலைப் பக்கங்களையெல்லாம் பீறாய்ந்து கொண்டுவந்து போட்டுவிடும். தங்கள் வெப் சைட்தான் முதலில் வர வேண்டும் என்பதற்காக சர்ச் எஞ்சினை நயவஞ்சகமாக ஏமாற்றுவதற்குப் பலர் சதித் திட்டங்கள் வேறு செய்து வைத்திருந்தார்கள்.

கூகிள்தான் முதல் முதலாக பக்கங்களைத் தரப்படுத்தி மார்க் போட்டு உருப்படியான தகவல்களை முதலில் கொண்டு வந்து தர ஆரம்பித்தது. பேஜ் ராங்கிங் (Page ranking) என்ற இந்த டெக்னிக்கை கண்டுபிடித்தவர் லாரி பேஜ். ஒரு வலைப் பக்கத்தை நிறையப் பேர் சிபாரிசு செய்து இணைப்புச் சங்கிலி போட்டு வைத்திருந்தால், அதிலும் பெரிய மனிதர்கள் சிபாரிசு செய்தால் அதிக மார்க் என்பது இதன் தத்துவம். கூகிளையும் ஏமாற்ற முடியும்; ஆனால் கஷ்டம்.

கூகிள் ஆராய்ச்சிசாலை என்று புதிது புதிதாக என்னவோ கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

கூகிள் நியூஸ் என்பது உலகத்தில் உள்ள அத்தனை செய்திகளையும் ஒரே இடத்தில் தருகிறது;

கூகிள் மேப் என்ற சேவையில் அமெரிக்காவின் வரைபடம் மொத்தமும் வைத்திருக்கிறார்கள். ஏதாவது ஓர் ஏரியாவில் போய் நின்றுகொண்டு இங்கே பக்கத்தில் பிட்ஸா எங்கே கிடைக்கும் என்றால் உடனே காட்டுகிறது.

லட்சக்கணக்கான புத்தகங்கள் கொண்ட இலவச லைப்ரரி நடத்துகிறார்கள்.

பி.எச்டி மாணவர்கள் காப்பி அடிக்க ஆராய்ச்சிக் கட்டுரைகள் தேடித் தருகிறார்கள்.

பறவைப் பார்வையாக சாட்டிலைட்டிலிருந்து உலகத்தைப் பார்க்கவும் வசதி செய்திருக்கிறார்கள் (ஊரான் வீட்டு நெய்யே என்று இந்தியாவின் தலைப்பக்கம் கொஞ்சம் கிள்ளி பாகிஸ்தானுக்குக் கொடுத்திருப்பதுதான் பார்க்கச் சகிக்கவில்லை.)

கூகிள் பயண சேவையில் பஸ், ரயில் நேரங்கள், வழித் தடங்கள் சொல்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட ஸ்டாப்பில் அடுத்த பஸ் எப்போது வரும் என்பது வரை காட்டுகிறது (ஆழ்வார்பேட்டையில் அல்ல, அமெரிக்காவில்!). கூகிள் செவ்வாய் என்ற ப்ராஜெக்டில் செவ்வாய் கிரகத்தின் நுணுக்கமான போட்டோக்களை கலர் கலராக சேமித்து வைத்திருக்கிறார்கள்.

உங்களுக்கே சொந்தமாக இணையத்தில் ஓர் ஒண்டுக் குடித்தனம்- ஒரு வலைப் பக்கம் தேவை என்றால் ஐந்து நிமிடத்தில் அமைத்துக்கொள்ளலாம். டைப் அடிக்கத் தெரிந்தால் போதும்; மற்றதெல்லாம் அவர்கள் பார்த்துக்கொள்கிறார்கள்.

ஜி மெயில்தான் இப்போது சூடான மெயிலை விட அதிகம் நாடப்படுகிறது. எல்லா இ-மெயில் கம்பெனிகளும் பிசுகிப் பிசுகி ஐம்பது மெகாபைட், நூறு மெகாபைட் என்று இடம் தந்துகொண்டிருந்தபோது கூகிள் மட்டும் ஒரேயடியாக ஆயிரம் எம்.பி. இலவசம் என்று அறிவித்துப் போட்டியாளர்களைப் பதறி ஓட வைத்தார்கள். பிறகு இது இரண்டாயிரத்தைத் தாண்டி இலவசமாக இன்னும் வளர்ந்துகொண்டே போகிறது.

இன்டர்நெட் பூராவும் அநியாயத்துக்குக் கொட்டிக் கிடக்கும் மற்றொரு விஷயம் செக்ஸ். குழந்தைகள் கூகிளில் தேடும்போது பலான சமாச்சாரங்கள் எதுவும் வந்துவிடக் கூடாதே என்பதற்காக முக்கியமான வார்த்தைகளை வைத்து மேற்படி சரக்கா என்பதை நிர்ணயித்து வடிகட்டி விடுகிறார்கள். ஆனால் படங்களைப் பொறுத்தவரை கம்ப்யூட்டருக்கு கண்ணில்லை. ஒரு படத்தைக் காட்டி பக்திப் படமா, பலான படமா என்று கம்ப்யூட்டரை சரியாகச் சொல்ல வைத்துவிட்டால் கேள்வி கேட்காமல் டாக்டர் பட்டம் கொடுக்கலாம். சில கூகிள் விஞ்ஞானிகள் சேர்ந்து இதற்கு ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.

மனித வடிவம், தோல் நிறம் எல்லாவற்றையும் எண்களாக மாற்றி ஸ்டாடிஸ்டிக்ஸ் கணக்குப் போட்டு படத்திலிருப்பது சம்திங் சம்திங்தான் என்பதை பெரும்பாலும் கண்டுபிடித்து விடுகிறார்கள்.

எந்த வார்த்தையை எந்த ஊர் ஜனங்கள் அதிகம் தேடுகிறார்கள் என்று தேதி வாரியாகப் படம் வரைந்து காட்டுகிறார்கள்.

அப்துல் கலாம் என்ற பெயரை கோவை மக்கள்தான் அதிகம் தேடுகிறார்கள்.

ஷகீலாவை கேரளத்து ரசிகர்கள் கூகிள் பூராத் தேடித் துரத்தியிருக்கிறார்கள்.

இந்தியாவின் டாப் டென் என்று பார்த்தால் பொதுவாக நாம் கிரிக்கெட் பற்றித்தான் அதிகம் விசாரித்திருக்கிறோம். அடுத்தபடி சானியா மிர்ஸா, ப்ரியங்கா சோப்ரா, நமீதா வருகிறார்கள்.

சில படிக்கிற பையன்கள் இந்திரா காந்தி யுனிவர்சிட்டியையும் தேடியிருக்கிறார்கள்.

ஆயிரக்கணக்கான x86 செர்வர்களில் தாங்களே உருவாக்கியுள்ள Linux-ல் தாங்களே உருவாக்கிய வெப்செர்வரில் எல்லாவற்றையும் ஓட்டுகிறார்கள்.அவர்கள் வெப் செர்வர் பெயர் GWS/2.1 அதாவது Google Web Server, current Version 2.1.அதாவது Apache-ன் கூகிள் வடிவம் என்கிறார்கள்.

கூகிள் செர்வர்கள் 450,000-ஐயும் ஓட்ட 20 மெகாவாட்டுகள் மின்சாரம் தேவையாம்.அதாவது மாதம் கூகிளுக்கு கரண்ட் பில் $2 மில்லியன்கள்.அம்மாடியோவ்!!!

எழுதியவர் : KARTHIK KARTHI 17 FEBRUARY 2009