Saturday, November 3, 2012

முதல் முதலில், you tubeஇல் ஒரு வீடியோ பைலைப் பதிந்தவர்...!



இன்று வீடியோக்களுக்கென தனித் தளமாய் அனைவரின் விருப்ப தளமாக இயங்குவது யு–ட்யூப். இதில் யார் வேண்டுமானாலும் உறுப்பினராகப் பதிவு செய்து, தங்களின் வீடியோ காட்சியைப் பதிவு செய்து, உலகம் அறியத்தரலாம்; அல்லது தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் பார்க்கத் தரலாம்.

முதல் முதலில், இதில் ஒரு வீடியோ பைலைப் பதிந்தவர் யு–ட்யூப் தளத்தை நிறுவியவர்களில் ஒருவரான ஜாவர் கரிம் என்பவர். ‘Me at the Zoo’ என்ற 19 விநாடிகள் ஓடும் வீடியோ பைல் ஒன்றை இந்த தளத்தில் 2005 ஏப்ரல் 23 அன்று பதிந்தார். தான் சாண்டியாகோ விலங்கியல் பூங்கா சென்று வந்த நிகழ்வினைப் படமாக எடுத்து இத்தளத்தில் பதிந்து, இத்தளத்தின் முதல் பயனாளராகவும் மாறினார். இதன் பின் பல லட்சக்கணக்கான வீடியோ பைல்கள் இதில் பதியப்பட்டு, இன்று பல லட்சம் பேரால் பார்க்கப்படுகிறது யு–ட்யூப் தளம்.


எழுதியவர் : KARTHIK KARTHI 

No comments:

Post a Comment