Saturday, January 12, 2013

பாக்டீரியா உருவாக்கும் சுத்த தங்கம்தங்கம் என்ற மஞ்சள் உலோகம் இன்றைக்கு அனைவராலும் விரும்பப்படும் ஒன்றாக உள்ளது. மண்ணில் சுரங்கம் அமைத்து தோண்டி பின்னர் சுத்திகரிக்கப்பட்டுதான் தங்கம் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் மிகத் தூய்மையான தங்கமான 24 கேரட்தங்கத்தை பாக்டீரியா ஒன்று உருவாக்குகிறது என்ற ஆச்சரியமான தகவலை கண்டறிந்துள்ளனர் ஆய்வாளர்கள்.

அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகலத்தின் மைக்ரோ பயாலஜி மற்றும் மாலிக்யூலர்ஜெனடிக்ஸ் துறை ஆராய்ச்சியாளர்கள் இணைந்து சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களின் ஆய்வில் பாக்டீரியா ஒன்று சுத்தமான தங்கம் உருவாக்குவதை கண்டறிந்தனர்.இந்த பாக்டீரியாவுக்கு ‘குப்ரியாவிடஸ் மெட்டாலிடியுரன்ஸ்’ என பெயரிட்டுள்ளனர்.

தங்களின் கண்டுபிடிப்பை ஆஸ்திரியா நாட்டில் நடைபெற்ற ‘பிரிக்ஸ் ஆர்ஸ் எலக்ட்ரானிக்கா’ என்ற கண்காட்சியில் காட்சிக்கு வைத்தனர். ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட தங்கத்தைக் கொண்டு தங்க முலாம் பூசப்பட்ட ஒரு பொருளையும் காட்சிக்கு வைத்திருந்தனர்.‘த கிரேட் ஒர்க் ஆஃப் மெட்டல் லவ்வர்’ என்ற பெயரில் பாக்டீரியா உருவாக்கிய தங்கம் காட்சிக்கு வைக்கப்பட்டது.


 

உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த மைக்ரோ பயாலஜி விஞ்ஞானிகள் இதை ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். ஆய்வு முடிவு பற்றி பல்கலைக்கழக மைக்ரோபயாலஜி பேராசிரியர் கசம் கஷேபி கூறியதாவது: பொதுவாக பாக்டீரியாக்கள் நச்சுத்தன்மையுள்ள பொருட்களில் வளர்வதில்லை. ஆனால் இந்த பாக்டீரியா இயற்கையில் காணப்படும் நச்சுத்தன்மையுள்ள தங்க குளோரைடு என்ற வேதிப்பொருளில் வளர்கிறது. இந்த தங்க குளோரைடு நீர்ம தங்கம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த பாக்டீரியாவை தங்க குளோரைடில் வளர்த்தபோது ஒரேவாரத்தில் தங்க குளோரைடு நீர்மமானது தங்கக்கட்டியாக மாற்றமடைந்தது. இயற்கையில் தங்கம் எப்படி உருவாகிறதோ, அதேபோன்ற ரசாயன வினை இங்கும் நடந்திருக்கிறது என்று கூறினார்.

24 கேரட் பரிசுத்தமான தங்கத்தை பாக்டீரியா உருவாக்குகிறது என்ற கண்டுபிடிப்பு மிக மிக முக்கியமானது. அதே நேரம், இந்த தொழில்நுட்பத்தில் தங்கத்தை உருவாக்குவது சவாலானது, அதிக செலவு ஏற்படுத்தக்கூடியது. பெரிய அளவில் உற்பத்தி செய்யும்போது செலவு கட்டுப்படுத்தப்படலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

தொழில் ரீதியான உற்பத்திக்கு பாக்டீரியா என்ற உயிரை பயன்படுத்தலாமா?. சுரங்கம் அமைத்து வெட்டி எடுக்கப்படும் தங்கத்தை பாக்டீரியாவை கொண்டு உருவாக்கினால் உலக அளவில் பொருளாதாரத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுமா.. என பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது இந்த ஆராய்ச்சி.

--------------------------------------------------
நன்றி அறிவுலகம்


by Powenraj on Thu Jan 10, 2013 6:10 am
ஈகரை தமிழ் களஞ்சியம்

ஓசோன் படலம் என்றால் என்ன ?


இயற்கையோடு இணைந்து வாழ்ந்தமனிதன் இன்று முன்னேற்றம் என்ற போர்வையில் அறிவு வளர்ச்சி என்ற ஏக்கத்தில் சுற்றுச்சூழலை அழித்துக்கொண்டு இருக்கிறான். சாகாவரம் பெற்ற பாலித்தீன். பூமியை மலடாக்குகிறது. தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவு நீரும், புகையும் பூமியையும் வளிமண்டலத்தையும் மாசு அடையசெய்கிறது. காடுகளின் அழிவால் சுற்றுச் சூழல் வெப்பம் அடைந்து பனி பிரதேசங்களில் உள்ள பனிக்கட்டிகள் உருகி கடல் மட்டம் உயரு கிறது. இவ்வாறு கடல்மட்டம் உயருவதால் கடற் கரை ஓரங்களில் வளரும் அரிய தாவர இனங் களும் நிலப்பகுதிகளும் அழிக்கப்படுகிறது. தற்போது ஏற்பட்டு கொண்டு இருக்கும் இச்சுற்று சூழல் பாதிப்பினால் மனித இனத்திற்கு மட்டுமல்லாது, இயற்கைச் சார்ந்த அனைத்து உயிர்களுக்கும் இயற்கையோடு இணைந்த அனைத்து அமைப்புகளும் அழிவை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது.

ஓசோன் படலத்தை பற்றி…
ஓசோன் படலத்தைப் பற்றியும்,அது எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதைப் பற்றியும், ஓசோன் படலம் பாதிக்கப்படுவதால் ஏற்படும் தீமைகள் பற்றியும்ஓசோன் படலம் மாசுபடுவதை தடுப்பதற்கான வழி முறைகளையும் இக்கட்டுரையில் பார்ப்போம்.

1930-ம் ஆண்டு சிட்னிசாப்மேன் என்பவர் ஓசோனை கண்டறிந்தார். ஓசோன் என்பது மூன்று ஆக்ஸிஜன் அணுக்கள் சேர்ந்ததே ஒரு ஓசோன் துகள் ஆகும். இதனை வேதி குறியீட்டில் 03 என்பர். ஓசோன் வாயு ஆனது படலமாக பூமியிலிருந்து 60 கிலோ மீட்டர் உயரம் வரை பரவி உள்ளது. 20யிலிருந்து 25 கி. மீட்டர் வரையிலான உயரம் வரை மிக அடர்த்தியாக உள்ளது. இந்த ஓசோன் படலத்தின் முக்கிய பணி என்னவென்றால் சூரிய ஒளி கதிர்களில் நம் கண்ணுக்குத்தெரியாத ஒளிக்கதிர்கள் உள்ளது. இத்தகைய ஒளிக் கதிர்களை அகச்சிவப்பு கதிர்கள், புற ஊதாக் கதிர்கள் என பிரிக்கலாம். அகச்சிவப்பு கதிர்கள் சூரியனிடமிருந்து வெப்பத்தை சுமந்து வந்து பூமியை வெப்பம் அடையச் செய்கிறது. புற ஊதாக்கதிர்கள் பூமியில் மனிதர்களுக்கு மட்டுமல்லாது, விலங்கினங்களும் தாவரங்களும் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்துக் கின்றன. இத்தகைய தீமை விளைவிக்கும் புற ஊதா கதிர்களை பூமியை வந்து அடையா வண் ணம் பாதுகாப்பதுதான் ஓசோன் படலத்தின் பணி ஆகும்.

சேதம் ஏற்படுவது எப்படி?
ஓசோன் படலம் எவ்வாறு பாதிப்புக்குள்ளாகிறது?
உன்னத பணி செய்துக் கொண்டிருக்கும் ஓசோன் படலத்தை நாம் சேதப்படுத்திக் கொண்டிருக்கிறோம். குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகள், புகையிலை தொழிற்சாலைகள, முரைப் பஞ்சுதயாரிக்கும் தொழிற்சாலைகள்,தீயணைப்புக் கருவிகள், வர்ணம் அடிக்கும் தூவிகள், போன்றவற்றில் குளோரோ புளோராகார்பன் என்னும் வாயு பயன்படுத்தப்படுகிறது. இந்தவாயு வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் துகள்களை தாக்குகிறது. இதனால் ஓசோன் படலத்தில் துளைகள் ஏற்படுகிறது. எவ்வாறு எனில் குளோரோ புளோரோ கார்பன் வாயுநிலைத்த நிலையில் நூறு ஆண்டுகள் வரையில் இருக்கும். ஆனால், சூரிய கதிர்கள் இவ்வாயுவின் மீது படும்போது இது பிரிகிறது. இந்த வேதியல் மாற்றத்தால் ஒரு குளோரின் அணு மட்டும் பிரிந்து, ஓசோன் துகளை தாக்குகிறது. ஓசோனிலிருந்துஒரு ஆக்ஸிஜன் அணுவை இழுத்துக் கொள்கிறது. இது குளோரின் மோனாக்ஸைடு துகளாகமாறுகிறது. இவ்வாறு ஓசோன் படலம் அழிக்கப்படு கிறது.

தீமைகள்
ஓசோன் படலம் பாதிக்கப் படுவதால் ஏற்படும் தீமைகள்„
உலகம் முழுவதும் வெப்பம்கூடும். இதனால் வளி மண்டலத்தில் மிகுதியான வெப்பம்கூடும். அதிக வெப்பத்தினால் வறட்சிக்காலம் ஆண்டுதோறும் நீடிக்கும். வெப்பம் கூடுதல் ஆக ஆக பனிமலைகளிலுள்ள பனி உருகி திடீர் வெள்ளம் ஏற்படும். கடல் மட்டம் கூடும். இதனால் கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு கடல் நீர் நிலத்திற்குள் புகுந்து நிலப்பகுதியின் அளவைக் குறைப்பதோடு கடலோர பகுதிகள்மூழ்கடிக்கப் படும். பருவகாலங்கள் மாறுபட்டு உயிரினங் களும் ஆபத்தை உண்டுபண்ணும். புறா ஊதா கதிரானது ஓசோன் படலத்தால் தடுக்கப்படாமல் நேரடியாக பூமிக்கு வந்தால் மனிதர்களுக்கு தோல் புற்றுநோய், கண்ணில் சதை வளர்ச்சி, தோல் சுருக்கம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற நோய்கள்உண்டாக்கின்றன.

ஆண்டொன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் மேலா னோர் தோல் புற்று நோயினால் அவதிப்படு கின்றனர். ஓசோன் படலம் 0Š ஒரு விழுக்காடு குறைந்தால் தோல் புற்றுநோய்இரண்டு விழுக்காடு அதிகரிக்கும். மேலும் தாவரங்களின் உற்பத்தி திறனும் குறையும். விலங்கினங்கள் அதிக அளவு பாதிக்கப்படும்.


புற ஊதாக்கதிர்கள் கடலில் பல மைல் தூரம் ஊடுருவிச்சென்று கடல்வாழ் உயிரினங்களில் ஒரு செல் உயிர்களை கொன்று குவிக்கிறது. மண்ணில் நுண்ணுயிர்கள் பாதிப்புக்கு உள்ளா கின்றது. இவ்வாறு ஓசோன் படலம் பாதிக்கப் படுவதால் ஏற்படும் தீய விளைவுகளை கூறிக் கொண்டே செல்லலாம்.

ஓசோனை பாதுகாக்க வழிமுறைகள்
ஓசோன் படலம் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கான வழி முறைகள் பார்ப்போம்.
1995-ம் ஆண்டு ஓசோன் ஆய்விற்காக குரூட்சன் மற்றும் நிகோலஸ் ஆகிய இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த அறிஞர்களின் விருப்பமெல்லாம் இந்த பூவுலகை காக் கும் ஓசோன் படலத்தை காக்க உலகத்திலுள்ளஅனைவரும் ஒன்றாக கைகோர்க்கவேண்டும் என்பதுதான்.

எனவே ஒசோன் படலம் பாதிக்கப்படுவதால் எற்படும் பிரச்சினையைக் கட்டுப்படுத்த அகில உலக அளவில் ஒட்டு மொத்தமான கூட்டுறவு முயற்சியும் ஒருங்கிணைப்பும், ஒத்துழைப்பும் மேற்கொள்ள பரவலான முன் எச்சரிக்கை நட வடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. குளோரோ புளோரோ கார் பனை வெளியிடும் சாதனங்களை தடை செய்ய வேண்டும். அதற்கு பதிலாக மாற்றுச் சாதனங்களை கண்டுபிடிக்கவேண்டும். குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகள் ஆகியவற்றில் குளோரோ புளோரோ கார்பனுக்கு ஈடான சுற்றுச்சூழலை மாசு அடைய செய்யாத வேறு பொருள்களை பயன்படுத்தவேண்டும்.

-------------------------------------------------
நன்றி அறிவுலகம்


தமிழ் எழுத்து பிறந்த கதை அறிவோமா?


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ,
ஒ, ஓ, ஒள (உயிர்
எழுத்துக்கள்)
நாக்கு வாயின் மேல்
அன்னத்தைத் தொடாமலும்
காற்றின் உதவியால்
மட்டுமே ஏற்படும் ஒலி.

உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால்
காற்றை மட்டும்
பயன்படுத்தி ஏற்படும்
இவ்வொலிகளை உயிர்
எழுத்துக்கள்.

க், ங், ச், ஞ் ட், ண், த், ந்,ப், ம்,
ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்(மெய்
எழுத்துக்கள்)
நாக்கு வாயின் மேல்
அன்னத்தைத் தொடும்.
இவ்வொலிகளை ஏற்படுத்தும்போது காற்றின் பங்கைவிட
உடலின் பங்கு அதிகம்
என்பதால்
இவற்றுக்கு மெய்யொலிகள் என்று பெயர்
சூட்டப்பட்டது.

உயிர் எழுத்துக்கள்: 12
மெய் எழுத்துக்கள்: 18
உயிர்மெய் எழுத்துக்கள்:
216
ஆய்த எழுத்து: 1
தமிழ் எழுத்துக்கள்
மொத்தம்: 247
நம்மொழிக்கு தமிழ்
என்று எப்படி பொருள் வந்தது என்பதைக்
காண்போம்.

க, ச, ட, த, ப, ற - ஆறும்
வல்லினம்.
ங, ஞ, ண, ந, ம, ன - ஆறும்
மெல்லினம்.
ய, ர, ல, வ, ழ, ள - ஆறும்
இடையினம்.
உலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்திய
உயிர் ஒலிகள் அ(படர்க்கை),
இ(தன்னிலை), உ(முன்னிலை)
என்பது பாவாணர் கருத்து.

தமிழின் மெய்
எழுத்துக்களில்
வல்லினத்தில் ஒன்றும்,
மெல்லினத்தில் ஒன்றும்,
இடையினத்தில்
ஒன்றுமாக
மூன்று மெயெழுத்துக்களை­­த் தேர்ந்தெடுத்தனர்
அவை த், ம், ழ் என்பவை.

இந்த மூன்று மெய்களுடன்
உலகின் முதல்
உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி
த்+அ கூடி 'த' வாகவும்
ம்+இ கூடி 'மி' யாகவும்
ழ்+உ கூடி "ழு" வாகவும்
என்று தமிழு என்று ஆக்கி,
பிறகு கடையெழுத்திலுல் ­ல
உகரத்தைத் நீக்கி தமிழ்
என்று அழைத்தனர்.

-------------------------------------------

அழகே அமுதே அழகிய மொழியே எனதுயிரே!!
!!~ இராஜேந்திரன்
தமிழரசு ~!

நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
கண்கள் உலர்ந்து போகாமல் இருக்க ஈரம் தேவைப்படுகிறது.கண் இமைகள் தான் கண்கள் உலர்ந்து போவதில் இருந்து தவிர்க்கின்றன.இமைகளின் விளிம்பில் 20-30 வரை சுரப்பிகள் உள்ளன . கண் சிமிட்டும் போதெல்லாம் கண் விழியை இவை அலம்புகின்றன. கண்ணில் தூசு படியும் போது அதனை நீக்கவும் சிமிட்டல் தேவைப்படுகிறது.கண்ணீர் விடும் போது கண் விழியின் மேல்
இருக்கும் சுரப்பிகளிலிருந்து கண்ணீர் வருகிறது . இவைகளை நீக்கவும் கண் சிமிட்டல் தேவைப்படுகிறது.

வேறு காரணங்களும் முன்வைக்கபட்டிருக்கின்றன.ஆனால் அவை இன்னும் விவாதிக்கப்பட்டுகொண்டிருக்கின்றன . இந்த காரணங்களில் ஒன்று கண் அசையும் போது இமைகள் சிமிட்டுவது தொடர்பானது . கூடுதலாக கண் பார்வையின் கவனம் மாறுபடும்போதே அதிகமாக கண் சிமிட்டபடுவதாக கூறப்படுகிறது .அதாவது ஒரு பார்வையில் இருந்து இன்னொருபக்கம் உங்கள் கவனத்தை திருப்பும் போது . தொடர்ச்சியாக ஒரு திசையில் பார்த்துக்கொண்டே கவனத்தை அப்படியே இன்னொரு திசையில் திருப்புவதை விட புதிதாக ஒரு இடத்தில் கவனம் செலுத்தும் போது கண்களுக்குஇலகுவாக இருக்கலாம் .அதனால் இமைகள் மூடி திறக்கலாம் என்கின்றனர். மூளையில் பார்வையை உள்ளெடுக்கும் பகுதியை மூளை சில மைக்ரோ செக்கன்கள் தடை செய்வதை University College London விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.அதாவது இது கண் சிமிட்டல் ஏற்பட எடுக்கும் நேரத்துக்கு சமனான நேரமாகும் .

மேலதிக தகவல்:- ஒரு நபர் சராசரியாக ஒரு நாளைக்கு 10,000 தடவைகள் கண்களை சிமிட்டுகிறார்.சராசரியாக 5செக்கனுக்கு ஒரு முறை இமைகள் சிமிட்டுகின்றன .ஒரு நிமிடத்துக்கு 5-30 தடவைகள்கண் சிமிட்டப்படுகிறது.
----------------------------------------------------------

நன்றி அறிவுலகம்