Thursday, June 13, 2013

தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!ஓரு தந்தை தனது இளம்வயது மகளின் அறையை கடந்து செல்லும் போது அது சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்ததைக் கண்டு சந்தேகித்து உள்ளே சென்றார்.

எல்லாப் பொருட்களும் அழகாக அடுக்கப்பட்டிருந்தது, ஆச்சரியமாக இருந்தது.

அப்போது தான் தலையணை மேல் ஒரு காகித உறையிருப்பதைப் பார்த்தார்.

அது என்னெவென்று எடுத்துப் பார்த்தார். அதன் மேல் ”அப்பாவுக்கு” என்று எழுதியிருந்தது.

பதறிய அவர் உடனே நடுங்கும் கரங்களுடன் உள்ளேயிருந்த கடிதத்தைப் படித்தார். 

அதில் இவ்வாறு எழுதியிருந்தது:

அன்புள்ள அப்பா,

மிகுந்த வருத்தத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். என் காதலன் டிமோத்தியுடன் நான் வீட்டை விட்டுப்போகிறேன்.

உங்களுடனும் அம்மாவுடனும் சண்டை போட்டு ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்த விரும்பவில்லை. அதனால் சொல்லாமல் போகிறேன்.

டிமோத்தியின் அன்பு என்னை அவனுக்கு அடிமையாக்கி விட் டது. நீங்கள் டிமோத்தியைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும். உடம்பில் பல இடங்களில் பச்சை குத்தியிருந்தாலும், நகைகள் அணிந்திருந்தாலும் அவன் நல்லவன்.

அதற்கும் மேலே நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன். அதை கலைக்க டிமோத்தி விரும்பமில்லை.

டிமோத்திக்கும் எனக்கும் நிறைய வயது வித்தியாசமிருந் தாலும் (42 இப்போதெல்லாம் ஒரு வயதல்ல), அவனிடம் பணமில்லாமல் இருந்தாலும் எங்கள் உறவு உறுதியானது.

டிமோத்திக்கு இன்னும் பல காதலிகள் இருந்தாலும், எனக்கென்று எனது வாழ்க்கையில் தனி இடம் கொடுத்திருக்கிறேன். என் மூலம் நிறைய பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறான்.

டிமோத்திக்கு காட்டுக்கருகே ஒரு அழகிய குடிசையிருக்கிறது. அங்கு நாங்கள் தங்கியிருப்போம் . அவன் காட்டில் கஞ்சா பயிர் செய்வான். அதை நாங்கள் எங்கள் நண்பர்களுக்கு விற்று வாழ்க்கை நடத்துவோம். கஞ்சாவை நானும் புகைத்தேன். ரொம்ப சுகமாயிருக்கிறது.

மருத்துவர்கள் சீக்கிரம் எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமென்று கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள். ஏனென்றால் அப்போதுதான் டிமோத்தி எய்ட்சிலிருந்து குணமடைவான்.

அப்பா நீங்களும் அம்மாவும் என்னைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். எனக்கு என்னைப் பார்த்துக் கொள்ள தெரியும். எனக்கு பதினைந்து வயதாகிறது. என்றாவது ஒரு நாள் உங்களையெல்லாம் உங்கள் பேரக் குழந்தைகளுடன் வந்து பார்ப்பேன்.

உங்கள் அன்பு மகள்,
ஏஞ்சலோ.

அவருக்கு உலகமே சுற்றுவது போலிருந்தது.
கடிதத்தின் கீழே “பின் பக்கம் பார்க்க” என்று எழுதியிருந்தது.

துடிக்கும் இதயத்துடன் கடிதத்தை திருப்பி பார்த்தார்.
அங்கு இவ்வாறு எழுதியிருந்தது:

பின்குறிப்பு; அப்பா, நான் முன்பக்கம் எழுதியது எதுவும் உண்மையில்லை.

நம் வாழ்க்கையில் எவ்வளவு மோசமான விஷயங்களெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறத. இதையெல்லாம் பார்க்கும்போது நான் ஒரு கணக்குப் பாடத்தில் தேர்ச்சி பெறாதது ஒன்றுமே கிடையாது. 

எனது தேர்வு அட்டை எனது மேஜை மேல் இருக்கிறது. எடுத்து கையெழுத்து போடுங்கள். நான் பக்கத்து வீட்டில் தான் இருக்கிறேன். உங்கள் கோபம் தணிந்ததும் கூப்பிடுங்கள்.

#தற்போது தந்தையின் மனநிலை என்னவாக இருக்கும் சொல்லுங்க பார்ப்போம்!

========================
முகநூல்

சாவு வியாபாரி

                                        நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது இது. ஒரு நாள் அதிகாலையில் எழுந்த ஒரு கோடீஸ்வரர் தினசரிச் செய்தித்தாளை நோட்டமிட்டார். அதில் மரணமடைந்தோர் பக்கத்திலே அவர் கண்ட செய்தி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதில் இந்த கோடீஸ்வரரின் புகைப்படம் இடம்பெற்று இருந்தது. மேலும் இவரைப்பற்றி 'சாவின் வியாபாரி' என்று வர்ணித்து எழுதப்பட்டு இருந்தது. இவருக்கே சந்தேகம் வந்தது. "தான் உயிருடன்தான் இருக்கிறோமா?", என தன்னைத்தானே கிள்ளிப்பார்த்துக்கொண்டார்.
இவருக்குக் கோபம் வந்து தினசரியின் மேலாளரைச் சந்திக்க முடிவு செய்தார். ஆனால் அந்த செய்தியில் மக்களது கருத்துக்களும் இடம்பெற்று இருந்தது. பெரும்பாலானோர் இவரைப்பற்றித் தரக்குறைவாக மலிவு வசனங்களில் எழுதி இருந்தனர்.

மேலும் இவரை 'சாவுவியாபாரி' என வர்ணித்திருந்தனர். இவர் தன்னைத்தானே கேட்டுக்கொண்டார். நாளை நாம் இறந்தபின்னரும் நம்நாட்டு மக்கள், நம்மை இப்படித்தானே நினைவு கூர்வார்கள். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று எண்ணினார்.

மக்களின் மனதில் நன்மதிப்பு பெறவிரும்பி ஒரு காரியம் செய்தார்.
இந்த நிகழ்ச்சி நடந்தநாள் முதலே நல்ல மனிதராக சமாதானத்தை விரும்புபவராக அமைதிப்புறாவாக ஆக விருப்பப்பட்டார். அதேபோலவும் ஆனார். ஆண்டுதோறும் நோபல்பரிசுகள் இவரதுபெயரால் இன்றளவும் வழங்கப்பட்டு வருவதை நாம் அறிவோம்தானே.

அவர் இறந்துபோன பின்னரும் மக்கள் அவரை நல்லவராகவே நினைக்கவைத்துவிட்டுத் தான் பிரிந்தார். ஆல்பிரட் நோபல் என்பதே அவருடைய பெயராகும். டைனமைட் என்றழைக்கப்படும் வெடிகுண்டு இவராலே கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த வெடிகுண்டு வாயிலாக விழையக்கூடிய ஆபத்தை உணர்ந்த பத்திரிகையும் - விழிப்புணர்வு மிக்க மக்களும் - இறந்தோர் பகுதியில் ஆல்பிரட் நோபலின் புகைப்படத்தைப்போட்டு 'சாவுவியாபாரி' என்று அடைமொழியும் கொடுத்து அவரைத் திருத்தி இருக்கிறார்கள்.

அவரும் தவறை உணர்ந்து திருந்தினார். இதேபோல இப்போதைய அரசியல்வியாதிகள் திருந்துவதற்கு நாம் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தால் நன்றாக இருக்கும்தானே....??
***************
நன்றி :  தமிழ்2000