Thursday, June 13, 2013

சாவு வியாபாரி

                                        



நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது இது. ஒரு நாள் அதிகாலையில் எழுந்த ஒரு கோடீஸ்வரர் தினசரிச் செய்தித்தாளை நோட்டமிட்டார். அதில் மரணமடைந்தோர் பக்கத்திலே அவர் கண்ட செய்தி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதில் இந்த கோடீஸ்வரரின் புகைப்படம் இடம்பெற்று இருந்தது. மேலும் இவரைப்பற்றி 'சாவின் வியாபாரி' என்று வர்ணித்து எழுதப்பட்டு இருந்தது. இவருக்கே சந்தேகம் வந்தது. "தான் உயிருடன்தான் இருக்கிறோமா?", என தன்னைத்தானே கிள்ளிப்பார்த்துக்கொண்டார்.
இவருக்குக் கோபம் வந்து தினசரியின் மேலாளரைச் சந்திக்க முடிவு செய்தார். ஆனால் அந்த செய்தியில் மக்களது கருத்துக்களும் இடம்பெற்று இருந்தது. பெரும்பாலானோர் இவரைப்பற்றித் தரக்குறைவாக மலிவு வசனங்களில் எழுதி இருந்தனர்.

மேலும் இவரை 'சாவுவியாபாரி' என வர்ணித்திருந்தனர். இவர் தன்னைத்தானே கேட்டுக்கொண்டார். நாளை நாம் இறந்தபின்னரும் நம்நாட்டு மக்கள், நம்மை இப்படித்தானே நினைவு கூர்வார்கள். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று எண்ணினார்.

மக்களின் மனதில் நன்மதிப்பு பெறவிரும்பி ஒரு காரியம் செய்தார்.
இந்த நிகழ்ச்சி நடந்தநாள் முதலே நல்ல மனிதராக சமாதானத்தை விரும்புபவராக அமைதிப்புறாவாக ஆக விருப்பப்பட்டார். அதேபோலவும் ஆனார். ஆண்டுதோறும் நோபல்பரிசுகள் இவரதுபெயரால் இன்றளவும் வழங்கப்பட்டு வருவதை நாம் அறிவோம்தானே.

அவர் இறந்துபோன பின்னரும் மக்கள் அவரை நல்லவராகவே நினைக்கவைத்துவிட்டுத் தான் பிரிந்தார். ஆல்பிரட் நோபல் என்பதே அவருடைய பெயராகும். டைனமைட் என்றழைக்கப்படும் வெடிகுண்டு இவராலே கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த வெடிகுண்டு வாயிலாக விழையக்கூடிய ஆபத்தை உணர்ந்த பத்திரிகையும் - விழிப்புணர்வு மிக்க மக்களும் - இறந்தோர் பகுதியில் ஆல்பிரட் நோபலின் புகைப்படத்தைப்போட்டு 'சாவுவியாபாரி' என்று அடைமொழியும் கொடுத்து அவரைத் திருத்தி இருக்கிறார்கள்.

அவரும் தவறை உணர்ந்து திருந்தினார். இதேபோல இப்போதைய அரசியல்வியாதிகள் திருந்துவதற்கு நாம் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தால் நன்றாக இருக்கும்தானே....??
***************
நன்றி :  தமிழ்2000

No comments:

Post a Comment