Wednesday, October 31, 2012

எலுமிச்சையும் ஒரு சிறந்த அழகு பொருள்!!!


சிட்ரஸ் பழங்களில் ஒன்றான எலுமிச்சை நிறைய மருத்துவ குணம் நிரம்பியது. அதிலும் அந்த எலுமிச்சை உடல் நலத்திற்கு மட்டும் நன்மையை தருவதோடு, அழகுப் பொருட்களிலும் ஒன்றாக பயன்படுகிறது. எப்படியெனில் இதில் அதிகப்படியான வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன. அத்தகைய அழகுப் பொருளான எலுமிச்சையை எப்படியெல்லாம் பயன்படுத்தி, எவற்றையெல்லாம் சரிசெய்யலாம் என்று பார்ப்போமா!!!
quick beauty fixes with lemon
* எலுமிச்சை சாற்றில் சர்க்கரையை சேர்த்து, முகத்தை கழுவினால், சருமத்துளைகளில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் நன்கு பொலிவோடு காணப்படும்.
* சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்க ஒரு கப் பாலுடன், 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பிராந்தி சேர்த்து கொதிக்க வைத்து, பின் அதனை ஓரளவு குளிர வைத்து, முகத்தில் தடவி சிறிது நேரம் வைத்து, துடைத்துவிட வேண்டும்.
* முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சை சற்றை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவிட வேண்டும். இதனை ஒரு நாள் விட்டு தொடர்ந்து செய்து வந்தால், கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.
* எலுமிச்சையை வைத்து ஃபேஷியல் கூட செய்யலாம். அதற்கு ஒரு எலுமிச்சை பழத்தின் சாற்றுடன், 1/4 கப் ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் எண்ணெயை சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஃபேஷியல் செய்தால், சருமம் பொலிவாவதோடு, ஈரப்பசையுடனும் இருக்கும்.
* தலையில் பொடுகு இருந்தால், தினமும் ஸ்கால்ப்பில் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றை விட்டு, மசாஜ் செய்ய வேண்டும். பின் குளிர்ந்த நீரால் தலையை அலசி, மறுபடியும் ஒரு கப் நீரில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை விட்டு, இறுதியில் குளித்து முடித்தப் பின் அலச வேண்டும்.
* நகங்கள் வெள்ளையாகவும், சுத்தமாகவும் இருக்க, ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் பாதி எலுமிச்சையை பிளிந்து, 5 நிமிடம் கை மற்றும் கால் நகங்களை அதில் ஊற வைத்து, பிறகு எலுமிச்சையின் தோலால் நகங்களை தேய்க்க வேண்டும்.
ஆகவே மேற்கூறியவாறெல்லாம் பல விதங்களில் அழகுப் பொருளாகப் பயன்படுகிறது. மேலும் இவ்வாறு எலுமிச்சையை பயன்படுத்தி சருமத்தை பராமரிக்கும் போது, வெயிலில் அதிக நேரம் இருக்கக் கூடாது. ஏனெனில் வெயில் சருமத்தில் பட்டால், எலுமிச்சை சருமத்தை மிகவும் சென்சிட்டிவ்வாக்கி, பின் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும்.

இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல்கள்!!


இன்றைய காலத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிலும் ஒவ்வொரு வருடமும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் போது, ஒவ்வொரு வருடமும் அவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவ்வாறு இதய நோயால் அதிகம் பாதிக்கப்படுவதற்கு பெரும் காரணம் வாழ்க்கை முறை தான். எப்படியெனில் தற்போது நன்கு வசதியான வாழ்க்கை வேண்டுமென்பதற்காக பெரிய பெரிய கம்பெனிகளில் வேலைக்கு சேருகிறோம். அவ்வாறு சேருவதால், அங்கு கைநிறைய பணம் கிடைப்பதோடு, மனம் நிறைய அழுத்தமும், இறுக்கம் போன்றவையும் எளிதில் கிடைக்கிறது.
மேலும் கைநிறைய பணம் கிடைப்பதால் அந்த பணத்தை வைத்து, ஆடம்பரமாக வாழ்கின்றோம் என்பதை வெளிப்படுத்துவதற்கு, ஹோட்டல்களில் ஆரோக்கியமற்ற உணவுகளை வாங்கி சாப்பிடுவது, புதிய கலாச்சாரம் என்று பார்ட்டி ஏதேனும் நடந்தால் சிகரெட், மது போன்றவற்றை குடிப்பது, மற்றும் அதிக அளவில் உண்பதால் உடல் பருமன் அதிகரிப்பது, உடலில் சோம்பேறித்தனம் குடிப்புகுந்து உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது போன்ற காரணங்கள் உடலில் வராத நோயையும் காசை கொடுத்து வரவழைத்துக் கொள்கிறோம்.
அது போன்ற ஒரு சில செயல்களால் இதயம் அதிக அளவில் பாதிக்கப்பட்டு, நாளடைவில் மரணத்தை எதிர்கொள்கிறோம். ஆகவே இத்தகைய கொடுமையான செயல் நடைபெறாமல் இருப்பதற்கு, நாம் அன்றாடம் செய்யும் ஒரு சில பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டால், உடல் ஆரோக்கியத்துடன், இதயமும் ஆரோக்கியத்துடன் இருக்கும். இப்போது அந்த பழக்கவழக்கங்கள் என்னவென்று பார்ப்போமா!!!

புகைப்பிடித்தல்

ஒரு நாளைக்கு ஒரு சிகரெட் பிடிப்பது என்பது, இதயம் இரு மடங்கு அதிகமாக பாதிக்கப்படுகிறது என்பதற்கு அறிகுறி. மேலும் இந்த சிகரெட் இதயத்தில் நோயை ஏற்படுத்துவதோடு, புற்றுநோய் மற்றும் பல நுரையீரல்களில் நோய்களையும் ஏற்படுத்தும். ஆகவே இவற்றை தவிர்ப்பது நல்லது.

அதிக உணவு

உடல் பருமன் இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில் உடல் பருமன் அடைவதற்கு அதிகமான அளவில் சர்க்கரை உள்ள உணவுகள், கலோரிகள் நிறைந்த உணவுகளை உண்பது மற்றும் உடற்பயிற்சி இல்லாதது பெரும் காரணமாகும். ஆகவே குறைவான அளவில் உணவை உண்டால், இதயத்தை ஆரோக்கியத்துடன் வைக்கலாம்.

பற்களின் ஆரோக்கியம்

பற்கள் ஆரோக்கியமற்று இருந்தால், சுவாசிக்கும் போது அசுத்தக் காற்றையே சுவாசிக்க முடியும். இதனால் அந்த அசுத்தக் காற்று இதயத்தில் ஒருவித அடைப்பை ஏற்படுத்தும். எப்படியென்று கேட்கிறீர்களா? ஏனெனில் ஈறுகளில் உள்ள பாக்டீரியாக்கள் இரத்த குழாய்களின் வழியே சென்று, சீரான இரத்த ஓட்டத்தை தடை செய்கிறது. இதனால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி இதயத்திற்கு ஆரோக்கியத்தை தான் தரும். ஆனால் அந்த உடற்பயிற்சியே அளவுக்கு அதிகமானால், இதயத்திற்கு அதிக அழத்தம் ஏற்பட்டு, மயக்கம் அல்லது சோர்வு போன்றவற்றை ஏற்படுத்தும். ஆகவே உடற்பயிற்சியை அளவோடு செய்தால், இதய ஆரோக்கியத்தை நீட்டிக்க முடியும்.

குறட்டை

தற்போது குறட்டை இல்லாமல் தூங்குபவர்களை காண முடியாது. அவ்வாறு தூங்கம் போது குறட்டை விடுபவர்களுக்கு, இதயத்தில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஏனெனில் தூங்கும் போது குறட்டை விடுவதால், உடலில் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. ஆகவே அந்த இரத்த அழுத்தத்தால் இதயம் பாதிக்கப்படுகிறது

மனஅழுத்தம்

இன்றைய காலத்தில் அனைவருமே ஒரு சில காரணங்களால் மன அழுத்தம், மன தளர்ச்சி, மன இறுக்கம் போன்றவற்றிற்கு ஆளாகின்றோம். இத்தகையவற்றில் இருந்து வெளிவருவது என்பது எளிதானது அல்ல. ஆனால் இவ்வாறு இருந்தால், இதயம் பெரிதும் பாதிக்கப்பட்டு, அதன் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

தூக்கம்

ஒருவருக்கு தூக்கம் ஐந்து மணிநேரத்திற்கு குறைவாகவும், ஒன்பது மணிநேரத்திற்கு அதிகமாகவும் இருந்தால், உடலில் இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் அதிகரிக்கும். மேலும் இது கரோனரி நோயை அதிக அளவில் ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.

சோடா

அதிக வெயிலின் காரணமாக, அந்த வெயிலின் வெப்பத்தை தணிப்பதற்கு சோடாவை வாங்கி குடிப்போம். ஆனால் இவ்வாறு குடிப்பது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் இந்த சோடாவை தொடர்ந்து குடித்து வந்தால், பக்கவாதம் மற்றும் இதயத்தில் பல நோய்களை ஏற்படும்.

அதிகமாக டிவி பார்ப்பது

டிவியின் முன்பு அதிக நேரம் இருந்தால், இதயம் பெரிதும் பாதிக்கப்படும் என்று அமெரிக்கன் கல்லூரியில் நடந்த ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் ஒரு நாளைக்கு 4 மணிநேரத்திற்கு மேல் டிவியைப் பார்த்தால், பக்கவாதம் அல்லது இதயத்தில் அடைப்பு போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதோடு, விரைவில் மரணத்தையும் ஏற்படுத்தும் என்றும் கூறுகிறது.

டெங்குவுக்கு சூப்பர் மருந்து கிடைச்சாச்சே!!!

                                         Papaya Leaf Juice Helps Fight Dengue Fever


தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பொதுவாக இந்த டெங்கு காய்ச்சல் கொசுக்களின் மூலமாக பரவுகிறது. இந்த நோய் வந்தால், கடுமையான காய்ச்சலுடன், உடலில் உள்ள இரத்த வட்டுக்களின் அளவு குறைவதோடு, தசை வலி, மூட்டு வலி போன்றவை ஏற்படும். சிலசமயங்களில் இந்த நோயால் மரணம் கூட ஏற்டும் வாய்ப்பு உள்ளது. இத்தகைய நோய்க்கு இதுவரை எந்த ஒரு சிறப்பான மருத்துவமும் இல்லை.
ஆனால் தற்போது பப்பாளி இலைகள் கிடைப்பதே கடினமாக உள்ளது. ஏனெனில் பப்பாளி இலையின் சாறு, உடலில் உள்ள இரத்த வட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது என்று தற்போதைய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதிலும் அந்த ஆய்வை வன இந்திய மேலாண்மை கல்லி நிறுவனம், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் ஐந்து பேரைக் கொண்டு சோதனையை நடத்தியது. இதில் அவர்களுக்கு பப்பாளி இலையின் சாறு கொடுக்கப்பட்டது. இதனால் பப்பாளி இலையின் சாற்றில் உள்ள சத்துக்கள், அவர்களுக்கு இருந்த டெங்கு காய்ச்சலை முற்றிலும் சரிசெய்துவிட்டது.
எப்படியெனில் பப்பாளி இலையின் சாற்றை பருகினால், காய்ச்சல் உள்ளவர்களின் உடலில் உள்ள இரத்த வெள்ளை அணுக்கள் மற்றும் இரத்த வட்டுக்களின் எண்ணிக்கை 24 மணிநேரத்திற்குள் போதிய அளவு அதிகரித்துள்ளது. மேலும் டெங்குவால் பாதிக்கப்படும் கல்லீரல் பிரச்சனை நீங்கி, கல்லீரல் நன்கு செயல்படும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், பப்பாளியின் இலையில் ஆன்டி-மலேரியல் மற்றும் ஆன்டி-கேன்சர் பொருட்கள் உள்ளன என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த இலையின் சாற்றை மலேரியா மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட்டால், உடலில் இருக்கும் நோயை தடுக்கலாம் என்றும் கூறுகிறது.
மேலும் இந்த பப்பாளி இலையில் போதுமான ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ, பி, ஈ போன்றவை இருப்பதால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த ஒரு நோயும் ஏற்படாமல் தடுக்கிறது.
பப்பாளி இலையின் சாற்றை எப்படி சாப்பிடலாம்?
* முதலில் பப்பாளியின் இலையை நன்கு சுத்தமான நீரால் அலசிட வேண்டும். பின் அதனை கைகளால் நசுக்கி, அதிலிருந்து சாற்றை எடுக்க வேண்டும்.
* ஒரு பப்பாளி இலையின் சாற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் சாறு வரும்.
* இந்த சாற்றை ஒரு நாளைக்கு மூன்று முறை பருக வேண்டும். அதிலும் ஆறு மணிநேரத்திற்கு ஒரு முறை ஒரு டேபிள் ஸ்பூன் பருக வேண்டும்.


THANKS: Greynium Information Technologies Pvt. Ltd.

தலையில் உள்ள பொடுகை நீக்க சில ஈஸியான டிப்ஸ்...

                                          Tips Get Rid Dandruff


தலையில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பொடுகு. அத்தகைய பொடுகு ஸ்கால்ப்பில் அளவுக்கு அதிகமாக இறந்த செல்கள் இருப்பதால் ஏற்படுகிறது. அவ்வாறு பொடுகு தலையில் அளவுக்கு அதிகமாக வந்துவிட்டால், கூந்தல் உதிர்தல், பிம்பிள், முகப்பரு மற்றும் நரை முடி போன்றவை ஏற்படும். ஆகவே இத்தகைய பிரச்சனைகள் வராமல் இருப்பதற்கு, இந்த பொடுகை போக்குவதற்கான செயல்களில் விரைவில் ஈடுபட வேண்டும். அதிலும் அந்த பொடுகை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, நீக்கிவிட முடியும். இப்போது அந்த பொருட்கள் என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, தலையில் இருக்கும் பொடுகை இயற்கை முறையில் நீக்குங்கள்.
தயிர் மற்றும் மிளகு: 2 டீஸ்பூன் மிளகுத்தூளை 1 கப் தயிருடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை தலையில் நன்கு தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு தலையை அலவ வேண்டும். இதனால் தலையில் உள்ள பொடுகு நீங்கிவிடும்.
ஆலிவ் ஆயில்: ஆலிவ் ஆயிலில் பொடுகை நீக்கும் தன்மை உள்ளது. அதற்கு இரவில் படுக்கும் முன்பு, அந்த ஆயிலை லேசாக சூடேற்றி, ஸ்கால்ப்பில் தடவி, நன்கு மசாஜ் செய்து, பின் தூங்க வேண்டும். பின் அதனை காலையில் எழுந்து, ஷாம்பை போட்டு குளிக்க வேண்டும்.
வினிகர்: வினிகரில் பொட்டாசியம் மற்றும் நொதிகள் அதிகம் உள்ளது. இது ஸ்கால்ப்பில் ஏற்படும் அரிப்பு மற்றும் பொடுகை சரிசெய்யும். அத்தகைய சிறப்புடைய வினிகரை பல வழிகளில் பயன்படுத்தலாம்.
 - ஆப்பிள் சீடர் வினிகரை தலையில் தடவி, 5-7 நிமிடம் மசாஜ் செய்து, குளித்து வந்தால், தலையில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, பொடுகு போவதோடு, பொடுகினால் ஏற்படும் கூந்தல் உதிர்தலும் நின்றுவிடும்.
 - இல்லையெனில் ஒரு டேபிள் ஸ்பூன் வினிகரை, தலைக்கு குளிக்கும் போது, கடையில் ஒரு கப் தண்ணீருடன் கலந்து தலைக்கு ஊற்ற வேண்டும்.
எலுமிச்சை மற்றும் பூண்டு: இநத கலவை சிறந்த பலனைத் தரும். ஏனெனில் ஏற்கனவே எலுமிச்சை ஸ்கால்ப்பில் உள்ள தோல் செதில்செதிலாக வருவதை தடுக்கும். மேலம் பூண்டு ஒரு ஆன்டி-பயாடிக் மற்றும் ஸ்கால்ப்பில் பாக்டீரியா வராமல் தடுக்கும். ஆகவே அதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 2 டேபிள் ஸ்பூன் பூண்டின் பற்களை அரைத்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி, பின் ஷாம்பு சேர்த்து குளிக்க வேண்டும்.
வெங்காயம்: வெங்காயத்தை அரைத்து, அதனை ஸ்காப்பில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் குளித்தால், தலையில் உள்ள பொடுகு முற்றிலும் போய்விடும். மேலும் வெங்காய நாற்றத்தை நீக்குவதற்கு வேண்டுமென்றால் எலுமிச்சையின் சாற்றை இறுதியில் தடவி குளித்தால், அந்த நாற்றத்தை தடுக்கலாம்.