Tuesday, February 19, 2013

ஒரு நா(தா)யின் கண்ணீர்...
மத்திய தர வகுப்பினர் அதிகம் வசிக்கும் சென்னை குரோம்பேட்டை, பாரதிதாசன் சாலையின், ஒரு முட்டுச் சந்தில் உள்ள குப்பைத்தொட்டி அருகே பெண் நாய் ஒன்று எப்போதும் ஒண்டிக் கிடக்கும்.
அநாயவசியமாக குலைப்பது, தெருவில் போவோரை மிரட்டுவது, சைக்கிளில் வருவோரை விரட்டுவது, புதிதாக வருபவர்களை பயமுறுத்துவது என்று தெரு நாய்களுக்கு உரிய எந்த குணமும் இல்லாமல் சாதுவாக முடங்கிக்கிடக்கும்.


தெருவில் உள்ளோர் குப்பைத் தொட்டியில் வீசியெறியும் குப்பைகளில் தனக்கான உணவு இருந்தால் எடுத்துவந்து சாப்பிட்டுவிட்டு சாதுவாக படுத்துக்கொண்டு இருக்கும்.
இந்த நாய் கடந்த சில நாட்களுக்கு முன் இரண்டு குட்டிகளை போட்டது.
இரண்டு குட்டிகளுமே ஆண் குட்டிகள், தெரு நாய்க்குட்டிகள் என்றே சொல்ல முடியாதபடி அடர்த்தியான ரோமங்களுடன் படு சுறு, சுறுப்பாக காணப்பட்டன, அந்த குட்டிகளோடு தாய் நாய் பாசத்தோடு விளையாடுவதை பார்த்து, மனம் பறிகொடுத்து எதிர்வீட்டு மாணவி அஸ்வினி என்பவர் தனது அண்ணன் சுரேஷ் மூலமாக, குட்டி நாய்களுக்கு பால், மற்றும் ரொட்டி போன்ற உணவுகளை கொடுத்துவிட்டார்.


தங்கைக்காக உணவு கொண்டு போன அண்ணன் சுரேஷ் தாயும், சேயும் விளையாடும் அழகையும், அதன் பாசத்தையும் பார்த்துவிட்டு தனது வீட்டில் இருந்த குடையை கொண்டுவந்து நாய்குட்டிகள் மீது வெயில் படாதவாறு பாதுகாப்பாக நிறுத்திவைத்தார். போதும் போதாதற்கு வீட்டில் இருந்த சாக்குகளை கொண்டு போய் விரிப்பாகவும் விரித்துவைத்தார்.
கீழே விரிப்பு, மேலே குடை, சாப்பிட பால், ரொட்டி என்று படு குஷியான குட்டிகள் அதிக சந்தோஷத்துடன் விளையாடின.


அவைகளின் சந்தோஷம் அதிக நாள் நீடிக்கவில்லை,
ஒரு நாள் காலை தனது குட்டிகளுக்கு உணவு தேடி நீண்ட தொலைவு ஒடிப்போய், எதையோ கவ்விக் கொண்டு திரும்பிய தாய் நாய்க்கு அதிர்ச்சி. காரணம் குட்டிகள் இரண்டையும் காணவில்லை.
கொண்டுவந்த சாப்பாடை கீழே போட்டுவிட்டு, யாராவது குட்டிகளை கொன்று புதைத்து விட்டதாக எண்ணி, அப்படி ஒரு ஆக்ரோஷத்துடன் மண்ணைத் தோண்டி, தோண்டி தேடிப் பார்த்தது. பிறகு குப்பைத்தொட்டி, அதன் இண்டு இடுக்குவிடாமல் குட்டிகளை தேடி, தேடி ஒடியது, ண்ணீர்விட்டு அழுதது.
இத்தனை நாளும் சங்கீதமாக இருந்த நாய்குட்டிகளின் சத்தத்திற்கு பதிலாக ஒருவித ஈனஸ்வர ஒலம் வரவும், சுரேஷ் என்னவென்று எட்டிப்பார்த்தார், கொஞ்ச நேரத்தில் நாய் குட்டிகள் மீது ஆசைப்பட்ட ஒருவரோ அல்லது இருவரோ, தாய் நாய் இல்லாத சமயமாக பார்த்து தூக்கிக் கொண்டு (திருடிக் கொண்டு) போய் இருக்கவேண்டும் என்பதை புரிந்துகொண்டார்.
சுரேஷ்க்கு இரண்டு நாளில் திருமணம், தலைக்கு மேல் ஏகப்பட்ட வேலைகள் காத்துகிடந்தன, ஆனாலும் தாய் நாயின் வேதனை எந்த வேலையையும் செய்யவிடாமல் மனதை போட்டு பிசைந்தது.


சரியா, தவறா, நடக்குமா, நடக்காதா, என்பதை பற்றியெல்லாம் யோசிக்காமல், ஒரு "சார்ட்' வாங்கி வந்து, நாயை எடுத்தவர்கள் தயவு செய்து திரும்ப கொண்டுவந்து ஒப்படைக்கவும் என்று, தாய் நாயே எழுதியது போல எழுதி நாய் திருடுபோன இடத்தில் ஒட்டிவிட்டார்.
தாய் நாய்க்கு என்ன நடந்தது, என்ன நடந்து கொண்டு இருக்கிறது எனத்தெரியாது, ஆனால் ஏதோ நடக்கப் போகிறது என்பது மட்டும் புரிந்தது, எழுதப்பட்ட சார்ட் முன் சாப்பிடாமல் கண்ணீர் விட்டபடியே பகல், இரவு, குளிர், வெயில் பாராது நின்று கொண்டு இருந்தது.


என்ன ஒரு ஆச்சர்யம்
இருள் விலகாத ஒரு அதிகாலை வேளையில் நாயை எடுத்தவர், போஸ்டர் வாசகத்தால் மனம் மாறி, யாருமறியாமல் கொண்டுவந்து விட்டுவிட்டு போய்விட்டார், தாயை பார்த்து சந்தோஷத்தில் குட்டிக்கு ஏக சந்தோஷம், குட்டியைப்பார்த்த சந்தோஷத்தில் தாய் நாய்க்கு அதைவிட அதிக சந்தோஷம், தங்களது சந்தோஷத்தை சத்தமாக குரைத்து பகிர்ந்து கொள்ள, மீண்டும் இந்த சங்கீத குரைப்பு சத்தம் கேட்டு மனம் துள்ளிக்குதித்தபடி வந்த சுரேஷ்க்கு மனம் முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம்.


இரண்டு குட்டிகளில் ஒன்றாவது கிடைத்ததே என்ற சந்தோஷம் தாய் நாயின் கண்களில் அப்பட்டமாக தெரிந்தது, நீண்ட நாள் பிரிந்து பின் கூடிய சந்தோஷத்தை உருண்டுபுரண்டு விளையாடி இரண்டும் வெளிப்படுத்தியது.
பாசம் காட்டுவதில் மனிதர்களை மிஞ்சிய இந்த தாய் நாயைப்பார்த்து இப்போது சுரேஷின் கண்களில் கண்ணீர் ஆனால் இது ஆனந்த கண்ணீர்.

--------------------------------------------------
தினமலர் 

ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து...{10 இருந்து 60 வரை ஒரு காதல் (கண்ணீர்) ஓவியம்}


10 இருந்து 60 வரை ஒரு காதல் (கண்ணீர்) ஓவியம்.
10 வயதில் :

நானும் அவனும் வீட்டுப்பாடம் படித்துக்கொண்டிருந்தபோது அவன் வேண்டுமென்றே என் கைகளைத் தொட்டுப் பேனா வாங்கும்போது எனக்கு ஏற்பட்ட உணர்வுதான் காதல் என்பதோ? ஒரு நிமிடம் பரவசத்தில் உடல் சிலிர்க்க, அதை மறைத்துக்கொள்ளப் பெரும் பிரயத்தனப்பட்டேன். அப்போது என் கண்களில் நான் உணர்ந்த்துதான் ஒருவேளை சந்தோஷக் கண்ணீராக இருக்குமோ?

15 வயதில் :

நானும் அவனும் தனியாக இருந்த ஒரு சமயத்தில் கொஞ்சம் எல்லை மீறிப் பிடிபட்டுக்கொண்டோம். சற்றும் தயங்காமல் அவன் பழியைத் தன்மேல் போட்டுக்கொண்டு மரண அடி விழுந்தபோதும் மற்றவர்களின் முன்னால் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவன் ரத்தம் பார்த்து என் விழிகளில் கண்ணீர் ரத்தமாக வழிந்தது.

18 வயதில் :

பள்ளிப் பிரிவுபச்சார விழா முடிந்ததும் மனம் முழுதும் இறுக்கமும் தவிப்புமாக நான் அவனிடம் குட்பை சொல்ல முயற்சித்தபோது அவன் என்னை இறுக அணைத்து ‘என்னை மறந்து விடுவாயா?’ என்று கலங்கிய கண்களுடன் கேட்டான். என் கண்கள் ஏற்கனவே கண்ணீர் சாகரத்தில் நனைந்திருந்தன.

21 வயதில் :

நானும் அவனும் கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு நீண்ட பயணத்துடன் கூடிய டேட்டிங் செய்தோம். எத்தனையோ வாய்ப்புக்கள் இருந்தும், ஏன் நானே ஒருவகையில் தயாராக இருந்தும் எண்ணற்ற முறை என்னை முத்தமிட்டிருந்த அவன் அன்று ஏனோ என்னைத் தொடக்கூட இல்லை. சாதகமான சூழ் நிலையில் கூடச் சுயக் கட்டுப்பாடுடன் நடந்துகொள்ளும் அவனைப் புரிந்து கொண்ட என் கண்கள் பெருமிதத்தில் வெளியிட்ட கண்ணீரை அவனுக்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டேன்.

26 வயதில் :

அந்த நாள் வந்தே விட்டது. கையில் சிவப்பு ரோஜாவுடன் முழந்தாளிட்டு அவன் என்னை ப்ரபோஸ் செய்தான். அவனை அவனே முட்டாளாக்கிக் கொண்டதைப்போல அப்படியொரு அறியாமையான வேண்டுதல். அப்போது சொன்னான்: “நான் உன்னை விரும்புகிறேனென்று நீயும் அறிந்திருப்பாய்”. உன்னதப் புன்னகை புத்த என் இதழ்களின் சிருங்காரத்தை உணரவில்லை அப்போதும் கண்களில் வழிந்த அதே சந்தோஷக் கண்ணீர்.

35 வயதில் :

நான் களைப்பாக இருப்பதைப் பார்த்தால் எனக்குக் காஃபி போட்டுக்கொடுத்துத் தூங்க வைத்துவிட்டு அவர் வீட்டுவேலைகளை முழுமையாகச் செய்து முடிப்பார். கடைசியில் அவர் என்னருகில் படுத்துக்கொள்ளும்போது நான் விழித்திருப்பதை அறியாமல் நெற்றியில் முத்தமிட்டுக் ‘குட் நைட்’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வார். என் மூடிய விழிகளுக்குள் நன்றியின் கண்ணீர் தளும்பும்.

50 வயதில் :

சிக்கலான சமயங்களில் அவர் ஆஃபீஸ் கவலையில் அல்லது உடல் நிலை சரியில்லாமல் இருந்தாலும் என்னைச் சிரிக்க வைப்பதற்காக ஜோக்கடித்து என் சிரிப்பை ரசிப்பார். ஆனால்,பாவம் அப்போதும் என் ஆனந்தக் கண்ணீரை அவர் உணர முடியாமல் துடைத்துக் கொள்வேன். அவரும் சிரித்துக்கொண்டிருப்பார்.

60 வயதில் :

தனது கடைசி மூச்சின் சுவாசத்தின்போது அவர் சொன்னார் : “... எனக்கு எல்லையில்லாத காதலைக் கொடுத்தாய். என் ஆண்மையைப் பெருமிதத்துடன் வாழ் நாள் முழுக்க உணரச் செய்தாய். ஒரு காதலின் பின்னால் எனக்கு இவ்வளவு உன்னதமான வாழ்வு கிடைக்குமென்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. நன்றி...

என் கைகளைப் பற்றியிருந்த அவரின் கரங்கள் இறுதியாகத் துவண்டுவிட்டன. என் விழிகளில் நிரந்தரக் கண்ணீர்த்துளிகளைப் பரிசளித்துவிட்டு எப்போதும் எங்கேயும் என்னைக் கூடவே அழைத்துச்செல்லும் அவர் இப்போது முதல்முறையாக என்னை விட்டுவிட்டுச் சென்றார். இந்தமுறை நான் கண்ணீரைத் துடைக்கவில்லை...!
----------------------------------------------
நன்றி: தமிழ் கருத்துக்களம்

"முதலைக்கண்ணீர் வடிக்கிறார்" என்கிறோமே அது ஏன் தெரியுமா..??
முதலைகள் தம் இரையை சாப்பிடும் முன் கண்ணீர் விடும் என்று ஆங்கிலேய பிரெஞ்சு எழுத்தாளர்கள் எழுதி உள்ளார்கள்.

1400 இல்எழுதிய ஒரு பயண குறிப்பில்சேர் ஜான் மன்டெவில் என்பவர் முதலை ஒரு மனிதனை சாப்பிடும் முன் அழுததை பார்த்ததாக எழுதியுள்ளார்.

ஷேக்ஸ்பியர் அதையே எடுத்துக்கொண்டார். 

OthelloAct IV, Scene i இல் "O devil, devil! If that the earth could teem with woman's tears, Each drop she falls would prove a crocodile. Out of my sight!"

உண்மையில் முதலைகளுக்கு கண்ணீர் சுரப்பிகள் கிடையாது /பற்றாக்குறை . தொண்டையின் பக்கத்தில் உள்ள சுரப்பிகள் எதையாவது விழுங்கும் போது கண்ணை நனைக்குமாம். 


இன்னொரு கருத்து நிலவுகிறது: முதலைகளின் கண்ணீர் சுரப்பிகளில் புரத நீர் சுரக்கிறது .நீரில் இருக்கும் போது அவை தெரிவதில்லை .வெளியே வரும்போது காய்ந்து விடுகிறது . முதலைகளால் கண்ணீர் வர வைக்க முடியும் .ஆனால் அவை அழுவதில்லை.
--------------------------------------------
புதிய உலகம்

ஜப்பானில் மாணவர்கள்
1.ஜப்பானில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒவ்வொருநாளும் பதினைந்து நிமிடங்கள் தங்கள் பாடசாலை மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்கிறார்கள்.
-
2.ஜப்பானில் நாய் வளர்ப்பவர்கள் அதன் கழிவுகளை அகற்றுவதற்காக வெளியில் செல்லும்போது விசேட பை ஒன்றினை கட்டாயமாக எடுத்துச் செல்வர்.
-
3. ஜப்பானில் சுகாதார ஊழியர்கள் “சுகாதார பொறியியலாளர்” என அழைக்கப்படுகிறா ர். அவரது சம்பளம் அமெரிக்க டொலரில் 5000/ -இலிருந்து 8000/ - வரை ஆகும். ஒரு சுத்தபடுத்துனர் எழுத்து மற்றும் வாய் மொழிமூல பரீட்சையின் பின்னரே தெரிவு செய்யப்படுகிறார்.
-
4. ஜப்பானில் இயற்கை வளங்கள் என்று எதுவும் இல்லை.அத்துடன் வருடத்திற்கு நூற்றுக்கணக்கான பூமி அதிர்ச்சிகள் அங்கு ஏற்படுகின்றன.ஆன ால் ஜப்பான்தான் உலகிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரநாடாகும்.
-
5. ஜப்பானில் முதலாம் ஆண்டுதொடக்கம் ஆறாம் ஆண்டு வரையான மானவர்களுக்கு மற்றவர்களுடன் எப்படி பழக வேண்டும் என சொல்லிக் கொடுக்கப்படுகிறது.
-
6. ஜப்பான் மக்கள் உலகிலேயேமிகப் பெரிய பணக்காரர்களாகஇருந்தாலும் அவர்கள் ஒருபோதும் தங்களுக்கென்று வேலைக்காரர்கள் வைத்துக் கொள்வதில்லை. பெற்றோரே வீட்டையும் பிள்ளைகளையும் கவனித்துக் கொள்வர்.
-
7.ஜப்பான் பாடசாலைகளில் முதலாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டுவரை பரீட்சைகளே இல்லை.கல்வியின் நோக்கம் விடயங்களை அறிந்து கொள்ளவும் ஒழுக்க நெறிகளை கற்றுக் கொள்ளவும்தானே தவிர பரீட்சை மூலம் அவர்களை தரப்படுத்தவல்ல என்கிறார்கள்.
-
8. ஜப்பானில் மக்கள் உணவுக்கடைகளில் எந்தவிதத்திலும் உணவை வீணாக்காமல் தமக்குத்தேவையானதை அளவில் மட்டும் சாப்பிடுகிறார்க ள். உணவு வீணாதல் என்பதே அங்கு இல்லை.
-
9.ஜப்பானில் சராசரியாக ஒரு வருடத்தில் புகையிரதங்கள் தாமதமாக வந்த நேரம் ஆகக் கூடியது சுமார் 7 வினாடிகள் மாத்திரமே.
-
10. ஜப்பானில் மாணவர்கள் பாடசாலையில் சாப்பிட்ட பின் உடனேயே அங்கேயே பல் துலக்குகிறார்கள ்.அவர்களுக்கு சாப்பிடும் உணவு சரியாக சமிபாடு அடைய வேண்டும் என்பதற்காக சாப்பிடுவதற்கு அரை மணித்தியாலம் ஒதுக்கப்படுகிறது.

-----------------------------------
-ரிலாக்ஸ் ப்ளீஸ்