Monday, December 5, 2016

இலங்கை பறக்கும் பாம்பு

Image result for Sri Lankan flying snake, Chrysopelea taprobanica

இலங்கை பறக்கும் பாம்பு (Sri Lankan flying snake, Chrysopelea taprobanica) ஒரு பறக்கும் தன்மைகொண்ட ஊர்வனவகையைச் சார்ந்த பாம்பு இனம் ஆகும். இதன் பூர்வீகம்இலங்கையாக இருந்தாலும், இந்தியா போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது. இது கிரிசொபியா (Chrysopelea) என்றகுடும்பத்தின் வழித்தோன்றல் ஆகும். இவை ஓரிடத்திலிருந்து வேறு இடத்திற்கு இடப்பெயர்ச்சி அடையும்போது தன் விலா எலும்பை தட்டையாக மாற்றி பறக்க ஆரம்பிக்கிறது.பாம்பு இனங்களில் ஒன்றான இது, விசத் தன்மை குறைந்து காணப்படுகிறது.



உலகில் உள்ள பாம்பு இனங்களில் இது ஒரு அரிதானது ஆகும். இது வெப்பமண்டலப் பகுதியில் காணப்படுகிறது.தென்கிழக்காசியா பகுதியில் இலங்கை உட்பட வியட்நாம், கம்போடியா, போன்ற நாடுகளிலும், இந்தியாவில் அரிதாகவும் காணப்படுகிறது.



உடல் வாக்கில் அனைத்துப் பாம்புகளைப்போல் தோன்றினாலும் இதன் உடலின் மேல் பகுதியில்கட்டுவிரியன் பாம்பைப்போல் கருப்பு கோடுகள் காணப்படுகின்றன. தலைப்பகுதியில் வலுவான கருப்பு நிறத்தில் நல்ல பாம்பைப் போல் படம் எடுப்பதுபோன்ற தோற்றம் கொண்ட கோடுகள் உள்ளன.
 


----விக்கிப்பீடியாவில் இருந்து.-----

இன்குலாப் (மக்கள் கவிஞர்)







இன்குலாப் (Inkulab இறப்பு 1, திசம்பர் 2016) என்பவர் தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், பத்தி எழுத்தாளர், பொதுவுடைமைச்சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர் ஆவார். சமூகச் சிக்கல்கள், ஒடுக்குமுறைகள் போராட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே இவருடைய படைப்புகள் அமைந்திருந்தன. இன்குலாப் என்பதற்குப் புரட்சி என்று பொருள்படும்.




இன்குலாப்பின் இயற்பெயர் எஸ். கே. எஸ். சாகுல் அமீது. கீழக்கரை என்னும் ஊரில் பிறந்தார். இசுலாமியக் சமூகத்தில் மிகவும் ஏழ்மை குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை சித்த மருத்துவர். பள்ளிப் படிப்பைக் கீழக்கரையில் முடித்துவிட்டு சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரியில்புகுமுக வகுப்பில் சேர்ந்து படித்தார். அக்காலத்தில் மீரா என்னும் கவிஞர் அக்கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்தார். எனவே அவருடன் இன்குலாப்புக்கு நட்பு ஏற்பட்டது.




மதுரைத் தியாகராசர் கல்லூரியில் இளங்கலை(தமிழ்) வகுப்பில் சேர்ந்து பயின்றார். படிப்பை முடித்துசென்னையில் உள்ள புதுக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். ஈரோடு தமிழன்பன், நா.பாண்டுரங்கன் போன்றோருடன் இன்குலாப் புதுக்கல்லூரியில் பணி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




1965 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழ் நாட்டில் வெடித்தது. அப்போது உடன் பயின்ற மாணவர்களான கவிஞர் நா. காமராசன் கா. காளிமுத்து பா. செயப்பிரகாசம் ஆகியோருடன் இன்குலாப் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முனைப்பாக இறங்கினார். காவல் துறையின் தடியடிகளுக்கும் ஆளானார். சிறைக்கும் சென்றார்.




தொடக்கக் காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளராக இருந்து, பிற்காலத்தில் மார்க்சியக்கொள்கையாளர் ஆனார். கீழவெண்மணியில் 1968 இல் நிகழ்ந்த 43 தலித் மக்கள் பொசுக்கப்பட்ட நிகழ்விற்குப் பிறகு இன்குலாப் மார்க்சியத்தை நாடினார். கம்யூனிச்டு இயக்கச் சார்பாளர் ஆனபிறகு மார்க்சிய லெனினிய புரட்சிகர இயக்கத்திலும் அதன் பின்னர் மா. லெ. அடிப்படையில் இயங்கிய தமிழ்த் தேசிய விடுதலையிலும் ஈடுபட்டு இயங்கினார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரனைச் சந்தித்தார். கல்லூரி ஆசிரியர் சங்கப் போராட்டங்களிலும் முன்னணியில் இருந்தார்.




இளவேனில் என்பவர் நடத்திய கார்க்கி இதழில் கவிஞர் இன்குலாப்பின் தொடக்கக் கால கவிதைகள் வெளிவந்தன. தராசு, நக்கீரன், இனி, நாற்காலி, உண்மை, உங்கள் விசிட்டர் எனப் பல இதழ்களில் ஏராளமான கட்டுரைகளையும் கவிதைகளையும் அவ்வப்போது எழுதினார். சூரியனைச் சுமப்பவர்கள் என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். 'மார்க்சு முதல் மாசேதுங் வரை' என்னும் மொழியாக்க நூலை எஸ். வி. ராஜதுரையும் இன்குலாப்பும் இணைந்து எழுதினார்கள். மனுசங்கடா, நாங்க மனுசங்கடா என்னும் இவர் எழுதிய பாட்டு எண்ணற்ற மேடைகளில் தலித்து மக்களால் பாடப் படுகிறது. கல்லூரிக் காலத்தில் குரல்கள், துடி, மீட்சி என் மூன்று நாடகங்கள் எழுதினார். பிற்காலத்தில் அவ்வை, மணிமேகலை ஆகியன நாடகங்கள் இவரால் எழுதப்பட்டன. 2007 ஆம் ஆண்டு வரை இன்குலாப் எழுதிய கவிதைகள் அனைத்தும் ஒவ்வொரு புல்லையும் என்னும் பெயரில் ஒரு பெரிய நூலாக வெளிவந்தது.




2006ஆம் ஆண்டு தனக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருதினை திருப்பி அளித்தார். ஈழத் தமிழர்களை காக்க அரசு தவறிவிட்டதாக இதற்கு காரணம் தெரிவித்தார்.




உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இன்குலாப் சிகிச்சை பலனின்றி திசம்பர் 1, 2016 அன்று உயிரிழந்தார்.[1] அவரது உடல் செங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொடையளிக்கப்பட்டது.....................................................




---------விக்கிப்பீடியாவில் இருந்து.-----------------

Tuesday, November 29, 2016

யூதர்களின் தன்னாட்சி மாகாணம்

 விக்கிப்பீடியாவில் இருந்து.....

யூதர்களின் தன்னாட்சி மாகாணம்
Jewish Autonomous Oblast

Еврейская автономная область (Russian)
—  சுயாட்சி மாகாணம்  —

கொடி

சின்னம்
தேசியப் பண்: இல்லை[1]
ஆள்கூறுகள்: 48°36′N 132°12′E
அரசியல் நிலை
நாடுஉருசியா
கூட்டாட்சி மாவட்டங்கள்தூரக்கிழக்கு[2]
பொருளாதாரப் பகுதிகள்தூரக்கிழக்கு[3]
அமைக்கப்பட்டதுMay 7, 1934[4]
நிர்வாக மையம்பைரோபிட்ஜன்
அரசாங்கம் (July 2014 இல் நிலவரம்)
 • ஆளுநர்[6]அலெக்சாந்தர் லிவின்டால்[5]
 • சட்டமன்றம்சட்ட மன்றம்[7]
புள்ளிவிபரம்
பரப்பு (2002 கணக்கெடுப்பு)[8]
 • மொத்தம்36,000 km2 (14,000 sq mi)
பரப்புத் தரம்61வது
மக்கள் தொகை (2010 கணக்கெடுப்பு)[9]
 • மொத்தம்1,76,558
 • தரம்80வது
 • அடர்த்தி[10]4.9/km2 (13/sq mi)
 • நகர்67.6%
 • கிராமம்32.4%
மக்கள் தொகை (2014 சனவரி est.)
 • மொத்தம்1,70,377[11]
உரசிய நேர வலயம்[12]
ISO 3166-2:RURU-YEV
அனுமதித் தகடு79
சட்டபூர்வ மொழிஉருசியம்[13]
அலுவலக வலைத்தளம்
யூதர்களின் தன்னாட்சி மாகாணம் (Jewish Autonomous Oblastஉருசியம்Евре́йская автоно́мная о́бласть) என்பதுஉருசியாவின் கூட்டாட்சி அமைப்பைச் சேர்ந்த ஒருகூட்டாட்சி மாகாணம் ஆகும். இது உருசிய தூரக்கிழக்கெல்லையில் உருசியாவின் கபதோஸ்க் கிராய் மற்றும் அமூர் மாகாணம் மற்றும் சீனாவின்கெய்லோங்சியாங் மாகாணம் போன்றவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது. இது "யேவ்ரே", "பைரோபிடிஜான்" என்றும் அழைக்கப்படுகிறது. இதன் தலைநகரம் பைரோபிடிஜான் ஆகும். 2010 மக்கள் கணக்கெடுப்பின்படி, இந்த மாகாணத்தின் மக்கள் தொகை 176,558 ஆகும். இது உருசிய மக்கள் தொகையில் 0.1% ஆகும். யூதர்களின் இந்த மாகாணம் மட்டுமே உருசிய கூட்டமைப்பில் தன்னாட்சி மாகாணமாக உள்ளது.உலகில் இசுரேலுக்கு வெளியே உள்ள ஒரு அதிகாரப்பூர்வ யூத தன்னாட்சி மாகாணம் இதுவாகும்.
சோவியத் ஆட்சியாளர்களால் ஸ்டாலின் காலத்தில் அதன் தேசியக் கொள்கையால் இந்த யூத மாகாணம் 1934 இல் நிறுவப்பட்டது. இது சோவியத் ஒன்றியத்தில் உள்ளயூதர்கள் தங்கள் பாரம்பரியத்தைக் காத்துக்கொள்ள உருவாக்கப்பட்டது.1939 ஆம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இம்மாகாணத்தில், 17,695 யூத மதத்தினர் வாழ்ந்து வந்தனர் (மாகாண மொத்த மக்கள் தொகையில் 16%). யூதர்களின் மக்கள் தொகை 1948 இல் ஏறக்குறைய 30,000 ஆக உயர்ந்து, மாகாணத்தின் மொத்த மக்கள் தொகையில் காற்பகுதியாக அதிகரித்தனர்.
1953 இல் ஜோசப் ஸ்டாலின் மறைவுக்குப்பிறகு மாகாணத்தில் யூதமக்களின் எண்ணிக்கை சரிவடையத் துவங்கியது. 1959 மக்கள் கணக்கெடுப்பில் யூத மக்களின் தொகை 14,259 என 50% வரை குறைந்தது.2002 ஆண்டுவாக்கில் யூதர்களின் எண்ணிக்கை 2,327 (மாகாண மக்கள் தொகையில் 1.2%) ஆகவும், உருசிய மரபினரின் எண்ணிக்கை 90% ஆக இருந்தது. 2007 ஆண்டின் ஜெருசலம் போஸ்ட் பத்திரிக்கையில் வெளிவந்த கட்டுரை, யூதமாகாணத்தில் அக்காலகட்டத்தில் ஏறக்குறை 4,000 யூதர்கள் வசிப்பதாக குறிப்பிட்டது.மாகாணத்தின் தலைமை பொறுப்பில் மோர்டிசாய் சீனியர் இருந்த 2002 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் யூத மாகாணத்தில் யூத மதமும், கலாச்சாரமும் மறுமலர்ச்சியடைந்தன. என்றாலும் பெடரேசன் ஆப் ஜுவிஷ் கம்யூனிடி ஆப் சிஐஎஸ்சின் இதழ், தற்போது யூத மாகாணத்தில் யூதர்கள் மிக்குறைவான அளவே வாழ்கின்றனர் என்றும் குறிப்பாக பைரோபிடிஜன் நகரம் மற்றும் அருகிலுள்ள வால்ட்கியாம் கிராமத்திலும் ஓரளவு யூதர்கள் வாழ்வதாகவும் குறிப்பிட்டது. 2010 ஆண்டைய உருசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்த மாகாணத்தில் வெறும் 1,628 யூதர்கள் மட்டுமே (1%) வாழ்வதாகவும் உருசிய மரபினர் 92.7% பேர் வாழ்வதாகவும் தெரியவந்தது.மேலும் ரஷிய மக்கள்தொகை கணக்கெடுப்புப் பிரிவு வெளியிட்ட தகவலின் படி, 97 பேர் இத்திய மொழி பேசினார், 312 பேர் ஹீப்ரு பேசினார், மேலும் 54 பேர் குறிப்பிடப்படாத யூத மொழிகளைப் பேசினர்.     

தட்பவெட்பம்

இந்த பிரதேசத்தில் வீசும் கிழக்கு ஆசிய பருவக்காற்றால்-இதன் தட்பவெப்பநிலை, சூடான, ஈரப்பதமான, கோடைக்காலத்தை கொண்டுள்ளது; குளிர் காலத்தில் குளிர்ந்த, உலர்ந்த காலநிலை நிலவுகிறது.

வரலாறு

இராணுவ குடியேற்றங்கள் மற்றும் சைபீரிய தொடர்வண்டி பாதை அமைப்பும்

அமுர் வடகரையும், இன்றைய யூதர்களின் தன்னாட்சி பிரதேசம் ஆகியவை உட்பட்ட பகுதிகள் 1858-1860 கால பெய்ஜிங் ஒப்பந்தங்களுக்கு பிறகு உருசியப் பேரரசுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
1858 திசம்பரில் உருசிய அரசாங்கம் உருசியாவின் தென்கிழக்கு பகுதிகளான உஸ்சுரி ஆறுகள் தொடர்புடைய சைபீரியா, அமூர் ஆகிய பகுதிகளைப் பாதுகாக்க அமுர் கோசாக்குகள் உருவாக்க அங்கிகாரம் வழங்கியது. இந்த இராணுவ குடியேற்றங்கள் டிரானஸ்பேய்கலா பகுதியில் இருந்து. 1858–82, காலகட்டத்தில் அறுபத்து மூன்று குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 1858 ராட்டி குடியிருப்புகள், மற்றும் 1860 காலகட்டத்தின் குடியிருப்புகள் அடங்கும். நிலவியலாளர்களும், இயற்கை தாவரவியலாளர்களின் உதவியுடன் புதிய பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு வேண்டிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவர்களின் சாதனையின் ஒரு பகுதியாக அமுர் நில வரைபடம் தயாரிக்கப்பட்டது.
யூதர்களின் தன்னாட்சி மாகாணமும் அதன் அதன் தலைநகரும் குறிக்கப்பட்டுள்ளது.
டிரான்ஸ் சைபீரியன் இருப்புப் பாதை கட்டுமானம் 1898 இல் துவக்கப்பட்டது. இப்பாதை சிட்டா மற்றும் விலாடிவொஸ்டொக்ஆகியவற்றை இணைக்கும்வகையில் இரு முணைகளிளும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இடையில் வந்து இணையுமாறு முடிக்கப்பட்டது. இத்திட்டத்தினால் இப்பகுதியில் புதிய குடியேற்றங்கள் உருவாகவும், குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும் அடித்தளம் ஏற்படுத்தப்பட்டது. தொடர் வண்டிப்பாதை அமைக்கும்பணி 1916 அக்டோபரில் நிறைவுற்று, காபரோஸ்க்கை கடக்கும் 2,590 மீட்டர் நீளமுள்ள கபரோவிஸ்க் பாலக் கட்டுமானத்துடன் நிறைவடைந்த்து. புரட்சிக்கு முந்தைய காலக்கட்டத்தில் இங்கு வாழ்ந்தவர்கள் பெரும்பாலும் உள்ளூர் விவசாயிகளாவர். வேறு தொழில்கள் என்றால் மர அறுப்பு ஆலை, சுதாரா ஆற்றுப் பகுதியில் தங்கம் நோண்டுதல், மற்றும் சிறிய தொடர்வண்டி பணிமனைகள் போன்றவை ஆகும். உருசிய உள்நாட்டுப் போரின்போது, இப்பகுதியில் கொடூரமான போர்கள் நடந்தன. 1926 மற்றும் 1927 ஆண்டுகளில் நிலமை சீரானது என்றாலும் பொருளாதார வளர்ச்சி குன்றியே காணப்பட்டது.

யூதர்களின் குடியேற்றமும் வளர்ச்சியும்

முதலில் உக்ரைன் மற்றும் கிரிமியா பகுதியில் யூதர்களைக் குடியேற்றத் திட்டமிடப்பட்டது. ஆனால் உள்ளூரில் எழுந்த எதிர்ப்பினால், அரசுக் குழுக்கள் குடியேற்றத்துக்காக வேறு இடங்களைப் பரிசீலித்து, இறுதியில் பைரோபிட்ஜன் தேர்வுசெய்யப்பட்டது. இரண்டு யூத மாவட்டங்கள் கிரிமியாவிலும், மூன்று மாவட்டங்கள் தெற்கு உக்ரைனிலும் உருவாக்கப்பட்டன.
1928 மார்ச் 28 இல் சோவியத் ஒன்றியத்தின் பொது நிர்வாகக் குழுவில் "யூத தொழிலாளர்களுக்கு தூரக்கிழக்கில் உள்ள அமூர் நதியருகில் காலி இடத்தில் குடியிருப்புகளை உருவாக்கப்படும்" எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தினினால் எல்லைப் பகுதியில் யூத பிராந்திய நிர்வாக அலகு ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டது.மேலும் எதிர்காலத்தில் ஜாவோவை (சோவியத் ஒன்றியத்தில்யூதர்கள் வசிக்கும் ஒரு இடம்) அடிப்படையாகக் கொண்டு யூத குடியரசு அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை.
1930 ஆகத்து 30 இல் சோவியத் ஒன்றியத்தின் பொதுக் குழுவில் இந்த தீர்மானம் ஏற்க்கப்பட்டது. மாநில திட்டக் குழுவால் பைரோபிட்ஜன் தேசிய வட்டாரத்தை தனி பொருளாதார அலகாக கருதப்பட்டது. 1932 ஆண்டு முதல் இப்பகுதியின் வளர்ச்சி குறித்து திட்டமிடப்பட்டது.வட அமெரிக்க யூத கம்யூனிச அமைப்பால் சோவியத் ஒன்றிய யூத குடியிருப்பில் வெற்றிகரமாக ஜார்ஜ் கோவல் குடும்பத்தினர் போன்றோரைக் கொண்ட ஒரு யூதக் குடியிருப்பு 1932 இல் அமைக்கப்பட்டது. இதில் சோவியத் ஒன்றியத்தைச் சேராத யூதர்கள் 1,200 பேர் பைரோபிட்ஜன் நகரில் குடியேற்றப்பட்டனர்.

Circle frame.svg
யூதர்களின் தன்னாட்சி மாகாணத்தில் மதங்கள் (2012)[30][31]
  பொதுவான கிருத்துவர் (9%)
  மத ஈடுபாடு அற்றவர்கள் (35%)
  யூதம் (0.2%)
  பிறர் (5.2%)
1934 மே 7, அன்று உருசிய கூட்டமைப்பின் பொது நிர்வாக குழு தீர்மானத்தை ஏற்றதைத் தொடர்ந்து, யூத தன்னாட்சி கபரோவ்ஸ்க் பிரதேசம் 1938 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டு, யூத தன்னாட்சிப் (ஜாடி) உருசிய கட்டமைப்பில் சேர்க்கப்பட்டது.
ஜோசப் ஸ்டாலினின் தேசியக் கொள்கையின்படி, ஒவ்வொரு தேசிய இனக்குழுவினருக்கும் அவர்களது கலாச்சாரத்தை பாதுகாக்க ஒரு தனிப்பிரதேசத்தைப் பெறும்வகையில் பணிகள் இருந்தன. இது சோவியத்துக்கு நிலவிய இரண்டு அச்சுறுத்தல்களுக்கு பதிலாக அமையும் வகையிலானது ஆகும்
  1. யூதம், நாத்திகமே உத்தியோக பூர்வமான கொள்கை
  2. சியோனிசம், பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கு என தனி நாடுவேண்டும் என வாதிடும் தேசியவாத்த்துக்கு எதிர்வினை
சோவியத்துக்கள் ஒரு பாட்டாளி வர்க்க யூத கலாச்சாரத்தை உருவாக்க முடியும், அங்கு ஒரு புதிய "சோவியத் சீயோன்", அமைக்கவும் வலியுறுத்தப்பட்டது. ஹீப்ரு தேசிய தேசிய மொழியாகவும் அந்த மொழி மற்றும் இலக்கியம் மற்றும் கலை கலாச்சாரம் முதன்மை வெளிப்பாடு ஆகியன மத்த்தின் முக்கியத்துவத்துக்க பதிலாக அமையும் என கருதப்பட்டது.

மக்கள் வகைப்பாடு

மக்கள் தொகை:. 176,558 (2010 கணக்கெடுப்பு) 190,915 (2002 கணக்கெடுப்பு); 215,937 (1989 கணக்கெடுப்பு)
2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மாகாணத்தில் 160.185 உருசிய மரபினத்தவர் (92.7%) என பெரிய குழுவாக உள்ளனர், 4.871 பேர் உக்ரைனியர்கள் (2.8%), மற்றும் 1,628 பேர் யூத இனத்தவர் (1%) 3.832 பேர் நிர்வாக தரவுத்தளங்களில் இனம் குறித்து அறிவிக்கவில்லை.
2012 முக்கிய புள்ளி விவரங்கள்
  • பிறப்பு: 2 445 (1000 ஒன்றுக்கு 14.0)
  • இறப்பு: 2 636 (1000 ஒன்றுக்கு 15.1) [57]
மொத்த கருத்தரிப்பு விகிதம்: 
2009 - 1.67 | 2010 - 1.67 | 2011 - 1.79 | 2012 - 1.84 | 2013 - 1.86 | 2014 - 1.95 | 2015 - 2.02

சமயம்

2012 ஆண்டைய அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பின் படி மாகாணத்தின் மொத்த மக்கள் தொகையில் 22.6% பேர் உருசிய மரபுவழித் திருச்சபைக் கிருத்தவர்களாகவும், 6% பேர் கிழக்கு மரபுவழி திருச்சபைகிருத்தவர்களாகவோ அல்லது வேறு திருச்சபையில் உறுப்பினராகவோ உள்ளனர். 9% பேர் பொதுவான கிருத்தவர்களாக உள்ளனர். யூதம் 0.2% மக்களின் சமயமாக உள்ளது. இது தவிர 35% மத நம்பிக்கையற்றவர்கள், 22% பேர் நாத்திகர், 5.2% தங்கள் சமயத்தைப்பற்றி குறிப்பிடாதவர்கள்.