Monday, January 21, 2013

எச்சரிக்கை!!! எச்சரிக்கை!!! பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!!
எச்சரிக்கை!!!

எச்சரிக்கை!!!

பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!!

அமெரிக்க உணவு மற்றும் மருந்துப் பொருட்களின் தரக் கட்டுப்பாட்டு அமைப்பான எஃப்.டி.ஏ. (FDA – Food and Drug Administration), கீழ்வரும் பொருள் சேர்ந்த மருந்துகள் அனைத்தையும், மீளப் பெற ஆலோசனை வழங்கியுள்ளது.

PHENYLPROPANOLAMINE

தற்போது, இந்தியா உட்பட அநேக நாடுகளில் விற்பனையாகும் குறிப்பிட்ட சில மருந்துகளில், PHENYLPROPANOLAMINE உள்ளது. இந்தியாவில் இந்த மருந்துகள் தற்போதும் விற்பனையாகின்றன. அதுவும், டாக்டரின் பிரிஸ்கிரிப்ஷன் இல்லாமல், மெடிக்கல் ஷாப்பில் வாங்கக்கூடிய மருந்துகள் இவை. குழந்தைகளுக்கான மருந்துகளும் இதில் அடக்கம்.

இதிலுள்ள பெரிய ஆபத்து என்னவென்றால், சாதாரண சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் சில மருந்துகள், மற்றும் சிரப்புகளில்கூட Phenylpropanolamine உள்ளது.

PHENYLPROPANOLAMINE சேர்க்கப்பட்ட மருந்துகளை உட்கொண்டால், 18-49 வயதான பெண்களுக்கு hemorrhagic stroke (மூளையில் ரத்தக்கசிவு ஏற்படுவதால் ஏற்படும் செயலிழப்பு) ஏற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து எஃப்.டி.ஏ. PHENYLPROPANOLAMINE உள்ள மருந்துகளை தவிர்க்குமாறு, அனைவருக்கும் (குழந்தைகள் உட்பட) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா உட்பட, அநேக நாடுகளில் கிடைக்கும் கீழ்வரும் மருந்துகளில் Phenylpropanolamine உள்ளது.

Acutrim Diet Gum Appetite Suppressant
Acutrim Plus Dietary Supplements
Acutrim Maximum Strength Appetite Control
Alka-Seltzer Plus Children’s Cold Medicine Effervescent
Alka-Seltzer Plus Cold medicine (cherry or orange)
Alka-Seltzer Plus Cold Medicine Original
Alka-Seltzer Plus Cold & Cough Medicine Effervescent
Alka-Seltzer Plus Cold & Flu Medicine
Alka-Seltzer Plus Cold & Sinus Effervescent
Alka-Seltzer Plus Night-Time Cold Medicine
BC Allergy Sinus Cold Powder
BC Sinus Cold Powder
Comtrex Flu Therapy & Fever Relief
Day & Night Contac 12-Hour Cold Capsules
Contac 12 Hour Caplets
Coricidin D Cold, Flu & Sinus
Dexatrim Caffeine Free
Dexatrim Extended Duration
Dexatrim Gelcaps
Dexatrim Vitamin C/Caffeine Free
Dimetapp Cold & Allergy Chewable Tablets
Dimetapp Cold & Cough Liqui-Gels
Dimetapp DM Cold & Cough Elixir
Dimetapp Elixir
Dimetapp 4 Hour Liquid Gels
Dimetapp 4 Hour Tablets
Dimetapp 12 Hour Extendtabs Tablets
Naldecon DX Pediatric Drops
Permathene Mega-16
Robitussin CF
Tavist-D 12 Hour Relief of Sinus & Nasal Congestion
Triaminic DM Cough Relief
Triaminic Expectorant Chest & Head
Triaminic Syrup Cold & Allergy
Triaminic Triaminicol Cold & Cough

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு, எஃப்.டி.ஏ. இணையத்தளத்தின் லிங்க்கை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

http://www.fda.gov/Drugs/DrugSafety/InformationbyDrugClass/ucm150767.htm

----------------------------------
நன்றி: ரிலாக்ஸ் பிளீஸ்

டைட்டானிக்( RMS TITANIC) கப்பலை பற்றி அவசியம் படிக்கஅறியாத சில தகவல்கள்டைட்டானிக் படம் பற்றி தான் அனைவரும் பேசுகிறோமே தவிர நிஜ டைட்டானிக் கப்பல் பற்றி நம்மில் எத்தனை பேர் தெரிந்து கொண்டோம் என்று தெரியவில்லை. இந்தக் கட்டுரை எழுதும் வரை எனக்கும் எதுவும் தெரியாது


tour titanic 15 Take a tour inside the real Titanic (25 photos)

இதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் இந்தக் கப்பல் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவலில் எழுதுகிறேன். இதன் மூலம் நானும் பல விசயங்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது.


tour titanic 16 Take a tour inside the real Titanic (25 photos) 

உலகின் முதல் சொகுசுக் கப்பலான டைட்டானிக்கின் பெயர் RMS TITANIC. இங்கிலாந்தின் மிகப்பெரிய கப்பல் நிறுவனமான White Star Line நிறுவனம் இதைக் கட்டியது.
கப்பல் கட்டும் பணி 1909 மார்ச் மாதம் 31 ம் தேதி துவங்கி 1911 மே மாதம் 31 ம் தேதி கட்டி முடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு வருடம் கட்டப்பட்ட இந்தக்கப்பலின் எடை 46,328 டன் ஆகும்.


tour titanic 17 Take a tour inside the real Titanic (25 photos) 

Southampton நகரில் (இங்கிலாந்து) இருந்து கிளம்பி Cherbourg, France & Queenstown, Ireland வழியாக நியூயார்க் சென்றடைவதாக திட்டமிடப்பட்டது.
டைட்டானிக் கப்பல் பெண் பாலில் தான் (She) அழைக்கப்படுகிறது அதாவது இந்தக்கப்பலை பெண்ணாக கருதுகிறார்கள்.


 

இந்தக் கப்பல் A முதல் G வரை பல அடுக்குகளாக கட்டப்பட்டது. மேல் (A) அடுக்கில் முதல் வகுப்பு பயணிகளான செல்வந்தர்களுக்கும் அதன் கீழே வரும் அடுக்குகள் அதற்கு கீழ் வகுப்புகளான இரண்டு, மூன்று வகுப்பு பயணிகளுக்குமானது. மூன்றாம் வகுப்பு பயணிகள் அறை டார்மிட்டரி என்று அழைக்கப்படும் பல அடுக்குகளைக் கொண்ட படுக்கைகளால் ஆனது. (டைட்டானிக் படத்தில் ஜேக் ன் அறை)


tour titanic 18 Take a tour inside the real Titanic (25 photos) 

இந்த சொகுசுக் கப்பல் முக்கியமாகப் பணக்காரர்களுக்காகவே கட்டப்பட்டது. இதில் உள்ள ஒரு அடுக்கின் பெயரான Promenade Deck (A Deck) ல் நீச்சல்க் குளம், சொகுசான உணவருந்தும் இடம், படிக்கும் எழுதும் இடம், உடற்பயிற்சிக் கூடம், விளையாட்டு இடம் மற்றும் புகைபிடிக்கும் இடம் என்று பார்த்துப் பார்த்துக் கட்டப்பட்டது. இதில் பயன்படுத்தப் பட்ட பொருட்கள் சாமானியர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. புரியும் படி கூறவேண்டும் என்றால் சாதா விடுதியில் தங்கி இருந்தவர் ஐந்து நட்சத்திர விடுதிக்கு சென்றால் எப்படி மலைத்துப் போவாரோ அது போல இருக்கும். முதல் வகுப்புப் பயணிகள் தங்களுடன் செவிலியர் உதவியாளர்கள் ஆகியோரை துணைக்கு அழைத்து வர அனுமதிக்கப்பட்டனர்.


tour titanic 0 Take a tour inside the real Titanic (25 photos) 

இதில் இங்கிலாந்து அமெரிக்க நாடுகளின் மிகப்பெரிய பணக்காரர்கள் பெரும்பாலும் சென்றனர் இதில் அமெரிக்க மில்லியனர் John Jacob Astor IV மற்றும் இவரது 18 வயது கர்ப்பமான மனைவி பிரசவத்திற்காக நியூயார்க் சென்றார்கள். John Jacob Astor IV தான் இந்தக்கப்பலில் மிகப்பெரிய பணக்காரர். இவர் ஆண் என்பதால் படகில் ஏற அனுமதிக்கப்படவில்லை பின் 1912 ஏப்ரல் 22 ம் தேதி இவருடைய இறந்த உடலுடன் இருந்த பல ஆயிரம் டாலர்கள் பணமும் கண்டு எடுக்கப்பட்டது. RMS Carpathia கப்பலால் காப்பற்றப்பட்ட இவரது மனைவி இதன் பிறகு 1916 ல் மறுமணம் செய்து கொண்டார் அதன் பிறகு அவரை விவாகரத்து செய்து விட்டு இன்னொருவரை 1933 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
tour titanic 1 Take a tour inside the real Titanic (25 photos)

மூன்றாம் வகுப்பில் தான் அதிக பயணிகள் இருந்தார்கள் இவர்கள் பெரும்பாலும் குடியேறிகள், அமெரிக்கா சென்று வேலை தேடி தங்கள் வாழ்க்கையைத் தொடங்க திட்டமிட்டு இதில் வந்தவர்கள். பல நாட்டை சேர்ந்தவர்களும் இதில் இருந்தனர். மூன்றாம் வகுப்பில் இருந்த இரண்டு மாதக் குழந்தையான Millvina Dean தான் இருந்ததிலேயே வயது குறைந்த பயணி!! இவர் தன்னுடைய 97 ம் வயதில் 2009 ஆண்டு காலமானார். டைட்டானிக் விபத்தில் பிழைத்தவர்களில் இவர் தான் கடைசி நபர்.


tour titanic 2 Take a tour inside the real Titanic (25 photos) 

ஒவ்வொரு அடுக்கிற்க்கும் கதவு இருக்கும் இதனால் ஒரு வகுப்பு பயணிகள் மற்ற வகுப்பு பயணிகளுடன் கலக்காமல் இருக்க முடியும். விபத்து ஏற்பட்ட போது கதவு மூடி இருந்ததால் சிலர் வெளியே வர முடியாமல் மாட்டிக்கொண்டனர்.


tour titanic 3 Take a tour inside the real Titanic (25 photos) 

கப்பலில் செல்லக் கட்டணம் தோராயமாக மூன்றாம் வகுப்பிற்கு $36 இரண்டாம் வகுப்பிற்கு $66 முதல் வகுப்பிற்கு $125 மற்றும் டீலக்ஸ் வகுப்பிற்கு $4500 ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. நூறு வருடம் முன்பு 4500$ என்றால் தற்போது கணக்குப் போட்டுப் பார்த்தால் தலை சுற்றுகிறது. அந்தக்காலத்தில் ஒரு வீட்டையே 1000$ க்கு வாங்க முடியுமாம்!


tour titanic 4 Take a tour inside the real Titanic (25 photos) 

விபத்து ஏற்ப்பட்டால் தப்பிக்க 20 படகுகள் (Life boats) மட்டுமே இருந்தன இதில் 16 படகுகள் 65 பேரையும் 4 படகுகள் 47 பேரையும் கொள்ளும் அளவு கொண்டது 1100 – 1200 பேர் தப்பித்து இருக்க முடியும் ஆனால் இதில் 710 பேர் மட்டுமே தப்பிக்க முடிந்தது. முதல் வகுப்பு பயணிகள் படகில் மிகக் குறைவானவர்களே இருந்தனர் அதோடு தனது படகில் ஏறி படகை கவிழ்த்து விட்டால் என்ன செய்வது என்று பலரை படகில் ஏற இருந்தவர்கள் அனுமதிக்கவில்லை. இந்த விபத்திற்குப் பிறகே பாதுகாப்பு விசயத்தில் அனைவரும் அதிக கவனம் செலுத்தினார்கள். உயிர்காக்கும் படகுகளின் முக்கியத்துவம் அதிகரிக்கப்பட்டது.
tour titanic 5 Take a tour inside the real Titanic (25 photos) 

படகில் ஏற முடியாதவர்கள் அனைவரும் தண்ணீரில் விழுந்து குளிரில் சில நிமிடங்களில் விரைத்து இறந்து விட்டார்கள். கடுமையான பனி (−2°C) அப்போது நிலவியது. டைட்டானிக் படத்தில் நீங்கள் கவனித்து இருக்கலாம் ஜேக் தண்ணீரில் விழுந்த உடனே அவரது தலை முடியில் இருந்த நீர் பனிக்கட்டியாக மாறி இருக்கும்.


tour titanic 6 Take a tour inside the real Titanic (25 photos) 

நம்மால் பனிக்கட்டியையே சில நொடிகள் கூட கையில் வைத்து இருக்க முடியாது அப்படி இருக்கும் போது நம் உடல் முழுவதும் இதைப் போல குளிர்ச்சியில் இருந்தால்!…
தப்பித்துச் செல்ல குழந்தைகளுக்கும் பெண்களுக்குமே முன்னுரிமை வழங்கப்பட்டது எனவே இந்தக்கப்பலில் சென்ற பெரும்பான்மையான ஆண்கள் இறந்து விட்டார்கள். அப்படியும் தப்பித்த ஆண்கள் நாட்டில் உள்ளவர்களால் கடும் விமர்சனத்திற்கு ஆளாகினர் காரணம் பல குழந்தைகள் பெண்கள் படகு கிடைக்காமல் இறந்து விட்டனர் அப்படி இருக்கும் போது அவர்களை காப்பாற்றாமல் கோழை போல இவர்கள் நடந்து கொண்டதால் பலரால் அதன் பிறகு சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டு இகழப்பட்டனர்.


tour titanic 7 Take a tour inside the real Titanic (25 photos) 

மூன்று என்ஜின்களைக் கொண்ட இதில் இரண்டு எஞ்சின்கள் இணைந்து 30,000 குதிரை சக்தியை (Horse Power) தரவல்லது. நிலக்கரி மூலம் வேலை செய்யும் Turbine மேலும் 16,000 குதிரை சக்தி வேகத்தை தரவல்லது மொத்தம் 46,000 குதிரை சக்தி. இரண்டு எஞ்சின்கள் 720 டன் எடை கொண்டதாகும். இதை இயக்குவதில் 176 பணியாளர்கள் பகுதி நேர வேலையில் (24/7) பயன்படுத்தப்பட்டார்கள். அழுக்கு, வெப்பம் அதிகம் உள்ள இடம் என்பதால் இங்கு பணி புரிவது என்பது மிகச் சிரமமான ஒன்றாகும். இதில் தினமும் வரும் 100 டன் சாம்பல் கடலில் கொட்டப்பட்டது.


tour titanic 8 Take a tour inside the real Titanic (25 photos) 

கப்பலின் வேகம் மணிக்கு 39 கிலோ மீட்டர்
முதல்வகுப்பில் 739 பயணிகளும், இரண்டாம் வகுப்பில் 674 பயணிகளும், மூன்றாம் வகுப்பில் 1026 பயணிகளும் இவர்களோடு 900 பணியாளர்களும் பயணம் செய்ய முடியும் ஆக மொத்தம் 3, 339 பேர் பயணம் செய்யலாம் ஆனால் இதில் 2,224 நபர்கள் மட்டுமே (900 ஊழியர்களும் சேர்த்து) பயணம் செய்தார்கள். முன்பே குறிப்பிட்டபடி இந்தக்கப்பலில் மூன்றாம் வகுப்பு பயணிகளே அதிகம் இருந்தனர். அப்போது ஒவ்வொரு குடும்பமும் மிகப்பெரியதாக இருக்கும் 7 குழந்தைகள் எல்லாம் சகஜமாக பெற்றுக்கொள்வார்கள். இவ்வாறு வந்தவர்கள் பலர் குடும்பத்தோடு இறந்து போனார்கள்.tour titanic 9 Take a tour inside the real Titanic (25 photos)

டைட்டானிக் பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்ல பயன்படாமல் கார்கோ என்று அழைக்கப்படும் சரக்குப் பொருட்களையும் ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்டது. இதில் பல டன் பொருட்கள் சரக்குகளாக கொண்டு செல்லப்பட்டன. கடிதங்கள் கொண்டு செல்லவும் பயன்படுத்தப்பட்டது.
இதில் பயன்படுத்தப்பட்ட தந்தி முறை சாதனங்கள் 1000 மைல் வரை தகவல்களை அனுப்ப வல்லது.


tour titanic 10 Take a tour inside the real Titanic (25 photos) 

ஏப்ரல் 14 இரவு 11 : 40 மணிக்கு டைட்டானிக் 220 அடி நீள பனிப்பாறையில் மோதி மூழ்கத் தொடங்கி ஏப்ரல் 15 விடியற்காலை 2 : 20 மணிக்கு முற்றிலுமாக 12,415 அடி ஆழத்தில் (3,784 மீட்டர்) மூழ்கியது. விபத்து நடந்தவுடன் உதவி கோரிய போது அருகில் இருந்தது கப்பல் RMS Carpathia ஆகும், தூரம் சுமார் 93 கிலோ மீட்டர். இது வர 4 மணி நேரம் ஆகும் என்று கணக்கிடப்பட்டது. RMS Carpathia சரியாக 4 : 10 மணிக்கு டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்திற்கு வந்து படகில் பிழைத்தவர்களை காப்பாற்றியது. படகில் இருந்தவர்கள் ஒரு சிலர் குளிர் தாங்காமல் இறந்து விட்டார்கள். இந்த விபத்தில் மொத்தமாக 1,514 பேர் இறந்து விட்டார்கள் பணியாளர்களுடன் சேர்த்து 710 பேர் உயிர் பிழைத்தார்கள்.


tour titanic 11 Take a tour inside the real Titanic (25 photos) 

கேப்டன் Edward John Smith இருப்பதிலேயே மிகுந்த அனுபவம் பெற்றவராக விளங்கி இருந்தார். கப்பல் மூழ்கும் போது கடைசியாக இவர் என்ன செய்து கொண்டு இருந்தார் என்று பல்வேறு ஊகங்கள் கூறப்படுகின்றன. செய்தி அறையில் பரபரப்பாக இருந்தார் என்றும், அறையினுள் அமைதியாக சென்று விட்டார் என்றும், தண்ணீரில் குதித்து ஒரு குழந்தையை காப்பாற்ற முயற்சித்தார் என்றும் பல்வேறு செய்திகள் உலவுகின்றன. இவருக்கு இங்கிலாந்தில் சிலை வைக்கப்பட்டு கவுரப்படுத்தப்பட்டுள்ளது.


tour titanic 12 Take a tour inside the real Titanic (25 photos) 

மூழ்க வாய்ப்பே இல்லை கடவுளாலும் எதுவும் செய்ய முடியாது என்று கருதப்பட்ட டைட்டானிக்கின் முதல்ப் பயணமே கடைசிப்பயணமாக ஆகிப் போனது மிகவும் சோகமான விசயமாகும். 10 ஏப்ரல் 1912 அன்று புறப்பட்டு 15 ஏப்ரல் 1912 மூழ்கிய டைட்டானிக் மொத்தமாக பயணம் செய்தது நான்கு நாட்கள் மட்டுமே!tour titanic 13 Take a tour inside the real Titanic (25 photos) 
மனிதன் என்னதான் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எதை உருவாக்கினாலும் இயற்கை முன்பு நாம் ஒன்றுமில்லை என்று நம் அனைவருக்கும் இயற்கை உணர்த்திக்கொண்டே வருகிறது. அதில் விலை உயர்ந்த பாடமாக மனித குலத்திற்கு இந்த விபத்து அமைந்து விட்டது.

tour titanic 14 Take a tour inside the real Titanic (25 photos)

tour titanic 19 Take a tour inside the real Titanic (25 photos)

tour titanic 20 Take a tour inside the real Titanic (25 photos)

tour titanic 21 Take a tour inside the real Titanic (25 photos)

tour titanic 22 Take a tour inside the real Titanic (25 photos)

tour titanic 23 Take a tour inside the real Titanic (25 photos)


tour titanic 24 Take a tour inside the real Titanic (25 photos)

---------------------------------------நன்றி :தமிழ் குசும்பு

சிவப்பு அரிசி ரகசியங்கள் ..!
சிவப்பு அரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ விசேஷங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சுஸ்ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்கள் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள். வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம். இந்த மூன்று நாடிகளின் தோஷங்களையும் அறவே நீக்கும் ஆற்றல்... சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள்.

சீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ், 
இந்தியா,இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது. கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சா வூர் போன்ற மருத நிலங்களில் செந்நெல் அமோகமாக விளைந்தது. 'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை’ என்ற பழம் பாடலே இதற்கு சாட்சி.

சிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக விளைந்தது. ஆகவே, இதை, 'காட்டு அரிசி’ (Wild Rice) என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. அதனால்தானோ என்னவோ, சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர். 
இந்தியாவில் கர்நாடகா, பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், வங்காளம் முதலிய மாநிலங்களில் இது பயிரிடப்பட்டாலும், கேரளாவில் இந்த அரிசி மிகவும் பிரசித்தம். இந்த அரிசிக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் - 'மட்ட அரிசி’. ஆனால், அவர்கள் இதை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பதுதான் உண்மை.
இமாச்சல பிரதேசத்தில் குலு பள்ளத்தாக்கில் மட்டலி என்ற சிவப்பு நெல் பயிராகிறது. ஆங்கிலேய ஆட்சியில் அங்கிருந்த ஒரு கவர்னர் இந்த அரிசியை மிகவும் விரும்பி சாப்பிட்டதோடு, லண்டனில் உள்ள அவர் வீட்டுக்கு இந்த அரிசியைத் தவறாமல் அனுப்பி வந்தார் என்ற செய்திக் குறிப்புகள் உள்ளன.
நீங்கள் யாரும் இதை இதுவரை சாப்பிடாவிட்டாலும், இப்போது நான் பட்டியலிடப்போகும் சிவப்பு அரிசியின் மருத்துவச் சிறப்புகள், உங்களை அதை நாட வைக்கும்!

பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு - வெளியே இருக்கும் உமி (Husk); உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (EMbryo); கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch). இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன. நாம் சத்துப்பகுதியை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்துவிட்டு, சக்கையை மட்டுமே சாப்பிடும் விநோதப் பிறவிகள்!


 

சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேஷமானது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும். மேலும் எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் - எந்த அரிசியிலும் காணமுடியாத அளவுக்கு இரும்புச் சத்து - ஜிங்க் (Zinc), மாங்கனீஸ், மெக்னீஷியம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற கனிமங்கள் - மிகுதியான நார்ச்சத்து (Fibre) என சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன. தன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித் திருக்கின்றன.


இதையெல்லாம்விட, சிவப்பு அரிசியில் மானோகோலின் - கே (Monacolin K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் 'லோவாஸ்டேடின்' (Lovastatin) என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உலகெங்கும் கொடுத்து வருகிறோம். செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான் (Yeast), இந்த லோவாஸ்டேடினை உற்பத்தி செய்கிறது. அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள். 'சிவப்பு பூஞ்சண அரிசி' (Red yeast rice) என்று இதற்குப் பெயர். இதைத் தவிர, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், ஆஸ்துமா மற்றும் பலவித ஒவ்வாமைக்கும் (Allergy) சிவப்பு அரிசி நல்ல மருந்து.

இவ்வளவு பெருமைகள் வாய்ந்த சிவப்பு அரிசி... இப்போது காணாமல் போன மர்மம் என்ன?

சிவப்பு நெல்லுக்கு உரம் இட்டாலும் சரி, இடாவிட்டாலும் சரி, பூச்சிக்கொல்லி மருந்துகள் எதுவுமே இல்லாமல், பூச்சிகளை அண்டவிடாமல் அமோகமாக வளரும் தன்மை உண்டு. ஆனால், ஆங்கிலேயர்கள், குறிப்பாக அமெரிக்கர்கள், பல சத்துகள் நிறைந்த இந்த அரிசியை களைப்பயிர் (Weed) என்றார்கள். சிவப்பு நெல்லை சிவப்பு அரக்கன் (Red Menace) என்றும், கொழுத்த பிச்சைக் காரர்கள் (Fat beggars) என்றும் அழைத்தார்கள்.

ஏன்..?

ரசாயன உரங்கள் மூலமும், பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலமும், விவசாயத்துறையில் உலகெங்கும் ஒரு ராட்சத பொருளாதார சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ள அமெரிக்கர்களுக்கு, எந்த உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் தேவையும் இன்றி வளர்ந்த இந்த செந்நெல் பிடிக்கவில்லை. தங்கள் தொழிலை தக்கவைத்துக் கொள்ள இதை எப்படியாவது அழிக்க வேண்டும் என்றும், சிவப்பு நிறத்தை எப்படியாவது திட்டியே தீர்ப்பதென்றும் முடிவெடுத்தனர். 'பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசி’ என்ற கவர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்தினர். நம் ஊர் மக்களும் வெள்ளை அரிசியின் நிறத்திலும், மணத்திலும் சுவையிலும் மயங்கி, சிவப்பு நெல் விவசாயத்தை 1930-க்குப் பிறகு பெருமளவில் கைவிட்டனர்.

தண்ணீர் அதிகம் தேவையில்லாத, உரம் தேவையில்லாத, பூச்சிக்கொல்லிகள் தேவையில்லாத, பல்வேறு அற்புத மருத்துவ குணங்களை உடைய, ருசியான, மலிவான சிவப்பு அரிசிக்கு நாம் ஏன் மாறக்கூடாது?!

-----------------------------------------மழைக்காகிதம்

நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு

இரண்டே நிமிடங்களில் நீங்கள் வேக வேகமாய்ச் சமைத்துத் தரும், ஆசையாய் ஆசை ஆசையாய் நம் வீட்டுக் குழந்தைகள் அள்ளிச் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா? நம்புங்கள் என்கிறார் ப்ரீத்தி ஷா. சும்மா இல்லை. ஆராய்ச்சி ஆதாரங்களோடு. யார் இந்த ப்ரீத்தி ஷா? என்ன ஆராய்ச்சி அது?அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி ஷா. 'இன்சைட்’ என்கிற நுகர்வோர் விழிப்பு உணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார். விளம்பரங்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என்று தெரிந்துகொள்ள விரும்பினார் ப்ரீத்தி ஷா. இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் 15 நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. நூடுல்ஸில் இவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இதற்கான அளவு மதிப்பீடுகள் ஏதும் இதுவரை வரையறுக்கப்படாததால், இங்கிலாந்தின் உணவுத் தரக் கட்டுப்பாட்டு முகமையின் அளவுகளை வைத்து இந்தத் தரச்சோதனை நடந்தது. இதில் வெளியான முடிவுகள் மூலமாகத்தான் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் ப்ரீத்தி ஷா.

ஆய்வு சொல்லும் முடிவுகள்:

சோதனை செய்யப்பட்ட எந்த முன்னணி நிறுவனங்களின் நூடுல்ஸும் விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல ஏகப்பட்ட சத்துக்களை உள்ளடக்கியதாகவோ, குழந்தைகள் உடல் நலனுக்கு முற்றிலும் நன்மை பயப்பதாகவோ இல்லை.

அனைத்து நூடுல்ஸ்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் எக்கச்சக்க மடங்கு அதிகமாக உப்பு மற்றும் கொழுப்பு உள்ளன. நூறு கிராம் நூடுல்ஸில் 130 முதல் 600 மில்லி கிராம் வரை அனுமதிக்கப்பட்ட சோடியம் அளவாகும். ஆனால், இந்தியாவில் விற்கப்படும் வெவ்வேறு நூடுல்ஸ் நிறுவனங்களின் தயாரிப்புகளில் 821 மில்லி கிராம் முதல் 1943 மில்லி கிராம் வரை சோடியம் இருந்திருக்கிறது. கொழுப்பும் மிகுதி. ஆனால் தேவையான மற்ற சத்துக்களோ சொல்வதைவிடக் குறைந்த அளவில்! மிகக் குறைந்த அளவுக்கே நார்ச்சத்து, புரதம், கால்சியம் ஆகியன உள்ளன. இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிதல், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் எனப் பல்வேறு ஆபத்துகளுக்கும் குழந்தைகள் ஆளாக நேரிடும்.


ப்ரீத்தி ஷா சொல்கிறார் .

''ஆய்வு முடிவுகளைப் பார்த்தபோது அதிர்ந்துபோனேன். இது தொடர்பாக விளக்கம் கேட்டு 15 நிறுவனங்களுக்கும் ஆய்வு நிறுவனம் சார்பில் கடிதம் அனுப்பினோம். ஆனால், இதுவரை அந்தக் கடிதங்களுக்கு எந்த நிறுவனமும் பதில் அளிக்கவில்லை. கம்பு, வரகு, சாமை, தினை, கேழ்வரகு என்று எவ்வளவோ சத்து மிக்க சிறுதானியங்கள் விளையும் மண் இது. ஆனால், அவற்றை எல்லாம் இருட்டடிப்பு செய்துவிட்டு, விளம்பரங்கள் மூலம் சந்தையைப் பிடிக்கும் பெருநிறுவனங்கள் இந்திய மக்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே அடிமைப்படுத்துகின்றன. பெற்றோர்கள் இந்த விஷயத்தில் விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டும். குப்பை உணவின் மூலமாக ஏற்படும் வளர்ச்சி உண்மையானது அல்ல. நாளை நம் குழந்தைகள் நிரந்தர நோயாளிகளாக நாமே காரணம் ஆகிவிடக் கூடாது'' என்றார் அக்கறையுடன்.

உண்மைதான். இந்த காலகட்டத்தில் எந்த விஷயத்தையுமே விழிப்பு உணர்வுடன்தான் அணுக வேண்டும்!

----------------------------------
மழைக்காகிதம்

முதல் 100 செல்வந்தர்களின் ஆண்டு வருமானம் உலக வறுமையை ஒழிக்கப் போதும்........உலகின் முதல் 100 பணக்காரர்களின் கடந்த வருட வருமானம், உலகில் கடுமையான வறுமையில் இருக்கும் ஏழைகளின் மோசமான வறுமையை ஒழிக்க தேவையான பணத்தை விட நான்கு மடங்கு அதிகமாகும் என்று ஒக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த வருடத்தில் உலகின் முதல் 100 பணக்காரர்களின் மொத்த வருமானம் 240 பில்லியன் டாலர்கள் எனவும் அது கூறியுள்ளது. அதற்கு மாறாக உலகில் மிகவும் மோசமான வறுமையில் இருக்கும் மக்கள் ஒரு நாளைக்கு ஒன்றேகால் டாலருக்கும் குறைவான பணத்தில் வாழ்வதாகவும் அது கூறியுள்ளது.
தொடர்புடைய விடயங்கள்

துஷ்பிரயோகம்,
மனித உரிமை


 
ஒரு சிலர் கைகளிலேயே எல்லா பணமும் போய் குவிவது, வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு தடவையாக இருந்துகொண்டிருக்கிறது என்று அடுத்த வாரம் சுவிஸில் ஆரம்பமாகவிருக்கும் உலக பொருளாதார மாநாட்டின் முன்னோடியாக நடந்த சந்திப்பு ஒன்றில் ஒக்ஸ்பாம் கூறியுள்ளது.


 

உலகின் ஏற்றத்தாழ்வை ஒழிக்க உலகத் தலைவர்கள் ஸ்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.


 

அளவுக்கு அதிகமான செல்வம் என்பது, ''பொருளாதார ரீதியான செயற்திறன் இன்மையையும் சமூக ரீதியான பிளவையும் காட்டுகிறது'' என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

அனைத்து மனித சமூகத்தின் நலனுக்காக உலக பொருளாதார முறைமையில் மாற்றம் வரவேண்டும் என்று அது கூறியுள்ளது.

உலக சனத்தொகையில் ஒரு வீதமான செல்வந்தர்கள் கடந்த 20 வருடங்களில் தமது வருமானத்தை 60 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், பிரித்தானியாவை தளமாகக் கொண்ட ஒக்ஸ்பாம் கூறியுள்ளது.

உலக வரி முறைமைகளில் மாற்றம் செய்யப்படுவதுடன், இலவசமான பொதுச் சேவைகளிலும் சுகவீனமுற்றவர்கள் மற்றும் வேலையற்றவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் அதிக முதலீடு செய்யப்பட வேண்டும் என்றும் ஒக்ஸ்பாம் உலக நாடுகளின் தலைவர்களுக்கு பரிந்துரை செய்துள்ளது.

உலக நாடுகளின் தலைவர்கள் தமது மட்டத்தில் முதலில் ஏற்றத்தாழ்வை சரி செய்ய வேண்டும் என்றும், வரி ஏய்ப்பு, பலவீனமான வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் ஒக்ஸ்பாம் வலியுறுத்தியுள்ளது.

உலக பொருளாதார முறைமையில் மாற்றம் செய்ய வேண்டிய தருணம் இது என்று ஒக்ஸ்பாம் தலைமை இயக்குனரான பார்பரா ஸ்டோக்கிங் கூறியுள்ளார்.

-----------------------
http://www.oxfam.org/en/pressroom/pressrelease/2013-01-19/annual-income-richest-100-people-enough-end-global-poverty-four-timesநாம் பயன்படுத்துவது சோப்பா அல்லது குளியல் வில்லையா (Soap or bathing Bar)

சோப்பு , குளியல் வில்லை என இரு வகை பொருள்கள் தேகத்தில் அழுக்கை நீக்கும் குணம் கொண்டவை. அவைகளில் கலந்து உள்ள கொழுப்பின் அடிபடையில்(TFM -total fatty matter ) மேற்குறியவாறு பிரிக்கப்படுகிறது. மொத்த எடையில் குறைந்தது 60% கொழுப்பு உள்ள பொருளுக்கு சோப்பு என்றும் குறைந்தது 40% கொழுப்பு உள்ள பொருளுக்கு குளியல் வில்லை என்றும் அழைக்கபடுகிறது. குளியல் வில்லை செயற்கை கொழுப்பால் தயாரிக்கபட்டவை, அது தேகத்திற்கு கேடு விளைவிக்ககூடியது.


 

ஆனால் பொரும்பாலான சோப்பு தயாரிப்பு நிறுவனங்கள் இந்த வேறுபாடு நுகர்வோருக்கு தெரியாத வண்ணம் பார்த்து கொள்கிறார்கள். இந்த நிறுவனங்கள் ஒரே brand பெயரிலேயே சோப்பையும் விற்கிறார்கள் குளியல் வில்லையும் விற்கிறார்கள். 

ஒரு சில நிறுவனங்கள் குளியல் வில்லையை சோப்பு போன்று beauty international ,nature fresh விளம்பரம் செய்து விற்கிறார்கள். அவ்வாறு விற்கப்படும் பொருளில் எந்த ஒரு இடத்திலும் சோப்பு என்ற வாசகம் இருக்காது, அதுவே அவர்கள் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதற்கு இதுவே சான்று. மேலும் சில நிறுவனங்கள் TFM ற்கும் தரத்திற்கும் சம்பத்தம் இல்லை என சம்பத்தம் சம்பந்தமில்லாமல் விளம்பரம் செய்து நம்மை ஏமாற்றி குளியல் வில்லையை சோப்பு போல் விற்கிறார்கள். 


 

சோப்பை விட குளியல் வில்லையின் தயாரிப்பு செலவு குறைவு, லாபம் அதிகம்.

இதுபோன்ற மோசடி பன்னாட்டு தயாரிப்பு brand களில் அதிகம். 
ஆக மொத்தம் சோப்பின் விலையில் குளியல் வில்லையை வாங்கி நமது காசை தெரியாமல் இழக்கிறோம் என்பது தான் உண்மை.

சோப்பு - மார்கோ சோப்பு 
குளியல் வில்லை - lux international 

மேலும் கொழுப்பு < 60% அது குளியல் வில்லை
கொழுப்பு >60% அது சோப்பு

கவரை பார்த்தால் தெளிவாக தெரியும்-------------------------------------
ராஜு சரவணன்

அன்பென்றால் அம்மா!!!


அம்மா இந்த ஒற்றைச் சொல்லுக்கு அர்த்தம் ஒரு வரியில் தர இயலுமா ? நான் எத்தனையோ பக்கம் பக்கமாய் எழுதினாலும் என்னால் முழுவதும் ஒரு விவரனத்துள் அடைக்க இயலாத ஒரே விஷயம் உன் அன்புதான் அம்மா .

என் கன்னித்தமிழும் தடுமாறிய தருணங்கள் உனக்கான வரையறையை அகராதியில் தேடிய போதுதான் . ஒ அவள் " கன்னி " என்பதால்தான் உன் அருமை பெருமையை உணர்த்த இயலவில்லையோ ஓரிரு வார்த்தைகளில் .!

பால்யத்தில் நான் எழுந்திரிக்கும் காலைப்பொழுது உனது அன்பான கொஞ்சலுடன் தான் ஆரம்பிக்கும் எப்படிப்பட்டதொரு வேலைப்பளுவிலும் எனக்கான உனது பக்கங்கள் ஒதுக்கப்பட்டே இருக்கும் , அவை முழுக்க முழுக்க உன் அன்பினால் நிரம்பியே கிடக்கும் .

நான் சொல் பேச்சு கேளாமல் இருக்கும் சமயங்களில், என்னை விளையாட்டாய் கோபப்படுத்த “ தவிட்டுக்கு வாங்கிய பிள்ளைதானே நீ” என்று சொல்லுவாய் . கோபத்துடன் வீம்பாய் முறைத்து கொண்டிருக்கும் என்னை சமாதானம் செய்ய கொஞ்சுவாய் நீ . அந்த அதீத கொஞ்சலுக்காய் இன்னொரு முறை நீ அப்படி சொல்லக் காத்துக் கொண்டிருப்பேன் நான் .

பண்டிகை காலங்களில் அடுப்பும் , வாணலியுமாய் இருக்கும் உன்னைக் கழுத்தில் கட்டிக்கொண்டு கொஞ்சுவேன் தள்ளிப்போ என்ற உன் எச்சரிக்கையையும் மீறி, அவ்வாறான நாளொன்றில் பொங்கி என் மேல் தெறித்து விட்ட இரண்டொரு எண்ணெய்த்துளிகளும், நான் செய்த ஆர்ப்பாட்டமும், மனம் கலங்கி, தவிப்பும் அழுகையுமாய் மருந்திட்டு என்னை சமாதானம்செய்த பின்னர் நான் கவனித்தேன் அம்மா, உன்மேல் என்னை விட அதிகமாய் தெறித்திருந்த எண்ணெய்த் துளிகளை!!! 

நான் எவ்வளவு சாப்பிட்டால் திருப்தி அடையும் உன் மனசு ? இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று எவ்வளவு தான் சோறு போடுவாய் நீ ? உன் அன்பினால் வழக்கத்தை மீறி அதிகமாய் சாப்பிட்டு விட்டு நடக்க இயலாமல் ஊரும் போது, அருகிலுள்ள யாரிடமாவது அங்கலாய்த்து கொண்டிருப்பாய் . முன்னாடி மாதிரி இவன் சாப்பிடுவதே இல்லை என்று!!!

வேலைக்கென்று வெளி உலகம் வந்த பின்னர் எனது வட்டம் பெரிதாகிப் போனது . ஆனால் உனக்கோ நானே உலகமாகிப் போனேன் . நான் எப்போதாவது மனதளவில் கஷ்டப்படும் போது அது உனக்கு எப்படித் தெரியும் என்று எனக்குத் தெரியாது . உடனே உனது அழைப்பு வந்து விடும் எனது அலைபேசியில் . அம்மா என்று வரும் பேரைக் கண்டவுடன் எனது மனக்கிலேசங்கள் எல்லாம் பறந்து விடும் .

நான் அம்மா என்று சொல்வதை வைத்தே என் மனநிலையை துல்லியமாக கணித்து விடுவாய் ஒரு கை தேர்ந்த மருத்துவர் போல . பிறகென்ன போதும் போதுமென்ற அளவுக்கு உன் அன்பு மழையில் நனையவிட்டு, தனி ஒருவனாய் இந்த உலகை எதிர்த்துப் போராடும் அளவுக்கு மனதைரியத்தை தந்து உன் அன்பினால் என்னை நிறையச் செய்வாய் .

உன் மடித்தலையணை தந்த நிம்மதியும், அரவணைப்பும் பாச உணர்வுகளும் இதுவரை மட்டுமல்ல இனிமேலும் வேறெங்கிலும் கிட்டப்போவது இல்லை அம்மா.

ஒருமுறை திரு.அப்துல் கலாம் கூறினார்,
ஒரே ஒருநாள் நீ அழும்போது
உன் அம்மா புன்னகைத்தது
அது “நீ பிறந்த தினத்தன்று”.
எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். உனக்கென்ன எப்பொழுதுமே முழுக்க முழுக்க அன்பினாலே என்னை நனைத்து விட்டு இயல்பாய் இருந்து விடுவாய் , நானோ உன் அன்பின் முழு பரிமாணத்தையும் தாங்க இயலாமல் அடிக்கடி நெட்டுயிர்த்துப் போய்விடுகிறேன் அம்மா . சுருக்கமாகச் சொன்னால்
தெய்வங்களின் மறு உருவம் அம்மாக்கள் .
இல்லையில்லை
அம்மாக்களின் மறு உருவம்தான் தெய்வங்கள் !!!
வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!

--------------------------------------
நன்றி-மெல்லியல் முகநூல்