Saturday, November 3, 2012

டாட் காம் (.COM) : வயது 27


                                             
சென்ற மார்ச் 15 அன்று டாட் காம் என்ற பெயர் தன் 27 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடியது. டாட் காம் என்பது நாம் அன்றாட வாழ்வில் புழங்கும் ஓர் பெயராக இன்று மாறிவிட்டது.

1985 ஆம் ஆண்டு சரியாக மார்ச் 15 அன்று முதல் முதலில் Symbolics.com என்ற பெயரில் ஓர் இணைய தளம் பதிவு பெற்றது. அப்போது எந்த செய்தித் தாளிலும் இந்த செய்தி வரவில்லை. அந்த அளவிற்கு மக்களுக்கு முக்கிய நிகழ்வாக அது இல்லாமல் இருந்தது. ஆனால் இன்று இந்த பெயரை 20 கோடிக்கும் மேலான எண்ணிக்கையில் இணைய தளங்கள் கொண்டுள்ளன.

உலகில் இன்று நாள் தோறும் 6 லட்சம் இணைய தளங்கள் பதியப்பட்டு தங்கள் பெயர்களைப் பெற்று வருகின்றன. ஆனால் அன்று 1985ல் சிம்பாலிக்ஸ் டாட் காம் பதிவு செய்த பின்னர், இரண்டாவது தளம் ஒரு மாதம் கழித்தே பதிவு செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் மொத்த இணைய தளப் பதிவுகளின் எண்ணிக்கை 100க் கூட எட்டவில்லை. இப்போது வர்த்தக உலகில் ஒரு பெரிய தூணாக டாட் காம் இயங்குகிறது. இந்த பெயர் கொண்ட தளங்கள் மூலம் ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி டாலர் மதிப்பில் வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் பத்து ஆண்டுகளில் இது 95 ஆயிரம் கோடியாக உயரும் என்றும் எதிர்பார்ப்புகள் உள்ளன. இன்று உள்ள டாட் காம் தளங்களில் ஒரு கோடியே 10 லட்சம் தளங்கள் ஆன்லைனில் வர்த்தக ரீதியாக,பிசினஸ் தளங்களாக இயங்கி வருகின்றன. 43 லட்சம் தளங்கள் பொழுது போக்குக்காக இயங்குகின்றன. 18 லட்சம் தளங்கள் விளையாட்டு குறித்த தளங்களாக உள்ளன.

இந்த 27 ஆண்டு டாட் காம் கொண்டாட்டம் குறித்து இன்னும் தகவல்கள் அறிய ஒரு டாட் காம் தளம் இயங் குகிறது.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment