Wednesday, November 7, 2012

அமெரிக்க அதிபர் தேர்தலில் விண்வெளியிலிருந்து வாக்களித்தார் சுனிதா வில்லியம்ஸ்..!

 Sunita Williams Votes Us Prez Election
ஹூஸ்டன்: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக இ-மெயில் மூலம் வாக்களித்தார் சுனிதா வில்லியம்ஸ்.
அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தற்போது சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்தில் தங்கி பணியாற்றி வருகிறார். தற்போது, அவர் சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்தின் பொறுப்பாளராகவும் இருக்கிறார். இந்த நிலையில் நேற்று அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்தது. அதில், விண்வெளியில் இருந்தபடியே சுனிதா வில்லியம்ஸ் ஓட்டு போட்டார்.
கடந்த 1997ம் ஆண்டு சட்ட திருத்தத்தின்படி டெக்கான் மாகாணத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் தாங்கள் இருக்கும் இடத்தின் இருந்தே மின்னஞ்சல் மூலம் ஹுஸ்டனில் உள்ள நாசா விண்வெளி மையத்துக்கு தங்களின் வாக்குகளை பதிவு செய்யமுடியும்.
அதன்படி, சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்தேபடியே மின்னஞ்சல் மூலம் வாக்களித்தார்.
கடந்த 2004ம் ஆண்டு அமெரிக்கா அதிபர் தேர்தலில் லிராய் சியா என்பவர்தான் முதன் முதலாக விண்வெளியில் இருந்தபடி வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment