Friday, December 28, 2012

இனிப்பான' விபத்து!...........Saccharin

                         

 

எதிர்பாராத தவறுகள் எப்போதும் தீமையில் முடிவதில்லை, அறியாமல் செய்யும் சில விஷயங்களால் மிகப் பெரிய நன்மைகளும் ஏற்படும். இது யாருக்குப் பொருந்துமோ இல்லையோ, உலகே வியந்து பாராட்டும் விஞ்ஞானிகளுக்கு கண்டிப்பாக பொருந்தும். ஆராய்ச்சியில் ஈடுபடும்போது, எதிர்பாராத விதமாக அல்லது அலட்சியமாக செய்யும் சில காரியங்கள் மிகப் பெரிய கண்டுபிடிப்புகளுக்கு காரணமாக இருந்துள்ளன. எதிர்பாராமல் நிகழ்ந்த சம்பவங்களால் உருவான அறிவியல் கண்டுபிடிப்புகளைத் தான் காணப் போகிறோம். 

தவறுகள் செய்தபின் கசப்பான அனுபத்தைத் தான் பெற முடியும்..ஆனால் 'இனிப்பான' அனுபவத்தைப் பெற்றனர் இரண்டு விஞ்ஞானிகள். 1878ம் ஆண்டு அமெரிக்காவின் மேரிலாண்ட் பகுதியிலுள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தில், நிலக்கரி தார் குறித்த ஆராய்ச்சி நடந்துவந்தது. கான்ஸ்டன்டின் ஃபால்பர்க் மற்றும் இரா ரெம்சென் ஆகிய இரண்டு விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகித்தனர்.

ஒருநாள் ஆராய்ச்சி செய்யும்போது, குறிப்பிட்ட ஒரு ரசாயன திரவம் அவர்கள் கைகளில் கொட்டியது. அது ஆபத்தில்லாத ரசாயனம் என்பதால், இருவரும் கண்டுகொள்ளாமல் வேலையைத் தொடர்ந்தனர். உணவு இடைவேளையின் போது, இருவரும் பிரெட் சாண்ட்விச் உண்ணத் தொடங்கினர். அப்போது, ரெம்சென் தான் உண்ணும் பிரெட்டில் இனிப்பு அதிகம் 
இருப்பதாகக் கூறினார். ஃபால்பர்க்கின் பிரெட்டும் அதே போல் இனிப்பு சுவையை அதிகம் கொடுத்தது.
                   
சாதாரணமான ஆட்களாக இருந்தால், அப்படியே சாப்பிட்டு விட்டு வேறு வேலை பார்க்கக் கிளம்பி விடுவார்கள். ஆனால் இவர்கள் விஞ்ஞானிகளாயிற்றே... உடனே பிரெட்டில் இனிப்பு சுவை எப்படி அதிகமாகியது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். பலநாள் ஆராய்ச்சியின் முடிவில், தங்கள் கைகளில் கொட்டிய பென்சோய்க் சல்ஃபினைடு (Benzoic Sulfinide) என்ற ரசாயனம் தான் இனிப்பு சுவைக்கு காரணம் என்று கண்டுபிடித்தனர்.


அந்த ரசாயனத்திலிருந்து செயற்கை சர்க்கரை கண்டுபிடித்து, அதற்கு சாக்கரின் (Saccharin) என்று பெயரிட்டனர். கலோரிகள் இல்லாத இந்த செயற்கை இனிப்பூட்டி தான், சர்க்கரைக்கு மாற்றாக உலகெங்கிலும் பயன்படுத்தப்படுகிறது.

அன்று விஞ்ஞானிகள் தங்கள் கைகளை சுத்தமாக கழுவி விட்டு சாப்பிட்டிருந்தால்? சாக்கரின் கிடைத்திருக்காதல்லவா...!






நன்றி அம்புலி.. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

No comments:

Post a Comment