Tuesday, November 6, 2012

ஆஸ்திரேலிய ஆர்டர் விருதைப் பெற்றார் சச்சின் .. 2வது இந்தியர், 3வது கிரிக்கெட் வீரர்!

டெல்லி: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிலார்ட் அறிவித்த அந்த நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய அமைச்சர் சிமோன் இந்த விருதினை சச்சினுக்கு வழங்கினார்.


விருதைக் கேட்டுக் கொதித்த மாத்யூ

ஆஸ்திரேலியாவின் ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா என்ற உயரிய விருது சச்சினுக்கு அறிவிக்கப்பட்டதும், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மாத்யூ ஹெய்டன் டென்ஷனாகி விட்டார். சச்சினுக்கு இந்த விருதைத் தருவது நியாயமற்றது என்று அவர் விமர்சித்திருந்தார்.

பரவாயில்லை தரலாம்.. துள்ளி வந்த கில்லி

இருப்பினும் இன்னொரு முன்னாள் வீரரான ஆடம் கில்கிறைஸ்ட் சச்சினுக்கு ஆதரவுக் குரல் கொடுத்தார். விருதுக்குத் தகுதியானவர் சச்சின் என்று தெரிவித்தார்.
இந்த விருதினைப் பெறும் 2வது இந்தியர் சச்சின். ஏற்கனவே முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சோரப்ஜி இந்த விருதினைப் பெற்றுள்ளார். 2006ம் ஆண்டு அவர் அந்த விருதைப் பெற்றார்.

3வது கிரிக்கெட் வீரர்

இந்த விருதினைப் பெறும் 3வது கிரிக்கெட் வீரர் சச்சின். இதற்கு முன்பு கிளைவ் லாயிட் 1985ம் ஆண்டும், மேற்கு இந்தியத் தீவுகளின் இன்னொரு ஜாம்பவானான பிரையன் லாரா 2009ம் ஆண்டிலும் இந்த விருதினைப் பெற்றுள்ளனர்.

ஆட்டம் இன்னும முடியலை

சச்சின் டெண்டுல்கர் 190டெஸ்ட் போட்டிகளில் ஆடி 15,533 ரன்களைக் குவித்துள்ளார். அதேபோல 463 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 18,426 ரன்களைக் குவித்துள்ளார். தொடர்ந்தும் ஆடி வருகிறார்....

No comments:

Post a Comment