Monday, June 17, 2013

நாய் நன்றி உடைய மிருகமா..?



நன்றியுடையார் என்பது தனக்கும் .தன் இனத்துக்கும் பிறருக்கும் விசுவாசமாகவும் பணிவுடனும் வாழ்வதாகும் .ஆனால் நாயை பொருத்தமட்டில் தன் இனத்தை கண்டால் கோபப்படுகிறது ..தனக்கு உணவுதரும் எசமானுக்கு மட்டும் நன்றியுடையதாக வாழுகிறது .எனவே நாயும் சுயநலத்துடன் தான் 
நன்றி உடையதாக இருக்கிறது . 

மனிதனும் சுயநலத்துக்காகவே நாயை வளர்க்கிறான் .வீட்டு பாதுகாப்புக்காக தான் நாயை வளர்க்கிறான் ...மொத்தத்தில் நாய் சுயநலத்துடன் வளர்க்கப்படும் உயிர் .இந்த இருவரில் யார்? 
சுயநலவாதி? என்றால் மனிதன் தான் .காரணம் நாய் சொல்லவில்லை நான் நன்றி உடைய மிருகம் என்று .மனிதனே சொல்லிக்கொண்டு இருக்கிறான்.. 

ஆனால் நாய் என்றும் நன்றி உடையது 

நன்றி என்பது எப்பொழுதுமே கிடைத்த ஒன்றினால் நாம் பெற்ற, பெற்றுக்கொண்டிருக்கின்ற பயனுக்காக கொடுத்தவருக்கு நாம் செலுத்தும் அன்புக் காணிக்கை. அதாவது ஒன்றைப் பெறாமல் நாம் நன்றி செலுத்த முடியாது. கிடைத்த ஒன்றுக்காக செலுத்தப்படுவது.


 ஒரு பிடி சோற்றுக்காக தனது உயிர் உள்ளவரை கொடுத்தவருக்குத் தனது அன்பைக் காணிக்கையாகக் கொடுக்கிறது நாய். நன்றி உணர்வுக்கு நாய்க்கு இணையாக ஒரு உயிரினமும் இல்ல. அதற்கான காரணம் என்னவென்றால் மனிதன் அதனது காவல் தொழிலுக்கான கூலியாக உணவைக் கொடுக்கின்றான். ஆனால் நாயோ தான் கொடுப்பதாக எதையும் கருதாமல், அதனால் கிடைப்பதைக் கூலியாக எண்ணாமல் கொடையாக ஏற்றுக்கொள்கிறது. 

இதை நாயைவிட வேறு எந்த உயிரினத்தாலும் மேற்கொள்ள முடியாது.' உண்டி கொடுப்போர் உயிர் கொடுப்போர்' என்பது மனிதனுக்கு வார்த்தை. ஆனால் நாய்க்கு அது வாழ்க்கை.

===================

நன்றி :கவிஞர் கே இனியவன் 

No comments:

Post a Comment