Friday, December 21, 2012

பயன் தரும் வாழைப்பழம் ....!!..அறிந்ததும் அறியாததும்

                                
     வாழை அறிவியல் வகைப்பாட்டின் பூண்டுத்தாவரங்களைக் கொண்ட பேரினம் ஆகும். தென் கிழக்கு ஆசியாவில் தோன்றிய வாழை முதன் முதலாக பப்புவா நியூ கினியில் கொல்லைப்படுத்தப்பட்டது. உலக வாழை உற்பத்தியில் இந்தியா (24%), ஈக்வடார் (9%), பிரேசில் (9%) ஆகிய நாடுகள் முன்னணி வகிக்கின்றன.

     முக்கனிகளுள் ஒன்றான வாழைப்பழம் உடலின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்கின்றது. ஒரு -வாழைப்பழத்தில் (100-150 கிராம்) 100 கலோரிகளே உள்ளதால் எடை அதிகரிக்காது.

     இது நீண்ட நேரம் பசியை தடுக்கும். கோதுமை, மக்கா சோளம், சிகப்பரிசி, பருப்புகள், உருளைக்கிழங்கில் உள்ள சத்துக்கள் வாழைப்பழத்தில் உள்ளன. ஆப்பிளுடன் ஒப்பிட்டால் ஒரு வாழைப்பழத்துக்கு 4 ஆப்பிள்கள் தான் சமம்.

     ஒரு வாழைப்பழத்தில் சராசரியாக 500மிலி கிராம் பொட்டாசியம் உள்ளது. இது ரத்த அழுத்தத்தை சரியாக வைத்திருப்பதோடு உடலில் திரவங்களின் சமச்சீர் தன்மையையும் பாதுகாக்கிறது. கால்களில் ஆடுசதையில் சட்டென்று பிடித்திழுக்கும். இது பொட்டாசியம் குறைவால் வருகிறது. தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் இதைத் தடுக்கலாம்.

     நெஞ்சுக்கரிக்கும் போது ஒரு பழம் சாப்பிட்டால் எரிச்சல் நீங்கி விடும். இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது.
                        
     

நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலைத் தடுக்கும். இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும், இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம்.

     இதில் சோடியம் உப்பு குறைவாக இருப்பதால் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம். குழந்தைகளின் ஊட்டத்துக்குச் சிறந்தது.

     இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம்.

     செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய ஆரம்பிக்கும்.

     திருமணமாகி பல ஆண்டுகளாகியும் கர்ப்பமே தரிக்கவில்லை என்று மனம் வருந்தி கொண்டிருக்கும் தம்பதியர்கள் செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் சக்தி அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தரிக்க வாய்ப்பாகும்.

     தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் வீதம் பாலுடன் சாப்பிட்டு வந்தால் உணவு நன்கு செமிப்பதோடு, மூலமும் குணமாகும்.

     ஆப்பிளுடன் ஒப்பிட்டால், ஒரு வாழைப்பழத்துக்கு 4 ஆப்பிள்கள்தான் சமம். ஏனெனில், ஆப்பிளைவிட புரோட்டின், கார்போஹைட்ரேட்ஸ், பொட்டாசியம், விட்டமின் சி, இரும்பு, பாஸ்பரஸ் ஆகியவை வாழைப்பழத்தில் பல மடங்கு அதிகம்.

     முழுமையாக பழுக்காத, திடமான, நடுத்தர அளவுள்ள வாழைப்பழத்தில் 4.7 கிராம் ஸ்டார்ச் இருக்கிறது. இது நீண்ட நேரம் பசியை தடுக்கும்.

     நன்றாக கனிந்த வாழை பழத்தை சாப்பிட்டால் எடை அதிகம் ஆகும்! கொஞ்சம் கெட்டியான வாழைப்பழத்தை சாப்பிட்டால் எடை கூடாது!

                            

     கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ள பழமான வாழைப்பழத்தை தினமும் உறங்கும் முன் சாப்பிட்டு தூங்கினால் நன்கு தூக்கம் வரும். மேலும் இதில் தூக்கமூட்டும் பொருளான செரோட்டீன் மற்றும் மெலடோனின் இருக்கிறது.

     வாழைப்பழத்தில் அ‌திகமாக இரு‌க்கு‌ம் B6, B12, புகைப்பிடிப்பதால் ஏற்படும் ‌நிகோடினை கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பத‌ற்கு உதவு‌ம். இதனா‌ல் எ‌ளிதாக புகைப்பிடிப்பதிலிருந்து விடுபடலாம்.

     100 கிராம் வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள்: நீர் 61.4%, மாவுச்சத்து 36.4.%, சுண்ணாம்புச்சத்து 0.01%, மை.கிரிபோபிளேவின் 0.08 மி.கி., வைட்டமின் 'சி' 7 மி.கி., புரோட்டின் 1.3%, கொழுப்பு 0..2%, இரும்பு 0.04%, தயமின் 0.05 மி.கி., நியாசின் 0.5 மி.கி.

     சிலர் இரவில் படுக்கும் முன்பு பாலும் பழமும் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதில் முதலில் பழத்தையும், பின்பு பாலையும் அருந்து கின்றனர். அது முறையல்ல. முதலில் பாலையும், பின்பு பழத்தையும் சாப்பிடுவதுதான் சரியானது. உடல் நலத்திற்கு ஏற்றதும் கூட.


http://www.agalvilakku.com

No comments:

Post a Comment