Monday, December 31, 2012

டீன்ஏஜ் பருவத்தில் ஈர்ப்பு...!





                        


டீன்ஏஜிலே பெண்கள் காதல் வசப்படுவது அதிகரித்து வருகிறது. அதில் சிக்காமல் இருக்க தாய், மகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

டீன்ஏஜ் பருவத்தில் ஈர்ப்பு ஏற்படுவது இயல்பானது, அது வளர்ச்சியின் ஒரு கட்டம். அதிலே நின்று சிந்தித்துக்கொண்டிருக்காமல் அதைக் கடந்து சென்று கொண்டிருக்கவேண்டும்' என்பதை வெளிப்படையாக பெண்ணிடம் பேசுங்கள். யாராவது காதல் தூது விட்டாலோ, காதல் கடிதம் கொடுத்தாலோ அங்கேயே கூச்சல்போட்டு அதை பெரிய விஷயமாக்காமல், யதார்த்தமாக, நிதானமாக அதை அணுகி மறுப்பு சொல்ல வேண்டும் என்று கூறுங்கள். உணர்ச்சிவசப்பட்டால் பிரச்சினை வலுவாகிவிடும் என்பதை புரியவையுங்கள்.

டீன்ஏஜில் திருமணத்தைப் பற்றி சிந்திக்கவே கூடாது. அதைப் பற்றி தீர்மானம் எதுவும் எடுக்கத் தேவையில்லை என்பதையும் உணர்த்துங்கள்.

சக மாணவர்களோடு கல்வி ரீதியாக மட்டும் நட்பு பாராட்டலாம். அதற்கு மேல் எதுவும் தேவையில்லை என்று சொல்லுங்கள்.  தனிமையான எந்த இடத்திற்கும் சென்றுவிடவேண்டாம் என்றுகூறி உஷார்படுத்துங்கள்.

நண்பர்கள், தோழிகள் வாழ்க்கையில் வருவார்கள்...போவார்கள். ஆனால் யார் தன்னை புறக்கணித்தாலும் பெற்றோரும், உறவினர்களும் எப்போதும் தன்னுடன் இருப்பார்கள் என்பதை உணர்த்தி நம்பிக்கையூட்டுங்கள் .

தன் உடல் மிக அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. அது ஒரு பொக்கிஷம். எந்த சூழ்நிலையிலும் யாரும் உடலைத் தொட அனுமதிக்க மாட்டேன் என்ற தீர்மானத்தில் உறுதியாக இருக்கச் செய்யுங்கள்.

                         

எனக்கு அது தேவையில்லை' என்று தைரியமாக `நோ' `சொல்லும் தைரியத்தை வளர்த்தெடுங்கள். செல்போன் வாங்கித்தருகிறேன், விலை உயர்ந்த உடை வாங்கித் தருகிறேன், நகை வாங்கித்தருகிறேன்' என்று பெற்றோரைத் தவிர யார் சொன்னாலும், `தேவையில்லை..' என்று ஒரே வார்த்தையில் மறுத்துக்கூறும் தைரியத்தை வளருங்கள்.

எவ்வளவு பேரழகி என்றாலும் அவள் ஒருசில வருடங்கள் மட்டுமே போற்றப்படுவாள். திறமை மட்டுமே எல்லா காலமும் போற்றுதலுக்குரியதாக இருக்கும் என்பதைக்கூறி, திறமையை வளர்த்தெடுக்கும் வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுங்கள்.

நண்பர்களை வீட்டிலே சந்திக்க வாய்ப்பு கொடுங்கள். அதுவும் பெற்றோர் இருக்கும்போது மட்டும் அவர்கள் வரவேண்டும் என்பதை உணர்த்துங்கள்.
------------------------------------------------------------------------------------------------------------------------
eegarai

No comments:

Post a Comment