Monday, September 10, 2012

மாமன்- மருமகனிடம் தோற்றுப் போன சச்சின்


இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சச்சின் டெண்டுல்கர் சத சாதனை உட்பட இதுவரை எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
ஆனால் சச்சின் தற்போது மாமா- மருமகனால் ஆட்டமிழக்கப்பட்ட ஒரே வீரர் என்ற வித்தியாசமான அனுபவத்தை பெற்றுள்ளார்.
பெங்களூரில் நடைபெற்றுவரும் நியூசிலாந்திற்கெதிரான டெஸ்டில் டக் பிரேஸ்வெல் பந்தில் சச்சின் ஆட்டமிழந்தார். இவர் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஜானின் சகோதரியின் மகன் ஆவார்.
ஜான், 1990ம் ஆண்டில் நியூசிலாந்து அணியில் இருந்தார். அப்போது கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற டெஸ்டில் சச்சினை, ஜான் ஆட்டமிழக்க செய்தார்.
தற்போது சுமார் 22 ஆண்டுகளுக்குப் பின்பு அவரது மருமகனும் நியூசிலாந்து அணியில் பங்கேற்று சச்சினுக்குப் பந்து வீசி அவரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.
1989ம் ஆண்டில் சர்வதேச டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக பங்கேற்ற சச்சின் 23 ஆண்டுகளைக் கடந்து தற்போது வரை தொடர்ந்து விளையாடி வருவதே இதுபோன்ற ஆச்சரியமூட்டும் நிகழ்வுகளுக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment