Monday, September 10, 2012

ஒரு லட்சத்து 14 ஆயிரம் பொதுமக்கள் ஈராக் போரில் கொல்லப்பட்டனர்





ஈராக் மீது தொடுக்கப்பட்ட போரின் போது பலியானவர்களில் 80 சதவீதம் பேர் பொதுமக்களபவர் என்றும் அவர்களது எண்ணிக்கையானது ஒரு லட்சத்து 14 ஆயிரம் பேர் எனவும் ஈராக் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 ஈராக் அதிபர் சதாம் உசேனுக்கு எதிரான நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கியது. இதை தொடர்ந்து கடந்த 2003-ம் ஆண்டு அமெரிக்க ராணுவம் ஈராக்கில் நுழைந்து போரிட்டது. பாதாள அறையில் பதுங்கி இருந்த சதாம் உசேன் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
அதையடுத்து அங்கு வன்முறை வெடித்தது. எனவே அமெரிக்க ராணுவம் 9 ஆண்டுகளாக தொடர்ந்து ஈராக்கில் முகாமிட்டது. அங்குள்ள 505 முகாம்களில் 1 லட்சத்து 70 ஆயிரம் வீரர்கள் தங்கி இருந்தனர். வன்முறையில் ஈடுபட்ட தீவிரவாதிகளுடன் போர் நடத்தினர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதி ஈராக்கில் இருந்து அமெரிக்க ராணுவம் முற்றிலும் வாபஸ் ஆனது. ஈராக்கில் கடந்த 9 ஆண்டுகளாக அமெரிக்கா நடத்திய போரில் 1 லட்சத்து 62 ஆயிரம் பேர் பலியாகி இருப்பதாக இங்கிலாந்தின் ஒரு தனியார் நிறுவனம் கணக்கெடுத்துள்ளது.
இந்த தகவலை ஈராக் அரசு வெளியிட்டுள்ளது. பலியானவர்களில் 80 சதவீதம் பேர் பொதுமக்கள். அதாவது 1 லட்சத்து 14 ஆயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் தவிர பலியானவர்களில் மீதமுள்ள 20 சதவீதம் பேர் அமெரிக்கா, ஈராக் ராணுவ வீரர்கள் மற்றும் தீவிரவாதிகள் ஆவர். இறந்த ராணுவ வீரர்களில் 4,474 பேர் அமெரிக்கர்கள். பாக்தாத் ஒரு அபாயகரமான நகரம் என வர்ணிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் போரின்போது பலியானவர்களில் பாதிப்பேர் இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள்.

No comments:

Post a Comment