Monday, September 10, 2012

ஜெயலலிதாவிற்கெதிராக இலங்கையில் கேலிச்சித்திரங்கள்


தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அநாகரிகமாக சித்தரித்து இலங்கை நகர் பகுதிகளில் கேலிச்சித்திரங்கள் வரையப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
சமீபத்தில் குன்னூர் மற்றும் சென்னை தாம்பரத்திற்கு இராணுவ பயிற்சி பெற வந்த இலங்கை வீரர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார் ஜெயலலிதா.
அவர்களுக்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்கக்கூடாதென பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினார். இதையடுத்து இலங்கை வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில் இலங்கையின் பிரதான நகர்களில் ஜெயலலிதாவை மிகவும் அநாகரிகமாக சித்தரித்து கேலிச்சித்திரங்கள் வரையப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக லக்பிம என்ற சிங்கள பத்திரிக்கையில் ஹசந்தா விஜெநாயகே என்ற நபர் வரைந்துள்ள மகா மட்டமான ஒரு கேலிச்சித்திரத்தை போஸ்டர்களாக அடித்து ஒட்டியுள்ளனர்.
இலங்கையில் நடந்த இந்த செயல்களால் தமிழகத்தில் உள்ள அதிமுகவினர் கொந்தளித்து உள்ளனர்.
ஒருவேளை இதுபோன்ற செயல் தமிழ்நாட்டில் நடந்திருந்தால் சமீபத்தில் நக்கீரன் பத்திரிக்கைக்கு நிகழ்ந்தது போல கடைகள் கொளுத்தப்பட்டிருக்கும், பெரிய கலவரமே உண்டாகியிருக்கும்.

No comments:

Post a Comment