Tuesday, September 18, 2012

ஈஸியான... முட்டை சாண்விட்ச்


நிறைய பேர் காலை நேரத்தில் சாப்பிட நேரம் இல்லை என்பதற்காக எதையும் சாப்பிடாமல், ஆபிஸிற்கு செல்கின்றனர். ஆனால் அவ்வாறு செல்வதால் உடல் நிலை தான் பாதிக்கப்படும். ஆகவே அப்போது ஈஸியாக செய்து சாப்பிடும் வகையில், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் முட்டையை வைத்து, ஒரு சாண்விட்ச் செய்து சாப்பிடலாம். அது எப்படியென்று பார்ப்போமா!!!
egg sandwich

தேவையான பொருட்கள்:
முட்டை - 4
பிரட் - 4 துண்டுகள்
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
கொத்தமல்லி - 1/2 கப்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
பால் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம் மற்றும் சிறிது உப்பைப் போட்டு வதக்கவும்.
அதற்குள் முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி, பாலையும் ஊற்றி அடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் நறுக்கிய பச்சை மிளகாய், தக்காளி, உப்பு, மிளகுத் தூள், போட்டு, கலந்து கொள்ளவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், அதில் கலந்து வைத்திருக்கும் முட்டை கலவையை ஊற்றி, கிளறவும். அவ்வாறு கிளறும் போது தீயை சற்று குறைவில் வைத்து, சிறிது நேரம் வேக விட்டு, கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.
இப்போது ஒரு பிரட் துண்டை எடுத்துக் கொண்டு, அதில் வெண்ணெயை தடவி, முட்டையில் பாதியை வைத்து, மற்றொரு பிரட்டிலும் வெண்ணெயை தடவி, மூட வேண்டும். இதேப் போல் மற்ற இரண்டு பிரட்களையும் செய்ய வேண்டும்.
இப்போது ஈஸியான முட்டை சாண்விட்ச் ரெடி!!! இதனை தக்காளி சாஸ்-உடன் தொட்டு சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.
English summary
Have you been skipping breakfast too many times this week? Then, its time to learn an easy egg recipe that will help you to manage your time in the morning. What if you could make a delicious egg sandwich in just 5 minutes? Would it motivate you to have breakfast? Probably yes! You can prepare an egg sandwich for your breakfast with this recipe in just 5 to 7 minutes.


No comments:

Post a Comment