Tuesday, September 18, 2012

வித்தியாசமான மாம்பழ கேசரி

                                            How Make Delicious Mango Kesari



பொதுவாக கேசரியை ஏதேனும் பண்டிகை தினங்களில் செய்வோம். இதுவரை நாம் அவில் மற்றும் ரவையில் தான் கேசரி செய்திருப்போம், இப்போது புதிதாக மாம்பழத்தில் கூட கேசரி செய்யலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு இனிப்பாக இருக்கும். தற்போது சீசன் காலம் என்பதால் மாம்பழம் எளிதில் கிடைக்கும். மாம்பழ கேசரி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ளுங்களேன்.
தேவையான பொருட்கள் :
ரவை – ஒரு கப்
பால் - ஒரு கப்
சர்க்கரை – ஒரு கப்
மாம்பழக்கூழ் – அரை கப்
தண்ணீர் – ஒரு கப்
முந்திரி, திராட்சை - 3
நெய் - 6 மேஜை கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை :
ஒரு வாணலியில் சிறிதளவு நெய்யை ஊற்றி அதில் ரவையைப் போட்டு பொன்னிறமாக வரும் வரை வறுத்து எடுத்து தட்டில் வைத்துக் கொள்ளவும். பின் சிறிது நெய் ஊற்றி அதில் முந்திரி, திராட்சை ஆகியவற்றை வறுக்கவும்.
மாம்பழக்கூழுடன் பால், தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து கொதிக்க கொள்ளவும்.
பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீரை விட்டு கொதித்த உடன் அதில் வறுத்த ரவையை போட்டு கிளரவும். ரவை பாதி வெந்து கெட்டியாக வரும் போது மாம்பழக் கூழ் கலவையை சேர்த்து கிளறவும். கேசரி கெட்டியானதும் இறக்கிவிடவும். அதன்மேல் வறுத்த முந்திரி, திராட்சையை தூவி அலங்கரிக்கவும். இதோ சுவையான வித்தியாசமான மாம்பழ கேசரி ரெடி.
English summary
Mango flavored Kesari is a south Indian delight made with sugar and rightly flavored with mangoes.


No comments:

Post a Comment