Tuesday, September 18, 2012

மசாலா தோசை

                                      Delicious Masala Dosa Recipe



தோசையிலேயே மசாலா தோசை மிகவும் நன்றாக இருக்கும். ஏனெனில் மற்ற தோசையை விட, இந்த தோசையில் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து சுருட்டி, சட்னி சாம்பாருடன் தொட்டு சாப்பிடுகிறோம். மேலும் தற்போது கூட, இந்த தோசையைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான செய்தி கூட வந்திருந்ததது. அது இறப்பதற்கு முன் இற்த மசாலா தோசையை சாப்பிட்டு சாக வேண்டுமாம். அந்த அளவு இந்த தோசை உலக அளவில் மிகவும் சுவை மிகுந்த உணவாக உள்ளது. இப்போது அந்த தோசையை எப்படி வீட்டிலேயே செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள் :
தோசை மாவு - 3 கப்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
பூண்டு - 6 பல்
உப்பு - தேவையான அளவு
மசாலாவிற்கு...
உருளைக் கிழங்கு - 3 (வேக வைத்தது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
சோம்புத்தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் மிக்ஸியில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய் தூள் மற்றும் உப்பை போட்டு, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, காய்ந்ததும், தோசை மாவை விட்டு, தோசை சுட்டுக் கொள்ளவும்.
பிறகு அரைத்து வைத்திருக்கும் கலவையை அந்த தோசையின் மீது தடவிக் கொள்ளவும்.
மசாலா செய்வதற்கு...
வேக வைத்திருக்கும் உருளைக்கிழங்கை, மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பை சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்துக் கொள்ளவும். பின்னர் அதில் சோம்புத் தூள், பெருங்காயத் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பிறகு வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்கு வதக்க வேண்டும். நன்கு வதங்கியதும், அதில் பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதில் நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி ஒரு முறை பிரட்டி, இறக்கி வைக்கவும்.
பின் சுட்டு வைத்திருக்கும் தோசையின் மேல், இந்த மசாலாவை தேய்த்து, சுருட்டி பரிமாறவும். இப்போது சுவையான மசாலா தோசை ரெடி!!!
இதனை தேங்காய் சட்னி மற்றும் சாம்பாருடன் தொட்டு சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.

English summary
Masala dosa is one of the very tastiest south indian food. It is really very easy to prepare. Now make delicious idiyappam using this simple recipe from awesome cuisine.


No comments:

Post a Comment