Tuesday, September 18, 2012

'நா' ஊறும் ஆலு-65!!!

                                     Delicious Aloo 65


உருளைக் கிழங்கின் விலை மலிவாக கிடைக்கும் நேரத்தில் நாம் அந்த உருளைக்கிழங்கை வைத்து நிறைய ரெசிபி செய்திருப்போம். அதில் நாக்கு ஊற வைக்கும் அளவு ஒரு ரெசிபி செய்து வீட்டிலுள்ளோரை அசத்த வேண்டுமென்றால், அதுக்கு ஆலு-65 தான் சிறந்தது. சரி, அதை செய்யலாமா!!!
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - 5
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 3
தயிர் - 1 1/2 கப்
அஜினோமோட்டோ - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 3/4 டீஸ்பூன்
பேக்கிங் பௌடர் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
1. முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு வேக விடவும். பின் அதன் தோலை உரித்து, அதனை சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
2. பிறகு கடலை மாவோடு உப்பு, பேக்கிங் பௌடர் ஆகியவற்றைப் போட்டு கலந்து வைத்துக் கொள்ளவும்.
3. அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய உருளைக்கிழங்கை அந்த கலவையில் போட்டு பிரட்டி, எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
4. பின் தயிரை ஒரு துணியில் கட்டி தண்ணீர் வடிந்ததும், அந்த தயிர் சீசை நன்கு கடைந்து கொள்ளவும்.
5. பிறகு வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் நீள நீளமாக அரிந்து கொள்ளவும்.
6. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு மிளகாய், வெங்காயம், அஜினோமோட்டோ போட்டு வதக்கவும்.
7. பின் அதில் கடைந்து வைத்த தயிரை போட்டு, உப்பு, கரம் மசாலா தூள், மிளகாய்த்தூள் தூவி வதக்கவும்.
8. அதிலுள்ள பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கியப் பின், பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து வதக்க வேண்டும். வேண்டுமென்றால் தண்ணீர் ஊற்றி வதக்கலாம்.
9. மசாலா அனைத்தும் ஒன்று சேர்ந்ததும் சிறிது நேரம் கழித்து இறக்கி விடவும்.
இப்போது சுவையான ஆலு-65 ரெடி!!!

No comments:

Post a Comment