Tuesday, September 18, 2012

ஓவர் கோபம் உடம்புக்கு ஆகாது! மாராடைப்பு நிச்சயம்!!

                                 Being Angry Competitive May Raise




ஒரு சிலர் எப்பொழுது பார்த்தாலும் கோபத்துடனே இருப்பார்கள். சிடு சிடு முகமும், சிவந்த கண்களுமாய் இருப்பார்கள். இது போன்ற நபர்களுக்கு மாரடைப்பு எளிதில் தாக்கி மரணம் சம்பவிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். கோபத்தினால் பள்ளி மாணவர்களுக்கும் கூட இதயநோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் நோயை தடுக்க சினத்தை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்.
ரத்தக்குழாய் சுருக்கம்
சிறு குழந்தைகளோ, இளைஞர்களோ இன்றைய இளம் தலைமுறையினருக்கு எதற்கெடுத்தாலும் கோபம் வருகிறது.
கோபத்தை தற்காலிக பைத்தியம் என்றே சொல்லலாம். அடிக்கடி கோபப்படுவதால் ரத்த அழுத்தம் 160-80 என எகிறுகிறது.
கோபப்படும் நேரத்தில் செயல்பாடுகளை நாம் உணர்வதில்லை. அதனால்தான் கோபத்தை தற்காலிக பைத்தியம் என்கிறோம். கோபம் வரும்போது அட்ரினலின் ஹார்மோன் சுரக்கிறது. அதுவே, உடலின் ரத்தக்குழாயை சுருக்கி விடுகிறது. உடலில் ரத்தம் செல்வது குறைவதால், முகத்தில் அதிக ரத்தம் தேங்கி, முகம் சிவப்பாகிறது. அதிக கோபம் வரும்போது, அதிகமான அளவு ரத்தத்தை இருதயம் பம்ப் செய்ய வேண்டியிருக்கிறது. கோபப்படுவதால், மனம் மட்டுமின்றி உடலும் கெட்டுப்போய் திடீர் மரணங்கள் சம்பவிக்கின்றன.
அமெரிக்காவில் இருதய நலன்துறை தலைவரும் மியாமி மில்லர் ஸ்கூல் நரம்பியல் துறை தலைவருமான ரால்க் சாக்கோ, மனிதர்களின் கோபத்தினால் நடத்தையில் மாற்றம் ஏற்படுவது மட்டுமல்லாது, இதய நோய்கள் ஏற்படுவது நிச்சயம் என்று கூறியுள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கு இதயநோய்
இன்றைக்கு பள்ளிமாணவர்களுக்கு இடையேயான மோதல்கள் அதிகரித்து வருகின்றன. அவர்களுக்கு ஏற்படும் கோபத்தினால் மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்கள் பள்ளி மாணவர்களை தாக்கத் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக கோவையில் ஒரு பள்ளியில் 1,500 மாணவ, மாணவிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில், 8 பேருக்கு இருதய நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே மாணவர்களிடையே கோபம் ஏற்படுவதை தவிர்க்க அவர்களுக்கு உளவியல் ரீதியான பயிற்சிகளை அளிக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இருதயம் நன்றாக இருந்தால்தான் ஒரு மனிதன் நன்றாக இருக்கமுடியும். எனவே கோபத்தை தவிர்த்து மகிழ்ச்சியுடன் வாழ நினைத்தாலே மாரடைப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம் என்பது மருத்துவர்களின் அறிவுரை.



English summary
New research shows that being angry and competitive can actually boost your risk for heart attack and stroke. Plus, learn how to make anger work for you.


No comments:

Post a Comment