Thursday, August 9, 2012

Chicken Escoty: கோழிக்கறி எஸ்காட்டி

                                  





கோழிக்கறி எஸ்காட்டி தேவையான பொருட்கள்

முழுக்கோழி - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 3
மிளகு - 10
ஏலக்காய் - 3
பட்டை சிறு துண்டு, லவங்கம் - 5
ஜாதிக்காய்த் தூள் - 1/4 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
இஞ்சி - சிறு துண்டு
கசகசா - 1 டீஸ்பூன்
தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணை - தேவைக்கேற்ப
புளி - கோலியளவு

கோழிக்கறி எஸ்காட்டி செய்முறை:

ஒரு கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும், சீரகம், மிளகு, ஏலக்காய், பட்டை லவங்கம், சோம்பு, இஞ்சி, வெந்தயம் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். இதை விழுதாக அரைக்கவும்.

துண்டுகளாக நறுக்கிய ஒரு வெங்காயத்தை சிறிது எண்ணைவிட்டு வதக்கி, தேங்காய் துருவல், கசகசா சேர்த்து வறுத்து அரைக்கவும்.

மீதி தேங்காயில் பால் எடுக்கவும். ஒரு கப் கெட்டியான பால் எடுத்துக் கொள்ளவும். நீர் ஊற்றி இரண்டாம் பால் எடுத்துக் கொள்ளவும்.

மூன்று டீஸ்பூன் எண்ணெயை ஒரு கடாயில் காய வைத்து நறுக்கிய இரண்டு வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

இப்போது கோழிக்கறி துண்டுகளை சேர்த்து, அரைத்த விழுதுகளையும் போட்டு வதக்கவும்.

மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்,

புளிக் கரைசலைச் சேர்த்து இரண்டாவது பாலைச் சேர்க்கவும், போதுமான உப்பு சேர்த்து கோழிக்கறி நன்றாக வேகும் வரை சமைக்கவும்.

எலுமிச்சம் பழச்சாறு மற்றும் முதலில் எடுத்த கெட்டியான தேங்காய்ப்பால் சேர்க்கவும். பத்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கி சூடான சாதத்துடன் பரிமாறவும்.


No comments:

Post a Comment