Thursday, August 9, 2012

Talking Frogs | `பேசும்' தவளைகள்!

                              



`மொழி' என்றதுமே அது மனிதர்கள் சம்பந்தப்பட்ட ஒன்று என்ற எண்ணம்தான் நமக்கு ஓடுகிறது. ஆனால் மொழியும், மொழி சார்ந்த பிரச்சினைகளும் மனித இனத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல. தவளைகளும், தேரைகளும் கூட அவற்றின் சொந்த மொழியில் பேசிக்கொள்கின்றன.

சமீபத்திய உயிரியல் ஆராய்ச்சிகள் இதை உறுதிப்படுத்துகின்றன. தவளைகளும், தேரைகளும் ஒன்று ஒன்று தொடர்புகொள்ளப் பயன்படுத்தும் ஒலி சமிக்ஞை பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளன.

தவளைகளும், தேரைகளும் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இவை தங்களுக்கே உரிய பிரத்தியேக மொழிகள் மூலம் தத்தமது இனத்துக்கு இடையே தொடர்பு கொள்கின்றன.

நூற்றுக்கணக்கான தவளைகள் ஒரே சமயத்தில் ஒலி எழுப்புவதை நாம் கேட்டிருப்போம். பொதுவாக இனச்சேர்க்கைக்காகவே தவளைகள் இப்படிக் குரல் கொடுக்கின்றன.

ஒரு பெண் தவளை இந்தப் பெரிய கூச்சலுக்கு நடுவே தனது வகையைச் சேர்ந்த ஆண் தவளையின் குரலைத் தனியாக இனங்கண்டு கொண்டு அதைத் தேடிச் சென்று இனவிருத்தி செய்கிறது என்கிறார்கள் உயிரியல் வல்லுநர்கள்.

No comments:

Post a Comment