Thursday, August 9, 2012

ஊளி மீன் ப்ரை

                                        Ooly Fish Fry



முள் இல்லாத மீன்களைத்தான் குழந்தைகள் விரும்பு சாப்பிடுவார்கள். மூக்கு மீன் எனப்படும் ஊளி மீன் முள் குறைவாகவே இருக்கும். சுவையும் சூப்பராக இருக்கும். பெரியவர்கள் மட்டுமல்லாது குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். செய்து கொடுத்து அசத்துங்களேன்.
தேவையான பொருட்கள்:
ஊளி மீன் - அரை கிலோ
மஞ்சள் தூள் - கால் டீ ஸ்பூன்
சோம்புத் தூள் - ஒரு டீ ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீ ஸ்பூன்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீ ஸ்பூன்
சின்ன வெங்காயம் அரைத்த விழுது - 2 டீ ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மீன் ப்ரை செய்முறை
மீனை நன்றாக சுத்தம் செய்து வட்ட வடிவில் வெட்டி வைக்கவும். அகலமான பாத்திரத்தில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, சின்ன வெங்காயம் அரைத்த விழுது, எலுமிச்சை சாறு ஆகியவைகளை நன்றாக பேஸ்ட் போல கலக்கி கொள்ளவும். இந்த கலவையை வெட்டி வைத்துள்ள மீன் துண்டுகளின் மீது நன்றாக படுமாறு தடவி ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.
பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடு வந்ததும் மீன் துண்டுகளை போட்டு பொரிக்கவும். சுவையான மீன் ப்ரை ரெடி. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

No comments:

Post a Comment