Monday, December 17, 2012

அழகு என்பது புறத்தில் உள்ளதா? அகத்தில் உள்ளதா?


         

அழகு என்பது என்ன? கண்ணுக்கு தெரிகின்ற பொருள்களில் அழகு இருக்கிறதா?கண்ணுக்கு தெரியாதவைகளில் அழகு இருக்கிறதா?இது நீண்ட நாட்களாக கேட்கப் பட்டுவரும் ஒரு கேள்வி ஆனால் பதில் மட்டும் இதுவரை இதுதான் அழகு என்று உறுதியாக யாராலும் சொல்ல முடியவில்லை.
         

அவன் ஒரு இளைஞன் திருமண வயதை தொட்டவுடன் வாழ்க்கை துணைவியை தேடிகொள்ள பெண் பார்க்க ஆரம்பித்தான். வாரத் தில் இரண்டு நாட்களாவது பெண் பார்க் கும் படலம் நடந்தது. இப்படி ஒரு வாரம் அல்ல இருவாரம் அல்ல மூன்று வருடங்கள் பெண்களை பார் த்து கொண்டே இருந்தான். அவன் பெண் பார்க்கும் படலத்திற்கு கொ டுத்த பயண செலவு இரண்டு கல்யாணமே பண்ணலாம். அவ்வளவு செலவு செய்தும் பெண் அமை யவில்லை இது என்ன அதிசய ம் பார்த்த பெண்ணெல்லாம் இவனை வேண்டாமென்று மறுத்து விட்டார்களா? இல் லை இவன் தான் அவர்களை மறுத்தான். காரணம் இவன் எதிர்பார்ப்பதுபோல் அவர்கள் அழகாக இல்லையாம். 

                              
ஒருத் திக்கு கண் சரியில்லையாம். இன்னொருத்திக்கு கழுத்து அழகாக இல்லை யாம். ஒருத்தி நிறமாக இல்லையாம் வேறொருத்தி அதிக நிறமாக இருக்கிறாளாம். இதனால் அவள் இவனை மதிக்க மாட் டாளாம். நடக்கும்போது ஆண்பிள்ளைபோல நடககிறாளாம். ஒருத் தி பேசும்போது அதிர்ந்து பேசுகிறாளாம் வேறொருத்தி. இப்படி அவன் கண்டு பிடித் த குறைகள் எண்ணிக்கையில் அடங்கா து. ஏராளம் ஏராளம் எது தான் அழகு? ஒரு பட்டியல் போடு என்றால் பத்து நடிகைக ளின் அங்கங்களை ஒன்றாக இணைத்து ஒரு உருவத்தை வரைந்து தருகிறான். அப் படி ஒரு பெண்ணை கண்முன்னால் நிறுத் தினாலும் அவளிடத்திலும் குற்றம் காண் கிறான். அவள் கட்டிய புடவை நன்றாக இல்லையாம். இவனால் அழகி இல்லை அவலட்சனமா னவள் என்று புறக்கணிக் கப்பட்ட பெண்க ள் அனைவருமே திருமணம் ஆகாமலா வீட்டில் இருந்துவிட்டார்கள்? அவர்களை பிடித்த நல்ல மாப்பிள்ளை கள் கட்டிக்கொண்டு போய் சந்தோசமாக குடும்பம் நடத்துகிறார் கள். இவனு க்கு அழகற்றவர்களாக தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கு அழகாக எப்படி தெரிந்தனர்? ஒருவேளை இவன் முன்னால் அவலட் சன வேஷம் போட்டா ர்களா? இல்லை என்றால் இவ னது கண் மட்டும் விஷேச தயா ரிப்பா அல்லது அவர்களை பார் த்த மற்ற மாப்பிள்ளை களுக்கு கண்களில் குறைபாடா? இதில் எதுவுமே இல்லை. இவன் கரு த்தில்தான் குறைபாடு இருக் கிறது. இப்படி சொல்வது கூட தவறு இவன் அழகு என்று கருதுவது வேறு விதமாக இருக்கிறது இவ ன்கற்பனைக்கு ஏற்றவா று எந்த உருவத்தையும் காணவில்லை அதனால்தான் எதிர்பார்த்தது கிடை க்கவில்லை என்பதனால் எல்லா வற்றையும் அழ குகள் அல்ல என்று புறக்கணிக்கிறான்.

               
 ஆகவே ஒன் றை அழகாக காண்பதும் அழகு அற் றதாக காண்பதும் கண்களில் இல் லை மனதில் இருக்கிறது. என்பது நன்றாக தெரிகிறது என்றாலும் உல கில் உள்ள எல்லா மனதும் ஏற்று கொள்ளும் அழகு என்று எதாவது தனியாக இருக்கிறதா? இந்த கேள்விக்கு பதி ல் கிடைத்து விட்டால் அழகு என்பது புறத்தில் உள்ளதா? அகத்தில் உள்ளதா? என்ற நமது ஆரம்ப கேள்விக்கு சரியான பதி ல் கிடைத்து விடும்.  நீ தொடர் ச்சியாக நல்ல எண்ணங்களால் நல்ல செயல்களால் நல்ல வார் த்தைகளால் நிரப்ப பட்டவனாக இருந்தால் உனது தோற்றம் கவர் ச்சி மிக்கதாக மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுவதாக அமைந்து விடும் . இது உண்மைதான் இன்றைய ஆணழகர்கள் அனைவருமே காந்தி என்ற கிழவனின் அழகு முன்னால் தூசிபோல பறந்துவிடு வார்கள் காரணம் காந்தி என்ற மகாபுருஷனின் அழகுபுறத்தோற்ற த்தை வைத்து தீர்மானிக்கபட வில்லை அவ ரின் அகதோற்றமே அவர் அழகுக்கு இலக் கணமாக இருக்கிறது. இதை வேறொரு விதத்திலும் சொல்லலாம். . அன்பு அருள் கருணை இன்பம் புத்து ணர்ச்சி முயற்சி உற்சாகம்  இந்த பண்புகள் நிறைந்த மனிதன் இன்பம் என்பதை பஞ்சமில்லா மல் பெற்றவனாக இருப்பான் அவன் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றியின் திருவடியாக இருக்கும், தோல்வியும் துன்பமும் துயரமும் அவ னை அணுகவே அணுகா து.  பொறாமை பேரா சை கோபம் காமம் போன்ற வைகள் இந்த உணர்வுகள் எங்கே மண்டி கிடக்கிறதோ அங்கே அவலட்சணம் இருக்கும். இந்த உணர்வுகள் நிரம்பி வழியும் மனிதர்கள் மன்மதனை போல காட்சி தரலாம் ஆனா லும் அவனை நோக்கி யாரும் ஈர்க்கப்ப டமாட்டார்கள் என்னை பார் என் அழகை பார் என்று அவன் நம் முன் னும் பின்னும் நடந்து காட்டினாலும்கூட அவனை நம் மால் ஏறடுத்து பார்க்க இயலாது. 


வெளித்தோற்றம்தான் அழகு என்று சொல்வோரும் அகத்தின் அழகே சிறப்பு என்று சொல்வோரும் நல்ல பண்புடைய மனிதன் மட்டுமே அழகானவன் என்று சொன்னால் எதிர்க்க மாட்டார்கள் என் கண்களுக்கு கீழே கருவளையம் விழுகிறதே சர்மம் எல்லாம் வறண்டு போகிறதே முகத்தில் எண்ண முடியாத பருக்கள் அணிவகுக்கிறதே நான் எப்படி அழகாக இருக்க முடியும். என்று யோசித்து தன்னை தானே முடக்கி கொள்ளும் பலகீனமான மனிதர்கள் தங்களை அழகுபடுத்தி கொள்ள அலங்கார பொருள்களை தேடவேண்டாம். அதற்கு அவசியமும் இல்லை நல்ல பண்புகளை வளரவிடுங்கள் நல்ல பண்புகள் உங்களை அழகர்களாக ஆக்கி விடும். ஒரு நல்லவார்த்தை நல்ல சிந்தனையை உருவாக்கும் ஒரு நல்ல சிந்தனை ஒரு நல்ல செயலை உருவாக்கும் ஒரு நல்ல செயல் நல்ல பண்பாட்டை உருவாக்கும் ஒரு நல்ல பண்பாடு உலகம் முழுவதையும் அழகு பொருந்தியதாக ஆக்கிவிடும். எனவே சுத்திகரிக்கபட வேண்டியது உருவமல்ல உடலும் அல்ல மனதும் மனதால் இயங்கும் நமது செயலுமே ஆகும் இதுதான் அழகாக மாறுவதற்கு உள்ள ஒரே ரகசியம்.

No comments:

Post a Comment