Monday, December 17, 2012

alcohol - மதிமயக்கும் சில தகவல்கள்


                                   -முருகானந்தன்
 -


அரேபியா போன்ற சில நாடுகளைத்தவிர , இன்றைக்கு உலகமெங்கும் முதியவர்கள் , இளைஞர்கள் மட்டுமல்ல.... இளைஞிகளை கூட தன்னுடைய பிடிக்குள் வைத்திருக்கும் ஆல்கஹால் என்னும் மாயமோகினியின் வசீகரிக்கும் சில தகவல்களை தெரிந்துகொள்வது குடிமகன்களான (??!) நமது கடமை அல்லவா..... ?? 

ஆல்கஹால் என்று சொன்னாலே விஸ்கியும் , பிராண்டியும்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். பிராண்டி என்பது Brandewijn 
என்ற பிரெஞ்சு சொல்லிலிருந்து வந்தது. ” எரிக்கப்பட்ட வைன்” 
( Burnt Wine ) என்பது இதன் பொருள்.... ! ஆம், வைனை உயர்வெப்ப நிலையில் கொதிக்கவைக்கிறபோது, அதிலுள்ள சர்க்கரை பொருட்கள் பிரிந்து , ஆல்கஹாலாகவும் , நீராகவும் மாறுகிறது. இந்த ஆல்கஹாலே பின்னர் பல்வேறு மதுபானங்களாக நடைமுறையில் மாற்றம் செய்யப்படுகிறது. “ வைன் “ என்பது திராட்சை பழரசத்தினை பல நாட்களுக்கு புளிக்கவைக்கிறபோது கிடைக்கிற ஒன்று. இந்த புளிக்கவைத்தலை ஆங்கிலத்தில் FERMENTATION என்று சொல்வார்கள். 


 

                       
பொதுவாக திராட்சை தவிர ஆப்பிள்,அரிசி,கோதுமை மற்றும் சர்க்கரை சத்து நிறைந்துள்ள எந்த ஒரு உணவுப் பொருளிலிருந்தும் ஆல்கஹாலை தயாரிக்க முடியும். 

ஒவ்வொரு நாட்டிற்கும் அதெற்கென பிரத்தியோகமான பிராண்டி மதுபான பிராண்டுகள் உண்டு . இத்தாலியில் கிரப்பா , போலாஇந்தில் ஸ்லிவிவிட்ஸ் , ஜப்பானில் சோச்சு , அமெரிக்காவில் பார்பன் , பிரெஞ்சு கோக்நாக் .....இப்படி பல பிராண்டுகள் இருந்தாலும் பிரெஞ்சின் கோக்நாக் தான் உலகிலேயே உன்னதமான தரமான பிராண்ட்.....!!! 

மனித நாகரிகம் தோன்றிய பொழுதே மதுபானம் தோன்றியதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. தன் மனைவி மதுபானத்தை அருந்தியிருப்பாளோ..? என்ற சந்தேகத்தில் ரோமானிய வீரன் ஒருவன் முதன்முதலில் அவளது இதழ்களை சுவைத்து பார்க்க , அதிலிருந்து வந்தது தான் காதலர்கள் இதழ்களில் முத்தத்தை பரிமாறிக்கொள்கிற பழக்கம் என்கிற சுவையான தகவலும் உண்டு..... ! வியாபார நோக்கில் மதுபானம் தயாரிக்க ஆரம்பித்தது கிமு 800 வாக்கில்தான்... 
ஜாபீர் இபின் ஹய்யான் என்கிற அரேபிய விஞ்ஞானி தன்னுடைய புத்தகத்தில் மதுபானம் தயாரிக்கிற முறைகளை எட்டாம் நூற்றாண்டிலேயே விரிவாக சொல்லியிருக்கிறார் ... 

                          


எது எப்படி ஆனாலும், அன்றைய மனித நாகரித்தில் மதுபானம் 
முக்கிய இடம் வகித்திருந்தது என்பதற்கு ரோமானியர்கள் அதை இலத்தீன் மொழியில் அழைத்த விதத்திலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.. ”அக்வா விட்டே” ( aqua vitae) , உயிர்தண்ணீர் ( water of life ) என்றே அது அழைக்கப்பட்டது என்றால் பார்த்துகொள்ளுங்களேன்... ! நம்முடைய இதிகாசங்களிலும் , வேதங்களிலும் கூட .. சோமபானம், சுரபானம் என்கிற மதுபானங்களை தேவர்களும், அசுரர்களும் அருந்தியதாக அறிகிறோம்....! ஐரோப்பியர்கள் திராட்சையிலிருந்து மதுபானம் தயாரிக்க , மத்திய கிழக்கினை சேர்ந்தவர்கள் அரிசி,கோதுமை போன்ற உணவுப்பொருட்களிலிருந்து தயாரிக்க, ஆசியர்கள் குதிரையின் பாலிலிருந்து மதுபானம் தயாரித்ததுதான் சுவாரஸ்யம்... முதன்முதலில் வடிகட்டி தயாரிக்கபட்ட சுத்தமான( ??) மதுபானமும் இதுதான்... !!!! 

                                      

இவ்வளவு ஏன்.... அமெரிக்காவில் ஒருகாலத்தில் தடை செய்யப்பட்டிருந்த ( நம்புங்கள்... காந்தியின் மதுவிலக்கு கொள்கைக்கு முன்னரே, மதுவிலக்கு அமெரிக்காவில் 1920 களில் இருந்து 1932 வரை அமலில் இருந்தது...) சட்டத்திற்கு புறம்பாக தயாரிக்கப்பட்ட ஆல்கஹாலால் கள்ளச்சாராய விபத்துகள் அதிகமாக , 1932 போட்டியிட்ட ப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் , தான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் , மதுபான தடையை நீக்குவதாக பிரச்சாரம் செய்ய, அவரின் இந்த பிரச்சாரத்திற்கு கைமேல் பலன் கிடைத்தது... ஆம், அந்த ஆண்டு அமெரிக்காவின் ஜனாதிபதியாக அவர் வெற்றிபெற்றார்.... ( ஏன் நம்மூர் அரசியல்வாதிகள் அத்தனை பேரும் இந்த விசயத்தில் மட்டும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பது தெரிந்ததா.... ? ) 


மனித இனம் இருக்கும் வரைக்கும் மயக்கும் மதுபானமும் இருக்கும்.. எந்த அரசாங்கம் வந்தாலும் , இதை மட்டும் தடைசெய்யவோ , ஒழிக்கவோ முடியாது என்பது மட்டும் 
சர்வ நிச்சயமாக தெரிகிறது... இல்லையா !!!???::::எழுத்து, இணையம் :::

No comments:

Post a Comment