Tuesday, September 11, 2012

அதிக வெறுப்புக்குரிய நகரம்... டெல்லிக்கு 8 வது இடம்

                               Delhi Listed Among Most Hated Cities Travel Site

டெல்லி: சிஎன்என் டிராவல் வெப்சைட் நடத்திய கருத்துக்கணிப்பு ஒன்றில் சர்வதேச அளவில் வெறுக்கத்தக்க நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் தலைநகரான டெல்லி 8 வது இடத்தை பிடித்துள்ளது.
சர்வ‌தேச அளவில் நடத்தப்பட்ட வெறுக்கத்தக்க நகரங்கள் பட்டியல் தொடர்பான கருத்துக்கணிப்பை சிஎன்என்கோ என்ற நிறுவனம் சமீபத்தில் நடத்தியது. அதன் முடிவுகள் தற்‌போது அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இப்பட்டியலின் முதல் 10 இடங்களில் முதலிடத்தில் மெக்ஸிகோ நாட்டின் டிஜூவானா, 2ம் இடத்தில் ஆஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்போர்ன், 3ம் இடத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ், 4ம் இடத்தில் மாலி நாட்டின் திம்புக்டு, 5ம் இடத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், 6ம் இடத்தில் பெரு தலைநகர் லிமா, 7 இடத்தில் இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவும், 8ம் இடத்தில் இந்திய தலைநகர் டெல்லியும், 9வது இடத்தில் எகிப்து தலைநகர் கெய்ரோவும், 10வது இடத்தில் பெலிஜ் நாட்டின் பெலிஜ் நகரமும் உள்ளது.
சுற்றுலா செல்லும் பயணிகள் அதிக அளவில் ஏமாற்றப்படுவதால் சுற்றுலா பயணிகள் டெல்லி செல்வதை தடுக்கவும் என்று கூறப்பட்டுள்ளது. அரசு சுற்றுலா அலுவலகத்தில் ஊழல், ஓட்டலில், ஊழல், ஏர்போர்ட், ரயில் நிலையம் போன்றவற்றிலும் பயணிகள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Delhi features prominently in a list of most hated cities in a survey by a CNN travel website. The website, CNNGo, introduces a list of 10 cities, which have been described as: "They're not the worst cities in the world but they are the best at bugging people.

No comments:

Post a Comment