Thursday, August 2, 2012

தாரளமயமாக்கல் கொள்கையால் ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை: அதிர்ச்சியளிக்கும் ஆய்வு

Rural India Lives On Less Than 17 A Day Nsso Survey டெல்லி: இந்திய கிராமங்களில் ஒரு நாளைக்கு ரூ17க்கும் குறைவான வருமானத்தில் வாழ்வோரின் எண்ணிக்கை 10 விழுக்காட்டுக்கும் அதிகம் என்று தேசிய மாதிரி சோதனை நிறுவனத்தின் புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தாராளமயமாக்கல் அமல்படுத்தப்பட்டு 20 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மேம்படவில்லை என்கிறது தேசிய மாதிரி நிறுவனத்தின் அறிக்கை.
2011-12-ம் நிதி ஆண்டில் கிராமப்பகுதியில் நுகர்வோர் செலவினம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கிராமப்பகுதியில் சராசரி மாத வருமானம் ரூ. 503.49 தொகையில் வாழ்வோர் இன்னமும் இருக்கின்றனர்..
நகர்ப்பகுதி மக்களின் வருமானம் ஒரு நாளைக்கு ரூ. 23.40 ஆக உள்ளது. நகர்ப்பகுதியில் மாத வருமானம் சராசரி ரூ. 702.26 ஆக உள்ளது.
இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் ஒருநாள் வருமானம் ரூ. 28.65 என அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் உண்மையில் தினசரி வருமானம் அதைவிடக் குறைவாக உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
நகர்ப்பகுதிகளில் 70 விழுக்காடு மக்களின் தினசரி செலவினம் சராசரி ரூ. 43.16 ஆக உள்ளது. நகர்ப்பகுதியில் 20 விழுக்காடுக்கும் அதிகமானவர்களின் ஒருநாள் வருமானம் ரூ. 100-க்கு மேல் உள்ளது. கிராமப்பகுதிகளில் வாழ்வோரில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் தினசரி செலவு ரூ. 34.33 ஆக இருந்தது. 40 விழுக்காடுக்கும் அதிகமான மக்களின் மாதாந்திர செலவு ரூ. 1,030 ஆக இருந்தது. 7,391 கிராமங்களில் மொத்தம் 59,070 வீடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. நகர்ப்பகுதிகளில் 5,223 பகுதிகளில் மொத்தம் 41,062 வீடுகளில் நடத்தப்பட்டது.

No comments:

Post a Comment