Friday, March 8, 2013

கூலி வேலை செய்த எழுத்தாளர்



ரஷ்ய ரயில்வே நிலையம் ஒன்றில் தாடியும் மீசையுமாக… லட்சணமின்றி நின்று கொண்டிருந்த ஒருவரைப் பெண் பயணி ஒருவர் அழைத்தார்.
” “ஐயா, என் கணவர் ஓட்டலுக்குச் சென்றுள்ளார். ரயில் புறப்படும் நேரமாகிவிட்டது. தயவு செய்து அவரை அழைத்து வாருங்கள். அதற்கான கூலியைத் தந்து விடுகிறேன்…” என்று கூறி கணவரின் அடையாளத்தையும் கூறினார்.
அந்த மனிதர் உடனே தயங்காமல் வெளியே சென்று, சிறிது நேரம் கழித்து அப் பெண்ணின் கணவரை அழைத்து வந்தார். சொன்னபடி அந்தப் பெண் கூலி தர, கொஞ்சமும் தயக்கமின்றி அதைப் பெற்றுக் கொண்டார்.
அப்போது அந்தப் பக்கமாக வந்த ஒருவர் அந்த அழுக்கான மனிதரைக் கட்டித் தழுவிக் கொண்டு, “ஐயா, புகழ்பெற்ற நூல்களை எழுதிய தாங்களா, கூலி வேலை செய்கிறீர்?” என்று அதிர்ச்சியுடன் கேட்டார்.
அந்த எழுத்தாளரின் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்ட அந்தப் பெண், “இவ்வளவு பெரிய எழுத்தாளரிடம் வேலை வாங்கிவிட்டோமே!” என்று வருந்தினார்.
அதற்கு அந்த எழுத்தாளர்,  “நீங்கள் வருத்தப்பட்டாலும், நீங்கள் கொடுத்த கூலியைத் திரும்பக் கேட்டால் தரமாட்டேன். ஏனென்றால் நான் வேலை செய்து சம்பாதித்த பணம் அது! அதனால் நீங்கள் வருத்தப்பட வேண்டாம்…” என்றார்.
அந்த எழுத்தாளர் வேறு யாருமல்ல புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்தான்!                                                                                                                              ----------------------------                                                                                                                       நாற்சந்தி நன்றிகள் – தினமணி சிறுவர்மணி

No comments:

Post a Comment