Monday, January 7, 2013

பிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து






ஒரு மனிதனின் ஆரோக்கியமிக்க நீண்ட ஆயுளை திர்மானிக்கும் பல்வேறு காரணிகளில் 'நாடு' என்பது மிக முக்கியமானது. அமைதியான சூழல், பொருளாதர வளர்ச்சியும் ஒரு மனிதன் வாழ்க்கையை தீர்மானிக்கும் காரணிகளின் மிக முக்கியமானதாக காணப்படுகின்றன.

அந்த வகையில் எதிர்வரும் 2013 ஆம் ஆண்டில் பிறந்து வாழ்வதற்குரிய சிறந்த நாடாக சுவிட்சர்லாந்து தெரிவு செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல் இலங்கை 63 ஆவது இடத்திலும் இந்தியா 66 ஆவது இடத்திலும் காணப்படுகின்றன.

எதிர்வரும் வருடத்தில் சுபீட்சமான, மன நிறைவான வாழ்க்யை வாழ்வதற்கு ஏற்ற சூழலை கொண்ட நாடு எது எனும் ஆராயும் முயற்சியை பிரிட்டனின் பொருளாதார புலனாய்வு பிரிவு மேற்கொண்டுள்ளது.

மக்களின் மனநிறைவான கருத்துக்கள், மற்றும் நாடுகளின் வாழ்க்கை தரம் என்பவற்றை உள்ளடக்கி இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையின் பிரகாரமே சுவிட்சர்லாந்து வாழ்வதற்கு ஏற்ற முதல் நாடாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் பிறப்பவர்கள் மகிழ்ச்சிகரமானவர்களாக காணப்படுவதுடன் தரமான உடல் ஆரோக்கிய நிலையானது அவர்களது ஆயுளை தீர்மானிப்பதாகவும் சுகாதார மற்றும் பொது நிறுவனங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன. 

அதேபோல் ஸ்கெண்டிநேவியா நாடுகளான நோர்வே, சுவிடன் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளும் சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளதாக அவ் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

புவியியல், குடியியல்; மற்று கலாசாரம், பொருளாதார நிலை உட்பட்ட 11 விடயங்களை பிரதானபடுத்தி இந்த ஆய்வறிகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா, நோர்வே, சுவீடன், டென்மார்க், சிங்கப்பூர், நியூசிலாந்து, நெதர்லாந்து, கனடா, ஹோங்கோங் ஆகிய நாடுகளே 2013 இல் சிறப்பாக வாழக்கூடிய முதல் 10 நாடுகளாகும். இதில் அமெரிக்கா 16 ஆவது இடத்திலும் பிரிட்டன் 20 ஆவது இடத்திலும் சீனா 49 ஆவது இடத்திலும் காணப்படுகின்றன.



நன்றி :தமிழ் கண்ணாடி

No comments:

Post a Comment